Search This Blog

Sunday, 30 September 2012






சனி – செவ்வாய் சதி ! ஜாதகரின் கதி.!
          
          மாலை மயங்குகின்ற நேரம்,மாலை நாளிதழில் வெளியான செய்தி கண்டு வருந்தியது என் மனம்,எனது நண்பரொருவரின், 25 வயது மகன் சாலை விபத்தில்,மரணமடைந்த சேதியால் மனம் சஞ்சலமடைந்தது.
           
                  பல்கலைக்கழகத்தில்  தனது  ஆய்வறிக்கையை      சமர்ப்பித்துவிட்டு,சாலையைக் கடந்த வனுக்கு, எமனாயிற்று எதிரே வந்த லாரி.தன் மகன் உலகப்புகழ் பெறுவான்,என்ற    பெற்றோரின் கனவுகளெல்லாம் தகர்ந்தன.
         
       அந்த அற்ப ஆயுள் ஜாதகரின்,ஜாதகத்தை ஆய்வு செய்த போது ,அவனுக்கு ஏற்பட்ட கதி சனி செவ்வாயின் சதி யென விளங்கியது.

சனி


ராகு





  இராசி
 ஜாதகம் -1
 01-11-1987



குரு
சுக்
லக்///
செவ்



கேது, சூரி, சனி,புத




       
இந்த துர்பாக்கிய நிலைக்கு, மூன்று காரணிகள் தெளிவாயிற்று.
1.        
லக்னாதிபதி குருநின் இரு வீடுகளில்,ஒன்றில் சனியும் (4ல்) மற்றொன்றில் செவ்வாயும்
இடம்பெற்றுள்ளன.
2.       
இராகுவுடனான சனியின் நெருக்கம் மிகவும் ஆபத்தானதாயிற்று. செவ்வாயின் ஆட்சி வீடான,மேஷத்தில் ராகுயிருப்பது இன்னும் நிலைமையை மோசமாக்கியது. 4 லிருந்து சனியும், லக்னத்திலிருந்து   செவ்வாய்,   இருவரும்  ஒருவருக்கொருவர் பரஸ்பர பார்வை புரிகின்றனர்.
3.        ஜாதகத்தின்       இடப்பக்கம்  (லக்னம் முதல் 7 ம் வீடு வரை)  முழுவதுமாக,அசுப கிரகங் களின் பிடியில் உள்ளது. (சனி,செவ்வாய்,ராகு)
அந்த இளைஞன்,   நல்ல குடும்பத்திற் பிறந்து, கல்வியிற் சிறந்து,ஆய்வு செய்யுமளவிற்கு உயர்ந்ததற்குக் காரணமென்ன ?
             
இலக்னாதிபதி    குரு,     9 ம்  வீட்டில்  சுக்கிரனோடு   இணைவு.  இலக்னாதிபதி   குரு   5 ம் பார்வையால், லக்னத்தைப்   பார்க்கிறார்,  அத்துடன்  9 ம்  பார்வையால்  5 மிடத்தைப் பார்க்கிறார், மேலும், 11 ம்   இடத்திலிருந்து   சந்திரன், சூரியன், புதன், கேது     ஆகிய கிரகங்கள் நேரிடையாக 5 மிடத்தைப் பார்க்கின்றனர். இக் காரணங்களால் கல்வியிற் சிறந்து,நல்ல குடும்ப்ப் பின்னணியும் அமைந்தது.  ஆனால்,  அசுபர்களான   சனி,  செவ்வாயின்  பாதிப்பு,  ஜாதகரின் ஆயுளைக் குறைத்து, கல்விக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.
      
குரு லக்னாதிபதியாகி,குருவின் வீடுகளில் சனி-செவ்வாய் இருந்து,ஏற்படுத்தும்பாதிப்பைப் பார்த்தோம்.
      
இதைப் போலவே,செவ்வாய் லக்னாதிபதியாகி,சனி-செவ்வாய் மேஷ விருச்சிக ராசிகளில் ஏற்படும்  பாதிப்பு, லக்னாதிபதி  புதனாகி,  மிதுனம்,  கன்னியில்,   இவ்விரு    கிரகங்களால் ஏற்படும் பாதிப்பு, சுக்கிரன்  லக்னாதிபதியாகி, ரிஷபம், துலாத்தில், இவ்விரு கிரகங்களால் ஏற்படும் பாதிப்பு, சனி  லக்னாதிபதியாகி, மகர,  கும்பத்தில்   ஏற்படும்  பாதிப்பு என்ன என ஆராய்வது,நமக்கு ஜாதக ரின் எதிர்காலத்தைப் பற்றி    தெளிவாகப்    புரிந்து கொள்ளக்கூடிய தெய்வீகத்தன்மையை அளித் திடும் எனலாம்.
      
அதேபோல்,  சந்திரனும்  சூரியனும், ஒரு   ராசிக்கு மட்டுமே ஆதிபத்தியம் பெற்றுள்ள தால், கடகம்,சிம்மம் ஆகியவை லக்னமாகி,அங்கு சனி-செவ்வாய் எவ்வித அழிவைத்தருகிறதுஎன்றும் பார்க்கவேண்டும். ஆனால்,   இவ்வழிவானது  லக்னாதிபதியின் நிலையைப் பொறுத்து மாறுபடும். எவ்வாறு    மாறுபடுகிறது    எனப்   பார்ப்போம்.  உதாரணமாக  சனி-செவ்வாய் இருக்கும் ராசிக்கு முன்னால்  சந்திரன்  இடம்பெற,   ஜாதகர் பல்கலைகளில் தேர்ச்சி பெற்றவராகவும், திறமைமிக்க வராகவும்,விரும்பியதை யடைபவராகவும் திகழ்ந்தார்.
      
ஏனெனில், முன்   ராசியிலுள்ள   சந்திரனிடமிருந்து,     அவனின் ஒளிவீச்சால் சக்தி பெறும் சனி,   அச் சக்தியால்   செவ்வாயையும்     இயக்குகிறார். எனவே,சந்திரனின் இந்நிலை நன்மையே அளிக்கிறது.   இதைப்போலவே,   சனி-செவ்வாய்   சந்திரனுக்கு 7 ல் இடம்பெறும் போதும் நன்மை யளிக்கிறது. இத் தீயகோள்களின் மீதுபாயும் சந்திரனின் சக்தி.அவற்றை ஜாதகருக்கு சாதகமாக இயங்க வைத்துவிடுகிறது.
      
இனி,       இரு      ஆதிபத்திய    வீடுகளில்   இக்      கிரகங்களால்      ஏற்படும்     இன்னல்களின் மாறுபாட்டைப் பார்ப்போம்.   மேஷம்-விருச்சிகம்,   ரிஷபம்- துலாம்,     மிதுனம்-கன்னி,தனுசு-மீனம் ஆகிய ராசிகளில் சனியும்,  செவ்வாயும் இடம்பெறும்போது, சனியானவர்,செவ்வாய்க்குப் பின்னர் இடம் பெற்றால்,இருவரும்  ஒருவரையொருவர்   பரஸ்பரபார்வை  பார்த்துக் கொள்வதில்லை. ஆனால், செவ்வாய்  மேஷத்திலிருந்து, சனி  விருச்சிகத்திலிருக்க செவ்வாய் சனியை நோக்கு வார்.சனியோ,  செவ்வாயை  நோக்கார்.  மற்ற ராசிகளான மிதுனம்-கன்னி,தனுசு-மீனம், ஆகிய இணையில்,செவ்வாய்க்குப் பின்  சனி  இடம்பெற, பரஸ்பர  பார்வை  நிகழ்கிறது.இவ்வாறான மாறுபட்ட  நிலைகளில், இத்தீய  கிரகங்களால், ஏற்படும்  ஆபத்தின்  தன்மைகளும்  மாறுபடு மன்றோ. 
     
மேற்கண்ட  ராசிகளில் ஏற்படும்   சனி -  செவ்வாயின் பரஸ்பர பார்வையோடு, சந்திரன் செவ்வா யோடு இணைந்திருந்தாலும் 7 ம்  வீட்டில்  இருந்து  செவ்வாய் பார்வை பெற்றாலும் இதே நிலை, சந்திரனோடு  சனிக்கு  ஏற்பட்டாலும் அல்லது சந்திரனுக்கு முன்னரோ,பின்னரோ எதிரிலோ  சனி  இருந்தாலும் ஜாதகருக்கு நன்மையே அளிக்கிறது. ஏனெனில் இவ்விரு நிலை களிலும்  சந்திரனிடமிருந்து  சக்தியைப் பெற்று, சனி ஜாதகருக்கு அளிப்பதால்,ஜாதகர் தன் சுய முயற்சிகளில் உந்தப்பட்டு, தடைகளை  தகர்த்து வெற்றிகளை குவிக்கிறார்.ஆனால் சந்திரனின் இவ்வாறான தொடர்பு  சனி-செவ்வாய்க்கு  இல்லையெனில், ஜாதகருக்கு  தன் முயற்ச்சிகளில் தோல்வியும்,ஏமாற்றமுமே ஏற்படுகிறது.
     
அடுத்து, சனி-செவ்வாய்  அளிக்கும்  இன்னல்களின்  தொடர்ச்சியைப்  பார்ப்போம்,
      
சனியும்,  செவ்வாயும் 7 ல் இருந்தாலோ, 7 ம் அதிபதியையோ அல்லது 7 மிடத்தையோ பார்த்தாலோ  ஜாதகருக்குத்  திருமணம்  நடைபெறுவதில்லை, அல்லது   மணவாழ்வு நீடித்து நிலைப் பதில்லை.
     
இதைப்போலவே 5 மிட சம்பந்தம்  குழந்தைகளையும், 3 மிட சம்பந்தம் சகோதரத்தையும், 4 மிட சம்பந்தம் தாய், வீடு, வாகனம்   ஆகியவற்றையும்,  9 மிட தொடர்பு தந்தையும், 10 மிட தொடர்பு தொழிலையும் பாதிப்படையச் செய்கின்றன.
     
மேற்கண்ட நிலைகளை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி மூலமாக ஆராய்வோமா ?
     
1992  ம்  ஆண்டு, என்  நண்பர்  ஒருவரின்  இன்ஜினியரிங் முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருந்த,  27 வயது நிரம்பிய, ஒரே  மகன் திடீரென மலை வாசஸ்தலம் செல்வதாகக் கூறி விட்டுச்  சென்றவன்  வீட்டிற்குத்  திரும்பவேயில்லை!  என்னவாயிற்று  அவனுக்கு?   எங்கே சென்றான்?  ஏன் வீட்டுக்குத்  திரும்பவேயில்லை? என்ற கேள்விகளுக்குப் பதில் காண அவன் ஜாதகத்தைப் பார்ப்போமா?
     
இங்கே நாம்  ஒன்றை கவனிக்க வேண்டும்.1992 ம் வருடம் சனி மகர ராசியில் இருந்தார் என்பதே அது.  அக்கால கட்டத்தில் பலர்,  பலவிதமான இன்னல்களை அனுபவமிக்கக்  காரண மானான், மகரச் சனி, மகரத்தை  ஜன்ம ராசியாக   கொண்டவர்களுக்குக் கூட சனி மனமிரங்க வில்லை.அவர்களுக்கும், துன்பத்தின்  சாயல்  இருந்து கொண்டே இருந்த்து. எனக்குத் தெரிந்து, மகரத்தில் சந்திரனிருந்து, அதுவே 7 மிடமுமாகப்  பெற்று  ஒரு ஜாதகர் போலியோவால் தந்து கால்களின் சக்தியை இழந்தார்.  சனியின் மகர,கும்ப ராசிகள் அடிவானில் இருப்பதாலும், எதிர் வீடான  சந்திரனின்  ஆட்சி  வீடான கடகம் மேலே இருப்பதாலும் மகரம் – கும்பம் இரு ராசிக ளும் சோக மயமான  ராசிகளாகக்  கருதப்படுகிறது.  உதாரணமாக, 6 ம் அதிபதி ( நோய் )மகர ராசியில் இடம் பெற,  அந்த ஜாதகர் க்ஷயரோகம்  போன்ற தீராத வியாதிகளுக்கு ஆளாகிறார், அதேபோல், 10  மிடம் மகரமாக,  தொழிலில் திருப்தியின்மை, தொழில் முடக்கம், நிலையற்ற தொழில்  ஆகியவை ஏற்படுகிறது.  இதுவரை மகரச் சனியின் மகிமையைப் பார்த்தோம். இனி, அந்த இளைஞன் என்ன ஆனான் என்று பார்ப்போமா ?




ராகு

சந்


சனி
  இராசி
 ஜாதகம் -2
 29 -11-1987
09 – 02 காலை
குரு




லக்///



சூரி,சுக்
கேது, புத
செவ்



மேற்படி  ஜாதகத்தில் 4 மிடம், சனி,ராகு - இரு பாவிகளுக்கிடையே நசுக்கப்பட்டுள்ளது.மேலும்,  செவ்வாயின்  நேர்  பார்வையாலும்   பாதிக்கப்பட்டு  உள்ளது.   சுகஸ்தானமான       4 ம்,பாவத்தின் மீதான,  அத்தீய கோள்களின்,  மும்முனைத்    தாக்குதல்   காரணமாக,   ஜாதகர்   தனது பாதுகாப்பு மிக்க  இல்லத்தை விட்டு,  திடீரென  அனைத்து   சுகங்களையும்  துறந்து, மக்கள் வாழாத மலைப் பிரதேசத்திற்குச் செல்ல நேர்ந்தது. அரச  குலத்திற் பிறந்த  சித்தார்த்தன்,    பின்னாளில் கௌதம புத்தர் ஆனதும்,இதே கதைதானே.!
      
இவ்விளைஞனின்    ஜாதகத்தில்,    உச்சம் பெற்றுள்ள சந்திரன் மற்றும் உச்சம் பெற்ற குரு  (அவரே லக்னாதிபதியுங்கூட)    பலம்மிக்க     கிரகங்கள்,     9 ம் இடத்திலுள்ள சூரியனைப் பார்க்கி றார்கள்.     இவ்விணைவு,    மனதில்    துறவியாகிவிடும்    எண்ணத்தைத்    தருவதாகும்.   மேலும், சந்திரனும் குருவும் எவ்வித   தீயகோள்களின் பார்வையின்றி,தன் நிலையில் இருப்பதால் இந்த இளைஞனின் முடிவு,   கொலை செய்யப்பட்டோ,  தற்கொலையோ, கடத்தப்பட்டதாகவோ இருக்க வாய்ப்பில்லை எனலாம். மேலும்,சந்திரனோடு.சனிக்கோ,குருவுக்கோ நேரடித்தொடர்பு     இல்லாத காரணத்தால் ஜாதகர்,    உலகில்   ஆசைகளைத் துறந்து,       துறவு   வாழ்க்கையை மேற்கொள்வார் எனலாம்.
      
ஸ்ரீராமபிரானின்     ஜாதகத்தில்,   7 மிடம் மகரமாகி, அதில் செவ்வாய் இடம் பெற்றிருந்தது. இராமனை மீட்டுவர,லட்சுமணன் செல்லுமுன்,சீதை அவன் மனதைக் கொடிய வார்த்தைகளால் புண்படுத்தியதை நினைவுபடுத்திப் பாருங்கள்,
      
இதே   நிலைக்கு,   தீ விபத்தால்    மனைவிக்கு  ஆபத்து  ஏற்படலாமென்ற பலனும் உண்டு. (மகரம் 7 மிடமாகி அதில் செவ்வாய்). சீதை அக்னிப்  பிரவேசம் செய்த கதையும் நாம் அறிந்த ஒன்றே.
      
செவ்வாயும்,சனியும்  சுக்கிரனைப்   பார்க்க,ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத் திற்கு வழிவகுக்குமன்றோ.
      
எனவே, இக் கட்டுரை  மூலமாக  எப்போது செவ்வாய் – சனி ஒரு வீட்டையோ அல்லது அதன் அதிபதியையோ  பார்க்கிறதோ  அப்போது  அந்த  பாவம் சம்பந்தப்பட்ட அல்லது கிரகம் சம்பந்தப்பட்ட காரகங்களில் இடர்வரும் என்ற முடிவுக்கு வர ஏதுவாதிறது,
.