சிறப்பான யோகங்கள் .....சில.
குரு மங்கள யோகம் – கேந்திர, கோணத்தில், குருவும், செவ்வாயும் இணையும்போது ஏற்படும் யோகம் ஆகும்.அவற்றின் இணைவு 5˚ க்கு மேல் இருத்தல் வேண்டும்.இந்த இணைவு மேஷம் அல்லது தனுசுவில், அவை கேந்திர, கோணங்களாகி ஏற்படும்போது,அதன் பலன்கள் ஆச்சரிய கரமானதாக இருக்கும். மற்ற இராசிகள், கேந்திர, கோணங்களாகி, இவ் இணைவு ஏற்பட்டால்,பலன்கள் நடுத்தரமானதாகவே இருக்கும்,இந்த யோகத்தால்,ஜாதகர்,நீண்டஆயுளோடு வாழ்வார்,கௌரவம்,மரியாதை,புகழோடு வாழ்வார்,இவரது குழந்தைகள் அதிர்ஷ்டக் காரர்களாக வும்,முன்னேற்றமுடையவர்களாகவும் இருப்பர்.
இவ்விணைவுகள் 6, 8
மற்றும் 12 ம் பாவங்களில் ஏற்பட்டால்,இது மோசமான யோகமா கிறது. ஜாதகர் திருத்த
முடியாத செயல்களை
யுடையவராகவும்,ஏழையாகவும் இருப்பார். ஆரோக்கிய மற்றவராகவும், கெட்ட
குணங்கள் பல உடையவராகவும் இருப்பார்.
சிம்ம லக்னத் துக்கு, குரு 8 ம் அதிபதியாதலால்,
இந்த லக்னத்தில் ஏற்படும். இவ்விணைவு அனுகூலமாக இருப்பதில்லை. விருச்சிக
லக்னத்துக்கு, செவ்வாய், 6 ம் அதிபதியாக இருந்த போதும்,
இவ் விணைவு அபரிமிதமான நற்பலன்களை அளிப்பதாகக் கருதப்படுகிறது,
கணன யோகம் – சூரியன், செவ்வாய், சந்திரன்
ஆகியோர்,கேந்திர,கோணாதிபதிகளுடன் இணைந்து,12 ம் வீட்டில் இருக்க,இவ்யோகம்
ஏற்படுகிறது.ஜாதகர்,மந்தப்புத்தி யுடையவராகவும் முட்டாளாகவும், யாசித்து உண்பவராகவும் இருப்பார்.அவருடைய அறிவு நிலை,ஒரு
குழந்தை யின் அறிவு நிலையை யொத்ததாகவும் இருக்கும்.எதற்கும் பிறருடைய உதவியின்றி,
இவரால் எந்த ஒரு காரியத்தைவும் செய்ய இயலாது.
கோள யோகம் – பௌர்ணமி சந்திரன் மற்றும் குருவும் இணைந்து, 9 ம் இடத்தில் இருக்க, புதனும்,சுக்கிரனும்
நவாம்ச லக்னத்தில் இருக்க அமையும் யோகம்,கோளயோகமாகும். இந்த ஜாதகர்,சாந்த
குணமுடையவராகவும்,இரக்கமுடையவராகவும்,கல்வியிற் சிறந்தவராகவும் ஒரு நகரத்தை யாள்பவராகவும் இருப்பார். இந் யோகமுள்ள ஜாதகர்,மந்திரியாகவும்
அல்லது அதற்குச் சம்மானவராகவும் பொறுப்பு ஏற்பார்.
நிழல் கிரகங்களான, ராகு மற்றும் கேதுவைத் தவிர,மற்ற கிரகங்கள் அனைத்தும்,ஒரு ராசியில்
இடம்பெறும் போதும்,இவ் யோகம் ஏற்படுகிறது.ஆனால் இவ் யோகம் எதிர்மறையான யோகமாக
அமைந்துவிடுகிறது. இவ் யோகமுள்ள ஜாதகர்,சோம்பல் மிக்கவராகவும்,அற்பஆயுள்
உடையவராகவும் இருப்பார்.வீரமற்றவராகவும்,எதிலும் முயற்சியற்றவராகவும் இருப்பார்.
இவர் மற்றவர்களை,முகஸ்துதி செய்வார் மற்றும் நீசமாய் புகழ்வார்.
கௌரி யோகம் --- பலதீபிகா – அத்தியாயம் – 6, ஸ்லோகம் – 21 சந்திரன் தனது ஆட்சி வீட்டில் அல்லது
உச்சவீட்டில், கேந்திர,கோணத்திலிருந்து,குருவால் பார்க்கப்பட கௌரியோகம்
ஏற்படுகிறது. இது ஒரு சுத்திகரிக்கப்பட்ட அல்லது நுண்ணிய
, கஜகேசரியோகமாகும்.இந்த யோகத்திற் பிறந்தவர்கள், அழகிய உருவமும்,மிகவும்
பாரம்பரியமிக்க,புகழ்மிக்க குடும்பத்திற் பிறந்தவராகவும்,அரசகுலத்தின்
நட்புடையவராகவும் இருப்பார்.இவர்,எவரையும் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியும், கம்பீரத் தோற்றமும், மிக எளிதாக தனது
எதிரிகளை வென்றுவிடும் திறமையும் உடையவராக இருப்பார். இவருக்கு நற்குணமுள்ள மக்கள்
பிறப்பர்.புத்திசாலித்தனமும், தந்திர சாலியாகவும் உள்ள இவர் அனைவராலும் புகழப்படுவார். இவரின்,எதிரிகளே, இவரின் நியாய
உணர்வையும்,நேர்மையையும் கண்டு புகழ்வர்.
கருட யோகம் – வளர்பிறை நாளில், பகற் பொழுதிற் பிறந்து, நவாம்சத்தில் சந்திரன் இருக்கும், நவாம்சாதிபதி, உச்ச நிலையிலிருக்க
இந்த யோகம் ஏற்படுகிறது.இனிமையான பேச்சுடைய இவர்கள், சமூக மற்றும் அரசியலில் மரியாதையைப்
பெறக்கூடியவர்கள். எதிரிக ளுக்கு,இவர்கள் சிம்ம சொப்பனமாகத் திகழ்வர்.இவர்கள் 34
வயதில்,அற்பஆயுளில்,விபத்தாலோ, எதிரிகளின்
சதியாலோ இறக்க நேரிடலாம்.
கந்தர்வ யோகம் – இது ஒரு
அசாதாரணமான யோகமாகும்.குரு
லக்னத்திலும்,சூரியன் தனது உச்ச ராசி மேஷத்திலும்,சந்திரன் 9 லும் இருந்து 10ம்
அதிபதி 3 அல்லது 7 அல்லது 11ல் இருக்க ஏற்படும் யோகம் கந்தர்வ யோகமாகும். இவ் யோகமுள்ள ஜாதகர்,
அருங்கலைகளில், நிபுணத்துவம் உள்ளவராகவும், மிகவும் பிரபலமடைந்து,புகழ்
பெறுவதோடு,68 வயதுவரை உயிர் வாழ்வார்.
ஞான யோகம் – துர்ஸ்தானங்கள் எனப்படும்,6 ,8 மற்றும் 12 ம்
பாவங்களில்,9 ம் அதிபதி அசுபகிரகத்துடனோ அல்லது
நிழல் கிரகங்களான, ராகு அல்லது
கேதுவுடனோ இணைந்து ஏற்படும் இவ்யோகம், ஜாதகருக்கு
அனைத்து சந்தோஷங்களையம்,வசதி
வாய்ப்புக்களையும் அள்ளித்தருகிறது, அவர் விவேகமுள்ளவராகவும், சூட்சும புத்தியுடையவராகவும்,அதிபுத்திசாலி யாகவும், எதையும்
சாதிக்கும் திறனும்,எவராலும் வெல்ல முடியாதவராகவும்,பிடிவாத குணமு
டையவராகவும்,கடின நெஞ்சுடையவராகவும்,இலக்கையடையும் வரை தன் முயற்சிகளில் பின்
வாங்காதவராகவும், ஓய்வின்றி உழைத்து
வெற்றி பெறுபவராகவும்,ரகசிய நடவடிக்கையுடைய வராகவும் அல்லது நீதிபதியாகவோ அல்லது தண்டாதிகாரி எனப்படும்
மாவட்ட நடுவர் மன்ற நீதிபதியாகவோ இருப்பார்.
கிரக மாலிகா யோகம் – இந்தப் பெயரிலேயே,
இந்த யோகம் சுட்டிக்காட்டப்படுகிறது.
கிரகங்கள் மாலையைப்போல், அதுத்தடுத்து, ஒரே வரிசையாக , கிரக மாலையாக அமைவதே இவ் யோகமாகும்,
இந்த கிரக மாலையின்
ஆரம்பம், இலக்னத்திலிருந்து, தொடங்க ஜாதகர் இளவரசர் போல் அனைத்து சுகங்களையும் அனுபவித்து, நல் வாழ்க்கை வாழ்வார். 2 மிடத்திலிருந்து,
தொடங்க,நிறைந்த செல்வமும்,அரசரோ அல்லது அதற்கு இணையான நிலையிலோ வாழ்வார்.
பெற்றோருக்குக் கட்டுப்பட்டு
நடப்பவராகவும், மேன்மை பொருந்திய நற்குணமுள்ளவராகவும்,
புகழ்,உயர்பதவியுடையவராகவும்,துணிவுள்ளவராகவும் இருப்பார்.
கிரக மாலையானது 3
மிடத்திலிருந்து தொடங்க ஜாதகர், கதாநாயகராகவும்,செல்வமு டையவராகவும் ஆனால் ஆரோக்கியமற்றவராகவும்
இருப்பார்.மேலும்,அவர் சாதனையாளராக வும், ரிஸ்க் எடுப்பதை,
ரஸ்க் சாப்பிடுவதுபோல்
நினைப்பவராகவும், தைரியசாலியாகவும், சண்டையிடச் சளைக்காதவராகவும் இருப்பார்.
கிரக மாலையானது 4
மிடத்திலிருந்து தொடங்க,ஜாதகர் தயாளகுண முடையவராகவும் அதிர்ஷ்ட சாலியாகவும், பல
நாடுகளை ஆள்பவராகவும்,அனைத்துவகை செல்வங் களையுடை யவராகவும், கௌரவமானவராகவும்,
மதிக்கப்படக்கூடியவராகவும் இருப்பார்.
5 மிடத்திலிருந்து தொடங்க,
ஜாதகர் அரசர் அல்லது அதற்கு சம்மானவராகவும், பாரம்பரிய,சமபிரதாயச்சடங்குகள்
தவறாதபடி தியாகங்கள் பல செய்ய ஆர்வமுள்ளவராகவும், புகழ்மிக்கவராகவும், தலைமுறை
தத்துவங்களையும்,பாரம்பரிய பழக்கவழக்கங்களைத் தவறாது கடைப்பிடிப்பவராகவும் இருப்பார்.
6 மிடத்திலிருந்து
தொடங்க, ஜாதகர் வாழ்க்கையில்,சில நேரங்களில் மட்டுமே,செல்வம், வசதி வாய்ப்புகள் உடையவராக இருப்பார். நிரந்தரமான சுகபோக சுக வாழ்க்கை அமையாது.
எதிரிகள் இவரைக்கண்டு அஞ்சுவர். வாழ்க்கையில் எப்போதும் வெற்றியுடையவராக
இருப்பார்.
7 மிடத்திலிருந்து தொடங்க, ஜாதகர், அனைவராலும்
விரும்பப்டுபவராகவும், அன்பு செலுத்தப்படுபவராகவும், அநேக மனைவிகளால் விரும்பப்படுபவராகவும் இருப்பார்.சந்தோஷ
வாழ்க்கையும் , முன்னேற்றமும் உடையவராக இருப்பார். அநேகக் குழந்தைகளையுடையவ ராகவும்
இருப்பார்.
8 மிடத்திலிருந்து தொடங்க,ஜாதகர்,பிரபலமானவராகவும்,ஆனால் ஏழையாக
இருப்பார். புத்திசாலியாகவும்,தைரியசாலியாகவும்,சகிப்புத்தன்மை உடையவராகவும்,
விடாமுயற்சியுடைய வராகவும் இருப்பார்.
9 மிடத்திலிருந்து தொடங்க, ஜாதகர், தியாகங்கள் செய்பவராகவும், நற்குணங்கள்
நிறைந்தவராகவும்,தலைமைப்பொறுப்பு ஏற்க
தகுதியுடையவராகவும்,தந்திரக்காரராகவும்,சாதுர்ய மிக்கவராகவும், உலக நாடுகளுக்குத்
தூதுவராக செல்லக் கூடிய தகுதியுடையவராகவும் இருப்பார்.
10 மிடத்திலிருந்து தொடங்க, ஜாதகர் , அனைவராலும்
உயர்வாக மதிக்கப்படக் கூடிய வராகவும், தத்துவ வாதியாகவும்,
தயாளகுணமுடையவராகவும்.ஒரு பார்வையிலேயே,மற்றவர் களை எடைபோடும் திறனுடையவராகவும்
இருப்பார்.
11 மிடத்திலிருந்து தொடங்க,ஜாதகர்,அழகிய
மனைவியையுடையவராகவும்,பிறக்கும் போது வெள்ளிக் கரண்டியுடன்
பிறந்தவராக இருப்பார். அரச வாழ்க்கையமையும். எதையும்
சாதிக்குந் திறனுள்ளவர்.. எந்தவொரு உழைப்புமின்றி, செல்வம் குவியும்.இவரால்
தொடங்கப் படும் திட்டங்களிலிருந்து பண மழை கொட்டும்.
12 மிடத்திலிருந்து தொடங்க ஜாதகர், தேவையற்ற செலவுகளைச் செய்யும் ஊதாரி யாகவும்,அடிமட்ட
மக்களால் மதிக்கப்படுபவராகவும்,மற்றவர்கள் இன்புற்றிருக்க,தன் பணத்தைச்
செலவிடுவார்.தனது குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாதவராக இருப்பார்.
No comments:
Post a Comment