Search This Blog

Wednesday, 5 June 2013

மீனராசியின் காரகங்கள்









மீனராசியின் குண இயல்புகள்

         காலபுருஷ தத்துவத்தின் 12 வது இராசி. மோட்ச தத்துவ ராசி. இதன் பாகை அளவுகள் 330 முதல் 360 வரையாகும். உபயராசி- நீர்ராசி- குளிர்ச்சியான ராசி- பெண்ராசி- குறுகியராசி- வடக்கு திசையைக் குறிகாட்டுகிறது. இந்த ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். புதன் நீசம் அடைகிறார். சூரியன்- சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகியோருக்கு நட்புராசியாகும். மீன ராசிக்காரர்கள். குட்டையாகவும் - குண்டாகவும் - இருப்பர். குட்டையான கால்கள்- சதைப் பற்றுள்ள முகம் - வெளிரிய நிறம் - இரட்டைநாடி - திரண்ட தோள்கள் - பெரிய கண்கள் - மிருதுவான பட்டுப் போன்ற கேசம் - அகன்ற வாயும் உடையவர்.

          
    எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் தன்மையும் - உள்ளுணர்வு- எந்த வேலையையும் திறம்படச் செய்யும் திறனும் - எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவரும் - நல்ல குணம் உடையவரும்- உணர்ச்சி மிக்கவரும்- இசையை விரும்புபவரும் - பாசம் மிக்கவரும் - தருமவானும் ஆவார். சில நேரங்களில் இவர்கள் இரகசிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். கூச்ச சுபாவம் உள்ளவர். மனித புத்திக்கு எட்டாத மாயங்கள் அறிந்தவரும்- தத்துவவாதியும் ஆகி மகிழ்ச்சியான- காதல் மயமான வாழ்க்கை வாழ்வர்.

     
   இவர் அன்பு- காதல் மிக்கவர்- உண்மையானவர்- இரக்க குணம் உள்ளவர்- வீட்டுக்கு வருபவர்களை மரியாதை கொடுத்து உபசரிப்பவர் - பிறருக்கு உதவும் குணம் உடையவர். ஓய்வற்றவர்- மனிதாபிமானம் உடையவர்- கோழைத்தனம் மிக்கவர்- தன்னம்பிக்கை அற்றவர் மற்றும் தற்பெருமை மிக்கவர். ஆனால் எவரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்கமாட்டார்கள். புதிய சிந்தனைகளை உடையவர்- இனிமையானவர் - நவீனமானவர் - சில நேரங்களில் அதிக ஆவல் காரணமாக மன உறுதியற்ற நிலையில் அதைரியம் அடைந்து சக்தியற்றவர்களாக ஆகிவிடுவர். நிலையற்ற தன்மை காரணமாகவும்- தாராள மனது காரணமாகவும்- மற்றவர்கள் அளிக்கும் வாக்குறுதியை நம்பியும்- தங்கள் நண்பர்களை  முழுவதுமாக நம்புவதாலும் பல நேரங்களில் அவர்களால் தொல்லைகளை அனுபவிப்பர்.
   
    இவர்கள் கவிஞர்களாகவும்- இசைக் கலைஞர்களாகவும் - திட்டக் கமிஷன் - பெயிண்டர் - சமையல் கலைஞர் - ஆசிரியர்- கணக்காளர்- வட்டிக் கடைக்காரர்- நடிகர்- ஒருங்கிணைப்பாளர் - கம்பெனி சேர்மன் - மேனேஜிங் டைரக்டர் - நேவி - ஷிப்பிங் கார்ப்பரேஷன்- குடிக்கும் பானங்கள் - சினிமா -மாயாஜாலங்கள்- எண்ணை வகைகள்- கெமிக்கல்- காஸ்மெடிக்ஸ்- மருந்துக் கடை - கல்வித் துறை - போன்ற பணிகளுக்குப் பொருத்தமானவர்கள். இவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து நண்பர்களையும் நம்பவும் கூடாது.  ஏனெனில்- வெளிப்படையாக நேர்மையானவர்களாக நடிக்கும் அவர்கள் உள்ளுக்குள் அயோக்கியர்களாகவும் - ஏமாற்றுக்காரர்களாகவும் - சுயநலக்காரர்களாகவும் இருப்பர்.
   
    மீனராசிக்காரர்கள் நல்ல வியாபாரிகளாக விளங்குவர். செல்வந்தர்களாகவும் - சக்தி மிக்கவர்களாகவும் இருப்பர். தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்குப் பாரமாக இருப்பதை விரும்பமாட்டார்கள். அதன் காரணமாக தங்கள் பணத்தை வருங்காலத்திற்காக சேமித்துவைப்பார்கள்.

     அதிர்ஷ்ட எண்கள் - 1 - 4 - 3 - 9 ஆகும். தவிர்க்க வேண்டிய எண் 8 மற்ற எண்கள் அனுகூலமற்றவையாகும்.

   
    அதிர்ஷ்ட நிறம் - சிகப்பு- மஞ்சள்- ரோஸ்- மற்றும் ஆரஞ்ச் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் நீலம் ஆகும். இவர்களின் ஜோடி உபயோகிக்க வேண்டிய நிறங்கள் வெள்ளை- க்ரீம் மற்றும் பச்சை ஆகும்.

    அதிர்ஷ்டக் கல்  - தங்கத்தில் பதித்த புஷ்பராகக்கல் மோதிரம் அணிய உத்தமம்.
   

No comments:

Post a Comment