c
கும்ப இராசியின் குண இயல்புகள்.
காலபுருஷ தத்துவத்தின் 11 ஆம் இராசியான கும்பத்தின் அளவு 300 பாகை முதல் 330 பாகை வரையாகும். இதன் இராசியதிபதி சனி ஆவார். இது காற்று இராசி- ஸ்திரராசி- ஆண்ராசி- மலட்டுராசி- மேற்கு திசையைக் குறிக்கும் மற்றும் குறுகிய இராசியாகும். இந்த இராசியில் எந்த ஒரு கிரகமும் உச்சமோ- நீசமோ அடைவதில்லை. புதனும்- சுக்கிரனும் நட்பு கிரகங்கள்- சூரியன்- சந்திரன்- செவ்வாய் மற்றும் குரு ஆகியவர்கள் பகை நிலை பெறுகின்றனர். இந்த இராசியில் பிறந்தவர்கள் உயரமானவர்கள் - பலம் மிக்கவர்கள். நல்ல உடற்கட்டும் உடையவர்கள். நடுவயதில் இவர்கள் குண்டாக வாய்ப்புண்டு. நீள் வட்டவடிவ முகமும்- கவர்ச்சியும்- கரிய கேசமும் உடையவர்கள்.
இவர்கள் புத்தி கூர்மை உள்ளவர்கள்- அதிக ஞாபகசக்தி
உள்ளவர்கள் - இரக்க குணமுள்ளவர்கள் - உண்மையை நிலை நாட்டக்
கூடியவர்கள் ஒருமுக சிந்தனை உடையவர்கள் - சுயகட்டுப்பாடு
உடையவர்கள். எப்போதும் - மகிழ்ச்சியானவர்கள் - புதியனவற்றைக்
கண்டுபிடிப்பவர்கள். அநேக நண்பர்களை உடையவர்கள் - பரந்த
மனப்பான்மையும் - தனிமை விரும்பியாகவும் - பிறர் மனதை -
குணத்தை எளிதில் படிக்கக் கூடியவர்கள். எதிலும் ஜாக்கிரதையுடன்
இருக்கும் இவர்கள் பற்களில் உபாதை உடையவர்கள்.
சிக்கனமானவர்கள் - சுயநலமற்றவர்கள். - எதையும் - நேருக்கு
நேராய் பேசுபவர்கள் - . அனைவரிடமும் - சகஜமாகப் பழகக்
கூடியவர்கள் - ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களை மட்டுமே
உடையவர்கள். கடின உழைப்பாளி - எதையும் அழகாக அமைக்கும் திறன்
உடையவர்கள் ஆழ்ந்த சிந்தனைகள் - நகைச்சுவை உணர்வும்
உடையவர்கள். புதிய மற்றும் புத்துணர்வுடைய யோசனைகளால்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - சுயமாக சிந்தித்துச் செயல்படுபவர்கள் -
எப்போதும் நியாயமான செயல்களை மட்டுமே செய்பவர்கள்.
தனித் தன்மையுடன் விளங்குபவர்கள். உடற்கூறு மற்றும் ஆராய்ச்சித்
துறைக்குப் பொருத்தமானவர்கள்.
இரும்பு மனம் உடையவர்கள் - ஆனால் முட்டாள்கள் அல்ல.
உள்ளுணர்வு மிக்கவர்கள்- பிறருக்கு யோசனை சொல்லாமல் தாங்களே
தங்கள் செயல்களைச் செய்து முடிப்பவர்கள். உபவாசத்தை அனுஷ்டித்து -
திடமான மன நிலையை அடைபவர்கள். நல்ல குடும்பம் அமைந்து -
செல்வ நிலையோடு வாழும் அதிர்ஷ்டசாலிகள். எப்போதும் உழைத்துக்
கொண்டிராமல் அவ்வப்போது சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.
கௌரவம் இவர்களைத் தேடிவரும். கடினமாக உழைத்து - நல்ல
முன்னேற்றம் ஏற்படும் வரை பொறுமையாக இருந்து பணத்தைச்
சம்பாதிப்பார்கள். வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே பணம் தேவையானது
என்ற எண்ணம் உடையவர்கள். மற்றவர்களிடம் குறைகாணாதவர்கள்.
நவீன வசதிகளை வீட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்கள். வீட்டை
அழகாக -சுத்தமாக வைக்கும் எண்ணம் கொண்டவர்கள். நண்பர்களை
எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைப்பவர்கள். கடமை உணர்வு
உடையவர்கள்.
2 ஆம் அதிபதி குரு இவர்களை விஞ்ஞானியாகவும் - நல்ல
நிர்வாகியாகவும் - பேராசியராகவும் - ஜோதிடர் ஆகவும் - சட்டத்
துறைப்பணியிலும் - பொருளாதார நிபுணராகவும் - கல்வி
ஆலோசகராகவும் - சுரங்கக் காண்ட்ராக்டராகவும் - கப்பல் டீலராகவும் -
ஏற்றுமதியாளர் ஆகவும் ஆக்கலாம்.
6 ஆம் அதிபதி சந்திரன் மருந்து - சமூகசேவை - கப்பல் தொழில் -
மாலுமி - நீர் மூழ்கிக்கப்பல் - பம்பு செட் டீலர் திரவப் பொருள்களின்
ஏற்றுமதி- இறக்குமதியாளராகவும் ஆக்கிவிடுகிறது.
10 ஆம் அதிபதி செவ்வாயோ கட்டிடத் தொழில் - கெமிக்கல் மற்றும்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - செங்கல் தயாரிப்பாளர் - சிமிண்ட்
விற்பனையாளர் - சர்ஜன் - ஈயம் - இரும்பு - மற்றும் செம்பு
விற்பனையாளர் அல்லது துப்பறியும் நிபுணர் ஆக்கிவிடுகிறது.
அதிர்ஷ்ட எண்கள் - 3 - 9 - 2 - 7 ஆகியவை ஆகும். அனுகூலமான
எண்கள் 1 - 4 - 5 மற்றும் 8 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்- சிகப்பு-வெள்ளை- க்ரீம் ஆகும் .தவிர்க்க
வேண்டிய நிறங்கள் - ஆரஞ்சு நீலம் மற்றும் பச்சை ஆகும்.
அதிர்ஷ்டக் கல் - தங்கம் - அல்லது பஞ்சலோகத்தில் நீலக்கல்
பதித்தமோதிரம் அணிவது உத்தமம்.

No comments:
Post a Comment