Search This Blog

Thursday, 27 September 2012

அகிலம் போற்ற வேண்டிய அங்காரகன்






அகிலம் போற்ற வேண்டிய அங்காரகன்
      
     வராஹிமிகிரரின் பிருகத் ஜாதகத்தில்      செவ்வாய் வக்ராஎன்றும்.ஒரு இளமை யான, கொடூர  கண்களுடைய  நிலையற்ற    மனமுடையவர்    என்று      குறிப்பிடுகிறார். செவ்வாய் மீதான இத்தகைய அபிப்ராயங்கள் ஒருவரை,இந்த சக்திமிக்க கிரகம் மட்டு மின்றி,  துன்பத்தை   மட்டுமே    தருகின்ற    கிரகமென,     சந்தேகங்கொள்ள வைக்கிறது. ஆனால், ஒரு   வெளிப்படையான    எதையும்   நேருக்கு    நேராக    சொல்லிவிடும் குண முள்ள  செவ்வாயை,  நாம்   அவ்வாறு  எண்ணலாகாது. அவரது சுறுசுறுப்பு மற்றும் திறமை வியக்கத்தக்கதாகும்.
     
     கோள்களுக்குள் முதன்மை படைத்தளபதியாக போற்றப்படும் செவ்வாய்,பகவான் மஹாவிஷ்ணுவால் தனக்கு   அளிக்கப்பட்ட அடிப்படை குணங்கள் மற்றும் கடமைக ளால்,சந்தேகமற ஜோதிடவுலகில்,பிரபலமான இடத்தில் இருக்கிறான்.அவனது தாக்கம் இவ்வுலக வாழ்க்கையின் ஒவ்வோரு கட்டத்திலும்,   செயல்பாடுகளிலும்,இல்லாமல் இருப்பதில்லை. உண்மையாகக்  கூற வேண்டுமானால், நவீன உலகின் பிரதிநிதியாக செவ்வாய், ஒருவன்  மட்டுமே  திகழ்கிறான். அப் பேர்பட்ட செவ்வாய்,தீயகோள் என சித்தரிக்கப்படுவது வருத்தப்பட வேண்டிய ஒன்று.இன்னும், செவ்வாய் சிலரால் இராசி மண்டலத்தின்  சேட்டைக்காரப்  பையன் என அழைக்கப்படும் அளவுக்குப் போய்விடு வதுதான்  வேடிக்கையிலும் வேடிக்கை. அவன் பலமிழந்த நிலையிலிருந்தாலொழிய, துஷ்டத்தனங்கள்  செய்யமாட்டான். ஏன்  ?  தேவர்களுக்கு  குரு, வல்லவன்,நல்லவன், குணக்கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும்,தேவகுருவான,குருவே கூட பலமிழந்த நிலையில் துஷ்டத்தனம் செய்யத்தான் செய்கிறான் என்பதை நாம் மறக்கலாகாது.
     
    ஜோதிடமேதை  டாக்டர்  பீ.வி ராமன் செவ்வாயை பூமியின் மைந்தன் எனப்படும் பூமிபுத்ரா  என்றும்,  இரத்தத்தைக்   கட்டுப்   படுத்து பவனாக ருத்ர னென்றும்,எரியும் நிலக்கரி யென்ற அங்காரக”   னென்றும் ,மூர்க்கமான முகத்தோற்றமுடையவன் எனப் பொருள்படும் லோகிடங்கா என்றும்   குறிப்பிடுகிறார்.  மேலும்   செவ்வாய்    திருமண விஷயத்தில், அவனின்   அனுகூலமற்ற தாக்கத்தால் ஏற்படும் செவ்வாய் தோஷத்தால் அனைவராலும் அறியப்பட்டவனாவான்.
          
    இயற்கையில் அசுபராகிய செவ்வாய்,தைரியம்,வீரம்,பொதுஅறிவு, உணர்ச்சி, மனித னுக்குள் இருக்கும் மிருகத்தனம்,பலம்,சுயதைரியம், சகிப்புத்தன்மை,   ‘   துணிந்து செல், நிமிர்ந்து நில் என்ற  உத்வேகம்,  விவாத   குணமுள்ள   ஆசிரியத்  தன்மை, அதிரடியான நகைச்சுவை  உணர்வு, கஷ்டம்  எதையும்  திட்டமிட்டு  நிறைவேற்றும்  தன்மை, நிகழ்ச் சிகளை, விழாக்களைத்   திறன்பட   ஏற்பாடு    செய்கின்ற   திறமை, சுதந்திரமான செயல் பாடுகள்,   தலைமைக்கான   தகுதிகள்,     வெற்றி  பெற    நினைக்கின்ற   உழைப்பு மற்றும் முனைப்பு, இயங்குதல், தீ, வெப்பம், உந்துதல், ஊக்குவித்தல், கட்டுமானம், சுயகட்டுப்பாடு, பயமின்மை, உயர்ந்தயெண்ணம் மற்றும்  தியாககுணம்    போன்ற வற்றை      பலம்மிக்க, நல்ல நிலையிலுள்ள, அனுகூலமிக்க  நிலையில், அமர்ந்து  அந்த அதிர்ஷ்டமுள்ள ஜாத கரை, வாழ்வில்  கஷ்டங்களிலிருந்தும்,   நஷ்டங்களிலிருந்தும்,   இறுக்கமான  நிலைகளி லிருந்தும்  விடுவித்து விடுகிறார்.  அதன்  காரணமாக  அந்த  ஜாதகரை அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே,அழைத்துச் சென்று விடுகிறார்.
         
    பெருந்தன்மை மிக்கப் பேராளன் செவ்வாய்,   ஒருவரை     தைரியமிக்க     வராகவும், வீரமிக்கவராகவும்,எவராலும் வெல்லமுடியதாவராகவும்,பயத்தாலும், ஆபத்துக்களாலும் பாதிப்படையா தவராகவும்,     தடைகளைத்     தைரியத்தோடு     எதிர்   கொள்பவராகவும், எதிலும்  எச்சரிக்கை  உடையவராகவும்   இருக்கச் செய்கிறது.என டாக்டர் பீ.வி.ராமன், மேலும் கூறுகிறார்.நமது செவ்வாயைப் பற்றிய கூற்றையும் நியாயப்படுத்துகிறார்.
        
    ஒரு     இயற்கை பாபராக,    அனுகூலமற்ற    நிலையில் செவ்வாய் என்ன செய்கிறா ரெனப் பார்ப்போம்.  எச்சரிக்கை   உணர்வில்லாத  சிந்தித்து  செயல்படாதவராகவும், பிறர்க்கு அடங்கி நடப்பதையும்,பிறரால் கட்டுப்படுத்துவதை விரும்பாதவராகவும், தன் நடவடிக்கைகளில் பிறரின் தலையீட்டை வெறுப்பவராகவும், துரதிர்ஷ்டம், விவகாரம், வழக்குகள், எதையும் துணிவுடன் எதிர்க்கும் தன்மை, தவறான தகுதியற்ற தலைமை, விபத்துக்கள்,  நேர்மையற்ற   காமவுறவு,  வெட்டுகாயம்,புண்கள், அறுவை சிகிச்சை, இரத்தம் வீணாகுதல், உடல்வலி,  சட்டப்படி   தண்டனையடைதல்,  அடாவடித்தனம், சண்டையிடுதல்,  தரக்குறைவான  பேச்சு,  வெட்கங்கெட்ட தன்மை, கொடுமையான, மூர்க்கத்தனமான,போர்க்குணமுள்ளவர்,ஓய்வற்ற,பொறாமையுள்ள,அடிபணியாத,சட்டத்தை மதிக்காத, சுயகட்டுப்பாடற்ற, கர்வமிக்க, கோபமுள்ள,  நிலையற்ற மனமுடைய, கடினமான  மனமுடையவராகவும், போராட்டம்  மற்றும்  குழப்பவாதியாகவும் ஆக்கி விடுகிறார்.மேலும் மேற்கண்ட துர்குணங்களை ஜாதகருக்குத் தந்து,தேவையற்ற வீண் விவகாரங்களில்   தலையிட வைத்துத்  துன்பங்களுக்கு   ஆளாக்கி  துரதிர்ஷ்டசாலி யாக்குகிறார் என்றால், அது செவ்வாய் வலுவிழந்த நிலையில் மட்டுமேயாம்.
     
     மேஷம்,விருச்சிகம் இருராசிகளுக்கு அதிபதியான,செவ்வாய்,  இளைய சகோதரர் மற்றும் பூமிகாரகனும் ஆவார்.   இவ்விரு ராசிகளில் செவ்வாய்,நமது வாழ்க்கையின் தொடக்கத்தொடும்,  முடிவொடும், அதாவது ஆரோக்கியம்,சக்தி மற்றும் ஆயுளோடும், தொடர்புடைய வராகிறார்.  எனவே,  ஒருவரின் ஆயுள், ஆரோக்கியத்தை ஜாதகத்தில் ஆராயும்போது ஆயுளுக்குக் காரணியான 1 ம் பாவம், 8 ம் பாவம்,  சூரிய, சந்திரர்கள் மற்றும் செவ்வாயைக் கருத்திற் கொள்ள வேண்டும்.நல்ல நிலையிலுள்ள செவ்வாய் ஒருவரின் நல்லாரோக்கியம் மற்றும்  நீண்ட ஆயுளை  உறுதி செய்கிறது யென்றால் மிகையாகாது.
     
     இவ்விடத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது யாதெனில், மேஷ ராசியானது, செவ்வாயின் நேரிடையான அல்லது சாதகமான,அனுகூலமான பலன்களையாள்கிறது. மேலும் இந்த ராசியில்தான், எதிர்ப்பு  குணமுள்ள கிரகசக்திகளான, சூரியன் உச்சமும் சனி  நீசமும்  அடைகின்றனர்  என்பதை  நமது ஜோதிட பார்வையிலிருந்து விலக்கி விடக்கூடாது. ஏனெனில்,இக் கோள்களும் ஆயுள்,ஆரோக்கியத்தையாள்பவர்கள்தானே. எனவே,மேஷம் ஒரு சக்திமிக்க ராசியாகத் திகழ்கிறது.அங்கு பலமிக்க  பலகிரகங்கள் கூடியிருக்க, அந்த ஜாதகர் எல்லோராலும் மதிக்கப்படுபவராகவும், உயர்ந்த நிலையை அடைபவராகவும்  இருப்பார்,  மேலும்,  மேஷம் லக்னமாகி,அதில் சந்திரனும்,புதனும் இடம்பெற  மிகப்  பெரிய அளவில் அதன் விசேஷ குணங்களை ஜாதகருக்கு அளித்து விடுகிறது.
      
      விருச்சிக ராசி.னது,ஸ்திர ராசி,நீர்ப்பிடிப்பான இது செவ்வாயின் எதிர்மறையான விளைவுகளைக் கையாள்கிறது.மேற்சொன்ன, சந்திரன் நீசம்,புதன் இணைவு விருச்சிக ராசியில்  ஏற்பட ஜாதகரை, அவர்  தவறுகளே,செய்திருந்தால் கூட எளிதில் எவரும், ஒன்றும்  செய்துவிடமுடியாது. மேலும், விருச்சிக ராசியில்  எந்த ஒரு கோளும்.அது நற்கோளாக  இருந்தால்  கூட தனது இயற்கை  நற்  குணங்களையிழந்து,தனது தசா காலங்களில்,ஜாதகருக்குக் கஷ்டங்களைக் கொடுத்துவிடுகிறது.
      
      ஒவ்வொரு கிரகமும், தனது   தகுதிக்குத்  தக்கவாறு, தனித்தனி வழிகளில்,நம் பாவங்களுக்குத் தக்க தண்டனையை யளிக்கின்றன என்பதை  நாம் உணர வேண்டும். உதாரணமாக, சனி  தனது தடை தாமத குணத்தால்,மனதளவில் இன்னலுறச் செய்து, தண்டித்து விடுகிறான். ஆனால், செவ்வாயோ, மற்றவர்களோடு சண்டையிடச் செய்து  வழக்கு விவகாரங்களில் ஈடுபடவைத்து,  பல சிக்கல்களைக் கொடுத்து தண்டிக்கிறார்.   இது உடலளவிலானது.இதன் காரணமாக  நாம்,பொறமையிழந்து, உணர்ச்சி வசப்பட்டு கோபமுற செய்து துன்பமளிக்கிறான்.
    
     ஆனால், கோள்கள், பரிசுகளும்  தந்து  மகிழ்வதுண்டு. சனி   நமக்குப் பொறுமை யையும்,கட்டுப்பாட்டையும்,ஒருமுகத்தன்மையையும் அளித்து மகிழ்விக்கிறது.மேலும், அவன்  மனித  குலத்துக்கும், கடவுளுக்கும்   நாம்  ஆற்ற வேண்டிய  கடமைகளை யுணர்த்துகின்றன.

      எனவே, செவ்வாய்  தனது  பகைவன்  சனியின்  ஆட்சி வீடான மகரத்தின் 28˚ உச்சமடைவதில்  ஆச்சரியமில்லை.   மேலும் செவ்வாய்க்கு சமநிலையில் உள்ளவர் சனியாவார். யூகித்தறிதல்,முயற்சி மற்றும் தொழிற்சாலைக்கு இடமான மகரராசியில், உச்சமாகி  செவ்வாய்   இடம்பெற ஜாதகரை மிகப் பெரிய அளவில் உயர்நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்.
      
    செவ்வாயின்  நண்பரான  சந்திரனின்  ஆதிபத்தியம்  பெற்ற கடக ராசியின் 28˚ யில்  அவர்  நீசமானாலும்,  தனது  குளிர்ச்சியால், வெப்பச் செவ்வாயை குளிர்வித்து விடுவதால், திருமண  வாழ்க்கையின் காலங்கள் முழுவதுமாக, உயர்நிலையடைந்து, மகிழ்வுற்று ஆசிர்வதிக்கப் பட்டவராக, ஜாதகர்   திகழ்கிறார். இக்காரணங்களால்,நமது வாழ்க்கையின் பெரும் பகுதியோடு தொடர்புடைய செவ்வாய்க்கு விம்சோத்திரி திசையில் 7 ஆண்டுகள்  மட்டுமே  ஒதுக்கியிருப்பது  உண்மையில் விசித்திரமான ஒன்று. அவருக்கு 20 ஆண்டுகள் ஒதுக்கியிருந்தால் நன்றன்றோ.
    
    மேலும்,பலமான செவ்வாயின்  பார்வையைப்  பெறும் கிரகங்கள்,மற்றும் 4 , 7 ,8  ஆம்  பாவங்கள் நன்மையடைகின்றன. ஏனெனில்  செவ்வாயின்  சக்தியைப்  பெற்று மேலும் ஒளிர்கின்றன. நன்மை அளிக்கின்றன. அவைகளின் பலம் மேலும் அதிகரித்து விடுகிறது.
     
      எனவே,  நண்பர்களே  பலமிழந்த  மற்ற  கிரகங்கள்  தரும்  துன்பம் போலவே, பலமிழந்த  செவ்வாயும்   இன்னல்களைத்   தருகிறது.  இல்லாயேல்   நல்லதையே நல்குகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

       

No comments:

Post a Comment