இராசிகளின் குண இயல்புகள்
ஒரு கிரகம்,ஒருராசியில் இருக்கும்போது அதன் குணாதிசயங்களைப்
பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன. அந்த ராசியாதிபதியே,அந்த ராசியில் அமர்ந்தால்
அந்த ராசியின் பலனிகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.ஒரு அசுபகிரகம் லக்னத்தில்
இடம்பெற்றாலோ, அவரின் பார்வை பெற்றாலோ,அந்த கிரகங்களின் கெடுதலான குணங்களின்
அடிப்படையில்,கெடுதலான பலன் களைத்
தருகிறது.அதுவே,சுபக் கிரகமாகயிருப்பின்,கெடுதல்களைக் குறைத்து,நல்ல பலன்களை
அதிகரிக்கிறது. ஜாதகங்களை ஆராய வேண்டிய அடிப்படையில்,ஒவ்வொரு ராசியைப்பற்றியும்
இந்தப் பகுதியில்,கருத்துப்பரிமாற்றங்களை,விரிவாக அலசுவோம். ராசி மண்டலம்,12
ராசிகளாக அல்லது வீடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சந்திரனின் நிலை ஜன்மராசி என அழைக்கப்படு கிறது.உதாரணமாக,
மேஷராசியில் சந்திரன் இருந்தால், அதுவே ஜன்மராசியாகும். இந்திய முறையிற்
கூறப்படும் ஜன்மராசி முறைகளினின்று, மேலைநாட்டு ஜோதிடமுறையில் கூறப்படும், ஜன்ம
ராசிமுறையானது மாறுபட்டது என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.மேலைநாட்டு
முறையில்,சூரியன் இருக்கும் நிலையே ஜன்மராசியாக எடுத்துக்கொள்ளப் படுகிறது. மனித
வாழ்க்கையானது 9 கிரகங்களாலும் மாறி,மாறி / சுழற்சி முறையில், இந்திய ஜோதிடத்தில்
உள்ள தசா முறைகளின்படி, ஆட்சி செய்யப்படுகின்றன. இந்த தசா காலத்தரன் உட்பிரிவே
புத்தி காலம் என பிரிக்கப்பட்டுள்ளது.
மேஷராசியின் குண இயல்புகள் –
காலபுருஷ தத்துவத்தின் முதல் ராசியான
மேஷராசி. முதல் 30˚ யைக் கொண்டுள்ளது. இது ஒரு நெருப்புத் தன்மையுடைய, சர ராசி, ஆண்ராசி,ஒற்றைப்
படை ராசியாகும். செவ்வாயின் ஆட்சிக்குட்பட்ட,இந்த ராசி மனித உறுப்புகளில்
தலையையும், முகத்தையும் குறிக்கிறது. இந்த ராசியில் சூரியன் உச்சமும்,சனி
நீசமுமடைகிறது.ஆட்டின் அடையாளங் கொண்டது மேஷராசி. மேஷராசியில் ஜனன மானவர்கள், அதிக
ஆசையுடை யவர்களாகவும், உடல்வலு அதிகமுள்ள வர்களாகவும்
இருப்பர். எந்தவொரு கஷ்டத்தையும், சவாலையும் எதிர்கொள்ளும் மனோ
தைரி யமும்,உடல்
சக்தியும் உடையவர்கள்.நெஞ்சுரமும், தற்பெருமையும் மிக்கவர்கள்.
மற்ற
வரை அடக்கியாள்வதில் மிக்க மகிழ்ச்சியடைபவர்கள்.சின்ன
விஷயத்தையும்,பெரிதாக்கி, பிரச்சனை யாக்கும்
அற்பகுணமுடையவர்கள்.குறுகிய கண்ணோட்டங் கொண்டவர்கள். வெகு
விரைவில்
பொறுமையிழந்து,சினங் கொள்ளும் குணமு டை
யவர்கள்.தங்கள் சுயநலத்திற்காகஉண்மைக்குப் புறம்பாக பேசுபவர்கள். கர்வம்
மிக்கவர்கள் மற்றும் சுயகட்டுப்பாடற்றவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு
சந்திரன், சனி, புதன்,ராகு,கேது ஆகிய
கிரகங்களின் தசா காலங்கள் மிக மோச மான விளைவுகளைத் தருவனவாகும்.
இந்த ராசியிற் பிறந்தவர்கள், முரட்டுத்தனமுடையவர்கள், சண்டைக்கார்ர்கள்.
மெலிந்த உடலும், திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர்கள். நீண்ட முகமும்,கழுத்தும் உடைய வர்கள்.அகன்ற
நெற்றியும்,குறுகிய நாடியும் உடையவர்கள்.மச்சமோ, காயத்தழும்போ தலைப் பகுதியில்
இருக்கும். அடர்ந்த புருவமும்,கடினமான
மயிரும் உடையவர்கள்.சிலருக்குத் தலை வழுக்கையாகவும் இருக்கும்.சுறுசுறுப்பானவர்கள்,சாதாரணமானவர்கள்
மற்றும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பட்டெனப் பேசுபவர்கள்,நிர்வாகத்திறனும்
மற்றவர்களை கட்டுக்குள் வைக்கும் மேலாண்மைத் திறனுமுடையவர்கள். திட்டங்களை
வகுப்பதில் திறமையற்றவர்களாக இருப்பினும்,
மற்றவர்களை வழிநடத்துவதிலும்,கட்டுப்பாட்டில் வைப்பதிலும் வல்லவர்கள். திடீரென
முடிவுகளை எடுப்பதிலும், உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதிலும், அதன் மூலமாக முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதிலும் திறமைசாலிகள். சுதந்திர எண்ண
முடையவர் கள், வீரமுடையவர்கள்
மற்றும் வீண் செலவுகள் அதிகம் செய்பவர்கள். இவர்களின் வாழ்க்கை கஷ்டங்கள்
நிறைந்ததாகவும், அதிர்ஷ்டங்கள் மாறி,மாறி
வருவனவாகும். அரசியலிலும்,மத விஷயங்களிலும் ஆர்வமுடையவர்கள். அடிக்கடி பயணம் மேற்கொள்வர்.
அவநம்பிக்கையுள்ள,விருப்பமில்லாத குடும்ப உறவுகளும்,அவர்களின் ஆதரவுமற்றிருப்பார்.
ஒரு சில குழந்தைகள் உடையவராகவும்,அடிக்கடி வீட்டை மாற்றிக் கொண்டிருப்பவராகவும்
இருப்பார். மிக்க அவசரத்துடன்,இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வர்.
வாழ்க்கையில் வழக்கு விவகாரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சூழ்நிலைக் கைதியாக வெளிநாட்டில் வாழ வேண்டிய
சூழல் உருவாகும். பொதுவாக மேஷ ராசிக்காரர்கள்
நல்லாரோக்கியமுடையவர்கள்.நோய் எதிர்ப்பு சக்தி அதிக முடையவர்கள்.இவர்களின் தலைப்பகுதியில்,சிறு
காயங்களும், தீவிர விபத்தால் பலத்த அடிகளும் ஏற்படுமாதலால்,வாகனங்களை
முரட்டுத்தனமாக ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இவர்கள் நன்கு தூங்கி, கூடுமான அளவு
ஓய்வெடுத்தல் நலம். பச்சைக் காய்கறிகளும், நல்லுணவும் அதிகம் உண்ணவேண்டும். தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி,கவலைகளை, கோபங்களைத்
தவிர்த்து அமைதியாக வாழ முயலவேண்டும். அசைவ
உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.இவர்கள் அதிக ஆசைகளுடையவர்களாக இருப்பினும்,அந்த
அளவுக்கு செல்வ நிலை உயர வாய்ப்பில்லை. இவர்
வெட்டிச் செலவுகளை தவிர்த்தல் நலம். ஆத்திரம்
மிக்க நடவடிக்கைகளாலும், முட்டாள்த்தனமான
மூலதனங்களாலும், இவர்கள் பணத்தையிழக்க
வாய்புண்டு. எந்த ஒரு நடவடிக்கையிலும், அவசரப்படாமல்,நிதானமாக செயல்படுவது
இவர்களுக்கு நல்லது.
மேஷராசிக்காரர்களின், உண்மையான காதலும், நல்ல
மனமும், கவர்ச்சியும் எதிர் பாலரை கவரும். மற்றவர்களை அடக்கியாளும் தன்மையைக் குறைத்துக்
கொண்டால்,இலர்களின் வாழக்கையில் இன்பம் பெருகும். அத்துடன் தங்கள் உணர்வுகளைக்
கட்டுப்படுத்தி, பொறுமையுடன் செயல்படுவது இவர்களுக்கு நல்லது. மேஷப்பெண்கள்
புத்திசாலிகளாகவும், நகைச்சுவை யுணர்வுடையவர்களாகவும் இருப்பர். மேலும் சுதந்திர
வுணர்வும்,கர்வமும்,பொறாமை குணமும், உடையவர்கள்.தங்கள் குடும்பம், சுற்றுச்சூழல், தோற்றம்
ஆகியவற்றைப் பற்றி தற்பெருமை யடிப்பவர்களாக இருப்பினும், விருந்து உபசரிப்பதில்
சிறப்பானவர்கள். இவர்கள் தங்கள் கணவர்கள் தங்களை நன்கு, அன்போடு கவனித்துக் கொள்ளவேண்டும்
என்றும்,மற்ற பெண்களை தங்கள் முன் புகழக்கூடாது என்றும் எதிர்பார்ப்பார்கள். இவர்கள் தங்கள் கணவனை அடக்கியாள்பவர்களாக
இருப்பார்கள்..மோகமும்,முரட்டுத்தனமும் இவர்கள் உடன் பிறந்தது. பொறுமை யும், தந்திரமும் இருந்தால் இவர்களைக் கட்டுப்
பாட்டில் வைக்கலாம்.
இவர்கள் சுத்தமான,அழகான
வீட்டையுடையவர்கள்.வீட்டையும்.குடும்பத்தையும் மிகவும் நேசிப்பவர்கள். அதிகமான
நண்பர்களைப் பெற்றிருப்பதே இவர்களின் பலவீனமாகும்.
அதிர்ஷ்ட நாட்கள் – செவ்வாய்,சனி மற்றும்
வெள்ளிக் கிழமைகள். அதிர்ஷ்ட எண்கள் – 1 மற்றும் 9 ,நட்பு எண்—2,3,5, பகை எண்கள் –
6,7 , ஈர்க்கும் எண்கள் – 4 மற்றும் 8 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு,மஞ்சள்,செம்பு
நிறம் மற்றும் தங்க நிறம் ஆகும். அதிர்ஷ்ட ரத்தினங்கள் – செம்பவளம். செவ்வாய்
பலமிழந்து காணப்பட்டால் – தாமிரம் அல்லது வெள்ளியில்
பதித்த செம்பவளம்,ரூபி அல்லது முத்து
அணியலாம்
No comments:
Post a Comment