Search This Blog

Tuesday, 4 September 2012

திருமண நிலைகள் -- 5


  1. ஆணின் மறுமணம்.:-

# இரு திருமணங்கள் :-
   # லக்னாதிபதி லக்னத்தில்
   # 8 ம் அதிபதி 7 ல் அல்லது லக்னத்தில்
   # 6 ம் வீட்டில் லக்னாதிபதி.
   # 6 ம் வீட்டில், 2 ம் அதிபதி மற்றும் 7 ம் வீட்டில் அசுபர்.
   # 7 ம் அதிபதி அல்லது சுக்கிரன், சுபரோடு இணைந்து, நீச வீட்டில் அல்லது 
     பகை வீட்டிலிருக்க மற்றும் 7 ம் வீட்டில் அசுபரிருக்க.
   # அசுபரால் சுக்கிரன் பாதிக்கப்பட.
   # 7 ம் வீட்டில், ராகு அல்லது கேதுவுடன் இணைந்து சுக்கிரனிருக்க,அதுவே,
     அவனின் உச்ச வீடு அல்லது சுயவீடாக.
   # லக்னாதிபதி, லக்னத்திலிருக்க மற்றும் 2 ம் அதிபதி, 7 ம் அதிபதியோடு
     பரிவரத்தனையாக.
   # 7 ம் அதிபதி பாதிக்கப்பட மற்றும் சுபரோடு,சுக்கிரன் இணைய.
   # 7 ம் அதிபதியோடு ,சனி இணைய.
   # 7 ம் அதிபதி மற்றும் ராகு தொடர்புற.

# வாழ்கின்ற இரு மனைவிகள் அல்லது ஒருத்தி மனைவி   மற்றவள் காதலி :-

   # பாதிப்படைந்த 7 ம் வீட்டில்,பலமற்ற 7 ம் அதிபதி இருக்க.
   # பாதிப்படைந்த 2 ம் வீட்டில்,பலமற்ற 2 ம் அதிபதி இருக்க.
   # 12 ல் செவ்வாயிருக்க,7 மற்றும் 8 ம் வீடுகள் பாதிப்படைய.
   # லக்னாதிபதி அல்லது 7 ம் அதிபதி நீசமாக அல்லது பகைவீட்டிலிருக்க
     அல்லது அஸ்தமனமாயிருக்க.
   # 7 ம் வீட்டில் சூரியன்,ராகு இணைந்திருக்க.
   # 7 ம் வீட்டில்,7 ம் அதிபதியாக ,புதனிருக்க மற்றும் சுபர் இணைவில்லாமல்
     சுக்கிரனிருக்க.
   # லக்னாதிபதி ,லக்னத்திலிருக்க மற்றும் 2 ம் அதிபதியும் 7 ம் அதிபதியும்
     பரிவர்த்தனையாக.

# மூன்று திருமணங்கள் :-

   # 2 ம் வீட்டில் அல்லது 7 ம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அசுபரிருக்க,
     அவர்கள் முறையே 2 ம் அதிபதியாலும் 7 ம் அதிபதியாலும் பார்க்கப்பட.
   # 7 ம் அதிபதி நீசமாக அல்லது பகைபெற அல்லது அஸ்தமனமாக மற்றும்
     லக்னத்தில் / 2 ம் பாவத்தில் / 7 ம் பாவத்தில் அசுபர் இடம்பெற.

# மூன்றுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது திருமணங்கள் :- 

   # பலம் மிக்க சந்திரன், சுக்கிரன் இணைவு.
  # 7 ம் அதிபதி, 11 ம் அதிபதி இணைவு அல்லது 7 ம் அதிபதி ,லக்னாதிபதி
    இணைவு.
  # லக்னத்தில் ஒரு கிரகம் உச்சம்பெற.
  # உச்ச நிலையில் அல்லது சுயவீட்டில் லக்னாதிபதி இருக்க.
  # பலம் மிக்க சுக்கிரன் 7 ம் பாவத்திலிருக்க அல்லது பார்க்க.
  # பலம் மிக்க 7 ம் வீட்டில் சந்திரன்,சுக்கிரன் இணைந்திருக்க அல்லது பார்க்க.
  # 7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகியோருடன் உள்ள கிரகங்களின் எண்ணிக்கை.
  # 7 ம் வீட்டில் அசுபருடன் இணைந்த லக்னாதிபதி + 2 ம் அதிபதி + 6 ம் அதிபதி.
  # சனி 7 ம் அதிபதியாகி அல்லது 2 ம் அதிபதியாகி, அசுபரால் பாதிப்படைய.
  # 7 ம் அதிபதிக்கு, 3 மிடத்தில் பலம் மிக்க சந்திரனிருக்க.
  # 3 ம் வீட்டில் 2 ம் அதிபதியும் 12 ம் அதிபதியும் இணைந்திருந்து குரு அல்லது
    9 ம் அதிபதியால் பார்க்கப்பட.
  # சுபவர்க்கத்தோடு கூடிய 7 ம் அதிபதி, கேந்திரம் அல்லது திரிகோணமேற
    மற்றும் 10 ம் அதிபதியால் பார்க்கப்பட.
  # 7 ம் அதிபதி மற்றும் 11 ம் அதிபதி அல்லது 7 ம் அதிபதி மற்றும் லக்னாதிபதி
    இணைந்திருக்க அல்லது பரஸ்பர பார்வைபுரிய.
  # 5 ம் அதிபதியுடன்,7 ம் அதிபதி 11 ல் இணைய,3 ம் அதிபதியால் பார்க்கப்பட.

2. பெண்ணின் மறுமணம் :-

 இம் மறுமணம் எப்போது நியாயப்படுத்தப்படுகிறது ?

# 12 வருடங்களுக்கும் மேலாக, கணவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாமலிருக்க.
# கணவன் சன்யாசம்பெற.
# திருமணச் சடங்குகள் நிறைவுறும் முன் கணவன் இறந்துவிட.
# ஆண்மையற்ற மற்றும் தீய குணமுள்ள கணவனாக.

பெண்ணின் மறுமணத்திற்கான இணைவுகள் :-

# 7 ம் வீட்டில் சந்திரன்,சனி இணைய அல்லது செவ்வாய்,சனி இணைய.
# சுப,அசுபர் இணைந்து 7 ம் விட்டிலிருக்க.
# 8 ம் அதிபதி லக்னத்திலிருக்க.
# நவாம்சத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் பரிவர்த்தனை பெற.
# லக்னத்தில் ,சூரியனும் ராகுவும் இணைந்திருக்க மற்றும் 7 மிடத்தை குரு
  பாரக்க.
# ரிஷபம் லக்னமாகி, 4 ல் செவ்வாயும், 2 ல் சுக்கிரனுமிருக்க.
# சுய வீடே லக்னமாகி, செவ்வாயிருக்க, 7 ம் வீட்டில் புதன் இருக்க மற்றும் 7 ம்
  அதிபதி ( சுக்கிரன் ) 8 ல் இருக்க.
# சுக்கிரனின் ராசியிலும்,சனியின் திரிம்சாம்சத்திலும் லக்னம் அல்லது ராசி
  அமைய.
# 2 ம் இடம் உபய ராசியாகி அதில் 7 ம் அதிபதி அல்லது சுக்கிரனிருக்க.

XI.  பெண்ணின் குணங்கள் :-
1.        திரிம்சாம்ச பகுப்பாய்வு :-

கீழ்க்கண்ட அட்டவணையை உபயோகித்து பெண்களுக்கு பலனுரைக்கும்போது
சரி செய்யமுடியாத அளவுக்கு, அவர்களின் உணர்வுகள் புண்படாதவாறு மிகவும்
முன்ஜாக்கிரதையுடன் சொல்ல வேண்டும். ஜாதகரின் பிறந்தநேரம் சரியானதுதான் என உறுதிப்படுத்திய பின்னரே இவ்வட்டவணை உபயோகப்
படுத்தப்பட வேண்டும். ஏனெனில்,சில நிமிட வித்தியாசமும் தவறான முடிவை
அளிக்கலாம்.

ராசி லக்னம்/
சந்திர ராசி

    திரிம்சாம்ச லக்னம்

 செவ்வாயின்

 சனியின்

 குருவின்

  புதனின்

          

சுக்கிரனின்
     5
ஆண்மையுள்ள
கள்ளவுறவு
வைத்தல்
 இராணி
ஆண்தன்மை
முறையற்ற
வுறவு
     4   
அவள் நினைத்ததை
சாதிப்பவள்
கணவன்
மரணம்.

நற்குணங்கள்

கலைகளில்
வல்லவர்

ஒழுக்கமற்ற
   1 ,8
பூப்பெய்துவதற்கு
முன்னே ஒழுக்கக்
கேடு

நாட்டியக்காரி

கற்புள்ள

இரட்டைகுணம்

பாவப்பட்ட
 பிறவி
   3,6

சூதுநிறைந்த

மலடி

கற்புள்ள

நற்குணமுள்ள

கள்ளவுறவு
வைத்தல்
   9,12

நல்லவள்

குறைவான
காம இச்சை

கற்புள்ள

திறமைமிக்க

கள்ள வுறவு
கொள்பவள்
   2,7

பாவப்பட்ட
பிறவி

இரண்டாவது
கணவனை
மணந்து
கொள்பவள்



கற்புள்ள



திறமைமிக்க


மரியாதைக்
 குரியவள்
  10,11

வேலைக்காரி

கீழ்த்தரமான
மனிதர்களை
விரும்புபவள்


கற்புள்ள

பாவப்பட்ட
  பிறவி

புத்திர
பாக்கியமற்ற









XII. பிரிவினை மற்றும் விவாகரத்து :-


# 7 ம் அதிபதி 12 ம் அதிபதியோடு பரிவர்த்தனை மற்றும் 7 ம் வீட்டில் சனி,ராகு,
 அல்லது செவ்வாய் இருக்க.
# 7 ம் அதிபதி மற்றும் 12 ம் அதிபதி திருக் ஸ்தானத்தில் மற்றும்  7 ம் பாவத்தில்        அசுபர்.
# 7 ம் அதிபதி 12 ம் வீட்டில் மற்றும் 6 ம் அதிபதியால் பார்க்கப்பட்ட அசுபர் 7 ம்
  வீட்டில் இருக்க.
# சூரியன் 7 ல், 7 ம் அதிபதி அல்லது சுக்கிரன் நீசமாக / பகையாக / அஸ்தமனமாக
# ( பெண்களுக்கு ) 7 ம் வீட்டிலுள்ள சூரியனை, ராகு அல்லது சனி பார்க்க.
# 2 ம் அதிபதி, 7ம் அதிபதியுடன் பரிவர்த்தனையாக,ராகு அல்லது கேதுவால்
  பாதிக்கப்பட.
# லக்னம்  / லக்னாதிபதி / 7 ம் வீடு / 7 ம் அதிபதி / 2 ம் அதிபதி ---- குருவால்
  பார்க்கப்பட அல்லது இணைய.,அதிகமான பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து
  வாழ்க்கை நடத்துவர்.
# 7 ம் வீட்டில், சந்திரன்,சனி இணைவு ஏற்பட ,கணவன் உயிரோடு இருக்கும்போதே
  மனைவி வேறு ஒருவனை மணம் முடிப்பாள்.
# சனி மற்றும் ராகு லக்னத்தில் இருக்க மற்றும் 7 ல் ஒரு அசுபர் இருக்க பொது
  வாழ்வில் மனைவியால் அவமானம் ஏற்படும் என்கிற பயத்தால்,மனைவியை கை
  விட்டுவிடுவான்.
#  7 ம் வீட்டில் சூரியன்,ராகு மற்றும் செவ்வாய் இருக்க. ( பெண்ணின் ஜாதகத்தில்).

2.  தற்கொலை :-

# அசுபர், சுக்கிரனுக்கு 4 அல்லது 8 ம் இடத்தில் ( ஆணின் ஜாதகத்தில் ) இருக்க
  அவனின் மனைவி தற்கொலை புரிந்து கொள்வாள் என்பதைக் குறிகாட்டுகிறது.
# அசுபர் லக்னத்தில் இருக்க, 7 ம் அதிபதி மற்றும் லக்னாதிபதி இருவரும் 8 ல்
  இருக்க, அந்த ஜாதகர் தற்கொலை செய்துகொள்வார் என்பதைக் குறிகாட்டுகிறது.

3.  துணையைக் கொலை செய்தல் :-

# மனைவியைக்கொலை செய்தல்:
 # சுக்கிரன் 7 ல் மற்றும் சந்திரன் 12 ல் இருக்க.
 # சுக்கிரன் 7 ல் / திருக் கில் இருக்க, 7 ம் வீட்டிலுள்ள 8 ம் அதிபதி மற்றும்
   சந்திரனை ராகு மற்றும் செவ்வாய் பார்க்க வரதட்சிணைக்காகக் கொலை
   செயவார்.
# கணவனைக் கொலை செய்தல் :
 # புதன் பாதிக்கப்பட்டு 7 ம் அதிபதியாக மற்றும் நீசமாக அல்லது 6 / 8 ல்       
   இருக்க அல்லது பாபகர்தாரியிலிருக்க.
 # 7 ல் மூன்று அசுபரிருக்க.
 # ஒரு ஆணின் ஜாதகத்தில், 7 ம் வீட்டில், செவ்வாய் மற்றும் சனியிருக்க.
   மற்றும் திருக் ஸ்தானத்தில் 7 ம் அதிபதியிருக்க.
 # 7 ல் சூரியன் மற்றும் திருக் கில் 7 ம் அதிபதி இருக்க.

4.  துணை துறவு பூணுதல் :-

 # சனியின் திரிகோணத்தில்,சந்திரராசி அல்லது சனி / செவ்வாய் / சந்திரன்
  நவாம்சத்தை சனி பார்க்க.
# பலமற்ற சனி மற்றும் லக்னாதிபதி.
# 6 ம் அதிபதி அல்லது 8 ம் அதிபதியோடு, 9 ம் அதிபதியும், 10 ம் அதிபதியும்
  இணைய.
# லக்னத்தில் அல்லது 10 ம் வீட்டில் அல்லது 12 ம் வீட்டில், பலமற்ற சூரியன் +
  சந்திரன் + குரு இருந்து, சனியால் பாரக்கப்பட.
# ஒரு ராசியில் 4 அல்லது 5 கிரகங்களிருக்க.
# லக்கினமும்,10 ம் இடமூம் சூரியன்,சனி மற்றும் ராகுவால் பாதிப்படைய.

   பெண் சன்யாசியாதல் :-

# 7 ம் வீட்டில் அசுபரும், 9 ம் வீட்டில் சுபரும் இருக்க.
# இரட்டைப்படை ராசியில் லக்னம் அமைந்து,செவ்வாய்,புதன், குரு மற்றும்
  சுக்கிரன் ஆகியோர் மிகவும் பலம் பெற்றிருக்க, மிகவும் புகழ்பெற்ற  சன்யாசி
  ஆவார்

XIII. பொருத்தம் தொகுப்பு :-

# 7 ம் வீடு துணை, மணவாழ்க்கை , இசைந்த இனிய வாழ்க்கை / காம
  வாழ்க்கை.
 # லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 7 ம் வீட்டில் சுபர் இருக்க அல்லது
   பார்க்க அல்லது அவர்களின் அதிபதிகள் இருக்க அல்லது பார்க்க, அந்த பாவ
   காரகம் முன்னேற்றமடைகிறது, இல்லையெனில் இல்லை எனலாம். ( 5 ம்
   வீட்டுக்கும் இதுவே ) 7 ம் வீட்டில் அசுபர் ( உச்கம் / சுயவீடாகாத ) இருக்க
   அதன் பலன் :-
                  # சனியெனில் :- வறண்ட மணவாழ்க்கை.
                  # செவ்வாயெனில் :- துணைக்கு குறைவான ஆயுள்.
                  # ராகுயெனில்:- ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது
                    ஜாதிவிட்டு தொடர்பு.
                  # சூரியனெனில் :- கருத்துவேறுபாடுகள்,முரண்பாடுகள்.

# 7 ம் அதிபதி:-
 # லக்னத்திலிருந்து,அல்லது 7 ம் வீட்டிலிருந்து, 7 ம் அதிபதி 6 / 8 / 12 ல் இடம்
   பெற மணவாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிறது.
 # சந்தோஷமற்ற திருமண வாழ்க்கையை, வக்கிரம் பெற்ற 7 ம் அதிபதி தருகிறார்.
 # உபய லக்னங்களுக்கு, 7 ம் அதிபதி பாதகாதிபதி.எனவே ,சிறிதளவு, 7 ம் அதிபதி
   மீதான அசுப பாதிப்பு, மணவாழ்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது.

# சுக்கிரன் :-
 # சுக்கிரன்,செவ்வாய் இணைவு, அதிக காம வீரியமளிக்கிறது.
 # சுக்கிரன், சூரியன் இணைவு அல்லது சுக்கிரன், சனி இணைவு வீரிய சக்தியைக்
   குறைக்கிறது.
 # ஒன்றுக்கு மேற்பட்ட மணவாழ்க்கையை சுக்கிரன்,ராகு இணைவும் அல்லது
   சுக்கிரன், கேது இணைவும் அளிக்கின்றன.
# 2 ம் வீடு :-
 # 7 ம் வீட்டுக்கு, 8 ம் வீடு, 2 ம் வீடாவதால், துணைக்கு மாரக ஸ்தானமாகிறது.
 # அசுபர் 2 ம் வீட்டிலிருக்க, மணவாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
 # 8 ம் வீடு :-
 # துணைக்கு மாரக பாவம் மற்றும் பெண்ணுக்கு சௌபாக்கிய ஸ்தானம் ஆகும்.
 # 8 ம் வீட்டில் சூரியன்.செவ்வாய், சனி, அல்லது ராகு இருக்க,கணவனின்
   ஆயுளுக்கு பங்கமாகிறது.
   # 4 ம் வீடு :-
 # குடும்ப சந்தோஷம் :- அசுப தொடர்பு, குடும்ப வாழ்க்கை பாதிப்படைகிறது.
  # 5 ம் வீடு : புத்திரபாக்கியம் :
 # குழந்தையின்மை, வறண்ட மணவாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
  # 12 ம் வீடு : படுக்கை சுகம் / காமவுணர்வில் திருப்தி.:
 # 7 ம் வீட்டிலிருந்து 6 ம் வீடு ,12 ம் வீடாவதால், 7 ம் வீட்டுக்கு எதிரி வீடாகிறது.
   அதாவது,( 7 ம் வீடு ) துணைக்கு மூன்றாவது நபருடனான தொடர்பைக் குறி
   காட்டுகிறது.
 # ஒன்றுக்கு மேற்பட்ட மணவுறவை, சூரியன்,சனி அல்லது கேது இணைவு குறி
   காட்டுகிறது.
 # 12 ம் வீட்டில் , சுக்கிரன் இருக்க பாதிக்கப்பட்ட மணவாழ்வை குறிகாட்டுகிறது.
  # விவாக சகம் :( சுக்கிரன் சனி + லக்கினம் ) : பாதிப்படைய இல்லற வாழ்க்கை
  யில் பாதிப்பு ஏற்படும் .
#  உறவுகள் :-
   # லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி இருவரும் எப்போதும் நணபர்களல்ல,எனினும்
     லக்னாதிபதி / 7 ம் அதிபதி நிலைமாற்ற ஆய்வு கருத்தில்கொள்ளப்படலாம்.
   # லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி பரிவர்த்தனை,பரஸ்பர காதலைக் கொடுக்கிறது.
   # லக்னாதிபதி மற்றம் 7 ம் அதிபதி பரஸ்பர பார்வையும் பரஸ்பர காதலை நிலை
     நிறுத்துகிறது.
   # இருவரின் இணைவு நல்ல பொருத்தத்தை அளிக்கிறது.
   # லக்னாதிபதி 7 ம் வீட்டில் இருக்க துணையின் மீதான அன்பை அதிகரித்து,
     அவர்களின் சொல்படி நடக்கச் செய்கிறது.
   # லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி லக்னத்திலிருந்து அல்லது 7 ம் வீட்டிலிருந்து 6/          
     8,2 / 12 அல்லது 6 / 8 / 12. ம் வீடுகளில் இருக்க, எதிர்மறையான விழைவுகளை
     உறவுகளில்,ஏற்படுத்திவிடுகிறது. லக்னாதிபதிமட்டு மெனில் ஜாதகர் எதிர்மறை
     யானவராகவும், 7 ம் அதிபதிமட்டு மெனில், துணைவர் எதிர்மறையானவராகவும்
     அமைந்துவிடுகிறது.
   # ராசி மற்றும் ராசியதிபதி மற்றும் 7 ம் வீடு / 7 ம் அதிபதி உறவுகள் :
    # நல்ல மணவாழ்க்கை : -
     # ராசியதிபதி மற்றும் 7 ம் அதிபதி ஒருவராகி அல்லது நட்பாகி அல்லது 1 / 7
       ஆகவும் ஆக .நல்ல மணவாழ்க்கை ஏற்படுகிறது.
     # ராசியதிபதி,லக்னாதிபதி பரிவர்த்தனையாக.
    # இருவரும் 6 / 8 ஆக அல்லது 2 /12 ஆக இருக்க , மணவாழ்வில் கஷ்டங்கள்
      அதிகரிக்கும்.






1 comment:

  1. god and planets will bless you for the excellent work JV

    ReplyDelete