Search This Blog

Sunday, 2 December 2012

கடக ராசியின் குணயியல்புகள்





கடக ராசியின் குணயியல்புகள்
      

      கடக  ராசியின்  பாகையளவு  90 பாகை முதல் 120 வரையிலான பாகையள வாகும்.இது ஒரு சர ராசி,நீர்,இரட்டைப்படை மற்றும் பெண் ராசியாகும். இதன் அதிபதி சந்திரன் ஆவார். இந்த ராசியில் குரு 5˚ யில் உச்சமாகிறார்.செவ்வாய் 28˚ யில்  நீசம் பெறுகிறார்.நண்டு இதன் அடையாளமாகும். சூரியனுக்கு நட்பும்,புதன்,சுக்கிரன் மற்றும் சனி ஆகியோருக்கு பகைராசியாகும்.
      
      கடக ராசி ஜாதகர்களை ஆசிரியர்கள்,போதகர்கள் என அழைக்கப்படுபவர்கள். ஏனெனில் அவர்கள்  மக்களை அரவணைத்துச் செல்லக்கூடியவர்கள்.பொதுக்கூட்டங்களில் பேசக்கூடிய திறமைமிக்கவர்கள். குருட்டுத்தனமான உணர்ச்சிகளும், மகிழ்ச்சியைக் கூட்டும் நிகழ்வுகளில் ஈடுபாடுடையவர்களாகவும் இருப்பர். நன்கு பேசுபவர்களாகவும்,நன் மதிப்புடையவர்களாகவும், கொள்கைப் பிடிப்புள்வர்களாகவும்  இருப்பர்.  இவர்கள்  தங்கள்  மீதான விமர்சனங்களையும், மற்றவர்களின் பரிகசிப்பையும் விரும்பமாட்டார்கள். உடலளவில்  ஏற்படும்  அபாயங்களை  எதிர்கொள்ளும்  துணிச்சல் இவர்களிடம் இருக்காது. ஆனால்  மனோவலிமை  உடையவர்கள். பாசமிக்கவர்கள்,உண்மையானவர்கள், எதற்கும் அசைந்து கொடுக்காதவர்கள் மற்றும் எதையும்  தீர  ஆலோசித்து  முடிவெடுப்பவர்கள். கோபம் மிக்க இவர்களின் கோபமானது வந்த சுவடு தெரியாமல் மறைந்து  விடும். மற்றவர்களைக் கவரும் திறமையற்றவர்கள். எப்போதும்  கற்பனை உலகிலேயே  சஞ்சரித்துக்கொண்டிருப்பதாலும், மிகுந்த உணச்ச்சிகளால் உந்த படுபவர் களாவதால் மன அமைதி இழந்து சுற்றித் திரிபவர்களாகவும் இருப்பர். அதிர்ஷ்ட சூழ்நிலைகளைத் தவறவிடுபவர்களானாலும், வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல அதிர்ஷ்டக்கார்களாகத் திகழ்வர். இவர்களின் உடற்கட்டானது  சுமாரான  உயரமும், குண்டான உடலும் கொண்டது. வட்டமுகம், சப்பைமூக்கு,இரட்டைநாடி,அகன்றமார்பு,சிறிய கைகளும்,பாதங்களும் உடையவர்களாக இருப்பர்.
      
      கடகத்தார் மற்றத்தையும், பயணங்களையும், புதுமைகளையும்  விரும்பக் கூடியவர்கள். சுற்றத்தாரோடும்,குடும்பத்தாரோடும் மிகவும் பாசத்தோடு இருப்பவர்கள்.பொது வாழ்வில்  தங்களை  ஈடுபடுத்திக்  கொள்வதில்   மிக்க   ஆர்வமுடையவர்கள்.  கருணையுள்ளவர்கள், மாற்றமுடையவர்கள்  மற்றும்  பொறுமையற்றவர்கள்.  உணர்ச்சி மிக்கவர்கள்.  காமம்  மிக்கவர்கள், காதலுணர்வு  மிக்கவர்கள். உண்மையான   உணர்வுடையவர்கள்   மற்றும்  பொறுப்பு மிக்கவர்களான   இவர்கள்  நிலையற்ற மனமும் உடையவர்கள்.. இவர்கள்  ஓரிடத்திலிருந்து  பெருந்தொகையைப்  பெறுவதை விட,  பல  இடங்களிலிருந்து சிறுசிறு தொகைகளை அடைவதையே விரும்புவர். இளமையில் மோசமான உடல் நிலையோடு இருந்தாலும்,  வயது  ஏறயேற  ஆரோக்கியத்திற்  முன்னேற்றமிருக்கும். இவர்கள் நேர்மையான வியாபாரிகளாக இருக்கத் தகுதியானவர்கள். தங்களது கடுமையான உழைப்பின்  மூலமாக  சொத்துக்களைச்  சேர்ப்பவர்கள்.  நல்ல கணவர்கள்,மனைவிகள் கடகத்திற் பிறந்தவர்களாகவே இருப்பர். தங்களது துணைக்கு எப்போதும் உண்மையானவர்களாகவும், மணவாழ்க்கையை  தெய்வீகமாகக்  கருதுபவர்களாகவும் தங்கள் குழந்தைகளுக்காக எதையும் தியாகம் செய்யக் கூடியவர்களாகவும் இருப்பர். நுரையீரல்,தொண்டை,நரம்பு சம்பந்தமான நோய்கள்  காய்ச்சல்,இருமல்,பயந்தநிலை,ஹிஸ்டீரியா,மார்பில் கட்டி போன்ற நோய்களும் வரக் கூடும்.
     
      பணவிஷயத்தில் நேர்மையானவர்கள்,  அனாவசியச்  செலவுகள்  செய்ய மாட்டார்கள்.பிறரிடமும் நேர்மையை விரும்புவார்கள்.நேர்மையற்றவர்களை வெறுப்பவர்கள்.பண விவகாரங்களைப்  பொறுத்தவரை  அதிர்ஷ்டசாலிகள். பாச மிக்கவர்கள்,காதல் விவகாரங்களில் உண்மையானவர்கள் ஆனால் அவற்றை வெளியிடுவதில்  திறமையற்ற வர்களாக இருப்பர். பெண்கள்  நல்ல தாயாக  இருப்பர். விருந்தோம்பலில்  சிறந்தவர்கள். கடகத்தார்  வணிக  நோக்கம்   கொண்டவர்கள்.  நீர் சம்பந்தமான தொழில்களான முத்து,உப்பு,மீன் போன்றவற்றையும், படகோட்டிகளாகவும், கப்பற்படை, நீர்மூழ்கிக் கப்பல்,  கப்பல்  துறைகள், இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் ஈடுபடலாம். மேலும் இவர்கள் சிறந்த சமையற்கலை வல்லுனராகவும், உணவக மேலாளர், மேடைப்  பேச்சாளர்,மத போதகர் களாகவும், காண்டிராக்டர் மற்றும் விவசாயத் துறைகளிலும் ஈடுபடலாம்.
     
      அதிரிஷ்ட நாட்கள் – சந்தோஷத்திற்கும்,குதூகலத்திற்கும் அனுகூலமான நாட்கள் ஞாயிறும்,வெள்ளியுமாகும்.வெற்றி முயற்சிகளுக்குத் திங்களும்,வெற்றிக்கு செவ்வாய் வியாழனும்,பயணத்திற்கும்,பங்கு முதலீட்டுக்கு புதனும் நல்ல நாட்களாகும். தடை, தாமதம், கஷ்டம், நஷ்டம், வழக்கு  விவகாரம் என மோசமான விழைவுகள் தரும் நாள் சனியாகும். வெண்மை,க்ரீம்,சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும். நீலமும்,பச்சையும் தவிர்க்கப் படவேண்டிய  நிறங்களாகும். ஒத்துப்போகும்  எண்கள் 4,6.கவரும் எண்கள் 8.1,அனுகூலமான எண்கள் 2,7,9 ம் ,தவிர்க்கப்பட  வேண்டிய  எண்கள் 3 மற்றும் 5 ம் ஆகும்.  நாலாவது  விரலில், பூஜிக்கப்பட்ட,  வெள்ளியில் முத்துப் பதித்த மோதிரத்தை அணிவது நல்லது. சந்திரன் பாதிக்கப் பட்டிருந்தால் முத்தோடு,மஞ்சள் புஷ்பராகம் அணிவது உசிதம்.வளர்பிறை நாட்களில் அணிவது உத்தமம்.




Wednesday, 28 November 2012

திருக்கணிதம்




                      திருக்கணிதம்
கோள்களின் நிலையைக் காண :
3 2 2003 க்கு சித்திரபானு வருடம் வாசன் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி காலை 5 . 30 மணிக்கு கிரகங்களின் நிராயன நிலைகள்.

 
கிரகங்கள்
பாகை
கலை
  தினகதி
பாகை கலை
 சூரியன்  
 289
 58
01
--
01
சந்திரன்
 308
 24
12
--
36
செவ்வாய்
 227
 04
00
--
39
புதன்
 264
 39
00
--
59
குரு (வ)
 109
 15
00
--
08
சுக்கிரன்
 244
 29
01
--
08
சனி (வ)
 058
 43
00
--
02
ராகு
 041
 31
00
--
03

1)       சாதகர் பிறந்த நேரத்திற்கும், கிரகங்களின் நிலைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
நேரத்திற்கும் இடைப்பட்ட வித்தியாச நேரத்தைக் காணவேண்டும்.

2) தினகதியின் அடிப்படையில் இவ்வித்தியாச நேரத்திற்கு கிரகங்கள் செல்லும்
   பாகை அளவைக்காணவேண்டும்.தினகதி 24 மணி நேரத்திற்கு கொடுக்கப்
   பட்டிருக்கும்.
3) வித்தியாச நேரத்திற்கு கிரகங்கள் சென்ற பாகை அளவுடன்,காலை 5. 30 க்கு
          கொடுக்கப்பட்ட கிரக பாகை அளவுடன் கூட்ட,சாதகர் பிறந்த நேரத்தில்
          கிரக நிலையை அறியலாம்.வக்ர கிரகங்கள்,ராகுவுக்குக் கழிக்க வேணடும்.
எனவே, இடைப்பட்ட வித்தியாச நேரம் :
                                              மணி நிமி
சாதகர் பிறந்த இந்தியப் பொது நேரம்
( இரயில் நேரப்படி )                    =        13 ---- 30
கிரகங்களின் நிலை கோடுக்கப்பட்ட நேரம் =       05 --- 30  ( -- )
                                                -----------------
இடைப்பட்ட வித்தியாச நேரம்            =       08 ---- 00
                                                -----------------
சூரியன் நிலை காண :
காலை 5 30 க்கு  சூரியன் நிலை   289 பாகை 58 கலை தினகதி 01 பாகை 01 கலை
எனவே 8 மணி நேர வித்தியாசத்திற்கு      =    ?
தினகதி                                   =      01 01                    60 + 1
                                                 ------------- X  8  =   -----------
24                                           24
                                 24 } 61 { 2
                                         48
                                      --------
                                         13 X 60         =      780       
                               24 } 780 { 32 ½
                                       72
                                     --------
                                         60
                                         24
                                     --------
                           மீதி      12        ½ விகலையாக எடுத்துக் கொண்டு ---விடை =2 32 ½ இதுவே 1 மணி நேரத்தில் சூரியன் செல்லும் தூரம் ஆகும்.

       எனவே, 8 மணி நேரத்திற்கு 00 பாகை 02 கலை 32 ½ விகலை X 8 =
                                           16 கலை     260 விகலை
        260 விகலையை ,கலையாக்க        04 கலை20 விகலை
                                           ------------------------
                                        00-- 20 கலை 20 விகலை இதுவே சூரியன்
8 மணி நேரத்தில் சென்ற தூரமாகும்.
5 30 க்கு சூரியனின் நிலையைக் கூட்ட=289 -58 கலை 00
                                       --------------------------------
                                       290 18 --    20    இதுவே சாதகர் பிறந்த
நேரமான பிற்பகல் 01 30 க்கு
சூரியனின் நிலை                    290 பாகை 18 கலை   யாகும்.

இவ்வளவு கணிதங்கள் செய்யாமல்,சாதக பல்லவம் கொண்டு எவ்விதம் சுருக்கமாக,
சுலபமாக செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
                    சாதக பல்லவத்தில்,இரு வித அட்டவணைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
வேகமாகச் செல்லும் கிரகமான சந்திரனின் நிலைக்கு 1 நிமிடம் முதல் 24 மணி
நேரத்திற்கு உரிய தூரப் பட்டியலும்,இரண்டாவதாக, மெல்லச் செல்லும் மற்ற
கிரகங்களுக்கான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளன. இடைப்பட்ட நேரத்திற்கு சந்திரனின்
கதி பக்கம் 145 முதலாகவும், 168 ம் பக்கம், முதல் மெல்லச் செல்லும் கிரகங்களுக்
கான அட்டவணைப் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளன.
சந்திரனின் நிலை
      காலை 5 30 க்கு           பாகை  கலை     தினகதி பாகை  கலை
       (வாசன் பஞ்சாங்கம்)          308  -- 24                  12 --   36
      8 மணி நேரத்திற்கு
      பக்-151 ன் படி                  04 --- 13             
                                   ---------------------
      பிறந்த நேரம் பகல் 1.30 க்கு    312 --- 37   சந்திரனின் நிலை.
                                   ---------------------
செவ்வாயின் நிலை :
  
    காலை 5 30 க்கு           பாகை  கலை      தினகதி பாகை  கலை
                                   227  --   04                    00 --   39
       8 மணி நேரத்திற்கு           00  --   13    ( பக்கம் 171 )
                                  -------------------------  
       பிறந்த நேர செவ்வாய்       227  --   17   நிலையாம்.
புதனின் நிலை :
காலை 5 30 க்கு           பாகை கலை விகலை     தினகதி பாகை கலை
                             264   --   39  --   00                     00 -----   59
8 மணி நேரத்திற்கு            00   --   19  --   40     ( பக் 172 )
                            ---------------------------------------------
பிறந்த நேரத்திற்கு புதனின்   264   --   58  --   40     =  264 பாகை 59 கலையாகும்
நிலை              = ---------------------------------------------

குருவின் நிலை (வ) :
              வக்கிர கதியிலுள்ள கிரங்களுக்கு,அவை இடைப்பட்ட வித்தியாச நேரத்தில்,சென்ற தூரத்தை காலை 5.30 க்கான கிரக நிலையிலிருந்து கழிக்கவேண்டும்.

குருவின் நிலை காலை 5-30க்கு     109 பாகை 15 கலை 00   தினகதி 00 08 கலை.
8 மணி நேரத்திற்கு           =      00  --    02   --    40 ( --- ) ( பக்-.168 )
பிறந்த நேரத்திற்கான குருவின்     ---------------------------------------------
                        நிலை =    109  --    12  ---    20    = 109 பாகை 12 கலை..
                                  ----------------------------------------------

சுக்கிரனின் நிலை :

காலை 5-30 நிலை                 244 29 00     தினகதி  01 பாகை 08 கலை
8 மணி நேரத்திற்கு                 00 22 40    ( பக் -173 )
பிறந்த நேரத்திற்கான சுக்கிரன்     ----------------------------
                     நிலை  =    244 51 40     = 244 பாகை 52 கலையாகும்.

சனியின் நிலை  ( வ ) :

காலை 530 க்கான நிலை         058 43 00     தினகதி  00 பாகை 02 கலை
8 மணி நேரத்திற்கு                 00 00 40  ( -- )  ( பக்--- 168 )
பிறந்த நேரத்திற்கான சனியின்    ---------------------------
                      நிலை  =    058 42 20  =   058 பாகை 42 கலையாகும்.

ராகுவின் நிலை :

காலை 5-30 நிலை                 041 31 00     தினகதி  00 பாகை 03 கலை
8 மணி நேரத்திற்கு                 00 01 00  ( --- )    ( பக் -168 )
பிறந்த நேரத்திற்கான சுக்கிரன்    ----------------------------
                     நிலை  =    041 30 00    =   041 பாகை 30 கலையாகும்.


ராகு பின்னோக்கிச் செல்லும் கிரகமாதலால்,இ.வி.நேரத்தில் சென்ற தூரத்தைக் கழிக்க வேண்டும் . கேதுவின் நிலை காண,ராகுவின் நிலையிலிருந்து கூட்டியோ கழித்தோ
காணவேண்டும். ராகுவின் நிலை  =   41 பாகை 30 கலை
                                =   180 பாகை 00 கலை   ( + )
                                   ----------------------------------------
               கேதுவின் நிலை =   221 பாகை 30 கலை.
                                  ----------------------------------------
கேதுவின் நிலை திருக்கணித பஞசாங்கத்தில் கொடுக்கப்பட்டிருக்காது.

இனி சாதக பல்லவத்தை பயன்படுத்தி,சப்த வர்க்கங்களான இராசி,ஹோரா,திரேகாணம்,
சப்தாம்சம்,நவாம்சம்,துவாதசாம்சம்,திரிம்சாம்சம் ஆகியவற்றை அமைப்போம்.(பக்கங்கள்
25 முதல் 31 வரை).
           பாகைகலை                          பாகை கலை
சூரியன் --   290  -- 18                  குரு  --      109  --  12    ( வ )  

சந்திரன்--   312  -- 37                   சுக்கிரன்--    244  --  52

செவ்வாய்-  227 --  17                  சனி ( வ )   058  --  42

புதன் --     264 --  59                  ராகு         041  --  30
                                      கேது --       221  --  30

சாதகர் பிறந்த பகல் 1 30 க்கு கிரகங்களின் நிலையும்,பாவகநிலையும்,
பூர்த்தி செய்வோம்.



XI 337 -- 37

  XII 010 -- 16
ராகு041 --30
  I 042 –55
சனி(வ)58-42

  II 070 –16
சந்-312-37
 X 304 -- 58


     பாவகச்சக்கரம்

  III 097 – 37
குரு(வ)109-12
சூரி-290-18
IX 277 -- 37

 IV 124 – 58
புத-264-59
 VIII 250- 16
சுக்-244-52
செவ்-227-17
 VII 225 – 55
கேது-221-30

VI  190 -- 16

 V  157 -- 37


                                 ஹோரா சக்கரம்

லக்
சூரி
சந்
செவ்
புதன்
குரு
சுக்
சனி
ராகு
கேது
சந் 
சூரி
சூரி
சூரி
சந்
சூரி
சூரி
சூரி
சந்
சந்










லக் ராகு
சனி (வ)


சந்திரன்



           இராசி

குரு (வ)

சூரியன்


புதன்
சுக்கிரன்

கேது
செவ்வாய்






ராகு
       லக்

   சுக்கிரன்







          நவாம்சம்

  சூரியன்


  சந்திரன்


  செவ்வாய்
  குரு (வ)

    புதன்

    கேது

 சனி (வ)

1 ம் பாவகம் (லக்கின நிலை)  042 பாகை 55 கலை.



   கேது
 செவ்வாய்





  சந்திரன்





         திரேகாணம்



  சனி ( வ )

   புதன்

  சுக்கிரன்

    குரு (வ)


லக்,சூரி
ராகு


  
   கேது

    சனி

  செவ்வாய்

 

    குரு



        துவாதசாம்சம்    

    சந்

    சுக்

  

 

   

லக்
ராகு
புதன்
சூரியன்



  லக்
  செவ்வாய்

   சுக்கி

   

  புதன்
  குரு





        திரிம்சாம்சம்      

  
   சூரி



  சந்தி

    சனி  



 ராகு
 கேது

 
       
  

   சந்தி
   சனி,குரு,
    புதன்

 

லக்



         சப்தாம்சம்   

   கேது

 ராகு
சுக்கி

  

 

    சூரி



செவ்வாய்



திசையிருப்பு :
        சந்திரனின் பாகை,கலையை எடுத்துக்கொண்டு அதன் மூலமாக திசையிருப்பு காணலாம்.(வாக்கியம் போல் ஆதியந்த பரம நாழிகை,இருப்பு
நாழிகை கண்டுபிடிக்க வேணடியதில்லை.) பக்கம் 18 முதல் 24 வரை.

 சாதகர் பிறந்த பகல் 1 30 க்கு சந்திரனின் நிலை = 312 37
கும்பராசியில் வருவதால் மகரம் வரையுள்ள
அளவைக் கழித்துவிடலாம்.மகரம்வரை          = 300 00 ( -- )
                                                ----------------
கும்பத்தில் சென்ற பாகை ,கலை                =  1237
                                                ---------------
                                        ஆண்டு மா -- நாள்
பாகை 12  கலை 30 க்கு  (பக் 20)  =      10    -- 01  -- 15
  மீதி 7 கலைக்கு (பக் 24)         =      00    -- 01 --  27 ( --- )
                                        -------------------------------------
இராகு திசையிருப்பு                =      09  வ  11 மா 18 நாள்.
                                        -------------------------------------
             இத் திசையிருப்பு கணிதத்தில் சந்திரனின் பாகை/கலைக்கு திசையிருப்பு
கண்டு,மீதமுள்ள கலைகளுக்கு வரும் மாத/நாட்களை கழித்துவிட வேண்டும்.சந்திரன்
செல்ல,செல்ல திசையிருப்பு குறைந்துகொண்டே வருவதால் கழிக்கவேண்டும்,கூட்டக்
கூடாது.