எந்திரன்

ஜோதிடம் ஓர் விஞ்ஞானம்.அதில் உள்ள உண்மைகளை மிகவும் பிரபலமானவர்களைக் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமே உலகுக்கு அந்த விஞ்ஞான உண்மைகளை விளக்க முடியும்.நம் முன்னோர்களும், முனிவர்களும்,அயராது பாடுபட்டு வளர்த்த ஜோதிடத்தின் உண்மைகளை அறிவோம், வியப்போம்!.
சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த் தமிழக மக்களின் இதயத்துடிப்பு. லட்சக்கணக்கான ரசிகர்களின் உன்னத தலைவன். ரனோஜிராவ் மற்றும் ரமாபாய் இவர்களின் மகனாக 12-12-1950 அன்று பெங்களூரில் பிறந்தார்.
இராகு
|
|
|
|
குரு
|
12 – 12 – 1950
திருவோணம்-2
11 – 45 இரவு
|
|
|
சந்
செவ்
|
இராசி
|
லக்///
|
|
புத
சுக்
|
சூரி
|
|
கேது
சனி
|

திதி: சுக்ல சதுர்த்தி- நித்ய யோகம்:-வியாகதம், கரணம்-விஷ்டி
நடப்பு தசா:- சனி/சந்திரன் ( 2-வருடங்களுக்கு முன் )
சூரி
சனி
|
|
சந்
சுக்
|
|
செவ்
|
|
இராகு
|
|
கேது
|
நவாம்சம்
|
|
|
குரு
|
|
|
லக்
புத
|

ரஜினி அவர்கள் சுக்கல சதுர்த்தியில் பிறந்தவர். இதில் பிறந்தவர்கள் நியாயத்திற்காக எவரையும் எதிர்ப்பதிலும்,எதிர்வாதம் செய்வதிலும், சுயவுயர்வுக்காக சூழ்நிலைக் கெற்றவாறு ,தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறமையுடையவராகவும் இருப்பார்.
இவர் வியாகதம் நித்யயோகத்தில் பிறந்ததால், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும்,வெகுண்டெழும் சினமுடையவராகவும் இருப்பார். தன் நிலையிலிருந்தும்,எடுத்த முடிவுகளிலிருந்தும் திடீரென பின் வாங்கிவிடுவார்.இவரின் மூட் பார்த்தே யாரும் இவரிடம் நெருங்க முடியும்.
சிம்மலக்னத்தில் பிறந்தவர்கள் அஞ்சானெஞ்சமும், அசாத்ய வீரமும் உடைய ஹீரோக்களாக இருப்பர்.தனது வெற்றியில் நம்பிக்கைமிக்கவாரகவும் , பெரியவர்களின் அன்பும் ஆதரவும் பெற்றவராகவும் இருப்பர். எதிலும், தனக்கென தனிமுத்திரை பதிப்பவர்கள். மற்றவர்களை, சிதறாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும்,மற்றவர்களுக்கு தைரியமூட்டுவதிலும் வல்லவராக இருப்பர்.வரும் விருந்தினரை மனமுவந்து வரவேற்பதில் விருப்பமுடையவர். நல்லவர்களின் ஆதரவு இவர்களுக்கு என்றும் உண்டு. அனைவராலும் போற்றப்படுவர். நல்வாழ்க்கை அமையும்.பணம் செலவழிப்பதில் கட்டுப்பாடற்றவர். பொதுவாக, சிங்கம் யாருடனும் கூட்டுவைக்காதல்லவா? சிம்மத்தில் பிறந்தவர்கள் காடு மலைகளில் அலைவதில் ஆர்வமுள்ளவர்கள்.
ஜனவசியன்,சகலகலாவல்லவன்,கம்பீரபேச்சுவுடையவன்.நன்கு உண்பவர்.செவ்வாய் யோககாரகர்.அவர் உச்சம் பெற்றுள்ளார்.
இவர் மகர ராசியில் பிறந்தவர்................ நீண்டு உயர்ந்த கம்பீரமான தோற்றமுடையவராகவும்,பெரிய கண்களை உடையவராகவும்,ஆசாரமானவராகவும்,தெய்வபக்தி உடையவராகவும் இருப்பர். வாசனைத்திரவியங்களில் பிரியமும், ஆடை ஆபரணங்களில் ஆசையுடையவராகவும் இருப்பர். தன் இஷ்டம்போல் காரியங்களை செய்து வெற்றிபெருபவராகவும் இருப்பர். குழந்தைகளுக்கு குறைவிருக்காது. குடும்பம்,செல்வம்,கீர்த்தி அனைத்தும் நிறைந்திருக்கும். மனைவியிடம் மிகவும் பிரியமுள்ளவராகவும்,அவர் விருப்பபடியே நடப்பவராகவும் இருப்பவர். மகர ராசியில் பிறந்தவர்கள், சுறுசுறுப்பு மிக்கவராகவும், பிறந்தயிடத்தைவிட்டு வெளியிடத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களாகவும் இருப்பர்.
இதுவரை பொதுவாக பார்த்தோம், இனி ஜாதகத்துள் சென்று பார்ப்போம்? ஒளிமயமான,கவர்சியான,கம்பீரமான கிரக ராஜ்ஜியத்தின் அரசனான சூரியனே லக்னாதிபதியாவார்.அவர் சதுர்த்த கேந்திர மேறி ஜாதகருக்கு கம்பீரத்தையும்,அழகையும்,பெருமைகளையும் அளித்தார். மேலும், பெற்றோர்மீது பாசத்தையும், மிகத்தெளிவான குறிக்கோளையும்,கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் கொடுத்தார். சூரியன் புதன் சாரம் பெற்று கேந்திரத்தில்,நட்பு வீட்டில் இருக்க, வீடுகொடுத்த செவ்வாய் உச்சமானதால் சம்பாத்தியத்தில் அரிய சாதனைகளை தந்தார்.
இரண்டாம் அதிபதி கிரக ராஜ்ஜிய இளவரசன் புதன், திரிகோண ஸ்தானமான 5 மிடத்தில் நின்றதால்,தலைமுறைகளுக்கும் சொத்து சேர்க்கும் திறமையையும்,புதிய முறைகளில்(ரஜினி ஸ்டைல்) வருமானத்தை பெருக்கும் திறனையும்,அரசுமூலம் பரிசுகள் பெறும் வாய்ப்பும் கிடைத்தன. 2-11 க்குரிய தனலாபாதிபதி புதன் செல்வச் செழிப்பையும் அள்ளித்தந்தார்.
குருவின் தனுசுவில்,சுக்கிரன்,புதன் இணைவும், நவாம்சத்தில் சுக்கிரன் உச்சமடைந்துள்ளதும் இவரை கலைத்துறையின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. மெலும்,கேந்திரத்தில் அமர்ந்த சூரியன், தசம கேந்திரமான சுக்கிரனின் வீடான, தொழில் ஸ்தானத்தை பார்வை செய்ய சினிமா தொழிலில் உயர வைத்தந்தது,
பொதுவாக 4 ம் அதிபதி செவ்வாய் 6 ல் அமர்ந்ததால் கோபமுடையவராகவும்,ஊர் சுற்றி பார்க்க ஆவலுள்ளவராகவும், சில சமயங்களில் பிறரால் விரும்பப்படாத பழக்கவழக்கங்களை உடையவராகவும் இருப்பர். மெலும், 4 ம் அதிபதியும், கிரக ராஜ்ஜிய சேனாதிபதியுமான செவ்வாய் ஜாதகரை போர்வீரனுக்குரிய மனவுறுதியையும், சமயோசித புத்தியையும் தந்தது. படிப்பைவிட நடைமுறை அனுபவத்தால் உயர்வையும்,தெய்வ பக்தியையும் தந்தது.இவருக்கு இளமையில் 6 ல் இருந்து திசை நடத்தியதால் கல்வியில் தடை தந்தது.சந்திரனோடு இணைந்த செவ்வாய் தனது தசாவில் , தாயாருக்கு மரணத்தையும் தந்தது.
நான்கில் சூரியன் இருப்பதால்,தேவையற்றவர்களுக்காக கவலைப்பட்டு, தன்னை சார்ந்தவர்களின் மகிழ்ச்சியை கெடுப்பார். வெதாந்த தத்துவங்களில் ஆர்வமும்,இயற்கையிலேயே மனிதவுறவுகள்,மனோதத்துவம் பற்றிய ஆழ்ந்த அறிவும் உடையவராக இருப்பார்.மானிட சமுதாயத்திற்காக உழைப்பதில் மகிழ்ச்சியடைவார்.
9 ம் அதிபதி செவ்வாய் உச்சம்,குரு ஏழில் இருந்து இவருக்கு புகழையும்,செல்வாக்கையும் தந்து, நல் பாக்கியத்தையும் தந்தது.
ஏழாம் அதிபதி 2 ல் இருப்பதால் மனைவி அதிர்ஷ்டசாலியாவார். திருமணத்திற்குப் பின் இனிமையான குடும்ப வாழ்க்கையும், நல்ல எதிர்காலமும் ஏற்பட்டது. 7 ம் அதிபதி பாபகர்த்தாரியில் இருப்பதால் சிறு வயது முதலே கடின உழைப்பை தந்து, வெகுவேகமாக, அசாதாரண வழி முறைகளை கடைபிடித்து செல்வம் சேர்க்கவைத்தார்,பிற்காலாத்தில் சமுதாய சீர்திருத்தத்திலும் ஏழைகளின் முன்னேற்றத்திலும் ஈடுபட்டு நற்புகழையும் தருவார். இன்னிலை தாமததிருமணத்தையும் தந்தது.
5 மற்றும் 8 ம் அதிபதி குரு ஏழில்னின்று லக்னத்தையும் பார்த்ததால் காதல் மற்றும் கலப்புத்திருமணத்துக்கு வழி வகுத்தது.குரு ஏழில் இருப்பது நிலைமையை சீராக்கியது.
4,9 க்குடைய உச்ச செவ்வாய் 12 ம் அதிபதி சந்திரனுடன் சேர்ந்து, அதன் அதிபதி சனி 2 ம் இடத்தோடு சம்பந்தம் பெற்றதால் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புக்களை தந்தது. சனியோடு 2ல் கேது நிற்க பாபா, இமயமலை யென ஞானமார்க்கத்துக்கும், ஆன்மீகதேடலுக்கும் வழிவகுத்தது. 8 ம் அதிபதி குரு, இதற்காக மெய்வருத்தி கஷ்டமும் தந்தது. 8 ல் நின்று திசை நடத்தியபோது ராகு இவருக்கு வாழ்க்கையில் கஷ்டங்களையே அதிகம் தந்தது.மேலும் எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றியது போல் ராகு திசையில்,கோசார சனியின் அஷ்ட்டம சனியின் காலமும் வந்தது,அதன் வேலையைக் காட்டியது.ஆயினும் 8 ல் ராகு இருக்க தொழில் வழி வருமானம் உயர்ந்தது.
9 ம் அதிபதி 6 ல் அமர்ந்து நண்பர்களின் உதவி மற்றும் உபாதைகளையும் தந்தது. சகோதரவழி உதவிகளும் பெற்று உயர்ந்தார்.
புதன் 5 ல் இருக்க ஆச்சர்யங்களையும்,போழுதுபோக்கு மற்றும் ஜாலவித்தையும் தந்தது. சுக்கிரன் 5 லிருக்க பிறர் மகிழ்ச்சி அளித்த அளவுக்கு வெறுப்பேற்றும் தன்மையும் தந்தது.இதனால் இவர் நிலையற்ற மனதுடையவர் என்ற பெயர் வரக்காரணமானது.
செவ்வாய் 6 ல் இருக்க செல்வந்தரானார், புகழ்பெற்றார். செவ்வாய் சுறுசுறுப்பும் தருபவர்.அதனால் இந்த வயதிலும் தூள் கிளப்புகிறார்.
சனி 2 லிருக்க முன்யோசனையற்றவராகவும்,சில நேரங்களில் ஏமாளியாகவும் இருப்பார்.கேது இருக்க நாவன்மைக்கு பங்கம் தந்தது.விரும்பிய வண்ணம் படிக்க இயலாத நிலையைதந்தது.
கல்யாணவர்மரின் சராவளியில் இந்த ஜாதகருக்கு என்ன சொல்லபட்டிருகிறது என்று பார்ப்போம். லக்னாதிபதி நான்கில் இருக்க ..... எப்போதும் மகிழ்ச்சியானவராகவும் ,மாசற்ற காமமுடையவராகவும் ,உடன்பிறப்பு உள்ளவராகவும் இருப்பார்.
2 ம் அதிபதி 5 ல் இருக்க.... மிகுந்த செல்வமிக்கவராகவும்,மக்களால் செல்வமும் ,வருமானமே குறியென்றும் இருப்பார்.
மூன்றாம் அதிபதி 5 ல் நிற்க மாசற்றவராகவும்.வலிமையான மனைவி மக்களையும் உடையவர்.
நான்காம் அதிபதி 6 ல் இருக்க .....தாய் பிரிவும், சினமும் தந்தது.
ஐந்தாம் அதிபதி 7 ல் இருக்க.... கெளரவம் தந்தது,சமயபற்றும் காதல் திருமணமும், வாரிசுகளால் இன்பத்தையும் தந்தது. மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் தந்தது.
ஆறாம் அதிபதி 2 ல் இருக்க.... சாதனையாளராகவும், அறிவுமிக்க பேச்சுள்ளவராகவும்,வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் ,புகழையும்,சில சமயங்களில் சுயநல எண்ணத்தையும் தந்தது.
ஏழாம் அதிபதி 2 ல் இருக்க.... மனைவியால் செல்வத்தையும்,திருமணத்திற்குப்பின் நல் முன்னேற்றத்தையும் தந்தது.
எட்டாம் அதிபதி 7 லிருக்க தாமததிருமணம்,தொழிலில் சில பாதிப்புகளையும் தந்தது.
ஒன்பதாம் அதிபதி 6 ல் இருக்க தாய்வழிவுறவால் நன்மையில்லை,பகைவரால் தொல்லையும்,முன்னெற்றத்தில் சில பாதிப்புகளும் தந்தன.
பத்தாம் அதிபதி 5 ல் இருக்க மக்களால் செல்வமும்,அனுபவ அறிவால் அனைத்து ஆற்றலும் தந்தது.
பதினோறாம் அதிபதி 5 ல் இருக்க.... குழந்தைகளால் மகிழ்ச்சியும், நேர்மையும்,இன்பத்தையும், சமயப்பற்றையும் தந்தது.
12 ம் அதிபதி 6 ல் இருக்க சொந்தமே பகையாகும், விபரீத ராஜ யோகம் ஏற்பட திடீர் ராஜ யோகம் தந்தது.
கிரக இணைவுகள் தரும் யோகங்கள்
சுனபா யோகம்:- சூரியன் தவிர ஏனைய கிரகங்கள் சந்திரனுக்கு 2 ல் இடம்பெற ஏற்படும் யோகம். இது ஜாதகருக்கு ஆஸ்திகளையும், புத்திகூர்மையையும்,புகழையும் தன் முயற்சியால் உயர்வையும், இசை, நடனம் ஆகியவற்றால் சந்தோஷத்தையும் தரவல்லது.
அனபா யோகம்:- மேலே சோன்னது போல் சந்திரனுக்கு 12 ல் ஏனைய கிரகங்கள் இருக்க சொத்துசுகங்களையும்,ஒழுக்கத்தையும், பூர்ண பலத்தையும், ஆண்மைத்தோற்றையும்,நற்புகழையும் , பரந்த மனத்தையும் தரவல்லது.
துருதுரா யோகம்:- சந்திரனுக்கு இருபுறமும்,(2,12 ல்) கிரகங்கள் நிற்க,ஜாதகர் கைகளில் எப்போதும் பணம் புரளும்.இரக்கமுடையவராக இருப்பார்,பெருந்தன்மை மிக்கவராகவும் இருப்பார்.புகழ் இவரை அரவணைக்கும்,வாகனயோகமும் உண்டு.
சசி மங்களயோகம்:-சந்திரன், செவ்வாய் இணைவு தரும் யோகம். அவசியம் ஏற்படும்போதெல்லாம் செல்வம் பெருகும்.
அகண்ட சம்ராஜ்ய யோகம்:-லக்னம் ஸ்திரராசியாக 9 ம் அதிபதி பலமிக்கவராக,சந்திரன் பலமிக்கவராக, குரு5ல் இருக்க ஏற்படும் யோகம். ஜாதகர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துபவராக ஆக்கிவிடும்.
இந்து லக்னம்:- குரு இடம் பெற்ற கும்பமே இந்து லக்னமாகும். எனவே, குரு தசா காலத்திலேயே,இவருக்கு சினிமா உலகிலே உயர்வு ஏற்பட தோடங்கியது.

21
|
26
|
31
|
30
|
25
|
|
25
|
|
27
|
சர்வாஷ்டவர்க்கம்
|
28
|
|
24
|
36
|
33
|
31
|
சர்வாஷ்ட்டவர்க்கத்தை பார்க்கும்போது தனஸ்தானம்,வெற்றி ஸ்தானம், தொழில் ஸ்தானம், லாபஸ்தானம்,ஆகியவற்றில் பரல்கள் உயர்ந்து அனைத்திலும் வெற்றி தந்தது. 8 ம் இடத்தில் 21 பரல் இருக்க எதிரிகளை வெல்லும் சக்தி தந்தது.
சனிதிசை:-சந்தோஷம்,மனசஞ்சலம்,உயர்வு, தாழ்வு என மாறி மாறிவரும்.
கோசார குரு:-பரிசுகள் ,புகழ்மாலைகள், நிகழ்ச்சிகளில் முக்கியபங்கு, முதலீடுகளில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டு.
எனவே, அன்பர்களே புகழின் உச்சியிலிருக்கும் எந்திரன் ரஜினியின் ஜாதகத்தில் கோள்கள் நடத்திகாட்டிய கொண்டாட்டங்களை கண்டுகளித்தோம். இதற்கு மேலும் ஜோதிடம் பொய்யென்று சொல்வோரை என்னவென்று சொல்ல!
டிசம்பர்,12 ல் பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


No comments:
Post a Comment