சிறப்பான
யோகங்கள் சில…..
சமுபக யோகம் :-
3 மற்றும் 4 ம் அதிபதிகள் இணைந்து 3 இருக்க ஜாதகருக்கு இவ் யோகம் ஏற்படுகிறது.ஜாதகர் உயர்ந்த
ராஜ்யோகம் அடைந்து ஒரு வெற்றிவீர்ராகத் திகழ்வார்.
சதுஸ்சாஹர யோகம்
:-- எல்லா கிரகங்களும் ரிஷபம்,சிம்மம்,கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் இருக்கும் போது இவ் யோகம் உருவாகிறது. இந்த ராசிகளில் ஏதேனும் ஒன்று லக்னமாக அமைதல் வேண்டும். அப்படி
அமைந்தால் ஜாதகர் மிகப் பெரிய ஆட்சியாளர் ஆகிறார். அவர் மனோதைரியம்
உடையவராகவும்,கவிகள் புனைவதில் வல்லவராகவும் இருப்பார்.
இவர்கள் உயர்ந்த பதவியிலுள்ளவர்களை மட்டுமே ஆதரிப்பார்கள் மற்றும் அவர்களை
ஆணையிடுபவர்களாகவும் இருப்பர். ஒரு சக்திமிக்க அரசராக/மந்திரியாகத் திகழ்வர் என ஸோம ஜாதகம் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
பாவ குதூகலத்தில்
– அனைத்து கிரகங்களும் ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,கன்னி, விருச்சிகம்,தனுசு மற்றும் கும்பமாக இருந்து,இவற்றில் ஒன்று லக்னமாகி
இருக்க இந்த ஜாதகர் எல்லா சுகங்களையும் ஆண்டு அனுபவிக்கும் மிகப் பெரிய சக்ரவர்த்தியாகத்
திகழ்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகு திரவியார்ஜன யோகம்
:-- இலக்னாதிபதி 2 ல் இருக்கவும் 11 ம் அதிபதி லக்னத்தில் இருந்து,குரு பார்க்கவும் இந்த
யோகம் ஏற்படுகிறது. இந்த யோகமுடையவர் வியாபாரம் மூலமாகவும் மற்றும்
பல வகைகளிலும் ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து மகிழ்ச்சியாக வாழும் அதிர்ஷ்டசாலியாகவும்
இருப்பார்.
ஜாதகம் – 1
கடக லக்னம்,லக்னாதிபதி சந்திரன் 2 ல் இருக்கவும் 11 ம் அதிபதி சுக்கிரன் லக்னதிலிருந்து, 9 ம் அதிபதி குருவால்
பார்க்கப்படுகிறார். 2 ம் அதிபதி சூரியன் 11 ல் இடம்பெற்றுள்ளார். இங்கு லக்னாதிபதிக்கு இடங்கொடுத்த
சூரியனுக்கு இடங்கொடுத்த சுக்கிரன்,சந்திரனின் வீடான கடகத்தில்
உள்ளார். எனவே, அனுகூலமான, லக்னம்,2,11 இணைவுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜாதகருக்கு
சக்திமிக்க இந்த தனயோகம் அமைந்தது.
குரு
|
|
சூரி,புத
|
|
ராகு
|
ராசி
|
லக்
சுக்
|
|
செவ்
|
சந்,கேது
|
||
|
|
|
சனி
|
பூமி திரவிய யோகம் :- 10 ம் அதிபதியும்
11 ம் அதிபதியும்,பூமிகாரகன் செவ்வாயோடு இணைந்து
2 ம் வீட்டில் இடம்பெற பூமி திரவிய யோகம் ஏற்படுகிறது.
ஜாதகம் -- 2
துலா லக்னத்தில் பிறந்த இச் ஜாதகரின் ஜாதகத்தில்,10 மற்றும்
|
|
|
ராகு
|
|
ராசி
|
|
|
சுக்
|
|
||
கேது
|
சூரி,சந்
செ,பு,கு,
சனி
|
லக்
|
|
11 ம் அதிபதிகளான சந்திரன்,சூரியன் பூமிகாரகன் செவ்வாயோடு இணைந்து 2 ல் உள்ளனர். மேலும், 4 ம் பாவாதிபதி சனியும் இணைந்தது,2 வது லட்டையும் தின்று ஆசையை தீர்த்துக் கொண்டது போலாயிற்று.இந்த ஜாதகர் பல நாடுகளைத் தன் கைவசம் வைத்திருந்த மிகப் பெரிய அரசராவார்.
Super sir
ReplyDeleteநன்றி.
ReplyDelete