விருச்சிக இராசியின் குணங்கள்.
காலபுருஷ தத்துவத்தின் 8 வது இராசி. இதன் பாகை அளவு 210 பாகை முதல் 240 பாகை வரை ஆகும். இதன் அதிபதி செவ்வாய் ஆவார். நீர் இராசி- ஸ்திரராசி-பலன் தரும் இராசி-பெண் இராசி- நீண்ட இராசியாகும். இது குறிகாட்டும் திசை வடக்கு ஆகும். இங்கு செவ்வாய் ஆட்சி நிலையும்- சந்திரன் நீச நிலையையும் - அடைகின்றனர். சூரியன் மற்றும் குரு நட்பு நிலையையும்- குரு-புதன்-சனி மற்றும் சுக்கிரன் பகை நிலையையும் அடைகின்றனர். சமஸ்கிருதத்தில் கீட இராசியென்றும்- ஹெப்ரூ இதை டொமோ - பாம்பென்றும்- அரேபியர்கள் அல் - அக்பர் என்றும் அழைக்கிறார்கள். அல் - அக்பர் என்றால் வழக்குகள் - போர் - கலகம் மற்றும் வீழ்ச்சி ஆகும்.

மறைபொருளையும்- அழிவையும்-படைத் தலைமையையும்- குறிக்கும். அழகானவர்கள் அளவெடுத்தது போல உருவமும்- நீண்ட கைகளும்- அகன்ற முகமும்- அதிகார தோரணை- குட்டையான- சுருண்ட கேசம்- தசைப் பிடிப்புள்ள உடல்- உடல் குண்டாவதற்கான வாய்ப்பு- சதுர வடிவான முகம்- எடுப்பான புருவமும் உடையவர்.
இந்த இராசி இருவேறு குணமுள்ள மனிதர்களைக் குறிக்கிறது. ஒன்று - தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் உயர்தரமானவர்கள் மற்றவர் பொறாமை குணமும்- முரட்டுத்தனமும்- காமவுணர்வும்- எவராலும் தோற்கடிக்க முடியாத குணமுடைய கீழ்த்தரமானவர்கள் ஆவர்.
சுறுசுறுப்பானவர்கள்- கூர்மையான புத்தியுடையவர்கள்- உள்ளுணர்வு மற்றும் சுயசார்பு உடையவர்களாகவும் இருப்பர்.
ஸ்திர இராசியானதால் நிலையான எண்ணமுடையவர்கள்- சக்தி மிக்கவர்கள்- எவராலும் அசைக்க முடியாதவர்கள்- தைரியமுடையவர்கள் மற்றும் வெறுக்கத் தக்க வார்த்தைகளை அள்ளி வீசுபவர்கள் ஆவர். சிலர் செயல்முறை அனுபவம் மிக்கவர்கள். மறைபொருளைக் கண்டறியும் ஆவல்- இரசாயனப் பொருட்கள் பற்றிய ஆய்வு ஆகியவற்றில் ஆர்வமுடையவர்கள்-
பலமான விருப்பு-வெறுப்பு உடையவர்கள்- தீவிரவாதிகள் மற்றவர்களை அடக்கி ஆளத்துடிப்பவர்கள் ஆவர். அதிக காமவுணர்வும்- உள்ளுணர்வும் உடையவர்கள். இன்பகரமாக பொழுதுபோக்கும் திறமையுடைய இவர்கள் வாழ்க்கையில் இன்பத்தையும்- சுகத்தையும் அடி முதல்- நுனிவரை அனுபவிப்பவர்கள். உணர்ச்சி மிக்க இவர்கள் எதையும் ஆக்கவும்- அழிக்கவும் வல்லவர்கள். இவர்கள் சுயமாக உருவான இணக்கமில்லாத மற்றும் மிகவும் சிக்கனமான மனிதர்கள் ஆவர்.
தனது வேலைகளில் மட்டும் குறியாய் இருப்பவர்கள். மற்றவர்கள் வழவழவென அதிகம் பேசுவதை விரும்பாதவர்கள். அடிக்கடி எரிச்சல் அடைபவர்கள். தந்திரமானவர்கள் ஆனாலும் உண்மையானவர்கள்- நேர்மையானவர்கள்- நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்- எஜமான விசுவாசம் உள்ளவர்கள். ஆனால் மற்றவர்கள் தவறாக நடந்தாலோ- நம்பிக்கைத் துரோகம் செய்தாலோ- இரக்கமற்றவர்களாகி பழி தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். சுயநலவாதிகளாகவும் மாறிவிடுவர்.
திரு. மேக்ஸ் ஹெயின்டெல் தனது ' நட்சத்திரங்கள் தரும் செய்திகள் ' - எனும் நூலில் விருச்சிகத்தார் தான் மட்டும் வேலைகளைச் செய்ய மறுப்பதோடு பிறரையும் தூண்டிவிடக் கூடியவர்கள். தானும் சட்டம்- ஒழுங்கு இவற்றை மதிக்காமல் இருப்பதோடு மற்றவர்களையும் அழிவுப்பாதையில் ஈடுபடத் தூண்டுபவர். இவர்கள் சமூகத்தை எரித்துவிடக் கூடிய காட்டுத்தீ போன்றவர்கள் மற்றும் சமூகதுக்கு எதிரான அபாயகரமான தீவிரவாதிகள் ஆவர். - என் குறிப்பிடுகிறார்.

பொருளாதாரத்தைப் பொருத்தவரை இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நல்ல வீடு- நல்ல மனைவி- குழந்தைகள்- வியாபாரம்- நல்ல வாகனம்- நல்ல வேலையென அனைத்தும் கிடைத்தாலும்- பணத்தை மட்டும் சேமிக்க முடியாதவர்கள். மற்றவர்களை அதிகாரம் செய்வார்களேயன்றி- மற்றவர்களுக்கு எப்போதும் அடங்கிப் போவதை விரும்பமாட்டார்கள்.
குடும்ப வாழ்க்கை பொதுவாகக் குதூகலமாகவே இருக்கும். இவர்கள் நல்ல நண்பர்கள் என்றாலும் மோசமான பகைவர்களும் கூட. ஆதலால் இவர்களிடம் நிரந்தரமாக எவரும் நட்புக் கொள்ள இயலாது. ஆழமான- சக்திமிக்க காதலுடையவர்கள். ஆனால் மனைவியுடனோ அல்லது எதிர் பாலினத்தாரோடோ ஒரு மகிழ்வான- சீரான வாழ்க்கை அமைய- புரிந்து கொள்ளும் தன்மையும்- நிரந்தரமான பாச உணர்வும்- அன்பும் இரக்கமும் ஆகிய நல்ல பண்புகளைக் கடைப்பிடித்தல் அவசியம். இவர்கள்- இவர்களுக்கு எதிரான எந்தவொரு எதிர் விமர்சனங்களையும் கேட்க விரும்பமாட்டார்கள். ஆனால்- இவர்களை உயர்வாக மெச்சினாலும்- புகழ்ந்தாலும் உள்ளம் மகிழ்வார்கள். எனவே> பாதிப்படைந்த விருச்சிக இலக்ன நபரை மறந்தும் மணமுடித்துவிடக்கூடாது.
விருச்சிக இராசியில் பிறந்த பெண்கள் தங்களின் பெற்றோர்கள் அளவற்ற பாசத்தையும்- அன்பையும் பொழிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வர். இந்த இராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எத்தனை தடைகள்-இன்னல்கள் ஏற்பட்டாலும்- தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி- கடைசிவரை போராடி வெற்றியை நிலைநாட்டுவர். போட்டிகளையும்- பயணங்களையும் அதிகம் விரும்புவார்கள். பணம் சம்பாதிக்கும் கலையை அறிந்தவர்கள் ஆதலால் இவர்களின் வருமானம் எப்போதும் நிலையானதாக இருக்கும்.
இவர்களால் சொகுசாக இல்லாத-சுகமற்ற வாழ்க்கை வாழ முடியாது. இராசி பாதிப்பு அடையாது இருந்தால் பெரிய குடும்பம் அமையும். குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகளாகவும் -அறிவுள்ளவர்களாகவும் இருப்பர். குரு மற்றும் புதன் பாதிப்பு அடைந்திருந்தால் இவர்களுக்குக் குழந்தைப் பேறே இல்லாமல் போகும்.
கெமிக்கல்- மருந்து- ஆயுள் காப்பீடு- பேறுகால மருத்துவம்- சர்ஜன்- இரசாயனம்- ஆராய்ச்சித்துறை- இரும்பு மற்றும் எஃகு வேலைகள் இராணுவம் மற்றும் கடற்படை ஆகிய பணிகள் இவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள் -- 3 - 9 - 4 - 1 - 2 - 7 ஆகும்.
தவிர்க்க வேண்டிய எண்கள் 5 - 6 - 8 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம் -- மஞ்சள்- சிகப்பு- க்ரீம்.
தவிர்க்கப்பட வேண்டிய நிறங்கள் --நீலம் - வெள்ளை - பச்சை ஆகும்.

;
Unable to read this page. Which application should I have, for translating this?
ReplyDeletepl.try on mozilla firefox.thanks.
Delete