நண்பேன்டா......................
நணபர்களும் பகைவர்களும் ---
அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே ! நண்பனே !
இந்த நாள் அன்றுபோல் இல்லையே நண்பனே ! நண்பனே !
-- கண்ணதாசன்.
ஆழமான பரஸ்பர அன்பைப் பரிமாரிக் கொள்வதே சிறந்த நட்பாகும்,நம்மில் சிலரை சந்திக்கும் போது அவர்களோடு ஒன்றிப் போய் மிக்க சந்தோஷங்க ளையும்,துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளுமளவுக்குப் பழகி நட்பின் எல்லை யைத் தொட்டுவிடுகிறோம். அதுவும் மாறாத நட்பாக மலர்ந்துவிடு கி றது.சில நேரங்களில் உங்களுக்கு பரிச்சிய மில்லாதவர்களோடு பரம விரோதம் ஏற்பட்டுவிடுகிறது. இது எங்ஙனம் ஏற்படுகிறதுஆம் அது கிரகங்களின் லீலை யன்றோ நட்ப்புக்கும்,பகைக்கும் இவைகளே காரணமாகின்றன.
மிக நெருக்கமான நட்பு.......
உதாரணமாக,கும்பலக்ன ஜாதகரொருவர் கல்லூரி நாட்களில், தனது சக மாணவியுடம் நட்பாக இருந்தார் .இந்த நட்பு நீணட நாட்களுக்கு நிலைத்தது. ஆனால், திடீரென காரணமேதுமின்றி மனஸ்தாபத்தோடு அப் பெண் பிரிந்து விட்டாள். தற்போது அவர்கள் பிரிந்து 20 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த கும்பலக்னக் காரருக்கு, அந்த மேஷ லக்ன தோழிக்கு கும்பத்தில், இராகு, செவ்வாய்,சுக்கிரன் மற்றும் குரு இருந்ததால், அவளின் இராகு தசாக் காலத் தில் அவர்களின் முதல் நட்பு மலர்ந்தது.அவர்கள் இருவரும் இணைந்து பாச மிக்க நண்பர்களாகி மகிழ்ந்தனர். ஏனெனில் மேஷலக்ன ஜாதகருக்கு,நட்பு ஸ்தானமான மற்றும் இலாபஸ்தானமான 11 ம் இடம் கும்பமாகி,தசாநாதனும் அங்கே இடம் பெற்றார். இராகு தசா முடிந்தபோது அவர்களின் நட்பு அழிந்து மறைந்தது. இருப்பினும்,அவர்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடோ, சண்டை சச்சரவோ ஏற்படவில்லை.
பின் ஏன் இந்த நிலை
ஏனெனில், இலக்னாதிபதி செவ்வாய் மற்றும் இயற்கை சுபர்களான குரு மற்றும் சுக்கிரனின் மீதான தசாநாதன் இராகுவின் தாக்கமே அவர்களுக்குள் ளான நட்பை நிலைநாட்டியது. அதன் பின், குரு, இராகுவால் பாதிக்கப்பட்ட காரணத்தால் அவர்களின் நட்புக்கு குரு முடிவுகட்டிவிட்டார். அவர்களின் நட்பு மலர் கருகி மண்ணோடு மண்ணானது. ---தொடரும்.
No comments:
Post a Comment