Search This Blog

Sunday, 28 July 2013

வாஸ்து தத்துவங்கள்






                                உ

பிரஹத் சம்ஹிதாவில் வாஸ்து  தத்துவங்கள்
       வாஸ்து என்றால் என்ன ? சமஸ்கிருதத்தில் வாஸ்து என்றால் வீடு என்பது பொருளாகும். வராஹிமிகிரரின் பிரஹத் சம்ஹிதாவிலும் அமர சிம்ஹாவின் அகர கோஷாவிலும் வீடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.மயமதா (MAYA MATHA) என்ற நூலில் வசிப்பிடம், மனை, கட்டிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே இந்த வீடுகளின் விஞ்ஞானம் நவீன காலத்தில் கட்டிடக்கலை என்று அழைக்கப்படுகிறது. இந்த வாஸ்து விஞ்ஞானமானது மதம் மற்றும் பிரதேசங்களைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பண்டைய நூல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.இவற்றை நவீன உலகுக்குத் தக்கபடி உபயோகிக்கும்போது மனிதனின் பொருளாதார முன்னேற்றமன்றி, மனஅமைதி மற்றும் குடும்பத்திற் சந்தோஷத்தையும் அளிக்கிறது.
      
இந்த வாஸ்து சாஸ்த்திரத்தின் அடிப்படையே வடக்கு, கிழக்கு, தெற்கு, மற்றும் மேற்கு ஆகிய திசைகளிலிருந்து வரக்கூடிய கதிர்வீச்சுக்களின் ஒட்டு மொத்த மற்றும் ஒன்றுபட்ட சக்தியேயாகும். நமக்கு நல்ல வாழ்க்கை அமையும் விதத்தில் மனையைத் தேர்ந்தெடுத்தபின் குறிப்பிட்ட திசைகளில் வீடுகளின் அறைகளை எங்ஙனம் அமைத்தல் போன்ற விவரங்களை விரிவாக, விளக்கமாக மற்றும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் வாஸ்து சாஸ்த்திர நூல்களில் விளக்கப்பட்டுள்ளன என்றால் மிகையாகாது.
      
வீட்டிலுள்ள அறைகளின் தன்மையானது அதில் வசிப்பவர்களின் மனவுணர்வோடு இசைந்திருக்கவும் மற்றும் பிரதிபலிக்கவும் வேண்டும். உதாரணமாக உணவருந்தும் அறையில் அமர்ந்திருக்கும்போது நமக்குப் பசியின் அனுபவத்தை நாம் உணரக்கூடிய வகையில் அந்த அறை அமைந்திருக்க வேண்டும்.அதேபோல் வாழும் அறையில் நல்லுணர்வுகளும் படிப்பில் ஒரு உத்வேகமும் ஆர்வமும் ஏற்பட வேண்டும். படுக்கையறையில் ஓய்வின் அருமையை உணரும் வகையில் அமைய வேண்டும் என்று பிலடேல்பிய நாட்டின் கட்டிடக் கலை வல்லுனர் திரு. மோரீஸ் சிண்ட்லர் குறிப்பிடுகிறார்.

கட்டிடம் கட்டுவதற்தான மனையைத் தேர்ந்தெடுத்தல்.:-
      
மனையைப்பொருத்தவரை நீள் சதுரமான அல்லது சதுரமான வடிவுடைய மனைகளே சிறந்ததாகக் கருதப்படுகிறது.காந்த கதிர் வீச்சுக்களோடு இணைந்து செல்லும் மனைகளே சிபாரிசு செய்யப்படுகின்றன. திசைகளை அறிய சிறிய காம்பஸ் கருவி உதவிகரமாக இருக்கும். சில வாஸ்து நிபுணர்கள் 10˚ முதல் 12˚ வரை அது மாறுபடலாம் எனக் குறிப்பிடுகின்றனர். பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கில் தாழ்வாயுள்ள  மனைகள் சிறப்பானது மற்றும் நன்மை அளிப்பது எனக் கருதப்படுகிறது. மேற்கு மற்றும் தெற்குப் பகுதி உயர்ந்திருத்தல் நலம். மேலும் மயானத்திற்கு அருகிலுள்ள அல்லது மயான பூமியிலுள்ள மனைகள் ஒதுக்கப்பட வேண்டியவையாகும். அதேபோல் கோவில்களுக்கு பார்வையிலுள்ள அல்லது அருகேயுள்ள மனைகளையும் வாங்கக் கூடாது. மனையின் நான்கு மூலையிலுள்ள கோணஅளவு 90˚ இருக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்மேற்குக் கோணங்கள் 90˚ க்குக் குறைவாக இருக்கவேண்டும். வடமேற்கு மூலையின் கோணம் 90˚ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கலாம். இதை வடகிழக்கிலிருந்து தென்மேற்கு மற்றும் வடமேற்கு முதல் தென்கிழக்கு வரையும் குறுக்குக் கோடு வரைவதன் மூலம் சரி பார்த்துக் கொள்ளலாம்.

மண்பரிசோதனை அல்லது மனை பரிசோதனை(பூபரிக்ஷா) ---
      
மிருதுவான, சமமான, இனியமணம் மற்றும் சுவையடைய மண்ணாக இருக்க வேண்டும். அங்கு மூலிகைச் செடிகள் நிறைந்திருக்க வேண்டும். மரங்கள் மற்றும் படரும் கொடிகள்.இருக்க வேண்டும். இங்ஙனம் இருந்தால் அம் மனையின் உரிமையாளருக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். பூமியில் பள்ளமோ, குழியோ இருக்கக்கூடாது.

வீதிசூலம் அல்லது தெருக்குத்து :-
      
மனைக்கு எதிரில் தெருக்குத்தோ அல்லது முட்டு சந்தோ உள்ள மனையை தேர்ந்தெடுக்கக் கூடாது. எனினும் வடகிழக்கில் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி மற்றும் வடமேற்கில் மேற்குப் பகுதி, தென்கிழக்கில் தெற்குப் பகுதி ஆகியவற்றில் தெருக்குத்து இருந்தால் அனுகூலமற்றதாகக் கருதவேண்டிய அவசியமில்லை என்று பிரஹத் சம்ஹிதாவில் கூறப்பட்டுள்ளது.

வ.கி

கிழக்கு

தென்.கி



வடக்கு
தெற்கு


வ.மே

மேற்கு

தென்.மே


இப் பகுதிகளில் தெருக்குத்து இருக்கலாம் என வராஹிமிகிரர் கூறுகிறார். மேலும் அவர் கூறுவதாவது -  வாசலானது தெருக்குத்தோ எதிரில் மரமோ, மூலையோ, தூண்களோ அல்லது நீர் மதகு/மடையோ இருக்கக்கூடாது என்றும் ஆனால் இவற்றின் உயரத்துக்கு இரு மடங்கு தூரத்தில் வாசலை மாற்றி அமைக்கலாம் என்றும் பிரஹத் சம்ஹிதாவில் கூறுகிறார்.

நீராதாரம் அமைப்பது எங்கே ?
      
வடக்கு மற்றும் கிழக்கு தாழ்வாக இருக்கவேண்டும் என ஏற்கனவே பார்த்தோம். அதன்படி கிணறு போர்வெல் போன்றவற்றை எங்கு அமைக்க வேண்டுமென்பதை மனை வாங்கி வீடு கட்டுவதற்குமுன் தேர்வு செய்தல் அவசியம்.அதற்கு உகந்த இடம் வடக்கிலுள்ள வடக்கு அல்லது கிழக்கு ஆகும். வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை கீழ்கண்ட காரணங்களுக்காக வராஹிமிகிரர் பரிந்துரைக்கிறார்.
              வடக்கு – சொத்து சேர்க்கை ஏற்படும்.
              வடகிழக்கு – குழந்தைகளுக்கு முன்னேற்றமும் ஏற்படும்.
விருக்ஷாஆயுர்வேதாவின் அங்கமான சாரங்கதாராசம்ஹிதாவில் நீர்பிடிப்பு அறிவதற்கான பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அஸ்திவாரம் அமைத்தல் ---
      
அடுத்தகட்ட நடவடிக்கையென்பது கட்டிடத்திற்கான அஸ்திவாரம் அமைப்பதாகும். வடகிழக்கு பகுதி முதல் தொடங்கி மனையை சமதளப்படுத்திய பின் தென்மேற்குப் பகுதியிலிருந்து அஸ்திவாரம் அமைக்கத் தொடங்க வேண்டும்.



கிழ

1                              2



   3           4

வட

           




      அஸ்திவாரம் அமைக்கும் முறை   





4          3



2          1


தெற்கு



மே
ற்கு

  மனையை சமனப்படுத்தும் முறை

ஜோதிடம் தரும் சீரிய கருத்துக்கள் என்ன ?

ஜோதிடப்படி சிறப்பான அனுகூலமான மாதங்கள் சித்திரை , வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகும். அதிலும் சூரியன் ஸ்திர ராசிகளில் வரும் காலங்கள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.அஸ்திவாரம் அமைக்கக் கீழ்க் கண்ட நட்சத்திரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ரோஹிணி,மிருகசீரிடம்,ஹஸ்தம்,சித்திரை,உத்திரம்,கேட்டை,உத்திராடம்.திருவோணம் ஆகிய வையே அவை.ஒற்றைப்படை சந்திர நாட்கள் – 9 ம் திதியைத் தவிர மற்றவை அனுகூலமான நாட்களாகும். 2, 6 மற்றும் 10 ம் திதிகளும் அனுகூலமானவையாகும். புதன், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் நல்ல நாட்களாகும்.

கட்டிட அமைப்பு :-

தென்மேற்கு தொடங்கி வடகிழக்குப் பகுதியில் அதிக இடம்விட்டும் வீட்டு காம்பவுண்டுச் சுவரைத் தொடாமல் கட்டுவது நல்லது. அதுபோல் கட்டிடம் சதுரவடிவிலோ அல்லது நீள் சதுரவடிவிலோ கட்டுவதே நல்லது. கட்டிட அளவு எவ்வளவு இருக்கிறதோ அதே போன்ற அளவு உயரம் வைத்து வீடு கட்டுவதே நல்லது என பிரஹத் சம்ஹிதாவில் கூறப்பட்டுள்ளது.

கதவுகளின் அமைப்பு :--

தலைவாசலானது வடக்கு அல்லது வடகிழக்கில் வடக்குப் பகுதியிலும், வடமேற்கின் மேற்குப் பகுதியிலும், தென்கிழக்கின் தெற்குப் பகுதியிலும் அமைக்கப்பட வேண்டும்.

             வ                     
     

    




 
   


கி
             தெ
           வடக்கு






























 பிரம்ம
ஸ்தானம்












































கிழக்கு
          தெற்கு

எனினும் வராஹிமிகிரர் தனது பிரஹத் சம்ஹிதாவில் வாஸ்து மண்டல அடிப்படையில் தலைவாசல் அமைக்கப்பட வேண்டுமென்கிறார். ஒவ்வொரு திசையிலும் 9 பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு ஒவ்வொரு திசையும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்கத்திலும் 4 வது பிரிவில் தலைவாசல் அமைப்பது சாலச்சிறந்து எனக் குறிப்பிடுகிறார். இந்த திசைகளில் தலைவாசல் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் ---
       வடக்கு  --- அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்தல்.
       கிழக்கு  ---- அரசு உதவி அரசால் அனுகூலம்.
       தெற்கு  ---- அதிக உணவு அதிக நீர் மற்றும் அதிகக் குழந்தைகள்.
       மேற்கு  ---- பழங்கள் மகன்களுக்கு முன்னேற்றம் மற்றும் செல்வநிலை உயர்வு.
     அடுத்து தானியங்கி கதவுகளை அமைக்கக்கூடாது  அப்படியமைத்தால் குடும்பம் அடியோடு அழிந்துவிடும் என்றும் பி.ச வில் குறிப்பிடபட்டுள்ளது. தானாகத் திறப்பது முட்டாள் தனத்தையும், மூடுவது குடும்ப அழிவையும் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
     
தலைவாயிற் கதவு வீட்டிலுள்ள மற்ற அனைத்துக் கதவுகளையும்விட பெரிதாக அமைக்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுலோகம் 82 பகுதி 53 பி.ச. வில் தலைவாசலானது எந்தவிதத்திலும் மற்ற கதவுகளைவிட அலங்காரத்தில் குறைந்தோ அல்லது அமைப்பில் சாதாரணகாகவோ இருக்கக்கூடாது. அது மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
    
திறந்தவெளியைப் பொருத்தவரை தெற்கு மேற்கை விட வடக்கு மற்றும் வடகிழக்கில் அதிகப்படியான இடம் விடப்பட்டிருக்க வேண்டும். கதவுகளும் சன்னல்களும் இரட்டைப்படையில் இருக்க வேண்டும். பூஜியம் இடம்பெறாமல் 2 – 4 – 6 என இருக்கவேண்டும்.

மரங்களும் தாவரங்களும் :-
     
கனமான மற்றும் உயரமான மரங்களான தென்னை, கொய்யா, வாழை மரங்களை மனையின் தெற்கு மற்றும் மேற்கிலும் வைக்கலாம்.வடக்கு மற்றும் கிழக்கில் பூச் செடிகள், துளசி, அழகிய புல் வெளிகள் ஆகியவற்றை வளர்க்கலாம். அரசமரத்தை வடக்கேயும் ஆலமரத்தைக் கிழக்கிலும் அத்திமரத்தைத் தெற்கிலும் அஸ்வத் மரத்தை மேற்கிலும் வைக்கலாம் என பி.ச வில் குறிப்பிடப்பட்டுள்ளது. காம்பவுண்டுச் சுவரைப் பொருத்தவரை தெற்கு மேற்கில் உயரமாக மற்றும் தடிமனாகவும் வடக்கு மற்றும் கிழக்கே இரண்டும் அதைவிடக் குறைவான அளவுகளில் இருத்தல் வேண்டும்.
     
அடுத்து வீட்டிலுள்ளவர்கள்  மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், முன்னேற்றத்துடனும் வாழும் வகையில் அனுகூலமான விதத்தில் வீட்டிலுள்ள அறைகளை வாஸ்து முறைப்படி அமைக்க வேண்டும்.
     
நைருதி அல்லது தென்மேற்குப் பகுதி முழுவதும் வீட்டின் எஜமானர் பயன்படுத்தவேண்டும். எக் காரணங்கொண்டும் இப்பகுதியில் திறந்தவெளி இருக்கக்கூடாது. இவ் அறையைப் பிரதான படுக்கையறையாக பயன்படுத்தலாம். அக்னி மூலையெனும் தென்கிழக்கில் சமையலறையையும் சமையல் மேடையை அந்த அறைக்குள், கிழக்கிலும் பாத்திரம் கழுவும் சிங்கை வடகிழக்கு மூலையிலும் அமைக்கலாம். ஈசானியம் எனும் வடகிழக்கில் பூஜையறை மற்றும் போர்டிகோ அமைக்கலாம். வடகிழக்குப் பகுதி எப்போதும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் இவ் விடத்தில் மருந்துப் மாத்திரைகளை வைத்தால் நோய் குணமாக நீண்ட நெடுநாட்களாகும் என பி.ச வில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாயு மூலையெனும் வடமேற்குப் பகுதியில் வாழும் அறை விருந்தினர் அறை, காரேஜஸ் மற்றும் டாய்லெட் ஆகியவற்றை அமைக்கலாம். இங்கு தென்கிழக்குக்கு மாற்றாக சமையலறையை அமைக்கலாம்.

                                         தெற்கு                  

மை
றை
ழி
பிரதான
படுக்கை
அறை

சாப்பிடும்
மற்றும்
வாழும் அறை



வராண்டா
பூ
ஜா
படுக்கை
யறை
  


                     கிழக்கு
 
.                                         வடக்கு
     
ஒவ்வோரு மனையிலும் வாஸ்து புருஷன் தெய்வமாக இருக்கிறான். அவன் வடகிழக்கில் தலைவைத்தும் தென்மேற்கில் கால்களை மடக்கியும் வாஸ்து மண்டலத்தில் ஓய்வெடுக்கிறான். தலைப்பகுதியான வடகிழக்கில் சக்தி அதிகமாகக் இருப்பதாகக் கருதப்படுகிறது. வாஸ்து மண்டலம் 64 அல்லது 81 சதுரங்களாகப் பிர்க்கப்பட்டுள்ளன. நடுவிலுள்ள 9 சதுரங்கள் பிரம்ம ஸ்தானமாகும்.பண்டைய நாட்களில் இப் பகுதி திறந்த வெளி முற்றமாகப் பயன்படுத்தப்பட்டது.

அஷ்டதிக் பாலகர்கள் :-

கிழக்கு – இந்திரன் – கடவுள்களின் அரசன்.
வடக்கு – குபேரன் – செல்வத்துக்கு அரசன்.
மேற்கு – வருணன் – மழைக்கு அரசன்.
தெற்கு – எமன் – மரணத்துக்கு அரசன்.
வடகிழக்கு – ஈசானன் -  சக்திக்கெல்லாம் சக்தி – கடவுளர்கெல்லாம் கடவுள்.
வடமேற்கு – வாயு – காற்றின் கடவுள்.
தென்கிழக்கு – அக்னி – நெருப்புக் கடவுள்.
தென்மேற்கு – நைருதி – துர்தேவதை.

என்ன நிறம் எங்கு நன்மை தரும் ?

வெள்ளை – தூய்மை மற்றும் சுத்தம் –எல்லா இடமும்.
நீலம் – அறிவுத்திறன் அமைதி – படுக்கையறை கருத்தரங்குக் கூடம்.
சிவப்பு – போராட்டகுணம் – காவற்துறை மற்றும் படைப் பிரிவுக் கட்டிடங்கள்.
க்ரீம்-பச்சை – புத்திகூர்மை – படிக்கும் அறை.
பிங்க் – ஆரஞ்ச் – பசியைத் தூண்டும் – உண்ணும் அறை (டைனிங்ஹால்).
எனவே ஜோதிட அன்பர்களே !  பிரஹத் சம்ஹிதா போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் பயனுள்ளதாக அமைந்திருக்கும் எனக் கருதி இக் கட்டுரையை முடிக்கிறேன்.






No comments:

Post a Comment