Search This Blog

Monday, 24 September 2012

சூரிய கட்டத்தின் சூட்சுமம்





சூரிய கட்டத்தின் சூட்சுமம்
     
      சூரியனை  வைத்து   ஜாதகத்தை ஆராய்வது ஜோதிடர்களுக்குப் புதிய கருத்தல்ல.  பலர்  இராசிக் கட்டத்திலுள்ள லக்னம முதலாக ஆராய்ந்து பலன் பார்ப்பார்கள்.  ஆனால்,  லக்னத்திலிருந்து   ஆராய்வது போல் சூரியன் நின்ற இடத்தைக்  கொண்டும் ஆராய்ந்து பின் இரண்டிலிருந்தும் கிடைக்கும் முடிவு களை ஒன்று படுத்திப்  பார்த்தோமானால்  ஜாதகரின் தொழில் முன்னேற்றம் பற்றிய பலன் துல்லியமாக அமைந்துவிடும் எனலாம்.

      இலக்னத்தை  வைத்து பார்க்கப்படும்  கட்டமும்,  சூரியனை வைத்துப் பார்க்கும் கட்டமும்  ஒன்றுதான்  எனச் சொல்லத் தேவையில்லை.ஏனெனில் அதில்  லக்னத்தை  வைத்து பலன் பார்க்கிறோம். அதே கட்டத்தில் சூரியனை லக்னமாகக்  கொண்டு இதில் பலன் பார்க்கிறோம். இதன் பலனாக சூரியனைக் கொண்டு பார்க்கும்போது, புது அவதாரத்தில் காட்சியளிக்கின்றன.
     இவ்வாறு  பார்ப்பது  ஜாதகரின் தொழில் வழி முன்னேற்றத்தைக் காண் பதில்  மிகவும்  உதவியாக  இருக்கும்.  இதில் சூரியனுக்கும், மற்ற கிரகங்க ளுக்குமான உறவு முக்கிய  பங்கு  வகிக்கிறது. லக்னத்தை மட்டுமே ஆராயும் போது  தொழில்  நிலைகளில் ஏற்படுகிற பிரச்சனைகள்,தொல்லைகள் ஆகிய வற்றை ஜாதகர் துல்லியமாக அறிய முடியாதவராகிறார்.
     சூரியனை  வைத்துப்   பார்க்கும்   கட்டத்தை   சூரிய   கட்டமென்றும், இலக்னத்தை   வைத்துப்   பார்க்கும்   கட்டத்தை  இலக்னக் கட்டமென்றும் அழைப்போம்.
     சூரியக்கட்டம் இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டதாகிறது.முதலா வது பலமிக்க  சூரியன்  மையக்  கருவாக இருப்பது, இது இலக்னக் கட்டத்தில் லக்னம் மையமாக இருப்பது போலாகும்.
     சூரியன் – மேஷத்தில்  உச்சம்  பெறுகிறார்.    சுயவீடு   சிம்மமென்பது நாம்  அறிந்ததே  அவர்,நெருப்பு  மற்றும் திரிகோண ராசிகளில்  பலம் மிக்க வராகக்  கருதப்படுகிறார்.  அதாவது. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய இராசிகளில் பலம் மிக்கவர். அடிவானத்தில்  திக்பலம்  பெறுகிறார்.  கேடன்ட் ராசிகள் என அழைக்கப்படும்  3, 6, 8, 12 ஆகிய  இடங்களில்  மதிப்பு  மிக்கவராக உள்ளார். சூரியனுக்கு   சந்திரன், செவ்வாய்,  முக்கியமாக  குரு  ஆகிய  கிரகங்களின் பார்வை  கிடைக்கும்   போது   சூரியனின்  சக்தி அதிகரிக்கிறது. சுபகர்த்தாரி யோகம்  அமையும் போது  பலம் பெறுகிறார். மிக முக்கியமான எதிரிகளான, இராகு, சனி   மற்றும்  சுக்கிரன் ஆகியோருடனான எந்தவிதமான தொடர்பும் சூரியனைக் கெடுத்து பலமிழக்கச் செய்துவிடுகிறது.
     சூரிய  கட்டத்தில் –  நடுவில்  சூரியன்  பலம் பொருந்தியவராக இருக்க வேண்டும்  என்றில்லை.  சூரியனைச்  சுற்றியுள்ள கிரஹங்களின் கட்டுமானம் பலத்தை நிர்ணயிக்கிறது.
1.       சூரியனிலிருந்து  3, 6, 8, 12  ஆகிய கேடண்ட் இராசிகளில் இயற்கை        அசுபர்கள் இருக்க.
2.       சந்திரன், சூரியனிலிருந்து  6 அல்லது 7  ஆம் இடம் அல்லது 10 மற்றும் 11 ஆம்  இடங்களில் நிற்கும் போதும்.
3.       பலம்  மிக்க புதன், சூரியனோடு   அல்லது  சூரியனுக்கு 2 ஆம் இடத்தில் இருக்கும் போதும்.
4.       சூரியனிலிருந்து, சுக்கிரன் 2 இல் இருக்கும் போதும்.
5.       சூரியனிலிருந்து  2 ஆம்  இடத்தின்   மீதோ  அல்லது 1 ஆம் இடத்தின் மீதோ அல்லது சூரியன் மீதோ குருவின் சக்திமிக்க பார்வை விழும் போதும்.
சூரியனைச்  சுற்றி  இந்த  கிரக கட்டுமானம் எழுகிறது. இந்த ஆதாரத் தின் மீதுதான்  நமது சூரிய கட்டமெனும், கருத்து கட்டப்படுகிறது. ஒரு ஜாதகத்தில்  சூரியனை  சனி  எதிர்க்கும்  போது,  அந்த ஜாதகருக்கு ஜீவனத்தில்  ஒரு  பாதிப்பு ஏற்படுகிறது, என்பதும் சனி 6 இல் இருக்கும் போது, எந்த  பாதிப்பும்  இருக்காது  என்பதும், சோதித்து அறியப்பட்ட விதியாகும்.  லக்னத்திலிருந்து 9 ஆம் இடம் பாக்யஸ்தானத்தில் பலமிக்க குரு இருக்க  ஜாதகருக்கு  மிகச்   சிறந்த நிலையான அதிர்ஷ்டமும் அமையும்.
      அதே  குரு  பலமிழந்த  சூரியனுக்கு  8 இல் இருக்க ஜாதகரின், தொழில் வழி  முன்னேற்றம், பலமிக்க   லக்னக் கட்டத்தின் தொழில் வழி   முன்னேற்றத்தை  விட  குறைவாகவே   இருக்கும்.  லக்னக் கட்டத்தில்  11 ஆம்  இடத்தில்  இடம் பெறுகிற எல்லா கிரகங்களுமே நல்லவை எனக்  கருதப்படுவது போல்,  சூரியக் கட்டத்திலும், சூரிய னிலிருந்து 11ஆம்  இட கிரகங்கள் நல்லவையாகக் கருதப்படுகிறது.

     சூரியக் கட்டம்,  லக்னக்   கட்டத்திற்கு  மாற்றுக் கட்டமாகாது. அதற்குத்  துணையாக, உபயோக  கரமாக  இருப்பதே  சூரியக் கட்ட மாகும். லக்னக்கட்டம், ஜாதகரின்  வாழ்க்கையின் அனைத்து நிலைக ளுக்கும் பலன் கூற உதவும், ஆனால்,சூரியக் கட்டம் அவரின் தொழில் நிலைபற்றி மட்டுமே அறிய முடியும். லக்னக் கட்டத்தோடு இணைந்து பார்க்கப்படும் போது, மேலும்  துல்லியமாக ஜாதகரின் தொழில் வழி பலன்களைக்  கணிக்க முடிகிறது,    மேலும்,தொழில்வழி பாதிப்புக்க ளுக்கான   காரணிகளை  ஜோதிடர்  சுலபமாக அறிந்து சொல்லவும் உதவுகிறது.



      இந்த ஆராய்ச்சியை  பண்டித  ஜவகர்லால் நேருவின் ஜாதகம் மூலம்  அலசுவோம்.  பண்டித  ஜவகர்லால்   நேருவின்,கீழ்க் கண்ட இராசிச் சக்கரத்தில் 10 ஆம்  அதிபதி  செவ்வாய், 9 ஆம் இடத்தை பார்வை செய்யும் போது 9  ஆம் இடத்து  அதிபதி  குரு  10 ஆம் இடத்தைப் பார்க்கிறார். இதில்  நான்கு கிரகங்களான, குரு, செவ்வாய். சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய  அனைவரும்  10 ஆம்  இடத்தைப்   பார்க்கின்றனர். இப்போது கேள்வி  என்னவென்றால், லக்னக் கட்டத்தினின்று நமக்குக் கிடைத்த அனுகூலமானமுடிவை,சூரியக் கட்டத்தில்,உறுதி செய்யப்பட்டுள்ளதா  என்பதேயாகும்.  சூரியன்  தனது  நண்பனின்  கூடாரத்தில் அமர்ந்து, இரு புறமும்  இயற்கை நற்கோள்கள்  இடம்  பெற்றுள்ளன. மேலும், இரு  பயங்கரமான     இயற்கை  தீய  கோள்களான  சனி  மற்றும் செவ்வாயும்  10 ஆம் மற்றும்  11 ஆம் இடத்தில்  நிலை கொண்டுள்ளன. பலம் மிக்க  குருவும்,  அதற்கு   இணையாக பலம் பொருந்திய சுக்கிரனும் சூரியனிலிருந்து 2 ஆம் மற்றும் 12 ஆம் இடங்களை அலங்கரிக்கின்றன.

சனி


இராகு

சூரி,புத
சுக்


 சனி

இராகு


புத,சூரி
///////

சுக்

 
   இராசி

குரு


சூரியன்
கட்டம்
 குரு

  



  







சந்

கேது
லக்//
செவ்



சந்

கேது
செவ்


        இவ்வாறாக,சூரிய கட்டமும், இலக்ன கட்டத்தின் முடிவுகளோடு நன்றா கவே  ஒத்து வருகிறதல்லவா ?  சூரிய  கட்டத்தில்,   நேருவை, வெற்றியின் உச்சிக்கே எடுத்துச் சென்ற நான்கு கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னுமொரு  முக்கிய  விஷயம்  என்னவெனில், இலக்னக்  கட்டத்தில் 7 ஆம் அதிபதி  சனி  சூரிய  கட்டத்தில், அதற்கு  8 இல்  இருப்பதால்அவரது இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும், அரசியல் வாழ்வு பாதிக்கப்படவில்லை, எனவே,  இலக்ன  கட்டத்திற்கு  சூரிய கட்டத்தின், சரியான உறுதுணை இல்லா விட்டால், இலக்னக்  கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்கள் குறைந்து விடுகின்றன என்ற முடிவுக்கு வரலாம்,


                        ஜாதகம் – 2
      பிறந்ததேதி – 23 – 06 – 1967, நேரம் – 3 – 10 பி.எம்
      தசாயிருப்பு – குரு தசா – 1 வ 7 மா 20 நாள்.

சனி


இராகு

சூரி,புத
சுக்


 சனி

இராகு


புத,சூரி
//////
சுக்

 
   இராசி

குரு


சூரியன்
கட்டம்
 குரு

  



  







சந்

கேது
லக்//
செவ்



சந்

கேது
செவ்


     இந்த இளைஞனின் இராசிக்கட்டத்தில், 9 ஆம் அதிபதி புதனும் தங்களுக்குள் பரிவர்த்தனை  ஆகியுள்ளது.   ஜாதகத்தில் 1 ஆம் இடம் மற்றும் 7 ஆம் இட அச்சில், தொல்லை  தரக்கூடிய  சனியும்,  செவ்வாயும் இருந்த போதிலும், ஜாதகத்தில் பெரும்பாலான  கிரகங்களின்  கவனம்  ஒரு சேரத்   திரண்டு , மேல்பகுதியில் இருப்பது  நல்ல நிலையாகும்.  ஜாதகருக்கு  1988  ஜனவரி மாதம், புதன் தசா ஆரம்பித்த போது  ஜீவன  விமானம்   சந்தோஷமாக  உயரப்  பறக்கும் என ஜோதிட நண்பர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில், 10 ஆ ஆம் இடத்தில் உள்ள  யோககாரகன் சுக்கிரனின்  பலன்களை, பரிவர்த்தனை  பெற்ற  புதன் தனது தசா காலத்தில் அளிப்பான் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்த இளைஞர் 1995 ம் ஆண்டு  வரை  புதன் தசா,  சந்திர புத்தி ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அதற்குப் பின்னர் சிறிய அரசு வேலை கிடைத்தது.

சூரிய  கட்டத்தில், ராசிகட்டத்தில்  3 இல்  உள்ள சந்திரன், இங்கு 7 இல் உள்ளது. சந்திரன் நீசமானாலும், பலம் மிக்க உச்ச  குருவின்  பார்வை உள்ளது. இராசிக் கட்டத்தில்  4 ஆம்  அதிபதி  குரு உச்சமாகி 11 இல்   இருப்பது  அந்த ஜாதகரின் போட்டி  தேர்வுகளின்  வெற்றியை  நிர்ணயித்தது.  ஆனால் சூரிய கட்டத்தில் நீசம் பெற்ற உபநட்சத்திராதிபதி  சந்திரன்  பலம் குறைந்து காணப்படுகின்றன. சூரிய கட்டத்தின்  மற்ற  கிரகங்களின்   நிலைகளைச் சுலபமாக வலைத்தள நண்பர்கள் எடைபோட்டுக்   கொள்ளலாம். அவை அனைத்தும் சூரியனில் இருந்து அனுகூல நிலையிலில்லை என்பது தெளிவாகும். இக் கட்டங்களின் வாயிலாக தொழிலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும்  முன்னேற்றங்களைப் பார்த்தோம். 


1 comment: