முனி துளசிதாஸ் தனது “இராம சரித மானஸா”
நூலில் பரிகாரம் பற்றிய பல்வேறு விஷயங்களைப் பற்றி தெளிவாக
விளக்கியுள்ளார்.அவை பற்றிய விவரங்களை
நாம் அறிவோமா ?
முனி துளசிதாஸ், “தானங்களும்,ஹோமங்களும்,மந்திரஉச்சாடனங்களும்
நாம் முன் செய்த பாவங்களைக் குறைக்காது.நமைப் படைத்த இறைவனைத் தொழுவதின் மூலமே குறையும்.
கடவுளின் கருணையால் மட் டுமே, பாவங்களை அழிக்க முடியும்.
ஜோதிடத்தில் கடவுளின் கருணையை,
குருவின் பார்வை மூலமாகவும், இணைவுமூலமாகவும்
–-
இலக்னத்தில் தற்காலிக சுபர் இருப்பதின்
மூலமாகவும் –
சந்திரா லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில்
தற்காலிக சுபர் இருப்பதின் மூலமாகவும் –
அறிந்துகொள்ள முடியும்” எனக் கூறுகிறார்.
இலக்னம் –
இலக்னாதிபதி அல்லது திரிகோணம் ஆகியவை தற்காலிக சுபர்களின் தாக்கம் பெற்றால்,நாம் செய்யும் பரிகாரம்
பலிதமாகும்.
கிரக பரிகாரம் :-
இராகுவுக்கு :–
வறுத்த, ருசிகரமான உணவை, வெள்ளிக் கிழமை அல்லது சனிக் கிழமையன்று, காக்கைக்கு
வைப்பதே பரிகாரமா கும்.
குருவுக்கு :- வியாழக் கிழமைகளில்,
பசுக்களுக்கு, மஞ்சள் நிறப்
பொருட்களையும், இனிப்புவகைகளையும் படைப்பதே பரிகார மாகும்.
செவ்வாய்க்கு :- செவ்வாய் கிழமைகளில் குரங்குகளுக்கு உணவ ளிப்பதுவும்
பரிகாரமாகும்.
கேதுவுக்கு :- நாய்களுக்கு உணவளிப்பது நல்ல
பரிகாரமாகும்.
இப் பரிகார முறைகளை தொடர்ந்து, பதினைந்து – இருபத்தி வொன்று –
நாற்பது நாட்களுக்கு செய்தால் பலன் கிடைக்கும்.
சந்திரனுக்கு :- பிசைந்த மாவை பசுவுக்கு,தினமும் கொடுக்க வேண்டும்.
சர்க்கரை கலந்த ரொட்டியை,
தினமும் காக்கைக்குக் கொடுக்க (பீ.பி)
இரத்த அழுத்த நோய் குறையும்.
இராகு தசா/ இராகு புத்தியில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச் சைகள் பலனளிப்பதில்லை. ஏனெனில், இராகு, தீர்க்க முடியாத, சுலபமாக
கண்டுபிடிக்க முடியாத நோய்களைத் தருபவனாயிற்றே!
சூரியன் – செவ்வாய் ---- பித்தத்தால் வரும் நோய்களையும்,
சனி – புதன் ---- வாதத்தால் வரும் நோய்களையும்,
சந்திரன் – சுக்கிரன்---சிலேத்தும நோய்களையும்
தருகின்றன.
இவை தவிர, இராகு—கேதுக்களால்
ஏற்படக் கூடிய திடீர் விபத் துக்கள், விஷ சம்பந்தமான ஆபத்துக்கள்
ஆகியவற்றிலிருந்து நமைக் காக்க உதவுபவர் குரு பகவானாவார்.மருத்துவ சிகிச்சைக்
குப்பின் நோயை குணப்படுத்தும் சக்தி குருவுக்கே உரியதாகும்.
ஆயுள் காண சில வழிகள்
பூர்ணாயுள் :-
1. இலக்னத்தில்
குருவும்,
7 சுக்கிரனும் இருந்து,இலக்னாதிபதி மற்
றும் சனி,ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கவும்.
2. குரு 9 ல் இருக்க,லக்னத்தில்
சுக்கிரனும்,இலக்னாதிபதி மற்றும்
சந்திரன் கேந்திரத்தில் இருக்கவும்.
3.
சந்திரன் பலமற்றவனாகி,குரு மற்றும் இலக்னாதிபதி கேந்திரத்
தில்
இருக்கவும்,பூர்ண ஆயுளாகும்.
மத்திம ஆயுள் :-
1. சுபர்கள்
கோணத்திலும்,அசுபர்கள் கேந்திரத்திலும் இருந்து,
இலக்னாதிபதி
பலமற்றவராக அமையவும்.
2. கேந்திரத்தில் சுபர்களும், 1,8,12 ல்
அசுபர்களும் இருக்கவும்.
3. இலக்னாதிபதி 8 லும், குரு 2,9 அல்லது 11 ல்
இருக்கவும்,இலக்
னத்தின்
மீது அசுபபார்வை விழவும்.
4. சந்திரன் 12 லும், இலக்னாதிபதி,சுபரோடு இணைந்திருக்க,அசுபக்
கிரகம் 8 ல் இருக்கவும்.
5. இராகுவும்,சூரியனும்
8 ல்
இருந்து இலக்னாதிபதி நீசமாயிருக்
வும். மத்திம ஆயுளாகும்.
அற்பாயுள் :-
1. கேந்திரத்தில்
அசுபர் இருக்கவும், இலக்னத்தில் மாந்தி
அல்லது
அசுபர் இருக்கவும்,குருவும்,இலக்னாதிபதியும் பலமற்றிருக்கவும்.
2.
இலக்னாதிபதி கேந்திரத்திலிருக்கவும்,புதனும்,சுக்கிரனும் எந்தக்
கேந்திரத்தையும் பார்க்காமல் இருக்கவும்
3.
சூரியன்,சந்திரன்,இராகு ஆகியோர் இலக்னத்திலிருக்கவும்
4.
எட்டாமிடத்தில் செவ்வாயும், இலக்னாதிபதி,சனி,இராகு மற்றும்
சந்திரன் ஆகியோர் பன்னிரெண்டில் இருக்கவும்.
5. சந்திரன்,செவ்வாய்,சனி ஆகியோர் கேந்திரத்தில்
அல்லது
கோணத்தில் அல்லது எட்டில் இருக்கவும்.
6.
சந்திரன்,சூரியன்,செவ்வாய்,சனி ஆகியோர் கேந்திரத்தில் அல்
லது கோணத்தில் இருந்து, இராகு
எட்டில் இருக்கவும்.
7. குரு,செவ்வாய் 8 ல்
இருக்க,சந்திரன்,இராகு இலக்னத்தில்
இருக்கவும். அற்ப ஆயுளாகும்.
No comments:
Post a Comment