சிம்ம ராசியின் குணயியல்புகள் :-
சிம்மம் காலபுருஷனின் 5 வது ராசியாகும். இதன் பாகையளவு 120˚ முதல் 150˚ ஆகும். இது ஒரு ஸ்திர ராசி,நெருப்பு,
ஒற்றைப்படை மற்றும் ஆண் ராசியாகும். இதன்
அதிபதி சூரியன் ஆவார். இந்த ராசியில் எந்த
ஒரு கிரகமும் உச்சமோ
அல்லது நீசமோ ஆவதில்லை.
சிங்கம் இதன் அடையாளமாகும்.
சூரியனுக்கு சந்திரன்,செவ்வாய்,மற்றும் குரு ஆகியோர் நட்பும்,
புதன்,சுக்கிரன்
மற்றும் சனி ஆகியோர் பகையுமாகும். இது
சூரியனுக்கு ஆட்சி வீடாகும். இந்த ராசி கிழக்கு திசையையும்,ஆரஞ்ச் வண்ணத்தையும் குறிக்கிறது.
அதிகார தோரணையும்,மற்றவர்களை அடக்கியாளும்
எண்ணமும்,முரட்டுத்தனமும்,சக்திமிக்கவரும்,எதையும் தாங்கும் இதயமும்,உயர்ந்த மனமும்,புகழ்பெற்ற மனிதராகவும் இருப்பார்.சிம்ம ராசிக்காரர்கள்
அகன்ற தோள்களையுடையவராகவும்,உயரமானவராகவும்,பெரியதான எலும்புகள் மற்றும் தசைகளையுடையவராகவும் இருப்பார். உடலின் மேல் பகுதியானது ,கீழ்ப் பகுதியைவிட நல்லமுறையில் அமைந்திருக்கும்.மிருதுவான
மற்றும் சுருண்ட கேசமும்,பின்நாட்களில் வழுக்கைத்தலையும் உடையவராகவும்
இருப்பார்.கம்பீரமான தோற்றமுடையவராகவும்,அகன்ற கண்களை உடையவராகவும் இருப்பார்.
மனநிலையைப் பொறுத்தவரை ஆசை அதிகமுள்ளவராகவும்,இரக்ககுணமுடையவராகவும். மரியாதைக்குரியவராகவும்,உண்மையானவராகவும்,தன்னம்பிக்கை மற்றும் எதையும் நேருக்குநேர்
பேசுபவராகவும்,தைரியமானவராகவும்,அதிகாரத்தை
விரும்புபவராகவும்,எதிலும்,எப்போதும் முதலிடத்திலேயே
இருப்பதை விரும்புபவராகவும்,கலை ஆர்வம் மிக்கவராகவும் இருப்பார்.
சுதந்திர எண்ணமும்,மிகுந்த நம்பிக்கையும்,மனிதகுலத்துக்கு உதவுபவராகவும்,நியாதிபதியாகவும்,மற்றவர்களை மன்னிப்பவராகவும், அவர்கள் செய்த தவறுகளை,பாவங்களை மற்றும் குற்றங்களை மறப்பவராகவும் இருப்பார். நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவதிலும்,திட்டமிட்டு
காரியங்களைச் செய்வதிலும்,தலைமைப் பதவிக்குத் தகுதியானவராகவும்,மிக்க அறிவுள்ளவராகவும்,சிறந்த செயல்பாடுகளையுடையவராகவும்
இருப்பார். உற்சாகம்,சுறுசுறுப்பு,
மாறாத உறவுகளையும்,காதலையும் உடையவராகவும் மற்றும்
அனைவருக்கும் உதவக்கூடிய பரோபகார குணமுடையவராகவும் இருப்பார். ஆனால் இவர்கள் எதிரிகளாலும், கொள்கையில் மாறுபட்டவர்களாலும்
வெறுப்பூட்டப்பட்டாலும்,கேலிசெய்யப்பட்டாலும்,அவமானப்படுத்தப்பட்டாலும் அவர்களை வீரத்துடனும்,தைரியத்துடனும்,
நம்பிக்கையுடனும் எதிர்கொள்வர். திடமான,ஆரோக்கியமான உடலமைப்பு உடையவர்கள். பொதுவாக நல் ஆரோக்கியத்தை
பேணும் இவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள்,தண்டுவட பாதிப்பு,சன் ஸ்ட்ரோக்,தலைசுற்றல்,அழற்சி,காக்காய்வலிப்பு போன்றவற்றால் பாதிப்பு ஏற்படலாம்.
சிம்மராசிக்காரர்கள் பொதுவாக அதிர்ஷ்டக்காரர்கள்,செலவாளிகள்,வயதாக ஆக அவர்களின் வங்கியில் உள்ள சேமிப்பு
கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதைதான். சூதாட்டத்தில் ஆர்வமுடையவர்கள்.
அதில் வெற்றிபெறவும் செய்வார்கள். ஆனால்,இவர்கள் சூதாட்டத்தைத் தவிர்ப்பது நல்லது. இவர்களின்
தயாளகுணத்தால்,மற்றவர்களுக்கு இரக்கங்காட்டி உதவுவதின் மூலமாக
மகிழ்ச்சியும்,பெருமையும் கொண்டாலும், அதனால்
தங்கள் வயோதிக காலத்தில் செல்வத்தை இழந்து இன்னலுறுவதின் காரணமாக இந்தப் பழக்கத்தைக்
கட்டுப்படுத்துவதும் நல்லது.
இவர்கள் காமவுணர்வு மிக்க தரமான காதலர்கள்,இவர்களின் அன்பை வெளிப்படையாக மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.ஏனெனில் அது தங்கள் கெளரவத்துக்கு இழுக்கு என நினைப்பவர்கள். இவர்களின் துணைவர்கள் இவர்களை முழுவதுகாக நம்ப வேண்டும்.ஏனெனில் இவர்களைச் சுற்றி எப்பொதுமே ஒரு பெண்கள் கூட்டம் இருக்கும்.அதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் நல்ல புரிதல் இருந்தாலே மணவாழ்க்கை இனிக்கும்.
பெண்களுக்கு பொதுச் சேவையில் ஆர்வம் இருக்கும்.தங்கள் வீட்டை நேர்த்தியாக,அழகாக பராமரிப்பர்.
தியாக உணர்வும்,மற்றவர்கள் மீது மாறாத அன்பும்,காதலும் உடையவர்கள்.
சிம்மராசி ஜாதகர்கள் புகழ்மிக்க உயர்பதவிகளை வணிக உலகில் அல்லது அரசியலில்,
வகிப்பதற்காகவே பிறந்தவர்கள்.மேலும் இவர்கள் பெரிய நிறுவனங்களில், கழகங்களில், மேலாளராகவோ.இயக்குநராகவோ,தளபதியாகவோ
அல்லது விற்பனை மேலாளராகவோ பணியாற்றத் தகுதி மிக்கவர்கள்.
அதிரிஷ்ட நாட்கள் – சந்தோஷத்திற்கும்,குதூகலத்திற்கும்
அனுகூலமான நாட்கள் ஞாயிறு,செவ்வாய்,புதன்,வியாழன்,
மற்றும் வெள்ளியுமாகும்.. திங்களும்,சனியும்
மோசமான விழைவுகள் தரும் நாட்களாகும். ஆரஞ்ச்,சிகப்பு
மற்றும் பச்சை ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும். நீலமும்,வெண்மையும்,கருப்பும் தவிர்க்கப் படவேண்டிய
நிறங்களாகும். ஒத்துப்போகும் எண்கள் 1,4,5,9 மற்றும் 6 ஆகும். 3 அனுகூலமான எண், 2,7,8 ம் ,தவிர்க்கப்பட வேண்டிய எண்கள் ஆகும். வலது கை மூன்றாவது விரலில், பூஜிக்கப்பட்ட, தங்கத்தில் பவழம் பதித்த மோதிரத்தை
அணிவது நல்லது.
No comments:
Post a Comment