கன்னி இராசியின் குண இயல்புகள்.
காலச்சக்கரத்தின் 6 வது இராசியாகும். இது 150 பாகை முதல் 180 பாகை வரையாகும். இதன் அதிபதி கிரக சாம்ராஜ்யத்தின் இளவரசன் புதன் ஆவார். இது ஒரு நிலராசி> உபயராசி> பெண்ராசி> மலட்டுராசி> சுபராசி> குளிர்ந்த ராசி> தெற்கு திசையைக் குறிக்கும் ராசி மற்றும் நீண்ட இராசியும் ஆகும்.
புதன் இந்த இராசியில் உச்சம் பெறுகிறார். இவருக்கு இதுவே மூலதிரிகோண இராசி மற்றும் ஆட்சி வீடும் ஆகும். இங்கு சுக்கிரன் நீசமும்> சனி நட்பும் பெறுகிறார்கள். மற்ற கிரகங்களுக்குப் பகை வீடாகும்.
கன்னி இராசி ஜாதகர்கள் உயரமாகவும்> மெலிந்த உடலமைப்பும் உடையவர்கள். வளைந்த அடர்த்தியான புருவமும்> கருமையான கேசமும் உடையவர்கள்.
இவர்கள் வேகமாக நடப்பவர்கள்> தொப்பை இல்லாதவர்கள்> நேரான மூக்கும்> அகன்ற நெற்றியும்> உண்மையும்> நேர்மையை உரைக்கும் கண்களும்> சில நேரங்களில் அழகிய நீல நிறக் கண்களும். வயதுக்குக் குறைந்த தோற்றமும் உடையவர்களாய் இருப்பர்.
கற்பதில் ஆர்வமும்> நல்ல திறமைகளும்> தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் இருப்பர். அறிவு மிக்கவர்களாகவும்> உள்ளுணர்வு மிக்கவர்களாகவும் இருப்பர். எந்தவொரு பொருளையும் அழகாகவும்> வீட்டை நேர்த்தியாகவும் வைத்திருக்க விரும்புவர். எதையும் ஆராய்ந்து அறிந்து> ஆலோசித்துச் செய்பவரும்> அதிக சொத்துக்களைச் சேர்க்க ஆசைப்படுபவரும்> புரட்சிகரமானவரும்> ஆழ்ந்த சிந்தனாவாதியும்> தரகு மற்றும் தொழில் துறையில் வல்லுனரும் ஆவார்.
இவர்கள் மிகவும் சகிப்புத்தன்மை உடையவரும்> எவராலும் மாற்றி விட முடியாத எண்ணங்களையும்> குணத்தையும் உடையவராகவும் இருப்பார். அடிக்கடி இருப்பிடத்தை மாற்றக் கூடியவர். வணிக எண்ணங்கள் கொண்டவர்கள். எதையும் கணக்கிட்டுச் செய்பவர்களாகவும்> மாறுபட்டவர்களாகவும்> அனுபவ அறிவு உடையவர்களாகவும் இருப்பர். பிறரிடம் உள்ள குற்றங்குறைகளைத் தெளிவாகக் கண்டிபிடிப்பவராகவும் இருப்பர். ஆய்வாளர்> தணிக்கையாளர்> வருமானவரி அதிகாரி மற்றும் ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்கள்.
அதிகம் சேமிக்க ஆர்வமுடையவர்கள்> எச்சரிக்கை உணர்வும்> மிக மெல்லிய உணர்வுகளையும் உடையவர்கள். பங்குச்சந்தை ஈடுபாடும்> சுயநலமும் உடையவர்கள். தோட்டக்கலையில் ஆர்வமும்> தன் சொந்த விஷயங்களில் மட்டுமே ஆர்வமுடையவர்களாகும் இருப்பர். எதிர்காலத்துக்காக சேமித்து> எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை உடையவர்கள். மருந்து> உணவு> நல்ல பழக்கவழக்கங்கள்> சுகாதாரம் போன்ற விஞ்ஞானக் கல்விகளில் ஆர்வமுடையவர்கள்.
இவர்கள் தவிர்க்க வேண்டிய விவகாரங்கள்; --- மருந்து வகைகள்> வாயாடுதல்> மற்றவர்களைப் பற்றி குற்றங்குறைகளைச் சொல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எதையும் சிந்தித்த பின்னரே செயலில் இறங்கவேண்டும். மாறக்கூடிய மனநிலையை மாற்றி ஒரே நிலையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். எவரையும் பழி தீர்க்க எண்ணாமல் மற்றர்களின் குற்றங்களை மன்னித்து> மறக்கும் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நல்லாரோக்கியத்தைப் பேண சீரான உணவு வகைகளை உட்கொண்டால் சுகமான மற்றும் மகிழ்ச்சிகரமான முதுமைக்குப்பின் நீண்ட ஆயுளுடனும்> வாழலாம். சமச்சீர்> வைட்டமின் நிறைந்த உணவுகளால் வயிற்றையும் > நரம்பு மண்டலத்தையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.

பொருளாதார நிலையைப் பொருத்தவரை இவர்களுக்கு வணிகம்> வியாபாரம் ஆகியவற்றில் திறமை மிகுதியாக இருக்கும். பூமி> அது தொடர்புடைய விஷயங்களில் வெற்றி காண்பர். வாழ்க்கையில் அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பர். கடின உழைப்பே வெற்றிக்கு இவர்களை இட்டுச் செல்லும். மதவுணர்வுள்ள> கடவுளுக்கு பயந்த> உண்மையையும் நேர்மையையும் உடைய மனைவியே அமைவாள். புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும்.
இவர்கள் அதிக காலம் பிரமச்சாரிகளாய் இருக்க விரும்பி திருமணத்தைத் தள்ளிப் போட விரும்புவர். மற்றவர்களின் மேல் குற்றம் காணும் குணமுடையவராதலால் காதலில் வெற்றி காண்பது அறிதாகும். குறைவான குழந்தைகளே இருக்கும். நல்ல கல்வி தந்து அவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவார். வியாபாரக் கூட்டாளிகளை தேர்வு செய்வதில் எச்சரிக்கை அவசியம். திருமணத்துக்குப் பின் மணவாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக இருக்க அதிகம் சிக்கனமாய் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிபதி புதன் பலம் மிக்கவராக இருப்பின்> ஜாதகருக்கு -- புரோக்கர்> கணக்காளர்> சட்ட நிபுணர்> பத்திரிக்கையாளர்> பொறியாளர்> சர்ஜன்> திரவ சம்பந்தமான தொழில்கள் ஆகியவை அமைய வாய்ப்புண்டு. இவர்களின் இரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் நண்பர்கள்- வேலைக்காரர்கள் இவரை ப்ளாக் மெயில் செய்து ஏமாற்றவும் துணிவர். எனவே> அவர்களைத் தேர்ந்து எடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
2. 3> 5> 6> 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள். சாதகமான எண்கள் 4 >9 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1 மற்றும் 8 ஆகும்.
அதிர்ஷ்ட வண்ணங்கள் - மஞ்சள்> வெள்ளை மற்றும் பச்சை ஆகும்.
தவிர்க்க வேண்டிய நிறம் - நீலம் மற்றும் கருப்பு ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள் -- மரகதம்> முத்து மற்றும் பச்சை ஆகும்.

No comments:
Post a Comment