ஜோதிடருக்கான
இணைவுகள்
வாதிப்பிரதிவாதங்களுடன் கூடியதும், சிக்கலாகக் கருதப்பட்டதுமான,ஜோதிட ருக்கான
இணைவுகளைப் பற்றி ஆராய சமூகக் கண்ணோட்டத்தோடு,இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. இக் கருத்தைப்பற்றி, நமது முன்னோர்கள்
எழுதியுள்ள நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது,என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
பிருகத்பராசர ஹோரா –-
இலக்னத்திலோ,ஐந்திலோ,ஒன்பதிலோ அல்லது கார காம்சத்திலோ,கேது இருக்க,ஜாதகர் மிகச்
சிறந்த கணித வல்லுநராகவும், ஜோதிடராக வும் திகழ்வார் எனக் குறிப்பிடுகிறது.
சர்வார்த்த சிந்தாமணி – வேங்கடஷர்மா,தனது
சர்வார்த்த சிந்தாமணியில்,கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார்– பலமிக்க புதன் மற்றும் இரண்டாமதிபதி
கேந்திரங்களில் இருந்தாலும் அல்லது சுக்கிரன்,
சுபரோடு கூடி இரண்டாமிடத்தில் அல்லது மூன்றில் இருந்தாலும் அல்லது உச்ச
சுக்கிரன் இரண்டிலிருந்தாலும்,ஜாதகர் மிகப்பெரிய ஜோதி டராவார்.
பாவார்த்த ரத்னாகரா – தனது ஆங்கில மொழிபெயர்ப்பில்,பீ.வி.இராமன்,கல்வி
பற்றிய அத்யாயத்தில்,குறிப்பிடுவதாவது,நான்கில் புதன் இருந்தாலும் ஜாதகர், திறமை
மிக்க ஜோதிடராவார் என்றும், சூரியன், புதன் மற்றும் இராகு ஐந்தில் இருக்க,ஜாதகர் அனைத்தும் கற்றுத்
தேர்ந்த ஜோதிடராக உருவாகிறார்.
சூரியன், புதன்
இரண்டிலிருந்து,சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர்,மிகச் சிறந்த கணித
வல்லமையுடன்,ஜோதிடத்திலும் தேர்ச்சி பெறுகிறார்.
3/6/8/12 எனும் மறைவு
ஸ்தானங்கள்,இதில் எட்டு மற்றும் பன்னிரெண்டாமிடங் கள்,கூடுதல்
புத்திசாலித்தனத்தையும், அசாத்திய தனித்
திறமைகளையும் அளிக்கக் கூடிய இடங்களாகும். ஆகையால், ஜோதிடம்,யோகா,தந்திரம்
ஆகியவற்றிற்கு தேவை யான உள்ளுணர்வு நிலைகளைத் தருகின்றன.
காரகர்களைப் பொருத்தவரை,ஸ்பெகுலேஷனுக்குக்
காரகனான இராகுஜோதிடர்களின்
ஜாதகத்தில்,மிக முக்கிய பாத்திர மேற்று நடிக்கிறார்.
சூரியனின் தாக்கம் மிக்க ஜோதிடர், அரசியல் தலைவர்களின் ஜாதகங்களை அலசுவதிலும்,பலமிக்க
புதனின் தாக்கம் ஜோதிடர் ஜாதக கணிதங்களில் வல்லுனராக இருப்பதோடு,பொட்டிலடித்தாற்போல்
பலன் கூறுவதில் வல்லுனராகவும் இருப்பார்கள்
சுக்கிரனின் தாக்கம்பெற்ற ஜோதிடர் பெண்கள்
ஜாதகத்தை அலசுவதில் திறமை மிக்கவராகவும், ஜாதகரின்
திருமண சம்பந்தமான விஷயங்களை எடுத்துரைப்பதிலும் வல்லவராகவும் இருப்பார்.
எனினும், ஜோதிடரின், ஜாதகத்தில் புதன் மற்றும் 2 ம் இடம்,பலம் மிக்கதாக அமைய வேண்டும் என்பது மறுக்க
முடியாத உண்மையாகும்.
இனி,பிரபலமான சில
ஜோதிடர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்வோமா?
|
சந்
|
|
லக்///
குரு
|
சனி
[வ]
|
|
இராகு
|
|
கேது
|
இராசி
|
செவ்
|
|
|
சுக்
|
|
சூரி
புத
|
ஜாதகம் –1
என்.ஸி.லஹிரி
வானியலாளர்
இவரது ஜாதகத்தில், பலம் மிக்க இலக்னாதிபதி புதன், 4 ல்,தனது சுய,மூலதிரி கோண மற்றும் உச்ச
வீட்டில் உள்ளார். 2 ம் அதிபதி சந்திரன் வர்கோத்தம்மாகி 11 ல் நல்ல
நிலையிலுள்ளார்.புதன் மற்றும் 2ம் அதிபதி பலம்பெற்றுள்ளதால்,இந்திய தேசிய
பஞ்சாங்கத்தை வடிவமைத்த புகழ்பெற்ற கணித வல்லுனரானார்.
இலக்னம்,ஒரு
ஜாதகத்தின் அச்சாணியாகும்.ஜாதகரின்,வாழ்வின் ஏற்ற இறக்கங் கள்
1.
இலக்னாதிபதி இருக்கின்ற இடத்தைப் பொருத்தும்.
2.
இலக்னாதிபதியின் பலத்தைப் பொருத்தும்.
3.
இலக்னத்திலுள்ள கிரகங்கள் அல்லது அவற்றை
பார்க்கும் கிரகங்களைப் பொருத்தும் அமையும்.
4.
இலக்னத்தைத் தவிர,மனதைக் குறிக்கும் 5ம்
இடமும்,தொழிலைக்குறிக்கும் 10 மிடமும் தொழிலைக்காண, சம முக்கியத்துவம் அளிக்கப்
படவேண்டும்.
உதாரணமாக,5 ம் அதிபதி 12ல் [ 5 க்கு 8] அல்லது 10 ம் அதிபதி 5 ல்
[ 10 க்கு 8
] இங்கு 8 ம் வீட்டின் தாக்கம் கூடுதலாக் கிடைக்கிறது. இலக்னம், சந்திரா இலக்னம்,சூரியலக்னம்
ஆகிய மூன்றிலிருந்தும்,பலன்கள் பார்க்கப்படவேண்டும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.
முதலில்,8ம்வீட்டின் தாக்கத்தை வைத்து, வரும்
இணைவுகளைக் காண்போம்.
1.
இலக்னாதிபதி 8 ல் இருக்கவும்.
2.
8 ம்
அதிபதி இலக்னத்தில் இருக்க அல்லது இலக்னத்தைப்பார்க்கவும் அல்லது இலக்னாதிபதியுடன் தொடர்புறவும்.
3.
5 ம்
அதிபதி 12 ல் இருக்கவும் [ 5 க்கு 8 ].
4.
12
ம் அதிபதி 5 ல் இருக்கவும் அல்லது 5 மிடத்தைப் பார்க்கவும் அல்லது 6 ம் அதிபதியோடு
தொடர்புறவும்.
5.
10
ம் அதிபதி 5 ல் [ 10 க்கு 8 ].
6.
5 ம்
அதிபதி 10 ல் இருக்க அல்லது பார்க்க.
இதேபோல் 12 ம் இடத்தின் தாக்கம் கூடுவது எப்போது என்பதைக்
காண்போம்.
7.
இலக்னாதிபதி 12 ல் இருக்கவும்.
8.
12
ம் அதிபதி இலக்னத்தில் அல்லது இலக்னத்தைப் பார்க்கவும் அல்லது இலக்னாதிபதியுடன் 12
ம் அதிபதி தொடர்புறவும்.
9.
5 ம்
அதிபதி 4 ல் இருக்கவும்.[ 5 க்கு 12 ].
10.
4 ம்
அதிபதி 5 ல் இருக்க அல்லது பார்க்க அல்லது 5 ம் அதிபதியுடன் தொடர்புறவும்.
11.
10
ம் அதிபதி 9 ல் [ 10 க்கு 12 ].
12.
9 ம்
அதிபதி 10 ல் இருக்க அல்லது பார்க்க அல்லது 10 ம்அதிபதியுடன் தொடர்புறவும்.
உத்தியோகம்
அல்லது தொழிலைக் காட்டும் அளவு முள்ளாக நவாம்சத்தைக் கருத வேண்டும்.
மேற்சொன்ன ஒன்று அல்லது இரு இணைவுகளேனும் நவாம்சத்திலும், இருக்க
வேண்டும். அவ்வாறிருந்தால், ஜாதகர், ஜோதிட சாஸ்த்திரத்தைக் கட்டாயம் கற்கும்
நிலைஏற்படும்.எனினும்,அவருக்கு,அதையே வாழ்வாதாரத்திற்கான,தொழிலாக ஏற்க வேண்டிய
நிலையேற்படாது..
இந்த
நிலைகளை,பிரபலமான ஜோதிடர்களின் ஜாதகங்களைக் கொண்டு ஆய்வு செய்வோமா?
ஜாதகம் --- 2
|
இராகு
சந்
|
ல///
|
சனி
[வ]
|
குரு
புத,சூரி
|
|
|
|
|
இராசி
|
|
|
சுக்
|
|
கேது
|
செவ்
|
பீ.சூரியநாராயண ராவ்.
பிறந்த
தேதி ---12 – 2 – 1856.
பிறந்த நேரம் – 14 –30
பிறந்த
இடம் --சிக்ககுலெ
1.
இலக்னாதிபதி சுக்கிரன் 8 ல் உள்ளார். [விதி – 1]
2.
பலம் மிக்க 5 ம் அதிபதி புதன் 10 ல் [விதி – 6]
3.
சந்திரா லக்னம் – 8 ம் அதிபதி செவ்வாய், சந் –
இலக்னத்தைப் பார்க்கிறார். [விதி – 2]
4.
சூரியலக்னம் – 8 ம் அதிபதி
புதன்,சூரியலக்னத்தில் உள்ளார். [விதி –
இராகு
|
|
சனி
சந்
|
|
லக்///
|
|
சூரி
|
|
|
இராசி
|
புத,சுக்
செவ்
|
|
|
குரு
|
|
கேது
|
ஜாதகம்
--- 3
B.V.இராமன்
பிறந்த
தேதி --- 08–08–1912.
பிறந்த நேரம் – 19 –35
பிறந்த
இடம் –பெங்களூரு
1.
எட்டாமதிபதி புதன்
மற்றும் 12 ம் அதிபதி சனி,இலக்னத்தின் மீதான தனது சக்தி மிக்க பார்வையை
செலுத்துகிறார்கள்.[ விதி – 2 & 8 ]
2. சந்திராலக்னம்
–- 8 ம் அதிபதி குரு,சந்திராலக்னத்தைப் பார்க்கிறார்.[
விதி – 2 ]
3. சூரியலக்னம்
– இராகுவின்,சூரியன் மீதான சக்தி மிக்க பார்வை மற்றும் 10 ம் இடத்தின் மீதான
பார்வை.
பீ.சூரியநாராயண ராவ் மற்றும்
பீ.வி.இராமன் ஆகியோரின் ஜாதகங்கள் மேற்படி விதிகளுக்குப் பொருந்தி வருவதைக்
கண்டோம்.இனி,நண்பர் ஒருவரின் ஜாகத் தைப் பார்ப்போம்.
|
|
இராகு
|
|
|
|
லக்//சனி
சூரி,புத
|
|
சந்
|
இராசி
|
|
|
|
கேது
|
|
செவ்,
குரு,சுக்
|
ஜாதகம்
--- 4
பிறந்த தேதி --- 13–08–1946.
பிறந்த நேரம் – 05–56 AM
பிறந்த இடம் – எட்டயபுரம்
1.
இலக்னாதிபதி,8
ம் அதிபதி,இலக்னத்தில் இணைவு. [ விதி – 2 ]
2.
இலக்னாதிபதி,12
ம் அதிபதி,இலக்னத்தில் இணைவு. [ விதி – 8 ]
3. 5 ம் அதிபதி
10 மிடத்தைப் பார்க்கிறார். [விதி
– 6.]
4. 4 மற்றும் 5
ம் அதிபதி தொடர்பு. [ விதி –
10 ]
5. 9 மற்றும்
10 ம் அதிபதி தொடர்பு. [ விதி – 12 ]
6. சந்திராலக்னத்திலிருந்து,8
ம் அதிபதி, சூரியனோடு இணைவு,சந்திரனைப் பார்க்கிறார். [ விதி
– 2 ].
எனவே,ஜோதிட அன்பர்களே, இவ்விதிகளைப்
பயன்படுத்தி உங்கள் ஜாதகங்க ளையும் அலசிப் பாருஙகளேன்.வாழ
No comments:
Post a Comment