Search This Blog

Monday, 15 December 2014

உங்கள் நட்சத்திர பலன். (14 – 12 – 2014 முதல் 20 – 12 – 2014 வரை தினபூமி நாளிதழில்

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
உங்கள் நட்சத்திர பலன்.
(14 – 12 – 2014 முதல் 20 – 12 – 2014 வரை)




மேஷம்
 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --
       இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவு அதிகரிக்கும். தொழில் நிலை அமோகமாக அபிவிருத்தி அடையும். படிப்பிலும், பணியிலும் முயற்சி செய்தால் முனேற்றம் இருக்கும். இதுவரை தீராமல் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பெரியவர்களால் தீர்த்து வைக்கப்படும். புதிய சொத்துக்கள், வீடு வாங்க நல்ல தருணம். பிறருக்கு ஜாமீன் கொடுப்பதோ, கூட்டுக் கையெழுத்துப் போடுவதோ கூடாது. அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்குப் பற்பல நன்மைகளும் முன்னேற்றங்களும் ஏற்படும்.   உங்கள் பகுதியில் உங்களின் சேவை மனப்பான்மை காரணமாக நல்ல புகழ் உண்டாகும். பொதுவாக, வாழ்க்கையில்  சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்.

பரணி  --
       இந்த வாரம் உங்களுக்கு காரியத்தடைகள் ஏற்பட்டாலும், கை நிறையக் காசு புழங்கும். சோம்பேறித்தனம், பொறாமை போன்ற துர்குணங்கள் தலைதாக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதிகாரிகளின் ஆதரவால் சுமுகமாகத் தீரும். புத்தாடை, புது ஆபரணங்கள் சேரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன்பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  சிலருக்குப் புதிய கடன்கள் வாங்கும் நிலை ஏற்படலாம். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  
கார்த்திகை  1 ஆம் பாதம்.—
       இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களாய் நடக்கும். தாய் மாமனால் நன்மைகள் ஏற்படும்தொலைதூரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். அவர்களால்  பொழுது போக்குக்கான  செலவுகளுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
       இந்த வாரம் கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் எழாது. சுலபமாக வசூலாகிவிடும்தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாக இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். தன, தான்ய விருத்தி ஏற்பட்டு விவசாயிகள் இலாபம் அடைவர். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்படும். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவால் பணியில் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலருக்குக் குழந்தைகளின் துடுக்குத் தனத்தால் தொல்லைகள் ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருத்தால் அவசியம்.
ரோகிணி  –
       இந்த வாரம் இனிய வாரம். எதிர்பாராத தனவரவும் ஏற்படும். உறவினர் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும்கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டுவீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும்புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்வியாபாரிகளுக்கு எல்லாவழிகளிலும்  நன்மைகள் ஏற்படும். மறுநாள் மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
      இந்த வாரம் உங்களுக்குப் போதுமான தனவரவு ஏற்படும். தொலை தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.  வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவைஇடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்தாத நிலை ஏற்படும்மது, மாமிசம் அருந்துபவர்களுக்குத் தொல்லைகள் எழலாம்விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், ஸ்திரீகளால் மகிழ்ச்சி என ஆனந்தம்தான். சிலர் சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமை மிக்கச் செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –
       இந்த வாரம் கடவுளுக்கான பூஜைகளைக் கருத்தோடு செய்வீர்கள். தொழிலில்  முற்னேற்றம் பெற உங்களுக்குப் பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும் ஏற்படும். புதிய நண்பர்களால் ஆதாயங்கள் ஏற்படும்.  பயணத்தில் துன்பமும்கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை ஆகியவை ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும்.
திருவாதிரை ---
       இந்த வாரம் புதிய தொழில் தொடர்புகளால் வாழ்க்கை வளம்பெரும். உங்களின் சிறந்த செயல்பாடுகளினால் அனைத்திலும் வெற்றி பெற்று, அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு. தந்தையின் வர்க்கத்தினரால் நன்மை பல ஏற்படும் 
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
       இந்த வாரம் உங்கள் மனதில் கடன் மற்றும் பகைவர் தொல்லையால் பயவுணர்வு ஏற்படும். பெண்களால் மகிழ்ச்சி, அரசுவகை இலாபம் ஆகியவை ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடத்துவதோடு, உறவினர் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்வாக்கு வன்மை ஓங்கும்.    சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.  

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
       இந்த வாரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. வியாபரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுநல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராதுதொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும்.
பூசம் -- 
       இந்த வாரம் தனவரவு, கூட்டாளிகள் ஒத்துழைப்பு, புகழ், கௌரவம் ஆகியவை ஏற்படும். அதிக பயனங்களையும் அதன் காரணமாக உறவுகளிடையே பிரிவும் ஏற்படலாம். உத்தியோக இலாபம் மற்றும் பெண்களால் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரும்.  புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தரும காரியங்களுக்கு பணத்தைத் தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.
ஆயில்யம்
       இந்த வாரம் மனதில் பண விஷயமான சிந்தனைகளே அதிகரிக்கும். கோபத்தால் வெளிவரும் துர்வார்த்தைகளால் மற்றவர்களின் மனம் புண்படும். தேவையற்ற செலவுகளால் புதிய கடன்கள் வாங்க நேரலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடக்காவிடில் பணியில் எதிர்பார்த்த முன்னேற்றங்களை எட்ட முடியாது. சிலருக்குத் தொழிலில் சிறுசிறு தடைகள் ஏற்படலாம். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.
. சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
       இந்த வாரம் எதிர்காலத் தொழில் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விவாக்கத்திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும்அரசு ஊழியர்களுக்குத் தலைமைப் பதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்துக் கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதமாகலாம்உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணிவுயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம்மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். நல்ல வாகனங்கள் வாங்க முற்படுவீர்கள். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும்.
பூரம்
       இந்த வாரம் புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும்.

உத்திரம்- 1 பாதம்
       இந்த வாரம் ஆன்மிகவாதிகளின் அருளுரை கேட்டு ஞானத்தன்மை பெறுவீர்கள். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். திருமணப் பேச்சுக்கள் மேற்கொள்ளப்படும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைமாறி வேகம் பிறக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். விவசாயிகள் நவீன முறைகளைக் கையாண்டு அதிக இலாபம் ஈட்டுவர். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
       இந்த வாரம் உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
ஹஸ்தம்
       இந்த வாரம் பெரிய மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். தாயாரின் மூலமாக  நன்மைகள் ஏற்படும். பிறர்மேல் ஏற்படும் பொறாமை காரணமாக அவர்களுடன் போட்டி போடத் தோன்றும். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் வளமான வாழ்வு அமையும். புதிய தொழில்கள் தொடங்க நல்ல வாய்ப்புக்கள் அமையும். உயர் அதிகாரிகளின் உத்திரவுப்படி நடக்க, உயர்வு ஏற்படும். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும்  செயல்திறன் கூடுவதால் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர்பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு  நல்ல காலம் பிறக்கும்மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர்.
சித்திரை – 1,2 பாதங்கள்
       இந்த வாரம் உறவுகளின் உதவியால் உயர்வு ஏற்படும். மேடைப் பேச்சாளர்களின் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம். சிலருக்குத் தேவையற்ற செலவுகளின் காரணமாகச் சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் தங்கள் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நற்செயல்கள் கண்டு உள்ளம் மகிழும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
       இந்த வாரம் எதிர்பார்த்த தனவரவுகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு ஆதாயம் கூடும். ருசியான உணவுவகைகளை ருசித்து மகிழ்வீர்கள்உங்கள் அயராத உழைப்பால் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுத்து, அதுவே உங்கள் பணிவுயர்வுக்குப் பாதையாக அமையும். சிலருக்கு அவர்களின் சுறுசுறுப்பற்ற தன்மையால் காரியத் தடைகள் ஏற்படலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உற்சாகம் பிறக்கும். சில நேரங்களில் அவர்களின் உதவியும் கைகொடுக்கும். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள்.
சுவாதி
       இந்த வாரம் அன்பு உறவுகள் வருகையால் அகம் மகிழும். தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் ஏற்படும் வெற்றியால்  உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
       இந்த வாரம் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி நிலவும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம் ஏற்பட, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில், புத்துணர்ச்சியும், நல்ல வளர்ச்சியும் ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
       இந்த வாரம் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவு வரும். இதுவரை வசூலாகாத  கடன் பாக்கிகள் சிரமமின்றி வசூலாகும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்சிலருக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது.
அனுஷம்
       இந்த வாரம் புத்தி தெளிவு ஏற்பட்டு உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படலாம். தொலை தூரத்திலிருந்து வரும் நற்செய்திகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். உதவிகரமான புதிய நண்பர்களால் உற்சாகம் பிறக்கும். புத்தகப் பதிப்பு மற்றும்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனால் பல நன்மைகள் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை தேவை. வீண்செலவுகள் அதிகமாவதால்  பணமுடையும் இருக்கும்வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே பல நல்ல முன்னேற்றங்களைத் தரும்.  
கேட்டை
       இந்த வாரம் பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். மற்றவர்களிடம் கோபத்தோடு பேசும்போது வார்த்தைகளை அளந்து எச்சரிக்கையுடன் பேசுவதால் பிரச்சனைகள் மட்டுப்படும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பைத் தவிர்க்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு மற்றவர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வங்கி மூலமான புதிய தொழில் கடன்கள் எளிதில் கிடைக்கும்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
       இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். அதன் காரணமாக உற்சாகம் மிக்க வாரமாக அமையும். பிள்ளைப் பேறு உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். இனிய செய்தி கேட்டு இல்லத்தில் உள்ளோர் மகிழ்வர். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்                                                                                                                                                                                                                                                                                         தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம்
       இந்த வாரம் தூக்கமின்றித் தொல்லைகள் அனுபவிக்க நேரும். அரசால் அபராதங்கள் விதிக்கப்படலாம். ஆடை, ஆபரணங்கள் சேரும். பங்குச்சந்தை  ஈடுபாடு இலாபம் தரலாம்தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்து, இலாபத்தையும் அள்ளுவீர்கள். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
       இந்த வாரம் ஞானமார்க்கத்தில் மன ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களின் போது பொன்பொருள் ஆபரணங்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்வது நல்லது. அரசுப்பணி புரிபவர்களுக்கு அவரிகளின் அயராத உழைப்பு பாராட்டைப் பெற்றுத் தருவதோடு பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---
       இந்த வாரம் பூமி வீடு மூலம் இலாபம் ஏற்பட்டாலும், தேவையற்ற வீண் விரயங்களும்  ஏற்படலாம்மனைவியின் கடமையுணர்வுடன் கூடிய பணிவிடை மகிழ்ச்சி தரும். மக்கள் மத்தியில் மதிப்பும், கௌரவமும் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். சதாசர்வ காலமும் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
திருவோணம்-
       இந்த வாரம்   இன்பச் சுற்றுலாக்களால் இன்பம் பொங்கும். தாயார் வழியிலும், அரசு அதிகாரிகள் வகையிலும் எதிர்பார்த்த அனுகூல பலன்கள் தடையின்றிக் கிடைக்கும். சிலருக்கு அரசு வகைத் தொல்லைகள் ஏற்படலாம். சிலருக்குக் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். தொழில் விஷயமாக எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்
அவிட்டம் 1,2 பாதங்கள்
       இந்த வாரம் எதிர்பார்த்ததிற்கு மேல் தாராளமான தனவரவு வரும்இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்உங்கள் பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
       இந்த வாரம் நீண்ட நாட்களாக வராத உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி தருவர். புதிய தொழில் நூட்பங்கள் மற்றும் புதிய எந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கி, இலாபத்தை அதிகரிப்பீர்கள். எழுத்தாளர்களின் புதிய நூல்கள் வெளிவரும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும். எதிரிகளின் திட்டங்களை சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள். அரசுப்பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.
சதயம்-
       இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். சிலருக்குப் பகைவரால் தொல்லை, வருமானக் குறைவு, பயணங்கள் அகியவை ஏற்படலாம். புதிய வேலை வாய்ப்புக்கான அரசு உத்திரவுகளை எதிர்பார்க்கலாம்குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும், புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ள  நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
       இந்த வாரம் ஆரோக்கிய நிலை மேம்படும். மதிப்பு மரியாதை கூடும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் நடக்கும். அரசுப் பணி புரிபவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
       இந்த வாரம் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் பாதிப்பு இருக்காது. தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் கடன் தொல்லைகளில் இருந்து மீளலாம். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு ஓரளவு பணியில் திருப்தி இருக்கும். அவரவர் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளின் பூரண ஒத்துழைப்பு இருக்குமாதலால் உற்பத்தி பெருகி உன்னத நிலை அடைவீர்கள்,  நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

உத்திரட்டாதி-
       இந்த வாரம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழிலில் உள்ளவர்களுக்கு அபரிமிதமான பொருள் வரவால் மகிழ்ச்சி ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு அரசுத்துறை அல்லது தனியார்துறையில் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் தற்கால நிலவரங்களுக்குப் ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். பிள்ளைகளின் அறிவுத்திறன் பெருகி, கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவர். இக்கட்டான சூழ்நிலைகளில் அன்பு நண்பர்களின் ஆத்மார்த்தமான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் கழிக்காமல் படிப்பில் கவனம் கொள்வது முன்னேற்றம் தரும்.
ரேவதி-
       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியும் பெருகும்வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சியமாக வெற்றி பெரும். விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். மாணவர்கள் தங்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர். மனைவிநண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமுகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்.


n