“டரட்” (TAROT) என்னும் மாயாஜாலம்
“டரட்” என்பது
உடற்தத்துவ மற்றும் மனோதத்துவ முறையிலான மேல் நாட்டு முறையாகும். மேலும் இது ஒரு
சீட்டு விளையாட்டு போன்ற தாகும்.. இதில் மேஜர் மற்றும் மைனர் சீட்டுக்கள் என
சொல்லப்படும் 78 சீட்டுகளை கொண்டதாகும். இதில் 22 சீட்டுக்கள் மனித வாழ்க்கைப்
பய ணத்தின் முக்கியமான குறிகாட்டிகாளாக
கருதப்படுகிறது. மீதமுள்ள 56 சீட்டுகளில் 16 கோர்ட் கார்டுகள் எனவும், எண்களுள்ள
40 கார்டுகள் அல்லது பிப் கார்டுகள் எனவும்
பிரிக்கப்பட்டுள்ளன. அவை மீண்டும் 10 எண்ணங்கள் கொண்ட (1) கோல் ( wands கம்பு) (2)
கோப்பைகள் ( cups ) (3) வாட்கள் ( swords)(4)
ஐங்கோணம், நாணயம் ( pentacles ) என நான்கு பிரிவுகளாக
பிரிக்கப் பட்டுள்ளன. அவை நமது சாதாரண சீட்டுக்கடடுகளை போன்றே க்ளப்ஸ், டைமண்ட்,
ஹார்ட்ஸ் ஸ்பேடு ஆகியவற்றுக்கு சமமானதாக கருதப் படுகிறது. இவை நான்கும் தங்களுக்குரிய
கோர்ட் கார்டுகளாக ராஜா ( king ) ராணி (queen) மந்திரி ( knight)
மற்றும் இளவரசி ( princess) உள்ளன. ஏஸ் 10
ம் எண் சீட்டாகும்.
“டரட்” முறை
,முக்கியமாக, சின்னங்கள் மூலமான பிரபஞ்ச மொழியை கொண்டுள்ளதால்,அதன் தாக்கம் பல
நூற்றாண்டுகளையும் கடந்து உலகம் முழுவதும், மதம்,இன, மொழிகளைக்கடந்து
பரந்துவிரிந்து உள்ளது.மேலும்,இந்த உணர்வற்ற சின்னங்களாலான மொழி டரட் உபயோகிப்பதன் மூலமாக உள்ளுணர்வையும் ஊக்குவிக்கிறது..
இந்த
சீட்டுகளை எங்ஙனம் படிப்பது ? நல்ல கார்டுகளை தேர்ந்தெடுத்தல்,நன்றாக கலைத்தல், சீராக
கார்டுகளை அடுக்குதல், பின் அதில் உள்ள சின்னங்களின் அடிப்படையில் ஒருவரின்
கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும்
வாழ்க்கையின் மீதான தற்கால தாக்கங்களை எடுத்துரைத்தல்
ஆகியவையே இச் சீட்டு முறையைப்படிப்பதாகும்.ஆனால் ஒரு சில
கார்டுகளோடு மட்டும் நின்றுவிடாமல் ,அனைத்து கார்டுகளையும், குறிப்பாக முக்கியமான
22 கார்டுகளை பயன்படுத்த வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றுதான், மனித
உடற்தத்துவம்,மனோதத்துவம் மூலமாக உருக்கொடுக்கின்றன.மேலும்மனக்கண் முன் சின்னங்களை
கொண்டுவருவதற்கும்,தியானிப்பதற்கும். கார்டுகளை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
“டரட்” உங்களுக்காக:
உங்கள் கவலைகளைப் போக்க,நீங்களே டரட் கார்டுகளை ஆராய்வது முடியாதகாரியம்
என்பதால்,இம்முறையை அறிந்த பல அறிஞர்கள் தாஙகள் எழுதிய புத்தகங்களால் மட்டுமே
மற்றவர்களுக்கு பலன் பார்க்க
வேண்டும் என குறிப்பிட்டு ,உங்களை அதைரியப்படுத்துவார்கள்..மேலும்,
உங்கள் கஷ்டங்களையும்,பயங்களையும் இக்கார்டுகள் மூலம் நீங்கள் அறிய முற்படுவதை குறை
கூறுவார்களேயன்றி அதற்கான புதிய
வழிமுறைகளை கூற முற்படமாட்டார்கள்.எனவே.நாம் உதவியற்ற
மனநிலைக்கு தள்ளப்படுவோம்..
எனினும்,உங்கள் சுயவளர்ச்சிக்காகவும்,சுயமுன்னேற்றத்திற்காகவும் உதவும்
உரிய ஆயுதமாக டரட் கார்டுகள் கண்டிப்பாக அணுகப்பட வேண்டும்..இதற்காக, தங்கள்
அனுபவத்தாலும், தங்கள் மாணவர்களின் அனுபவத்தைக் கொண்டும் உங்களுக்கு நீங்களாகவே
டரட் கார்டை உபயோகிக்கும் முறைகளை சில நூல்களில் விளக்கியுள்ளனர்.
1.இப்புத்தகத்தை எல்லா புத்தகத்தையும் படிப்பது போல் படித்துவிட்டு
கார்டுகளை அலசி , அதில் நமக்கு ஏற்படும் உணர்வுகளை எழுதவும். கார்டிலுள்ள
நிலைகளைப்பற்றி விவரிக்கத் தேவையில்லை.
2. பிறருக்காக
டரட்டை வாசிப்பதுபோல்,சத்தமாகவும், விளக்கமாகவும்,அனைத்தையும்
வாசிக்கவும்,வாசிக்கும் போது ஒரு டேப் ரிக்கார்டரில் பதிவு செய்யவும்..
3. பலமுறை
படித்துவிட்டு, பல வழிமுறைகளில் கூர்ந்து நோக்கி,எழுதி அதை உங்கள் வேலைக்காரர்கள்
பார்ப்பதுபோல்
வைக்கவும்.
4.
ஏதேனும் குழப்பமோ,ஏமாற்றமோ அளித்த கார்டாக
இருந்தால்,அதைவைத்து தியானம் மற்றும் மனக்கண்முன் கொண்டுவந்து ஆராயவும்.
5.
நண்பர்களை உதவிக்கு வைத்துக்கொள்ளவும்,அவர்களோடு சேர்ந்து
மாறி மாறி படித்து கார்டுகளை அலசவும்.
6.
கார்டுகளை பார்த்து கதைகள் சொல்லவும். நிகழ்ச்சிகளை
விவரிக்கவும்.அதில் உள்ள சின்னங்களைப்பற்றியும் விவரிக்கவும்.
எவ்வித கார்டுகளை,எந்த வழி முறையை
தேர்ந்தெடுப்பது ?
டரட்டிலுள்ள சின்னங்கள் மூலமாக பணி செய்ய
வேண்டியுள்ளதால்,எந்த கார்டுகளில் வசதியும், நமக்கு பழக்கமும் உள்ளதோ,அதை
தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியமானதாகிறது..மேலும் அழகிய,தெளிவான பட சின்னங்களை
கொண்ட கார்டுகளை உபயோகிக்க வேண்டும்.
ஏனெனில்,பல மேல்நாட்டு கார்டுகளில் உள்ள
படங்கள் மிகவும் சுருக்கமாக வரையப்பட்டிருக்கின்றன..இப்போது உலகில் பல நூறுவித
டரட் கார்டுகள் வந்துவிட்டன..மேலும் வருடத்திற்கு 10 வித புதிய கார்டுகள்
வந்துகொண்டிருக்கின்றன.எனவே பல விதமான கார்டுகள் மூலமாக பயிற்சி
எடுத்துக்கொண்டு,ஒத்து நோக்கி, முன்னேற
ஏதுவாகிறது
உலகில் பல அறிஞர்களால். அளிக்கப்பட்ட,
பாரம்பரியம் மிக்க டரட் கார்டுகள் பல,அவற்றில் சில
சுய சிறப்பு மிக்க டரட்
காரடுகள்:
செல்டிக் விஸ்டம்------- செல்டிக்
புராணக்கதைகள்
ஓஷேர ஜென் ------------- புத்த மத
தாக்கம் கொண்டது.
மெரி டே --------------நவீன மாயாவித்தை செய்பவர்கள்
வணங்கும் தெய்வம்.
ஷைனிங் ட்ரைப் --------ஷரமானிக்- பூமி
அடிப்படையில்
வீல் ஆப் சேஞ்ச் ---------மனித
உருவங்களற்ற,எண் உள்ள
கார்டுகள்,நகர மத
நம்பிக்கையற்றவை
ஐரோப்பிய பாரம்பரிய முறைகள்
மார்சலீஸ்,இட்டாலியன், புராதனக்கலை,மிக்சிலேட்
மற்றும் எகிப்திய நாகரிக சீட்டுக்கட்டுகள்,
சுலபமான முறையில் இருப்பதாகும் அவை படிப்பதற்கு மிக நன்றரக
இருந்தாலும்,கார்டுகளில் உள்ள
சின்னங்களின் அர்த்தங்களை
நினைவில் வைத்துக்கொண்டேயிருப்பது
அவசியமாகிறது..ஆனால், இந்த முறையில் குறிபிடப்பட்டுள்ள
படிப்பதறடகான யுக்திகள், அதனினின்றும்
மாறுபட்டவையாகும். இத்தகைய பாரம்பரியமிக்க நூல்களில்
ரைடர் வொயுட் ஸ்மித் மற்றும் க்ரௌலி
ஹாரீஸ் ஆகிய அறிஞர்களினனால் அறிமுகப்படுத்தபட்ட கார்டுகளின் அடிப்படையில்தான்
விளக்கப்பட்டுள்ளன.. இந்நூல்களில் உள்ளபடி பயிற்சி செய்தால் தங்களின் உள்ளுணர்வு
சிந்தனைத் திறமைகளை முறையாக உபயோகித்திட ஊக்குவிக்கும், வழிவகுக்கும் எனலாம்.
எனவே, அன்பர்களே இதுவரை டரட்
எனறால் என்ன ? எத்தனை வித கார்டுகள் உள்ளன ? கார்டுகளை தெரிந்தெடுப்பது எப்படி ?
என்ற விவரங்களின் ஆயிரத்தில் ஒரு துளியை மடடுமே பார்த்தோம். இது ஒரு நீண்ட நெடிய
பயணம் காலமும்,யோகமும் ஒத்துழைத்தால் தொடர்ந்து பயணிப்போம்,பயனுறுவோம்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்
!
No comments:
Post a Comment