நண்பேனடா....... தொடர்ச்சி.
இதுபோல் இன்னும் சில ஜாதகங்களைப் பார்ப்போம்.
ஒரு ஜாதகத்தில்,விருச்சிகத்தில் குரு இருக்க,மற்றொருவர் ஜாதகத்தில் விருச்சிகத்தில் சந்திரன் இருக்க,இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.அவர்களின் நட்பு எப்போதும் மதிப்பக்குரியதாகவும்,கட்டுப்பாடு மிக்கதாகவும், விசுவா சம்மிக்கதாகவும், மலர்ந்தது. ஏனெனில், இருவரின் ஜாதகத்திலும் ஒரே இராசியில் சுபர்கள் இடம் பெற்றதேயாகும்.நீண்ட நெடுநாளைய நட்புக்கு, இணைபிரியா நட்புக்கு இதுவே காரணமாயிற்று.இன்னுமொரு நிகழ்ச்சியை பார்க்கையில் இருவரின் ஜாதகத்திலும் இலக்னாதிபதி ஒரே இராசியில் இடம் பெற்றதால் அவர்களின் நட்பு பரிணமித்தது எனலாம்.அதேபோல்,மகர லக்ன ஜாதகரின் ராசிநாதன் சிம்ம ராசியிலும்,மற்றவரின் கும்பலக்னாதிபதி சனியும் சிம்மத்திலேயே இடம் பெற்றதால் அவர்களின் நட்பு பரஸ்பர புரிதலுக்கும், நம்பிக்கைக்கும் அடையாளமான மிகச்சிறந்த நட்பானது.இதேபோல்,எதிர், எதிர் ராசிகளில் லக்னம் அமையக் கூடியவர்களுக்கும், இத்தகைய நட்பு சாத்தியமானதாகும். அவர்கள் அடிக்கடி சந்திக்கக்கூடிய சந்தர்பங்கள் அமையவிட்டாலும், அவர்களுக்கிடையேயான கருத்தொருமித்த நட்பு ஏற்படுவது உறுதி.
திடீர் விரோதம்.........
மேலும் சில நிகழ்வுகளை ஆராயும்போது,எவ்வாறு ஏன் ரிடீர் விரோதங்கள் ஏற்படுகின்றன என இரு ஜாதகங்களைக் கொண்டு ஆராய்வோம்.இருவரின் ஜாதகத்திலும் ஒரே ராசியில் லக்னம் அமைகிறது ..ஒருவரின் ஜாதகத்தில் ராகு லக்னத்தைக் கடந்தபோது,அவர்,எவ்வித தெளிவான காரணமுமின்றி மற்றவர் மேல் ஆத்திரத்தில், அறிவிழந்து நட்பைமுறித்து,திடீர் விரோதி யானார். ஏனெனில் ,பரஸ்பர புரிதலின்றி,கருத் துவேறுபாடு காரணமாக, ஒருவர், மற்றவர் மேல் சந்தேகம் கொண்டு,அவரை ஏளனம் செய்ததின் காரணமாகப் பிரிய நேர்ந்தது.மேலும்,இன்நிலை,ராகு அந்த ராசியை விட்டு நகர்ந்து செல்லும்வரை நீடித்தது. ஒரு நல்ல நண்பனை வெறுத்த அந்தக் கோபம்,பொறாமை குணமுடைய நண்பன்,பச்சாதாபத்துக்குரியவனாகவும், குற்றவுணர்வு உடையவனாகவும் இருந்தான்.
இருவர் ஜாதகத்திலும் ஒரே ராசியில் நின்ற அல்லது எதிர் எதிர் திசையில் நின்ற தசா நாதர்களின் ,தசாக் காலத்தில் இருவரின் நட்ப்பும் வளர்ந்து விருட்சமாகிவிடுகிறது. அதிலும், ஒரே கிரகத்தின் தசாக் காலமானால் இருவரிடையே, அந்த நட்பு பலம் பெற்று இருவருக்குமிடையேயும் அமை தியைத் தருகிறது. அதேபோல், பகைக்கிரகங்களின் தசாக் காலங்களில் இருவரிடையே வேற்றுமையுணர்வு ஏற்பட்டு நட்பு விரிசலடைகிறது.
----தொடரும்.
No comments:
Post a Comment