Search This Blog

Saturday, 9 March 2013

வர்க்கக்கட்டங்கள்


வர்க்கக்  கட்டங்கள்


சாராவளி -- பகுதி -- 5 -- (31 -- 33 சுலோகங்கள்):-  சுய  திரேகாணத்திலிருக்கும் ஒரு  கிரகம்  ஒருவனுக்கு  நற்குணங்களையும்,  சுய  நவாம்சத்திலுள்ள ஒரு கிரகம் புகழையும் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. சுய  சப்தாம்சம் எனில் ஒருவ ருக்கு செல்வம் மற்றும் புகழையளிக்கிறது. சுய துவாதசாம்சத்தில் ஒரு கிரகம் இடம்பெற, பிறருக்கு உதவி செய்பவராகவும்,  கருணையுள்ளம் கொண்டவராக வும் இருக்கச் செய்கிறது.  தனது  திரிம்சாம்சத்தில்  ( D –XXX )   இருக்கும் ஒரு கிரகம்  சந்தோஷத்தையும்,  நற்குணங்களையும் அளிக்கிறது. சுப கிரகங்களால்
பார்க்கப்படும்  கிரகங்களால்  ஜாதகர்  நல்ல செல்வ நிலையையும்,புகழையும்,
அதிர்ஷ்டத்தையும், தலைமைப் பொறுப்பையும்,  அழகையும்  மற்றும்  சந்தோ ஷத்தையும் அடைகிறார்.அசுப வீட்டிலுள்ள கிரகங்கள், அசுப இராசிகள் மற்றும் சஷ்ட்டியாம்சத்திலுள்ள கிரகங்கள் பாதிப்படைகின்றன.

          இராசிக் கட்டங்களை மட்டுமே பார்த்து பலன் கூறுவது சில நேரங்க
ளில் காலைவாரி விட்டுவிடும்.ஏனேனில்,சில  நேரங்களில் இராசிக் கட்டத்தில்
பலம் மிக்கதாகத்  தோற்றமளிக்கும்  ஒரு  கிரகத்தின் மூலமாக ஜாதகருக்குத் தேவையான,சாதகமான முடிவு கிடைப்பதில்லை. இதை நாம்  எவ்வாறு அடை
யாளங் காண்பது ? சரியான  இணைவு  மூலம், சரியான  பலனை, அவருக்கு எங்ஙனம் அறிவிக்கப் போகிறோம் ? இராசிச்  சக்கரத்தோடு, சரியான  வர்க்கக்
கட்டங்களை ஒப்பிட்டு அலசி ஆராயும் போதே  அது  நமக்கு சாத்தியமாகிறது.
உண்மையில்,குறிப்பிட்ட வர்க்க கட்டகங்களின் நிலைகளை ஆராய்ந்து பார்க்கப்
படாத  பலன்கள், குறைவான  நம்பகத்தன்மையை  மட்டுமே உடைத்தாயிருக்
கிறது. அதேபோல், பற்பல      வீடுகளை  அலசும்போது,  வாழ்க்கையில்  ஏற்ப டும் மிகச் சிறுமாற்றங்களை  மட்டுமே குறிகாட்டுகிறது.  ஆனால், நிச்சியமாக நடக்குமென்ற  பலன்கள், ஜனன ஜாதக  நிலைகளோடு,அப்போது நடைபேறும் தசாவிலுள்ள,புத்தியின் நிலைகளை ஒப்பிட்டு அலசி ஆராயும்போதே, சரியான, துல்லியமான, பலன்களை நாம் காணமுடிகிறது.

          இராசிக் கட்டங்களை மட்டுமே ஆராயும்போது,  அது  எங்ஙனம், நம்
கண்களைக் கட்டிவிட்டு,முழுவதுமாக  பலனை மாற்றிவிடுகிறது என்பதை ஒரு சில ஜாதகங்களை ஆராய்ந்து அறிவோமாக.

ஜாதக எண் 1

            இந்த ஜாதகத்தில்   பெற்றோர்     நிலையைக்     காண்போம். இராசிக் கட்டத்தைப் பார்க்கும் போது,     தந்தை ஸ்தானமான         9 ம் வீடு,காரகன் சூரிய னுடன் ஒப்பிடும் போது ,         தாயார்  ஸ்தானமான  4 மிடம்,  காரகன்    சந்திரன் ஆகியவை மிகவும் பாதிப்புக் குள்ளாகியுள்ளன.    மேலும், பாரம்பரிய  அணுகு                       முறைப்படி    பார்க்கும் போது, 9 ம்      அதிபதி குரு, சுயவீட்டில் இருந்து, அசுப பார்வை ஏதுமின்றி இருப் பதாலும்,வலுவுள்ளவராகக் கருதப்படுகிறார்.

            இதில்,  விளக்கப்பட்டுள்ள    திட்டமிடப்பட்ட அணுகுமுறைப்படி,ஒரு
கிரகத்தின்       மூலதிரிகோண  இராசியானது,  6 ம்    வீடாக   அமைந்துவிட்டால், அக்கிரகமானது,      தற்காலிக  அசுபராக கருதப்படுகிறார்.எனவே, இங்கு குரு தற்காலிக  அசுபராகிறார்.    தந்தைக்   காரகன் சூரியன், 6 ம் வீட்டில் இருப்பதால் பலமற்றவராகிறார்.

குரு


சந்,கேது

செவ்







புத
இராகு

சந்

 
   இராசி
லக்//
சனி


நவாம்சம்
 செவ்

  புத



  குரு



 சூரி



சுக்

இராகு




சுக்
சூரி
கேது





பிறந்த தேதி 10 01 1976 , தசாயிருப்பு : கேது 2 வரு 11 மா 20 நாள்.
            இந்நிலை  நவாம்சத்தையும், துவாதசாம்சத்தையும் ஆராயும்போது
மிகவும் தெளிவாக புலப்படுகிறது.   நவாம்சத்தில்,இராசியின் 9 ம் அதிபதியான குரு, தனது நீச     நவாம்சத்திலுள்ளார்.       துவாதசாம்சத்தில்,குரு இராகுவால் பாரக்கப்படுவதைப் பாருங்கள்.      துவாதசாம்சத்தில்,தந்தைகாரகன் சூரியனும் நீச       நிலையிலுள்ளார்.நவாம்சத்தில்    கேதுவுடனான இணைவின் காரணமாக பாதிப்படைந்துள்ளார்.கேது,   நவாம்ச,       துவாதசாம்ச     இலக்னங்களையும்  பார்க்கிறார்.    கஷ்டங்களை      தரக்கூடியவர்    என   கேது    அறியப்படுகிறார்.  இராசிக்    கட்டத்தில்,       4 ம் வீட்டுக்கு    மத்தியப்புள்ளிக்கு மிக அருகில் இராகு உள்ளார்.மேலும்,     காலபுருஷ   தத்துவப்படி,பொதுவாக  கன்னி,  விருச்சிகம்   மற்றும் மீனம்   ஆகிய இராசிகளில் உள்ள   கிரகங்கள்  அனுகூல மற்றவை களாகவும்,   பல     மற்றவையாகவும்  கருதப்படுகின்றன.சுக்கிரன்   இராசியில், விருச்சி கத்திலும், மீனத்தில் குருவும் உள்ளனர்.குரு,சூரியன்,சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியோர்  தந்தைக்குக் குறிகாட்டியாகிறார்கள். இராகுவும்,கேதுவுமே இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள். இராசியில்  தாய்க்காரகன்   சந்திர னுடனான,   கேதுவின் இணைவு   நெருக்கமானதாக இல்லை. சந்திரன்  பட்ச பலமும்  கொண்டுள்ளார். 4 ம் அதிபதி சுக்கிரனின், தசாகாலத்தில், இராகுவின் நெருங்கிய தொடர்பின் காரணமாக, தாயின் உடல்நிலைபாதிப்படைந்தது.இராகு புத்தி,கேது அந்தரத்தில்,தனது பதினோராவது வயதில்ஜாதகர், தனது தந்தையை இழந்தார்.







சுக்

லக்//
புதன்
கேது






      துவாதசாம்சம்
சந்


செவ்
இராகு


குரு

சூரி
சனி

இந்த ஜாதகரின் இராசிக் கட்டத்தை பார்த்ததும்,குரு,சுயவீட்டில் ஆட்சிபலம்
பெற்றுள்ளார் என்று கருதி பலன் மாறுபட்டதைக் காணமுடிந்தது அல்லவா?


பிறந்த தேதி:-    9 செப்டம்பர் 1962.  தசாயிருப்பு:- சுக்கிரன் 8 வ 9 மா 0 நாள்.
இராசிக் கட்டம்       இராசிக் கட்டத்தில்,  7 ம் பாவத்தில் அதன் வீட்டதிபதி புதன்,    அவரது ஆட்சி,  உச்ச,  மூலதிரிகோண  வீட்டில்  வலுவாக உள்ளார். மாங்கல்ய பந்தத்திற்கு உரிய 8 ம் பாவதில்,அதன் அதிபதி சுக்கிரன்   உள்ளார். குடும்பாதிபதி,  செவ்வாய்,  கேந்திரத்தில் உள்ளார். இவ்வாறெல்லாம், பலமாக இருந்தும் திருமணபந்தம்   முறிவுற்றது ஏன் ? 7 மிடம் கேதுவின், நெருங்கிய பார்வைக்குட்பட்டதாலும், 12 ம்   அதிபதிக்கு  அவருடன் நெருங்கிய தொடர்பு டையதாலுமேயாம். நவாம்சத்தில், நீச சூரியன் இடம்பெற்றுள்ளார்.அவர் மற்று மொரு கணவன் காரகர். கணவன்  காரகரான குருவும் தனது நீச ஸ்தானத்தில்
உள்ளார். இராசியில் 7 ம் அதிபதி  புதன்,   நவாம்சத்தில்  தனது   சுயவீட்டில்



 லக்//



செவ்



 செவ்
சனி

கேது

புதன்

  குரு
   இராசி

இராகு


நவாம்சம்


  கேது
சனி
சூரி

  
குரு


 சந்





சுக்
புதன்


சுக்
இராகு
லக்//
சூரி
சந்





உள்ளார்.   நவாம்ச   லக்னாதிபதி,  சுக்கிரன்,  நீச குருவின் இராசியில் இடம் பெற்றுள்ளதால்   பாதிக்கப்பட்டுள்ளார். படுக்கை  சுகத்துக்கு  காரகனான சனி, இராசிக் கட்டத்தில்மிக நெருக்கமாக   கேதுவுடன் இணைந்தும்,  நவாம்சத்தில் தனது நீச ஸ்தானத்திலுள்ளார் இங்கு,கேதுவின் பார்வை பெற்ற  நீச குருவால் 4 மிடமும் பாதிப்படைந்துள்ளது.

             1985 ஜூன் மாதம்,   திருமணம்   முடித்த இப் பெண்ணின் மண வாழ்க்கை பல இன்னல்களுக்கிடையே மகிழ்ச்சியற்றதாகி,  முடிவில்  விவாக ரத்தில் முடிந்தது. ஜூன் 1987 முதல் 2  மற்றும்  9 ம்  அதிபதியான  செவ்வா யின் தசா நடந்தது. சுருக்கமான காலமான, செவ்வாய்  புத்தியிலும்,சுக்கிரபுத்தி காலத்திலும்,சந்திர தசா,சூரியபுத்தியிலும் கூட இந்த கஷ்டங்கள் மாறவில்லை  ஏனெனில், பலம்மிக்க 7 ம் அதிபதியால், கேதுவினால் ஏற்பட்ட பாதிப்பை தாக் குப் பிடிக்கமுடியவில்லை.

             நீச  நவாம்சத்தில்  இடம்பெற்றுள்ள  கிரகங்கள், சுகமற்ற வாழ்க் கையையும்,  தந்தைக்குக்  கஷ்டங்களையும்,   கால் முடமாதலை யும், ஜாதக ருக்கு அனாதை இல்ல வாழ்க்கையையும் அளித்துவிடுகிறது.

No comments:

Post a Comment