மிதுன ராசியின் குண இயல்புகள்
மிதுனம், காலபுருஷனின் மூன்றாவது ராசி.இதன்
அளவு 60 முதல் 90 பாகை அளவிலான,காற்று ராசி யாகும். உபய ராசி,ஆண் ராசி,ஒற்றைப்படை
மற்றும் மலட்டு ராசியாகும்.இதன் அதிபதி
புதன் ஆவார். இந்த ராசியில் எந்த ஒரு கிரகமும்
உச்சமோ,நீசமோ அடைவதில்லை.. காற்றுராசியான இதில்
பிறந்தவர்கள் காற்றைப் போல்.எந்த இடத்திலும் ஊடுருவி உள் நுழையும் சக்தியும்
உடையவர்களாக இருப்பர்.மனவுறதி,ஞாபகசக்தி,அறிவு பூர்வமான செயல்கள்,காரண காரியங்கள்,
நினைவுகள்,ஆலோசனைக்கள்,ஆகியவற்றையும் குறிக்கின்றன, மேலும்,நெளிவு
சுளிவு,தயக்கம்,சந்தேகம்,நிச்சியமற்ற தன்மை,இரட்டை குணம் ஆகியவற்றையும்
குறிக்கும்,
இவர்கள் உயரமான,ஒல்லியான,நிமிர்ந்த மற்றும்
சுறுசுறுப்பானவராகவும் இருப்பர். புது நிறம்,நீண்ட கரங்கள்,நீண்ட மூக்கு,நீண்ட
முகம்,நாடி மெலிவான கால்கள் மற்றும் நன்கு தெரியக்கூடிய நரம்புகளும் உள்ளவராக
இருப்பார். துருதுரு பார்வை, ஊடுருவும் மற்றும் கூரிய பார்வையுடன் கூடிய சாம்பல்
நிறக் கண்களை யுடையவர்.அரக்கு நிறங்கலந்த கருமையான கேசமுடையவர். மனநிலையைப்
பொருத்தவரை – எதையும் உடனடியாக கிரகித்துக் கொள்ளக் கூடியவராகவும்,கற்றுத் தேர்ந்த
நல்ல கல்வியாளராகவும் இருப்பார். அன்பானவராகவும், நகைச்சுவை யுணர்வுடையவராகவும்,அமைதியானவராகவும்,சங்கோஜ
குணமுடையவராகவும்,மனிதாபிமானம் மிக்கவராகவும்,ஓய்வற்றவராகவும் மற்றும் உணர்ச்சி
மிக்கவராகவும் இருப்பார்.
இவர்கள்
பக்தி சிரத்தையுடையவர்கள்,எதையும் அலசி ஆராய்ந்து செயல்களைச் செய்வர்,
கலை,இலக்கியம்,நடனம்,ஓவியம்,வர்ணந்தீட்டுதல்,பயணம் மற்றும் புதியன கண்டுபிடித்தல்
ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பர் .பல கலைகளில் வல்லவராகவும்,சிறந்த வியாபார
நுணுக்கங்கள் அறிந்தவராகவும் இருப்பர். இவர்கள் இரு வேறு மாறுபட்ட துறைகளில் ஈடுபாட்டு
எப்போதும் ஓய்வில்லாது உழைப்பவர்கள் . மற்றவர்களின் மனதில் உள்ளதைப் புரிந்து
கொள்ளும் தன்மையுடையவர்கள்.உறவினர் மூலமாக லாபமடைவர். இவர்களைப் போல்,எவராலும் ஒரு
செயலை,சிறப்பாகவும்,வெற்றிகரமாகவும்,மற்றவர்களை கவரும் வகையிலும் செய்ய இயலாது.
ஆனால் இவர்களிடம் உள்ள குறையென்னவெனில்,அச் செயலை கண்ணுங்கருத்துமாகச் செய்து,நிச்சியமாக
முடிக்கவேண்டுமென்ற எண்ணம் இல்லாதிருப்பதே யாகும். அதேபோல் இவர்கள் செயலில்
ஒருமுகத்தன்மையின்மையும், விரைந்து முடிவெடுக்க முடியாதவர்களாகவும் இருப்பர். மக்களால்
போற்றப்படுவர். மனமகிழ்வுடன் இருப்பதையே விரும்புவர். ஆசை மிக்கவர்கள்,ஒரே
நேரத்தில் இருவேறு வேலைகளைச் செய்பவர்கள்.தர்க்கம் புரிபவர்கள். தங்கள் செயலுக்கான
முடிவுகளை, உடனுக்குடன் அறியத்துடிக்கும் ஆர்வமிக்கவர்கள். சில நேரங்களில்
ஓய்வில்லாதவர்களாகவும், அமைதியிழந்த வர்களாகவும், தைரிய மில்லாதவர்களாகவும், முடிவெடுக்கமுடியாதவர்களாகவும்,
உணர்ச்சிமிக்கவர்களாகவும் இருப்பர்.
வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்களையும்,
வெவ்வேறு மாறுபட்ட தருணங்களையும் விரும்புபவர்கள். இவர்கள் நல்ல ஆலோசகர்கள்,
ஆயினும் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே இவர்களின் ஆலோசனை கேட்க வேண்டும். இவர்கள்
விதிகளைக் கடைப்பிடிக்க மறுப்பவர்கள். துப்பறியும் துறை,பத்திரிக்கைத் துறை
மற்றும் திட்டமிட்டு செயல்படும் துறைகளுக்கு சிறந்தவர்களாக இருப்பர். வெகு
விரைவில் நட்புக் கொள்ளும் இவர்கள் தங்கள் குற்றங்காணும் குணத்தால் அந்த உறவினையிழப்பர். அதிக காம உணர்வில், அதிக மகிழ்ச்சியடைவர். பாலுணர்வு
உறுப்புகளில் பிரச்சனைகள் இருக்கும். செவ்வாய்,சனி,ராகு,கேது ஜாதகத்தில்
பாதிப்புத் தருமானால்,வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும்,மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்க
நேரிடும். இவர்,பல்வேறு விஷயங்களில்,கலைகளில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பர்.இவர்கள்
நிமோனியா,நுரையூரல் சம்பந்தப்பட்ட நோய்கள்,ஆஸ்துமா மற்றும் அனிமியாவால் துன்ப
மெய்துவார்கள். சுக்கிரன்,ராகு,கேது திசாக்கள் நல்ல திசாக்களாகும்..தீய திசாக்கள்
புதன்,குரு,சூரியன் மற்றும் செவ்வாய் திசாக்களாகும்.
அதிர்ஷ்ட எண்கள் 7 மற்றும் 3. கவர்ச்சி
எண்கள் 5,6 மற்றும் 9 ஆகும். ஒத்துவரும் எண்கள் 1,2 மற்றும் பகையெண்கள் 4 மற்றும்
8 ஆகும். ஞாயிறு பயணத்திற்கும், செவ்வாய் சனி தவிர மற்றக் கிழமைகள் அனுகூலமான
நாட்களாகும். அனுகூலமான நிறங்கள் – மஞ்சள்,நீலம்,பச்சை,பிங்க் மற்றும் பர்ப்பிள்
ஆகும். ஒதுக்கப்பட வேண்டிய நிறங்கள் சிகப்பு மற்றும் கருப்பு ஆகும். எமரால்டு
மற்றும் மஞ்சள் புஷ்பராகம் அதிர்ஷ்ட ரத்தினங்களாகும்.
No comments:
Post a Comment