Search This Blog

Sunday, 29 July 2012

ஜோதிட வளர்ச்சி

ஜோதிடவியலின் வளர்ச்சி

               ஜோதிடவியலின் பதினெட்டு மூலகர்த்தாக்களான,முனிவர்கள் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள் ஆவர். அவர்கள் சூரிய, பிதாமக, வியாஸ, வசிஷ்ட, அத்ரி, பராசர, கஸ்யப, நாரத, கர்க, மரீசி, மனு, ஆங்கிரஸ, லோமச,  பௌலிச, ஸ்யவன,  யவன, பிருகு மற்றும் சௌனக ஆகிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு சித்தாந்ததை எழுதியுள்ளனர்.

இவர்களுக்குப்பின் பிருகு முனிவர், பிருகஸ்பதி,  பத்தராயணர், கபிலர், கஷ்யபர்,  மனு, மகரிஷி பராசரா, சதயாச்சார்யா, வராகிமிஹிரா, படோத்பவா,  வராஹிமிகிரரின் புதல்வர் பிருத்யுயசா, வைத்தியநாத தீட்சிதர், உத்திரகாலாமிர்தம்  எழுதிய  காளிதாசர்,  ஜாதகதத்வா   எழுதிய மகாதேவா, இன்னும் எத்தனையோ மகாமுனிகள், அறிஞர்கள், இந்திய ஜோதிட முன்னேற்றத்துக்குத் தங்கள் சேவையையும், பங்களிப்பையும் வாரி வழங்கியவர்கள் ஆவர்.

                மகரிஷி பராசரர் : இந்திய ஜோதிடத்தின் தந்தை எனப் பலராலும் புகழப்பட்டவர்.இவர் படைத்த மிகப் பெரிய ஜோதிடநூல்”பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா” ஆகும்.

                மகரிஷி ஜெய்மினி : இவர் “வியாச மகரிஷி”யின் பிரதான சீடர்.இவர் தனது குரு வியாசரை “பத்ராயணர்” என குறிப்பிடுகிறார்.

இவரது சூத்திரங்களில்,ருத்ராம்சம், சஸ்த்தாம்சம்,சப்தாம்சம் மட்டுமின்றி இலக்னம் மற்றும் யோகங்கள் இணைக்கப்பட்டுள்ளன..

                ஆர்யபட்டா : வானியல் சாஸ்த்திரத்திலும்,கணிதத்திலும் சிறந்து விளங்கியவர்.பாடலிபுத்திரம் அருகே அஷ்மாக் என்ற கிராமத்தில் பிறந்தவர்.தனது பள்ளிப்படிப்பை குஷ்மபுராவில் முடித்தார்.

ஆர்யபட்டீயம்,ஆர்யபட்டா சித்தாந்தம் ஆகியவை இவரின் மிகச்சிறந்த படைப்புகளாகும்.

                வராஹிமிகிரர் :இவர் இந்திய வானியல்வலலுனர் ,கணிதமேதை மற்றும் ஜோதிடமேதையும் ஆவார்.

இவர் உஜ்ஜெய்னியில் பிறந்தவர்.ஐந்து வானியல் கணிதம் சம்பந்தமான நூல்களான சூர்யசித்தாந்தம்,ரோமகசித்தாந்தம்,பௌலிசசித்தாந்தம்,வசிஷ்டசித்தாந்தம், மற்றும் பிதாமகசித்தாந்தம் ஆகியவற்றின் சாரமே இவரின் பஞ்சசித்தாந்திகா சிறந்த நூலாகும்.

கலைக்களஞ்சியம் என பெயர பெற்றது இவரது பிருகத் சம்கிதா வாகும். இவரது புதல்வர் பிருத்யுயசாவின் ஜோதிடஉலகுக்கான பங்களிப்புத்தான் ஹோரா சாரா. தனது தந்தையின் நூல்களுக்கு மிகச் சிறந்த விளக்கங்களை அளித்துள்ளார்.வராகிமிகிரர்,கோள்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருவதையும்,சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகங்கள் மிக வேகமாகச் சுற்றுவதையும், தூரத்திலிருக்கும் கிரகங்கள் மெதுவாகச் செல்வதையும் கேப்லருக்கு முன்னரே அறிந்திருந்தார் என சொல்லப்படுகிறது.

                இவர்களைத் தவிரவும்,முதலாவது பாஸ்கரா,இரண்டாவது பாஸ்கரா,லல்லா,வடேஸ்வரா,வீரசேனா,ஜெயதேவா, ஆரியபட்டா ஒனறு/இரண்டு ,ஸ்ரீ பதிஎன  வானியல்,கணிதம்,ஜோதிடத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் ஏராளம் இவ்வாறாக ஜோதிட வரலாற்றை எழுதிக் கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன் முடித்துக் கொள்ளலாம்..

உலக -இந்திய ஜோதிடம்


“நாஸ்டர்டாம்ஸ்”—கி.பி.௧௫௦௩- ௧௬௩௦ -- 1503-1630  டைக்கோப்ரே கி.பி -- 1546—1601 மற்றும் கேப்லர் கி.பி -- 1571—1630 ஆகியோர் ஜோதிட அறிவு வளர முத்தாய்ப்பாக தங்கள் பங்கை அளித்தார்கள்.

“கலிலியோ”டெலஸ்கோப்பை கி.பி 1609 கண்டுபிடித்தார் .அதன் மூலமாக கிரகங்களையும் நட்சத்திரங்களையும் சுலபமாக ஆராயும் நிலைஏற்பட்டது.

“நியுட்டன்” கி.பி 1642 – 1727 வானியல் மற்றும் ஜோதிடத்தைப் பற்றி ஆராய்ந்து  2884 நட்சத்சிரங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்தார்.

இவ்வாறாக- பண்டைய உலகத்தில் ஜோதிடம் வளர்ந்து – படிப்படியாக வளர்ச்சியடைந்தது.

பௌர்ணமி – மாதத்திற்கு ஒருமுறை தோன்றுவதை அடிப்படையாகக்கொண்டு சூரிய பாதை அல்லது இராசி மண்டலம் 12 சமபாகங்களாக நம் முன்னோர்கள் பிரித்துள்ளனர். இதுவே இராசி என குறிப்பிடப்படுகிறது.

இராசி மண்டலப் பிரிவின் கிரகங் களான சூரியன்- சந்திரன்-செவ்வாய்-புதன்- குரு- சுக்கிரன்-சனி பற்றிய அடிப்படை உண்மைகள் மாறாமல் அப்படியே உள்ளன.

இந்திய ஜோதிடம்

            உலகில் இந்திய ஜோதிடமென்பது காலத்தாற் சோதிக்கப்பட்ட மிக பழமையான ஜோதிட முறையாகும்.ஜோதிஷா எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு      ஒளியின் விஞ்ஞானம் எனப் பொருள். மேலைநாடுகளால் வேதாங்க ஜோதிடமென அழைக்கப்படுகிறது.

இந்துக்கள் கோட்பாடுகளைக் கோண்டுள்ள வேதத்திலிருந்து தோன்றியதே ஜோதிட  சாஸ்திரமாகும். இந்தப் பிரபஞ் சத்தின் விவரிக்க முடியாத தாக்கத்தை நாம் புரிந்துகொள்ளக்   கூடிய விஞ்ஞானம் ஜோதிடமாகும்.பண்டைய முனிவர்களின்  வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் புரிதலையும் அனுபவத்தையும் வேதஜோதிடம் பிரதிபலிக்கிறது.

 இந்து முனிவர்கள் மற்றும் தத்துவஞானிகள் கடவுளைப் பற்றி விளக்க மிக சிரமங்களை எடுத்துக்கொண்டனர் . இந்த உலகமே தெய்வசக்தியால் இயங்குவதாக விளக்கினர். இந்த கடவுளின் உயர்ந்த ஞானமானது. ஒவ்வொரு    மனிதனையும் காத்து-அவன்.

வளர்ச்சிக்கான நல்ல சந்தர்பங்களையும் அவனுக்கு உருவாக்கித் தந்தது. நம்பிக்கையையும்-தைரியத்தையும் அளித்தது.

வேத ஜோதிடம் மனிதனின் பக்திமயமான நடத்தை மீது நம்பிக்கை வைக்கிறது. மேலும், தான் யார் ?என்ற உண்மையையும்,அவனே உணர வழிகாட்டுகிறது.

இந்த ஆன்மாவுக்கு சுப்ரீம் பவரான கடவுள் மற்றும் கிரகங்கள் அளித்த வழிகாட்டுதலாலும்,அதன மூலமாக அவனுக்கு ஏற்பட்ட   நம்பிக்கையாலும் , ஜோதிடர்கள் கணிக்கின்ற பலன்கள் உண்மையாகின்றன,எப்போதும் தவறுவதில்லை என்பதை அவன் தெரிந்து கொள்கிறான். ஜோதிட நூல்களில் மிகப் பழமையான நூல் “ரிக் ஜோதிட”மாகும். இது ”லகதா” வால் எழுதப் பட்டது. இதில் ௫/ 5 வகை வருடங்கள்,இரு அயனங்கள்,நட்சத்திரங்கள் கொடுக்கப் பட்டடுள்ளன. இருபத்தியேழு நட்சத்திரங் கள்,வசந்த கால சமகாலப்புள்ளிகளின் வக்ரகதி பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

உலகஜோதிடம்


உலகஜோதிடம்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து,பெரு,மெக்சிகோ ஆகிய நாடுகளில்தான்,வானியல் வேர்கள் ஊடுருவியதாக கருதப்படுகிறது. கி,மு,4000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர்கள் கிரக நிலைகளைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தார்கள் அவர்கள் பஞ்சாங்கங்களைத் தயாரித்தனர்.

அதே காலத்தில்,சீனர்களுக்கும் வானியல் அறிவு இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில் கி.மு, 2608 ல் கோயாஸ்குட்டே என்ற சீன அரசர் கோள்அரங்கம் கட்டியதாக தெரியவருகிறது.கி.மு.530 ல் பித்தாகோரஸ் – பூமி தன்னைதானே தன் அச்சிலே சுழல்வதாகக் கண்டறிந்தார்கள்..கி.மு. 275 சுமாரில் அரிஸ்டார்சஸ் என்ற அறிஞர் பூமி,சூரியனையும் சுற்றிசுழல்வதாகக் கண்டறிந்தார் . கி.மு.320 – 260 க்கு இடையே அரிஸ்டலின் மற்றும் டிமோரிஸ் ஆகியோர் நட்சத்திரங்களின் நிலைகளைப் பற்றிய அட்டவணை ஒன்றைத் தயாரித்தார்கள் .

இவ்வாறாக ,அறிஞர்கள் அளித்த கிரகங்கள்,நட்சத்திரங்கள்,அதன் அசைவுகள் என்று அவர்கள் வழங்கிய அறிவின் மூலமாகவே , இந்தக் கிரகங்களின் அசைவுகளை அடிபடையாகக் கொண்டு , மனிதனின் எதிர்காலம் பற்றி, அறிவிக்கும்,ஜோதிடம் பிறந்ததென்றால் மிகையாகாது.

கிளாடியஸ்பிலோமி (கி.மு. 120 – 180) என்ற அறிஞர் ஹிபார்க்கஸ் என்ற அறிஞரைத் தழுவி வானியல் மற்றும் ஜோதிடம் பற்றி எழுதிய அல்மாஜெஸ்ட் என்ற நூலே உலகின் மிகச்சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.

அரேபியர்கள் மிகச்சிறந்த நூல் இதுதான் எனக் கூறியுள்ளனர்.இந்த நூலில், பூமியின் அமைப்பு, கிரகணம்பற்றிய விவரங்கள், நட்சத்திர ஒளி மண்டலம் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன

முன்வினை.......

உலகத்திலே மனிதர்கள் முன்ஜென்மத்தின் வினை கொண்டு அவரவர் செய்த பாவபுண்ணியத்துக்கு ஈடாக சுகதுக்கங்களை அனுபவித்து வருகிறார்கள்.இது சாஸ்திர சமபந்தம் மனித ஜென்மத்திலே,ஒருவன் ஷூ போட்டு செல்கிறான் மற்றவன் அதற்கு பாலிஷ் போடுகிறான்.

இதனாலேயே பாவ புண்ணியங்களுக்கான பலாபலன்களை நாம் உணர்ந்து கொள்ளலாம், மனைவி மக்கள், பெற்றோர், உற்றார், உறவினர் இவர்களோடு கூடி வீடு,தோட்டம், வாகனங்கள் என நல்ல விதமாக, சந்தோஷமாக நல்ல வேலையுடன், உயர்பதவியுடன், புகழுடன் வாழ்கிறவர்கள் போன ஜென்மத்தில் பெரும் புண்ணியம் செய்தவர்கள் என்றும் உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி,யாசித்து உண்ணும், ஏழ்மை வாழ்க்கை நடத்தி,வேலையின்றித் தவித்தும், வீடுவாசலின்றி அலைந்தும்,  பலவித வியாதிகளால் துன்பப்பட்டும்,கொடுமைமிக்க மனைவி,கொடிய நண்பர்கள் என அமைந்தும், மனைவியின்மை, மழலைகளின்மை, உடல்ஊனம், சர்வகாலமும் துன்பமும் அனுபவிப்பவர்கள் சென்ற பிறவியில் பாவங்கள் பல புரிந்தவராவர்.

இந்த இரகசியத்தை அறியவேண்டுமானால் ஜோதிட சாஸ்த்திரம் மூலமாக பலன்களைப் பார்த்து அறியவேண்டும். இதற்கு கணித ஆராய்ச்சிவன்மையும்,நல்அறிவும் வேண்டும். அதற்கான பாடங்களை இனி தொடர்ந்து பாரக்கலாம்.

ஜோதிடம் கற்க


ஜோதிடம் கற்க


ஓம் முருகா !                                                                                                               ஶ்ரீராகவேந்திராய நமக!
              ஜாதகரின் வாழ்க்கை நிகழ்வுகள், இந்த நேரத்தில் இன்னது நடக்கும் என துல்லியமாக கண்டறியப்பட்டாலே பலன் கூறும் ஜோதிட முறை,  அதன் முழுமையான, நூறு சதவிகித நன்மைகளின் மகிழ்ச்சியை அடையமுடியும்.

              மிகமிக வேகமாக ஓடும் தற்போதைய , எந்திரத்தனமான மனித வாழ்க்கையில், நேரமின்மை மற்றும் பொறுமையின்மை காரணமாக, அனைவரும் எதிர்வரும் காலங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதையறிய மிக்க ஆவலுடன் உள்ளனர்.

              மேலும், பலன் கூறுவதில் துல்லியம் இருந்தால் ஜோதிட விஞ்ஞானத்தை நம்பாதவர்களும், ஜோதிடம் உண்மையா? அல்லது பொய்யா? என மனக் குழப்பம் உடையவர்களும், கண்டிப்பாக துல்லியமான பலன் காரணமாக தங்கள் மனநிலையை மாற்றிக்கொண்டு நம்பிக்கையடைவர். அத்தகைய நம்பிக்கையை அடைய எளிய முறையில் ஜோதிடப் பாடங்களை நடத்த முயல்கிறேன். படித்து பலனடைந்து, எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உங்கள் பின்னூட்டங்கள் மூலமாக, எனது முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கக் கோருகிறேன்.

              ஆரம்ப நிலையில் உள்ளவர்களும், ஜோதிட அடிப்படை அறிந்தவர்களும், அலுப்புத்தட்டாமல், படித்து அறிந்து கொள்ளும் வகையில், பாடங்களும், பல ஜோதிடப் பத்திரிக்கைகளில் என்னால் எழுதப்பட்ட, ஜோதிடக் கட்டுரைகளை யும் எழுதியுள்ளேன். அவற்றை படித்து , பயன் பெற்று, உங்கள் பின்னூட்டங்கள் மூலமாக ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.

              இதுவரை மொத்தம் 257 பதிவுகளை அளித்துவிட்டேன்.உங்கள் அனைவரையும் தங்கள் பின்னுட்டங்களைத்  தவறாது அளித்து என்னை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டேன். இதுவரை இந்தியப் பார்வையாளர்கள் 92,972 -அமெரிக்கப் பார்வையாளர்கள் 45,494 பேரும்,  உக்ரைன் - 7868, ஸ்ரீலங்கா - 3468, சிங்கப்பூர் -- 1199, குவைத் -- 48,  இங்கிலாந்து -- 1158, மலேசியா -- 1279, யூ.ஏ.இ -- 1071, ஜெர்மனி -- 148, பிரான்ஸ் -- 38, ரஷ்யா -- 1355, கத்தார் -- 7, சீனா -- 211,லாட்வியா-31, எத்தியோப்பியா-3, அயர்லாண்ட் -57, தான்சான்யா-77 என       1 73 3464 க்கும் மேற்பட்டோர், பார்வை புரிந்தும் பின்னூட்டம் அளிக்காதது மனச் சோர்வு  அளிக்கிறது. எனவே, வாளாவிருக்காமல் தங்கள் ஆலோசனைகளையும், பின்னூட்டங்களையும் அளித்து ஆதரவு அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.வணக்கம்.
as on 26/03/2015
India
92972
United States
45494
Ukraine
7868
Sri Lanka
3468
Canada
1809
Russia
1355
Malaysia
1270
Singapore
1199
United Kingdom
1158
United Arab Emirates
1071