உ
வீடு, மனை வாங்கும் யோகமும்,ஜாதக நிலைகளும்.......
நகரங்களில், வீட்டு வாடகை எட்டாத
உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. நடுத்தர மக்களின்
வாழ்க்கையில், அவர்கள் படும் அவதி கேட்கவே வேண்டாம். வாங்கும் சம்பளத்தின்,
பெரும் பகுதி, வாடகைக்கே சென்று விடுகிறது. அதன் காரணமாக அன்றாட வாழ்க்கையை
ஓட்டுவதற்கே, அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருக்கிறது. அதைக் கருத்திற்
கொண்டு,அவர்கள், அதைவிற்று, இதைவிற்று, அங்கு கடன் வாங்கி, இங்கு கடன்
வாங்கி,எப்படியாவது ஒருமனையை வாங்கிவிட வேண்டு மென்று ஆவல் கொள்கின்றனர்.இடம்
வாங்குவதென்பது,நடுத்தர மக்களுக்கு, தங்கள் சேமிப்பை யெல்லாம் இழந்து,கடன்பட்டு,நகைகளை அடகுவைத்து
அல்லது விற்று,கடனுக்காக வங்கி வங்கியாக
ஏறி இறங்கி,படாத பாடெல்லாம் பட்டுச் செய்ய வேண்டிய, அரிய பெரிய செயலாகிவிட்டது. இனி, மனை
அமைந்து,வீடு, கட்டிடம் கட்டுவதற்கான
ஜோதிடகாரணிகள் யாதெனப் பார்ப்போம்.
மனை வாங்கும்
நேரம் ---
கீழ்க்கண்ட கிரகங்கள்,பொதுவாக,அதன் தசா
புத்தி காலங்களில்,வீடுவாங்கவோ அல்லது மனை வாங்கவோ உரிய காலத்தை வெற்றிகரமாக
அளிக்கிறது.
1. நான்காம் வீட்டிலுள்ள
கிரகம்,சிறப்பாக,இயற்கை சுபர்களான குரு,சுக்கிரன்,புதன் மற்றும் பலம்மிக்க
சந்திரன் தசா,புத்தியிலும்.
2. 4 ம் அதிபதி,கேந்திர,கோணங்களில் இருந்து
நடத்தும் தசா/புத்தி காலங்களிலும் வெற்றியளிக்கிறது.
அநேக ஜாதகர்களுக்கு, இந்த தசா / புத்தி
காலங்கள் வராமற் கூடப் போகலாம் அல்லது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியிலும் வரலாம் அல்லது
இளம் வயதிலேயே முடிந்து கூடப் போயிருக்கலாம் .அந்தவிதமான சூழலில் வீடு, நிலம் வாங்கப் பொருத்தமான கோசார நிலைகளைக்
கண்டறிய வேண்டியது ஜோதிடர் களின் கடமையாகிறது. கீழ்க்காணும்
குருவின் கோசார நிலைகள் வீடு மற்றும்மனை லாபத்தை அளிக்கிறது.
1. குரு, சந்திரனிலிருந்து,12 ல் இருந்தாலும்.
சந்திரனிலிருந்து 4 ம் இடத்தை குரு பார்த்தாலும் ---- ஒருவருடைய வங்கி சேமிப்புகள்
கரைந்து,சொத்துக்கள் சேரும் நிலை உருவாகும்.
2. குரு – கோசாரத்தில் 4 ம் வீட்டைக் கடக்கும்
போது அதில் 4 ம் வீட்டில் சுபர் இருக்க,குரு அக் கிரகத்தை இயக்கி பலன் தருவார்.
3. குரு – 4 ம் வீட்டையோ,அதிலுள்ள கிரகத்தையோ
பார்க்கவும். அமைகிறது.
மனை அமைவதில்
தாமதம் ஏன்?
4 ம் அதிபதி 6,8,12 ல் இருந்தாலோ அல்லது காரகக் கிரகமான செவ்வாய் பல
மிழந்த நிலையிலிருந்தாலோ, மனையமைவதில் கோசார கிரகத்தால்
எவ்வித சாதகமான பலனும் இருக்காது.
இந்த சூழ்நிலைகளில் ஜாதகரது,மனைவி,மக்களில்
யாருடைய ஜாதக அமைப்பு,மனை வாங்கும் யோகமுடையதாக உள்ளதோ, அவர்கள் பெயரில் மனை
வாங்குவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
கீழ்க்கண்ட ஜாதகங்கள் மூலமாக,தசா/புத்திகள் சாதகமற்ற நிலையில் இருந்த போதிலும், கோசார குரு
எங்ஙனம்,
மனை, வீடு வாங்க
உதவினார் என்பதை
ஆராய்வோம்.
குரு
|
|
|
ராகு
|
|
ஜாதகம் --- 1
24 – 09 – 1963.
04 – 30 காலை.
|
|
|
சனி ( வ )
|
|
லக் ///
புதன்
|
|
கேது
|
சந்
|
செவ்
|
சூரி,சுக்
|
தசாயிருப்பு – சனி தசா – 03 வ 7 மா 15 நாள்.
ஜாதகம் ---
1.
இந்த ஜாதகத்தில், சந்திரன் 4 ம் மிடத்தில் நீச நிலையிலுள்ளார். சந்திர திசை, ஜாதகருக்கு
2017 மற்றும் 2027 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடைபெறும். செவ்வாய் திசையோ 2027 முதல் 2035 ம் ஆண்டுவரை நடைபெறும். இந்த இரு கிரகங்களும், மனை சம்பந்தமான கிரகங்களாகும். இவை இரண்டுமே சாதக மற்ற நிலையில்,
கோசார நிலையைக்
காண வேண்டும்.
1995 ம் வருடம், செப்டம்பர் மாதம், குரு
விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்த போது, ஜாதகர் ஒரு மனையை வாங்கினார்.
அச் சமயம் குரு லக்னத்தினின்று 4 ம் வீட்டிலும், அதுவும் ஜன்மராசியான விருச்சிகத்திலும் இருந்தார். இங்கு 4 ம் அதிபதி
செவ்வாய்,உபஜெயஸ்தானமான 3 ல் இருப்பதால் மனைவாங்கும் யோகம் ஏற்பட்டது. ஜன்ம ராசியில், குரு இருப்பதால், பணமிழப்புக்கு வகை செய்தது. எனவே, மனை வாங்கியதால்,இவரின்,வங்கி
சேமிப்பு குறைந்ததல்லவா ?
ஜாதகம் – 2
|
லக்/// சுக்,கேது,
|
குரு
|
|
சூரி,புத
|
ஜாதகம் --- 2
11 – 03 – 1977.
10 – 15 காலை.
|
சனி
|
|
செவ்
|
|
|
|
|
சந்
|
ராகு
|
|
தசாயிருப்பு – சனி தசா – 09 வ 05 மா 05
நாள்.
இந்த ஜாதகருக்கு, இளம் வயதிலேயே சனி திசை முடிந்துவிட்டது. இவருக்கு
சந்திர திசை 2036 முதல் 2046 வரையும், செவ்வாய் திசை 2053
வரையும் நடக்கும். இந்த மூன்று
கிரகங்களும் இவரின் மனைவாங்கும் விஷயத்தில் சாதகமாக இருக்க
வேண்டியவையாகும். இந்த தசா காலங்கள்
அதற்கு சாதகமானதாக இல்லை
யாதலால்,
கோசாரநிலை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
1995 ம் வருடம், ஜூலை மாதம் குரு
விருச்சிகத்தில் சஞ்சரித்தார். 4 ம் அதிபதி சந்திரன் விருச்சிகத்தில் உள்ளார்.
இந்த காலகட்டத்தில்,ஜாதகிக்கு மனையமைந்தது. 4 ம் அதிபதி 8 ல் இருப்பதால் மனைக்கான பணம் அவருக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது. கோசார குரு,
4 மிடத்தையும் பார்க்கிறார். காரகரான செவ்வாய்,தசம கேந்திரத்தில் உச்சமாகி
10, 11 க்குரிய சனி 4 மிடமான கேந்திரத்தில் இருப்பதால் சந்திரன்
நீசம் பங்கமாகியுள்ளார். இவையனைத்தியுமே
இச்சாதகருக்கு பூமிலாபத்தை ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.
ஜாதகம் – 3.
|
|
|
|
குரு
|
ஜாதகம் --- 3
22 – 01 – 1963.
08 – 00 இரவு.
|
செவ்,ராகு
|
|
சூரி,புத,
சனி,கேது
|
மூலம்.
|
லக்///
|
|
சந்
|
சுக்
|
|
|
ஜாதகருக்கு மனைலாபம் ஏற்படுத்தக்கூடிய
நிலையிலுள்ள சுக்கிர திசை 1989 ம் வரு
டமே முடிந்துவிட்டது. அடுத்து உதவும் காரகன், செவ்வாயின் திசை 2015 முதல் 2012 வரை நடக்கும். சுக்கிரன் 4 ல், 4ம் அதிபதி செவ்வாய்
நீசமானாலும்,சனியால் பார்க்கப் படுவதால் நீசபங்க நிலையடைகிறது..4 ம் அதிபதி செவ்வாய் 12
மிடத்தில் இருப்பது ஜாதகர் மனைவாங்கும்
இடம் மிகவும் தொலைவில்
இருக்குமென்பதை குறிகாட்டுகிறது. எனவே, இவர் பிறந்த ஊரிலிருந்து சுமார் 500 கி.மீ.
தொலைவிலுள்ள இடத்திலேயே இவருக்கு மனையமைந்தது.
1995 ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் கோசார குரு
ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சஞ்சரித்த போது ஜாதக
சுக்கிரனின் மீது
ஜாதகருக்கு மனை வாங்கும் யோகம் ஏற்பட்டது. கோசார குரு ஜாதக சந்திரனுக்கு 12 மிடத்தில் சஞ்சரித்ததால் அவரின் வங்கி சேமிப்பு
குறைந்தது. குரு 4 மிடத்தில் இருந்தாலும், 4 ம் அதிபதி செவ்வாயைப் பார்ப்பதாலும் மற்றும் சந்திர ராசியின் 4 மிடத்தையும்
பார்ப்பதாலும், இந் நிகழ்வு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
எனவே,அன்பர்களே மேலே கண்ட ஜாதகங்களில்
தசாக் காலங்கள் சரியில்லாத போதும் பூமி யோகம்
ஏற்பட கோசார குருவின் லீலைகளைப்
பார்த்தோம்.ஆயினும் ஜனன ஜாதகத்தில் மனை, வீடு வாங்குவதற்கான யோக நிலைகள்
இருக்க வேண்டியதும் அவசியமாகிறது
என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment