சில வாஸ்து குறிப்புக்கள்
1.
கிணறு போர்வெல் சம்ப்
ஆகியவற்றை வடகிழக்குப் பகுதியின் –வடக்கே அமைக்கவும்.
2.
காம்பவுண்டு சுவர்களை
வீட்டின் நான்கு பக்கமும் கட்டவும்.
3.
அச் சுவரை கட்டிடத்தை
ஒட்டி அமைக்க வேண்டாம்.வடக்கிலும் கிழக்கிலும் அதிக இடம் விட்டுக் கட்டவும்.
4.
ரோட்டிலிருந்து
சுமார் 3 அடி உயரத்துக்கு மேல் கட்டிடத்தைக் கட்டவும்.
5.
தலைவாசலை ரோட்டைப்
பொருத்து உச்ச ஸ்தானத்தில் வைக்கவும்.
6.
அதற்கு நேர் பின் புறம்
ஒரு கதவு வைக்கவும்.
7.
உங்கள் வீடு உபய
திசைகளான கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்குப் பக்கம் பார்த்து இருப்பது போல் வைக்கவும்.
8.
நுழைவாயில்
பெரிதாகவும் வெளிவாசல் சிறியதாகவும் அமைக்கவும்.
9.
இரண்டு
கதவுகளைக்கொண்டு அமைப்பது நல்லது.
10.
மனையின் மையப்பகுதி
மற்றும் கட்டிடத்தின் மையப்பகுதியில் கனமான தூண்களோ பீம்களோ அல்லது கிணறோ இருக்கக்கூடாது.
11.
வடக்கிலும்
கிழக்கிலும் திறந்தவெளியோடு கூடிய வராந்தா அமைக்கவும்.
12.
வடகிழக்கில் துளசி, மூலிகைச் செடிகளை வளர்க்கவும்.
13.
நகைகள், பணம், மற்றும் முக்கிய தஸ்தாவேஜூகள் அடங்கிய கப்போர்டை தென்மேற்கு மூலையில்
கதவுகள் வடக்கே திறப்பதுபோல் நிலைநிறுத்தவும்,
14.
எஜமானரின் அறை நைருதி
எனும் தென்மேற்குப் பகுதியில் அமைக்கலாம். அதையே படுக்கையறையாகப் பயன்படுத்தலாம்.
கட்டிலைச் சுவரையொட்டிப் போடாமல் தென்மேற்குப் பகுதியில்போட்டு , தெற்கே
தலைவைத்துப் படுக்க வேண்டும்.
15.
சமையலறையை
தெனகிழக்கில் அமைக்கலாம்.சமைக்கும் போது கிழக்கு பார்த்து சமைக்கவும். சிங்க்கை
வடகிழக்கு மூலையில் அமைக்கலாம்.
16.
குழந்தைகளுடைய
அறை மேற்கில் அமைத்து அவர்கள் மேற்கே
தலைவைத்துப்படுக்க கட்டிலை தென்மேற்குப் பகுதியில் போடவும்.
17.
வடமேற்குப் பகுதியில்
ஸ்டோர், கேரேஜஸ், டாய்லெட் மற்றும் விருந்தினர் அறையாக அமைக்கலாம்.
18.
வடகிழக்குப்
பகுதியில் பூஜையறை அமைக்கலாம்.மருந்துகளை இங்கு வைத்தால் நோய் விரைவில் குணமாகும்.
19.
தெற்கிலும்
மேற்கிலும் தென்னை, கொய்யா, அசோகா மற்றும் வேப்ப மரங்களை வளர்ப்பது நல்லது.
20.
எல்லா திசைகளிலும்
தேவைக்கேற்ப ஜன்னல்களை வைக்கலாம்.ஆனால் தெற்கு- மேற்கைக்காட்டிலும் வடக்கு –
கிழக்கே அதிக ஜன்னல்கள் இருக்கவேண்டும்.
21.
மாடிப்படிகள் மேற்கு,
தெற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கில் கட்டி,
ஏறிமுடியும் கடைசிப்படிகள் தெற்கே அல்லது மேற்கே அமையவேண்.டும்.
22.
முகம் பார்க்கும்
கண்ணாடி கிழக்கு அல்லது வடக்குச் சுவரில் மாட்டவும்.
23.
தென்மேற்கிலுள்ள, மேற்கில் மேல்நிலைத்தொட்டி இருக்கவேண்டும்.
24.
வடக்கு மற்றும்
கிழக்கு பக்கத்தைக்காட்டிலும் தெற்கு மற்றும் மேற்கு பகுதி கட்டிடம் உயரமாக
இருக்கவேண்டும்.
25.
கட்டிடத்தின் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கில் செல்லார்களை அமைக்கலாம்.
26.
தலைவாசற் கதவில் ஸ்வஸ்திக் அல்லது ஓம் பிம்பங்களை வைக்கலாம்.
27.
கதவுகள் மூன்றாக
இருக்கக்கூடாது.
சந்தோஷமான ஆரோக்கியமான செல்வம் நிறைந்த வாழ்க்கை அமைய :-
1.
கட்டிடத்தின்
தென்மேற்குப் பகுதி திறந்திருக்கக் கூடாது.
2.
பிரம்ம ஸ்தானத்தில்
தூணகள், பீம், கனத்த பொருட்கள் மற்றும்
கிணறு போன்றவையிருக்கக்கூடாது.
வாஸ்துப்படி வீட்டைக் கட்டி வளமாக வாழ்வோம். வாழக வளமுடன்.
---- எஸ்.விஜயநரசிம்மன்.
No comments:
Post a Comment