Search This Blog

Thursday, 13 September 2012

கிரகங்கள்





கிரகங்கள்

                சென்ற பாடத்தில்,இராசிகளைப் பற்றி பார்த்தோம்.இன்று கிரகங்களைப் பற்றி பார்ப்போமா ?



               சூரிய பாதையில்,  சூரியன்,  மிக  அதிகமாக,மின் காந்த அலைகளைக் கொண்டதாகும்.நம் வீட்டை மையமாகக் கொண்டு, சுழலுகின்ற,நட்சத்திரக் கூட் டங்களைக் கொண்ட மில்கி வே இவைகளுடன் சூரியபாதையானது,ரம்யமான இரவில்,  நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது,கிரகங்கள், வால்நட்சத்திரங் கள், விண்துகள்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை, சூரியனை அதே திசை யில் சுற்றிவருகின்றன.சூரியனின் வட துருவத்தில் மேலிருந்து கீழாக நோக்கு கையில்,   சரியான கடிகாரச் சுற்றுக்கு மாறுபட்டு சுற்றுவது போல் காட்சியளிக் கின்றன. கிரகங்கள் சூரியனை நீள்வட்ட சுற்றாக சுற்றி வருகின்றன.
      கிரகங்கள் ---    இராசி  மண்டலத்திற்கும் சக்திகளை கிரகித்து திரும்ப அனுப்பும்ரிலே நிலையமாகக் கோள்கள் செயல்படுகின்றன .நாம்,கிரகங்களின் விதவிதமான கலப்புகளாலும்,சக்திகளாலும், பாகை களாலும் உருவாக்கப்பட்டுள் ளோம்.முதன் முதலில்   நாம் பூமியில் பிறக்கும் போதே நமது மூச்சோடுகலந் துவிடும் இந்த கிரக சக்திகள்,   நம்வொவ்வொருவுக்கும் குத்தப்படும் கிரகத்தின் முத்திரையாகும். இந்த    சுவாசமானது தன்னுடன் கிரக சக்திகளைக் கொண்டு, நம் வாழ்நாளில் கடைசி       மூச்சுள்ளவரை பிராணம், எனத் தொடர்கிறது.ஒவ் வொரு கிரகத்துக்கும்   உள்ள  தனது தனி காந்த அலைகளைச் செலுத்தி கிரக சக்தியாகி,    அதுவே   நாம்   பிறக்கும்   போது,     நம் ஜாதகமாக பிரதிபலிக்கிறது அல்லது பதிவு  செய்யப்படுகிறது.    எனவே, இக் கிரகங்கள் ஒரு ஏரியல் போல் கிரக    சக்திகளை கிரகித்து அதை நாம் உணார்வோடு உள்ளபோதும் இல்லாத போதும்   நம்மோடு இணைத்து  வைக்கின்றன. நம்மைச் சுற்றி நடந்து கொண்டி ருக்கும் நிகழ்வுகளை நம்மை நினைக் கவைக்கிறது.
     ஒளிக் கிரகங்களான சூரிய,சந்திரர்களை,கிரகங்கள் என்று அழைக்க முடிய விட்டாலும்,அவைகள்,மிக முக்கியமான கிரகங்களாகத்தான் கருதப்படுகின்றன 5 கிரகங்களில்  சூரியனுக்கும், பூமிக்கும்  நடுவிலுள்ள  சுற்றில்   புதனும், சுக்கிர னும் இருப்பதால்  அவை   உட்கிரகங்கள்   என்றும்,  பூமியின்   வெளிச்    சுற்றில் இருக்கும் குரு,செவ்வாய்,சனி ஆகியவை  வெளிக் கிரகங்கள் என்றும் அழைக் கப்படுகின்றன. அதற்கும்,   வெளிச்சுற்றிலுள்ள யுரேனஸ்,  நெப்டியூன்,புளுட்டோ  ஆகியவை வேத ஜோதிடத்தால்     ஏற்றுத் கொள்ளப்படவில்லை. இராகு,கேதுக்கள் உண்மையான கிரகங்கள் அல்ல.அவை நிழல் கிரகங்களாகும்.
      கிரகங்கள் பல வழிகளில் பிரிக்கப்படலாம்.      குரு,புதன்,சுக்கிரன், சந்திரன் மிருதுவான கிரகங்கள்.அதேபோல்,சூரியன், செவ்வாய், சனி,   இராகு, கேது     ஆகி  யவை கடினமான கிரகங்கள் ஆகும்.    கிரகங்கள்  தேவ சபையிலும், அரசசபை யிலும் இடம்பெறுகின்றன.சூரியன்,சந்திரன், குரு, குஜன் தேவ சபையையும்சனி, புதன்,சுக்கிரன் அசுர சபையையும் அலங்க ரிக்கின்றனர்.

ஜோதிட அர்த்தங்கள் மற்றும் கோள்களின் தன்மைகள் --- 

கோள்களின் சமஸ்கிருதப் பெயர் கிரக . கிரக என்பதற்கு பல சுவாரஸ்யமான அர்த்தங்கள் உண்டு. கிரக யென்றால்  கிரகித்தல்  அல்லது  தாங்குதல் என்று பொருள்.வேத முனிவர்கள், கோள்கள்  நமது உள்ளுணர்வை கிரகிக்கும் சக்தி உடையது என்கின்றனர். மனிதனைப் பிடித்து ஆட்டும் பேய் என்று பிரிதொரு பொருளுமுண்டு.ஒரு சுவையான ஆராய்ச்சி மூலம்,கோள்களின் சக்திகள்,இரு வேறு பார்வைகளைக் கொண்டதாகிறது. ஒன்று, நம் நினைவுகளையும், உணர்வுகளையும், செயல்களையும் உருவாக்குகிறது. மற்றொன்று,நம் வாழ்க்கையில் ஒளிக்கதிர்களை வீசுகிறது,அதன் மூலமாக நம் வாழ்வு மற்றும் வளத்தையும் உயர்த்தி,  நமது பாவங்களையழித்து, அறிவொளி யேற்றுகிறது. இந்த ஒன்பது கோள்களின் ஜோதிடம்,  மிகவும் பக்திமயமான,விஞ்ஞானமாந ஜோதிடம்,பூமி யில்,நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண்ணாடியாகி,நாம் இருட்டிலிருந்து மீள் வதற்கான ஒளியையும், சுயஅறிவையும் பெறுவதற்கான சக்தியையும் நமக்கு அளிக்கிறது.
      வேதரிஷிகளின் கூற்றுப்படி, வொவ்வொரு  கிரகமும்,  ஒரு அடிப்படை ஒலியலையை ஏற்படுத்துகிறது.இந்த ஒலியலையைக் கற்பதே அடிப்படை பீஜ மந்திரவொலியாகும்.  மந்திரமென்பது – தியானநிலையில் உபயோகிக்கப்படும் ஒலி மற்றும்  பக்திமயமான   பூஜாகாரியங்களில் ஒலிக்கப்படும் ஒலியாகும். இதன் மூலமாக உள்ளுணர்வின் உயர்ந்த நிலையடைய முடிகிறது.
      ஒரு தனி மனிதனுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம்,பிறந்த இடம் மற் றும் அந்த நேரத்திலுள்ள கோள்களின் நிலையைக் கொண்டு,இந்தியஜோதிடத் தால் அவனது விதியையும்,குணநிலைகளையும் வேறுபடுத்திக் காட்டுகிறது

No comments:

Post a Comment