The Sun
The Soorya,is the ruler of all the planets,is belived to
be source of vitality.the planets move around the Sun and are dependent on its
energy for existence of life forms.Good placement of the ruler of the
sign,soorya can give rise to ones fame in their area or even the whole world.Ill
placed soorya,indicate physical as well as mental or emotional problems and
impoverished conditions of life.
The Sun signifies father, power,vitality,courage,personality,authority,satwic
nature, consciousness, large round face , of honey coloured eyes, heart,
brain, eye, head, bones, chest, lungs and stomach are the
body parts signified
by Sun. Also ambition,boldness
,reliable,dignity,commanding power,politician,energy,grace and personality, generosity, and kind hearted. Optimism,
administrator, respect of elders, reputation,
permanent rank, general success,
royalty, real love, fame,
determination and people in authority,faith,power and good temperament.
But when sun is afflicted,
ill aspected and ill placed, it signifies arrogance, wavering
temperament, jealous,over ambitious,irritable,angry,haughty,proud,self
opinionated, showy, dominating nature,
dangerous tendencies,
obstacles and difficulties, waste, extravagance, untrusted,
loss through the misdirected efforts of female (when afflicted
by venus) public
opposition, unfriendly towards women (when afflicted by moon)immoral
and spiteful.
Lord of Sunday,East
–direction,own house is Leo
Colour – Orange;
Moola thirikona – Leo 20˚
Nature – Hot; Debilitated
-- Libra 10˚
Position – 10 th house;
Friends --- Moon,Mars,Jupiter.
Where
lagna,Aries, Neutral
--- Mercury.
Strong --- Leo,sagitt,pisces; Enemies ---
Sat,Ven.
Own house – Leo ;
Gender --- Male ;
Exahlted -- Aries 10˚
;
body parts ---- Male life,Heart ;
Stone --- Ruby ;
Metal --- Gold ; Copper.
Traits --- Power,Fame,
Constellations --- Karthika,
Honour,Pride. U.Palguni, U.shada.
Dasa period – 6 Years
Diseases :- weak eye
sight, headache, disturbance of blood circulation,
fevers, bone, weakness palpitation
of heart, baldness, hyper irritability, bile,burning of body,heart disease,lucaria,appendicitis,flstula
and inflammatory complaints.
சூரியன்
ஜோதிடமென்பது பெரிய சாகரம். இதில் ஆழம் தெரியாமல் ,காலை விட்டவர்களே
அநேகர். அந்த ஆழியில் வீழ்ந்தவர்கள் கரைதாணுதல் அரிது. அதன் ஆழத்தை
அறிந்து முத்தெடுத்தவர்களும் குறைவே.ஜோதிடம்,ஓர் அரிய கலை.இதில் கிரக, இராசி,பாவ
காரகங்களை முக்கியமாக நினைவிற் கொள்ள வேண்டும். ஜோதிடம் என்பது படிக்கப்
படிக்க மறக்கக் கூடிய வொன்று, எனவே,அதை மறக்க, மறக்கப் படிக்க வேண்டுமென,எமது சங்கச் செயலாளர் அடிக்கடி
கூறுவார். ஏனெனில், இக் காரகமெனக்
குறிப்பிடப்படும்,குணங்களை வைத்தே, ஒரு நபரின், குணத்தை, அவர் மீதான கிரகத்தின்
தாக்கத்தைக் கொண்டே, பலன் கூற இயலும். எனவே, நமக்கு,இக் காரகங்கள்,அனைத்தும்
அத்துப்படியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
வானத்தில் சதா சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின், காந்த சக்தியானது,அவற்றின்
கதிர்வீச்சின் மூலமாக. பூமியிலுள்ள, புல்,பூண்டு
முதல் மனிதன் வரையிலான அனைத்து ஜீவராசிகளின் மீதும் தனது தாக்கத்தைச் செலுத்தி இயக்கிக் கொண்டிருக்கின்றன என்பதும்,கிரகங்களும்,கிரகங்களால்
இயக்கப்படும் மனிதர்களுக்கு மிடையேயான
தொடர்பினையெடுத்துரைப்பதே இந்த அரிய ஜோதிடக் கலையென்றால் மிகையாகாது.
ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தினி
குலசம்பதாம்.
பதவீம் பூர்வ புண்ணியானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா.
என்றபடி, ஒரு மனிதன் பிறக்கும்
போது, இராசி மண்டலத்தில் சஞ்சரித்துக்
கொண்டிருக்கிற கிரக நிலைகளைப் பொருத்தே,
அவனின் ஜாதகம் என்ற, பிரம்மனின் கையெழுத்து,
அவனின் விதியாக எழுதப்படுகிறது. ஒருவரின் இலக்னம் மற்றும் கிரக
நிலைகள் அமைவதும்,பூர்வ புண்ணியத்திற்கு
ஏற்பத் தான் ஏற்படும். அது மனித சக்திக்கப்பாற்பட்டது. பிறப்பு முதல் இறப்புவரை,
கிரகங்களின் இடமும். அவைகளின் ஆதிபத்தியமும்,பலமும் மாறாது. சாகும் வரை, மனிதன்
வாழ்கிறானெனச் சொல்வதைவிட,வாழ எத்தனிக்கிறான்,முயற்சிக்கிறான் எனச் சொல்வதே உண்மையாகும். ஏனெனில்,அவனது வாழ்க்கை
கிரகங்களின் பிடியில்யென்பதுதானே உண்மை. சூரியன் --- பூமியிலிருந்து 9,20,30,000 மைல்கள் தூரத்தில்
உள்ளது.குறுக்களவு 8,70,000 மைல்கள்.கன அளவு – பூமியைப்போல் 13,00,000 மடங்குகள்.
சூரியனின்
காரகங்கள் –
சிகப்பு வண்ணம். -- காரகம் – தந்தை,உடல்.
தாமஸ குணம். --
சிம்மம் – ஆட்சி வீடு.
செந்தாமரை மலர். --
மூலதிரிகோணவீடு – சிம்மம்.
மாணிக்கம். -- உச்ச வீடு – மேஷம்.
எருக்கு –சமித்து. -- நீச வீடு – துலாம்.
கலிங்க தேசம். -- உடற்பகுதி – மார்பு.
அக்னி – சிவன் –
தேவதை -- நட்சத்திரங்கள் – கார்த்திகை,உத்திரம்,உத்ராடம்,
பிரத்தியதிதேவதை –
ருத்ரன். – தசா ஆண்டுகள் – 6 வருடங்கள்.
நடு – திக்கு. – பாலினம் -- ஆண்.
வட்ட வடிவ ஆசனம். – இராசிக்குள் சஞ்சரிக்கும் காலம் – 1 மாதம்.
தேர்,மயில் –
வாகனம். – உருவம் – நடுத்தரம்.
கோதுமை –தானியம். – உபகிரகம் – காலன்.
தாமிரம் –
உலோகம். – சேஷத்திரம் – ஆடுதுறை.
பித்தம் – நோய்.
காரம் – சுவை.
சந்திரன்,செவ்வாய்,குரு
– நட்பு கிரகங்கள்
சுக்கிரன்,சனி,இராகு,கேது
– பகை.
புதன் – சமம்.
சூரியன்
ஆத்மகாரகன்,தந்தைகாரகன்,தந்தையின் பிரதாபம்,தைரியம், பெருந்தன்மை,நிர்வாகம்,பராக்கிரமம்,அதிகாரம்,அத்தஸ்து,செல்வாக்கு,
மருத்தவம்,அரச்சேவை,காவல் துறை உயர் பதவி,வக்கீல்,தரகுத் தொழில், ஆற்றல்,வெற்றி,உஷ்ணம்,
பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு,பாண்டித்யம்,புகழ், செல்வம், சூரியன் பலமிழந்தால் –
உடல் உபாதை,மனநிலைபாதிப்பு, தன்னம்பிக்கையின்மை,பிறரால் இகழப்படுதல் மற்றும் வாழ்க்கையில்
தரித்திர நிலைக்கும் கொண்டு செல்கிறது.
சூரியன் பலம்பெற ஆத்ம
பலமும்,அறிவு,செயல்திறன்,சுயமுயற்சி கூடும்,இலக்னாதிபதி வலுத்தால் சாந்த குணமும்,பிரபுத்
தன்மை,பெயர்,புகழ் ஆகியவையும் கூடும். 10 ம் இடத்தோடு தொடர்புற
நெருப்பு,மின்சாரம்,நீராவி எந்திரம்,உருக்காலை,துப்பாக்கியை பயன்படுத்தும்
இராணுவம்,காவல், தீய ணைக்கும் படை ஆகிய துறைகளில் உத்தியோகமளிப்பார்,இவர்
உருவத்தில் பெரியவர் ஆதலால்,2 மிடத்துடன் தொடர்புற,உயர்கல்வியை அளிப்பார், 5
மிடத்துடன் தொடர்புற,குழந்தைகள் உயர்நிலையடைவர்,7 மிட சம்பந்தம்
உயர்ந்த,வசதிபடைத்த மனைவி அமைவார்.
No comments:
Post a Comment