Search This Blog

Sunday, 26 August 2012

மனதின் மீதான மதியின் தாக்கங்கள்



மனதின் மீதான மதியின் தாக்கங்கள்

                     ந்திரனின் காரகங்கள், மற்றும் உச்ச,நீச்ச நிலைகள் அனைத்தும் பல்வேறு ஜோதிட நூல்கள் மூலமாக நாம் அறிந்த    ஒன்றே.   எனவே சந்திரனின் மற்ற முக்கிய நிலைகளைமட்டும் பார்ப்போம்,,,,
               நெருப்பு     ராசிகளில்,    சந்திரன் இருக்கும் போது, சுறுசுறுப்பும், சக்தியும், உறுதியான, லட்சிய மிக்க மனநிலையை  அளிக்கிறது..    ஸ்திர     ராசிகளில்      நிரந்தர தன்மையையும், விடாமுயற்சி இன்மையும்,    ஒரு நிலைபடுத்தக்    கூடிய தன்மையையும் மனதிற்கு அளிக்கிறது மதி.  காற்று   ராசிகளில் சந்திரன்  இடம்பெற   புத்தி கூர்மையையும், புரிந்துகொள்ளும் (மிதுனம்) சக்தியையும், உயர்ந்த நல் மனநிலையையும்,  சிந்திக்கும்  தன்மையையும், எதையும் அனுசரிக்கும் மனோபாவத்தையும்  (கும்பம்)   தருகிறது. .ஒரு ஜாதகத்தில் மூன்றாமி டம் மற்றும்  5 ஆம் இடத்தோடும்,  புதனின் தொடர்போடும்      கூடிய  சந்திரனே, மனதிற்கான முக்கிய    குறிகாட்டியாகிறான்.  ஒரு மனிதனின்  மனவுணர்வுகளையும், சூட்சும புத்தியையும், வெவ்வேறு கிரகங்களின் இணைவு மற்றும் வெவ்வேறு இராசிகளுடனான சந்திரனின் உறவே சூட்சுமமாக தெரிவிக்கிறது.
         சந்திரன்,   ராசிகளில்   குறிப்பிட்ட, நுட்பமான   பாகைகளில் வரும்போது,  அந்த தசா காலங்களில்,  ஜாதகனின்  உடலளவிலும்,  மனதளவிலும் பல்வேறு நோய்களை தந்து விடுகிறான். அந்த பாகைகளாவன:-  மேஷம் 26 பாகை, ரிஷபம் 12 பாகை, மிதுனம் 13 பாகை,  கடகம் 25 பாகை, சிம்மம்  24 பாகை, கன்னி 11 பாகை, துலாம் 26 பாகை,   விருச்சிகம்  14  பாகை, தனுசு 13 பாகை, மகரம் 25 பாகை, கும்பம் 5 பாகை மற்றும் மீனம் 12 பாகைகள் ஆகும்..
     சூரியனுடனான  சந்திரனின்  இணைவு,     பல்வெறு  ராசிகளில், பல்வெறு பாவகங்களில், பல்வெறுவிதமாக அமைகிறது.   அந்தந்த வீடுகளின்     காரகத்துவ அடிப்படையில் மாற்றங்கள் அமைகின்றன.       இலக்னத்தில்     ஜாதகரையும்,   2   இல் குடும்பஇநிலையையும்,     பொருளாதார நிலையையும் , 5 இல் குழந்தைகளுடனான பாசப்பிணைப்பையும்,    யூக லாபத்தையும், 11 இல் அபிலாஷைகளையும், 12 இல்  தத்துவ சிந்தனைகளையும், ஆத்மகல்வி நிலைகளையும் அளிக்கின்றன.                                                       
    சூரியனும்,   சந்திரனும்     அனுகூலமான  பார்வைகள் பார்த்துக்கொள்ள நல்ல உற்சாகத்தையும்,   மகிழ்ச்சிகரமான நிலைகளையும், வாழ்க்கையில்  எளிதாக வெற்றி  அடைதலையும் அளிக்கின்றன.  ஆயின்,   அனுகூலமற்ற பார்வைகள் , வாழ்வில் தடைக ளையும், வித்தியாசமான மனவுணர்வுகளையும் அளித்துவிடுகின்றன..
    ந்திரனின், செவ்வாயுடனான அனுகூல பார்வை, உற்சாகமான, சுறுசுறுப்பான மன நிலையை யும், வாழ்வில் வரும் இன்னல்களை  மனத் துணிவோடு  எதிர்கொண்டு சமாளிக்கும் திறனையும், செல்வத்தையும், கூர்மதியையும் அளிக்கிறது. ஆயின், அனுகூலமற்ற பார்வை, அஜாக்கிரதையான மனநிலையையும், மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தையும், தீயகுணத்தையும்,   மன உளைச்சலையும் அளிக்கிறது.
    புதனுடனான  நற்பார்வை   நகைச்சுவை உணர்வையும்,  ஊடுருவுகிற புத்தி கூர்மை யையும்,  இலக்கிய   தாகத்தையும், கலை, ஜோதிடம், வணிகம் ஆகியவற்றில் ஆர்வத்தையும், சாதுர்யத்தையும் அளிக்கிறது.   அனுகூலமற்ற பார்வை மனக்குழப்பத்தையும், மனசல னத்தையும், கோழைத்தனத்தையும், முக்கிய முடிவுகளை எடுப்பதில் அலைபாயும் மன நி லையையும் அளிக்கிறது.
குருவுடனான, சந்திரனின் அனுகூலமான பார்வை, பரந்த மனப்பான்மையையும், இரக்க மனத்தையும்,  திடமனதையும்,  கடமையுணர்வையும், தலைமைப்பண்பையும், தத்துவ மற் றும் மாயாஜாலக் கல்வியில் ஆர்வத்தையும் செல்வ நிலைகளையும், தர்ம சிந்தனையையும் அளிக்கிறது. அனுகூல மற்ற பார்வை வாழ்க்கையில் தடைகளையும்,  ஏழ்மையையும், உணர்ச்சியின்மையையும் அளிக்கிறது.
   ந்திரனின், சுக்கிரனுடனான நற்பார்வை, கலையுணர்வுள்ள மனதையும் , நடிப்பு, சிற் பக்கலை, கவிஞர்,  நடனக்கலைஞர் போன்றவர்கனையும், மற்றவர்களிடம் பாசத்துடன் அனுசரித்துச் செல்லும்  தன்மையையும் அளிக்கிறது. துர்பார்வை எனில் தவறான வழி காட்டுதலுடன் கூடிய பாசத்தையும்,            மனவாழ்க்கையில் பாதிப்பையும்,        பகற்கனவு  காணுதலையும் அளிக்கிறது..
   னியுடனான நற்பார்வை அளவற்ற பொறுமையையும், புத்தி கூர்மையையும், ஆழ்ந்த அறிவையும்,   தத்துவ    மற்றும் மாயாஜாலங்களில்  ஆர்வத்தையும் அளிக்கின்றன.     துர்பார்வை  :- நரம்பு தளர்ச்சி,  பொறுமையின்மை, சோம்பேறித்தனம், சுயநலம் மற்றும் மனக் குழப்பத்தையும் அளிக்கிறது.
   ராகுவுடனான    இணைவு  (இரண்டும் பலமிக்கதாக இருப்பின்) ராஜதந்திரத்தையும், உள்ளுணர்வால் மற்றவர்களின்   பலவீனங்களை அறியும் தன்மையும் அளிக்கிறது.  சந்திரன் பலமற்ற வனாக இருப்பின்  பைத்திய    நிலையையும், மந்தபுத்தியையும் அளிப்ப தோடு ஜாதகரை, தந்திரக்காரனாகவும், கபடதாரியாகவும் ஆக்கிவிடுகிறது.  கேதுவுடனான நற்பார்வை  ஞானமிக்க வராகவும் , 
பக்திமிக்கவராகவும்,   தத்துவார்த்தமான மனதையும் அளிக்கிறது.
மதியின் தாக்கத்தை ஆராய மதிப்புமிக்க மனிதர்களின் ஜாதகங்களை காண்போமா.?

                      ஆதிசங்கராச்சாரியார்


செ வ்

சூரி
புத
சுக்


 இராகு

 சந்




சுக்,ராகு



 சூரி

 குரு
இராசி
லக்//


நவாம்சம்
 செவ்

 



  



 சனி



கேது




 சந்
சனி,புத
  குரு
கேது

லக்//









ஆதிசங்கரரின்  ஜாதகத்தில், லக்னாதிபதி சந்திரன் புத்திகூர்மைக்கு  காரகனான புதனின்   மிதுன ராசியில் இருக்கிறார்  .செவ்வாய் சந்திரனுக்கு   கேந்திரத்தில் உள்ளார். குருவும் திரிகோணத்தில் உள்ளார்.  சனியும்   குருவும்   பரிவர்த்தனை.  8 ம்மிடமான  கும்பத்திலிருந்து சந்திரனை குரு  பார்க்கிறார்..   கும்பம் மறை    பொருளுள்ள ராசியாகும்.  12  இல்   சந்திரன் அவரை சிந்தனாவாதியாகவும்,  இணையற்ற   தத்துவவாதியாகவும் ஆக்கியது. சந்திரன் மீதான செவ்வாயின்  பார்வை வாதிடுவதில் வல்லவராக்கியது.  உச்ச சூரியன் மற்றும்
சுக்கிரன், புதன் இணைவு, அவரை ஈடில்லாத பிரசங்கியாகவும்,கலைஞராகவும் ஆக்கியது..

இரமணமகரிஷி





சந்திரன்-       கேது இணைவுக்கு   மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இரமண மகரிஷியின் ஜாதகமா கும். இவ்விருவரையும்     கும்பத்திலிருந்து  குரு பார்வை   செய்கிறரர்  இது அவருக்கு உயர்ந்த, சுறுசுறுப்பான    உள்ளத்தை தந்தது. மறைபொருளை உணர்த்தும் கும்பராசியி லிருந்து குரு உண்மை நிலையை     உணரவைத்தது.  இவை 5 மற்றும் 9 ஆம்   இடமான தால் தெய்வீகத் தன்மையை உணர்ந்தார்.அவருடைய தத்துவார்த்தமான முயற்சிகளுக்கு ஆதரவாக ஆத்மகாரகன் சூரியன்.,  மற்றெரரு தத்துவராசியான தனுசுவில் சந்திரனுக்கு 7 ல் இருந்து   உதவினான். வளர் பிறை சந்திரனும் வர்கோத்தமம் பெற்றதால் உயர்ந்த மனோசக்தியைப் பெற்றார்.

 சனி


செவ்



 கேது
சந்


 குரு



கேது

சந்

 குரு
இராசி


 புத

நவாம்சம்
 சுக்

  



  



 இராகு
சூரியன்


புத
சுக்
லக் //



 சனி
இராகு
செவ்
லக் //

சூரி


          எனவே,   அன்பர்களே! சந்திரனின் நிலைகளை ஆராய்ந்து, அது எவ்வாறு பல விதங்களில்,  பல     துறைகளில், மனநிலையில், திறமைகளில்,  தகுதிகளில்,  மனமாற்றத்தை ஏற்படுத்து கிறது என்பதை     இன்னும் பல ஜாதகங்கள் மூலமாக காணலாம் என்றாலும்  விரிவஞ்சி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.




No comments:

Post a Comment