Search This Blog

Sunday, 28 July 2013

ப்ரம்ம ஸ்தானத்தின் முக்கியத்துவம்





                 
   பிரம்மஸ்தானத்தின் முக்கியத்துவம்.
      
      பண்டையக்காலத்தில்,  கிராமங்களிலும்,    நகரங்களிலும்,   கோவில்களிலும்,
அரண்மணைகளிலும்,     குடியிருப்புகளிலும்   நடுப்பகுதியில்   கோவில்   அல்லது குலதெய்வம் அல்லது மையமண்டபம் என்றும் கிராமம் அல்லது நகரங்களில் மக்கள் கூடுவதற்கான    பெரிய  மைய மண்டபங்களும்  வைத்துக்  கட்டும்  கட்டிடக்கலை வடிவங்கள்  அனுசரிக்கப்பட்டன,  என்கிறது    பழந்தமிழ்  நூல்கள். பிரம்மஸ்தானம் என்னும்  இந்த  மையப்பகுதி, மொத்தம் 81 சதுரங்களைக்கொண்ட முழுப்பகுதியும், 9 சதுரங்களைக் கொண்ட அமைப்பாகவுள்ளது.  இந்த பிரம்மஸ்தானம் என்பது வாஸ்து புருஷனின்,தொப்புழ் பகுதியாகும்.
      
      பிருகத் சம்ஹிதாவில் –   ஒரு    வீட்டின்    உரிமையாளருக்கு   சந்தோஷம் நிலைத்திருக்க  வேண்டுமெனில்,  பிரம்மன்  மையப்பகுதி மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளப்பட  வேண்டும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.வேண்டாத பொருட்களையும், குப்பைகளையும்   அவ்விடத்திற்   போட்டு,   பாதிப்படையச்   செய்தால்    வீட்டின் உரிமையாளருக்கு  தீங்கு   நேரும்   என்றும்  பிருகத்  சம்ஹிதாவில் குறிப்பிடப்பட் டுள்ளது.

மனசாரா,பிரம்மஸ்தானத்தில் குலதெய்வத்தின் கோவிலை அமைக்கலாம் என்று குறிப்பிடுகிறது. நமது  முன்னோர்கள், சில  காந்த   சக்தி மிக்க கோடுகள்,மனையின் குறுக்கே  பிரமஸ்தானத்தைக் கடந்து செல்வதாகக் குறிப்பிடுகின்றனர்.இவை வாஸ்து புருஷனின், உடற்பகுதிகள்  எனக்  கருதப்படுவதால், அப்  பகுதியில்,  சேதம் ஏற்படா வண்ணம்,  அவற்றில், மிகவும்  கவனமாக,  கட்டிட வேலைகளைச் செய்ய வேண்டு மெனக் குறிப்பிடுகின்றனர்.
     
அதேபோல், பிரம்மஸ்தானத்தை,  ஊடுருவும் புள்ளிகள்,மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாக்கப்பட வேண்டும். உண்மையில்  “மாயமாதா” (Mayamata)   இந்த நுண்ணிய புள்ளிகளை    மர்மா  என அழைக்கிறது.   இவை  வடக்கு, தெற்கையும் –  கிழக்கு மேற்கையும்  இணைக்கும்   கோடுகள்  ஆகும்.  இந்த  தென்வடல் கோடுகள் நாடியென்றும், கீழ்மேற் கோடுகள் வம்சா யென்றும் அழைக்கப்படுகின்றன.   பிரம்மஸ்தானத்தின் குறுக்காகச் செல்லும் கோணக் கோடுகள்  கோண சூத்ரா”    என அழைக்கப்படுகிறது. இவை சக்திமிக்க கோடுகளாகும். பிரம்ம சம்ஹிதாவிலும் இவை மதிப்புமிக்க  கோடுகளாக, புள்ளிகளாகக்    குறிப்பிடப்பட்டுள்ளன. சதுரத்தின் மையப் புள்ளியும், அகன்ற  கோணப்புள்ளியும்,  சேதப்படாத  அளவுக்கு,மிகவும் மதிப்பு மிக்க  பகுதியாகக்    கருதப்பட  வேண்டும்   என்றும்   குறிப்பிடப்பட்டுள்ளது.   அவ்வாறு பாதிக்கப்பட்டால்,  வீட்டின்   உரிமையாளருக்குத்   துன்பம்    நேரும், ஏதாவது ஒரு வகையில் சந்தோஷத்தையிழப்பார்.
     
நாம் தற்போது, நவீன  காலத்தில், இவ் வாஸ்து சக்திகளை,இந்த மதிப்புமிக்கப் புள்ளிகளை, நம்முடன்  ஒன்றிணைத்து, நமது  நன்நிலைக்கு   எங்ஙனம் உபயோகப் படுத்துவது என்பதைக் காண்போம்.
      
நாம் மூன்றுவித குடியிருப்புக்களின் வகைகளை தேர்ந்தெடுப்போம்.
1.   குடியிருப்புகள் தனிவீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள்.
2.  
  அலுவலகங்கள்.தொழிற்சாலைகள்.
1.   குடியிருப்புகள் –   நல்ல  மனையைத்   தேர்ந்தெடுத்து,வாஸ்து சாஸ்த்திரப்படி கட்டிட வரைபடம் தயாரித்து,வீடு கட்டப்படவேண்டும்.வேறுபல காரணிகளான, தெருக்குத்து  (வீதி சூலம்) , கிணறு  தொண்டுதல்,  அஸ்திவாரம் அமைத்தல், தலை வாசல்    வைத்தல்    ஆகியவற்றுக்கான   நல்ல   முகூர்த்தங்களை, நல்லவிதமாகப் பார்த்து வேலைகளைத் துவங்க வேண்டும். அந்த மனை எந்த அளவு   பெரியதாக   உள்ள   தென்பதை  அனுசரித்து,  பிரம்மஸ்தானத்தை அமைப்பதற்கான கீழ்க்கண்ட விஷயங்களைத் கருத்திற் கொள்ல வேண்டும்.


அ.) பிரம்மஸ்தானத்தில்  தூண்கள், சுவர்கள்,கிணறு மற்றும் பீம்கள் ஆகியவற்றை  அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஆ.) பிரம்மஸ்தானத்தில் பூஜையறையை அமைத்து,தெய்வங்கள் கிழக்கு பார்த்து இருப்பதுபோல் அமைக்க வேண்டும்.
இ.) பிரம்மஸ்தானத்தை, குடும்பத்தார் கூடுமிடமாக,மையக் கூதமாக அல்லது சிறு விழாக்கள் நடத்துமிடமாக அமைக்கலாம்.
ஈ.) பாதுகாப்பு நிலைகள்,பாதிப்படையாத வகையில் மேற்கூறை,திறந்த நிலையில், ஆகாயம் தெரியும் வண்ணம் அமைக்கலாம்.  நவீன  வாஸ்து நிபுணர்கள் பிரம்மஸ்தானத்தின்  மீது, சூர்ய  கதிர்கள் பட்டால்,  மற்ற வாஸ்து குறைபாடுகள் அகன்றுவிடும் என்ற கருத்துடையவர்களாக உள்ளனர்.
உ.) சிறுவீடுகலுக்கு,சிறு கூடமாக அமைத்திடலாம்.
ஊ,) அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் கட்டுவோர், வளாகத்தில் குடியிருப்பவர்கள் பயன்படுத்தும் வகையில்,பிரம்மஸ்தானத்தைத் திறந்தவெளியாய் அமைக்கலாம்.
எ.) ஒவ்வொரு அப்பார்ட்மெண்டிலும் மேற்சொன்னபடி,பிரம்மஸ்தானத்தைக் கருத்திற் கொண்டு கட்டிடத்தை அமைக்கலாம்.
2. அலுவலகங்கள்  -- நவீன உலகில்,  அலுவலகங்களில், தடுப்புகள் வைத்துப் பெரிய அலுவலக  அறைகளாக, வாஸ்துபடி  உள்அலங்காரம்     செய்பவர்களைக் கொண்டு அழகாய்    அமைக்க  வேண்டு மென்பதோடு,  அலுவலகத்தில்  உள்ள  ஆரோக்கிய நிலைகளையும்,  நிலையான  பொருளாதார நிலையடையும் நோக்கத்தோடும் கட்டிட வல்லுநர்களைக்  கொண்டு  வடிவமைக் கப்படுகின்றன. அவற்றைக் கீழ்க்கண்டவாறு
அமைக்கலாம் –
1.   பிரம்மஸ்தானத்தில்,நடுவில் மேடையமைத்து, பளிங்கினாலான தெய்வவுருவங்களைச் சிலையாக வடித்துவைக்கலாம்.
2.   கருத்தரங்குக் கூடம் அமைக்கலாம்.
3.   அழகாக அமைக்கப்பட்ட,மலர் நிறைந்த,தொட்டிகளை வைத்து அழகுபடுத்தலாம்.
3.    தொழிற்சாலைகள் --- தொழிர்தாளைகளை அமைக்கும் போது,பல்வேறு வாஸ்து        நிலைகளைப் பின்பற்ற வேண்டுமென்றாலும்,கீழ்க்கண்ட நிலைகளைப் பின்பற்றலாம்.
அ.) பிரம்மஸ்தானத்தில் அகன்ற விரிவான லாண்களை அமைக்கலாம்.                  ஆ.) பிரம்மஸ்தானத்தில் அழகிய சிறியதான கோவிலை அமைக்கலாம்.
      பொதுவாக,  எந்த  ஒரு    கட்டிடத்திற்கும், பிரம்மஸ்தானத்தில்  தூண்களோ, பீம்களோ, சுவர்களோ,  அமைக்காமல்  எந்த  ஒரு பாரத்தையும் அப் பகுதியில் ஏற்றி வைக்காமல்,   அந்தப்  பரப்பு  வெற்றிடமாக  இருப்பதே உரிமையைளருக்கு நல்லது. பிரம்மஸ்தானத்தையும், கோணப்புள்ளிகள்  உள்ள  பகுதியையும்,ஒரு குழந்தையைப் பேணிக்  காப்பது போல் காக்க வேண்டும். இந்த  கதிர்வீச்சுள்ள கோடுகளில் எவ்வித ஆணி போன்ற  கூர்மையான  பொருட்களை  அடிக்கக்  கூடாது. கோணசூத்திரத்தில் அல்லது மனையின்  வடகிழக்குப்  பகுதியில்  கிணறு  தோண்டுவதோ,  போர்வெல் அமைப்பதோ கூடாது. இதுபோன்ற பிரம்மஸ்தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, எல்லா வளமும் பெற்று வாழ்க என வாழ்த்தி இக் கட்டுரையை முடிக்கிறேன்.   


                                    




No comments:

Post a Comment