Search This Blog

Tuesday, 11 February 2014

அன்னையின் ஆயுள்





                                                உ
அன்னையின் ஆயுள்

    சமஸ்கிருதத்தில்  ஜனனி  ஜன்மபூமி  ஸ்ச  ஸவர்க்கதபி  காரியஸி  என்ற   சொல்லுக்கு, பொருள் சொர்க்கத்துக்கும்  மேலானவள்  தாய்   என்பதேயாம்.   அன்னையைப்   போல்  ஒரு  தெய்வமில்லை ”,  ”தாயிற்  சிறந்த   கோயிலுமில்லை “,  மாதா, பிதா, குரு, தெய்வம் என   எதிலும்  நாம்  நம்  தாயின்  புகழையே பாடுகிறோம்.  பூமியிற் புதிதாகப் பிறந்த  மழலை  தாயின்  அரவணைப்பிலேயே  வாழ்கிறது. “ “ஏழேழு ஜன்மங்கள் எடுத்தாலும்  கொடுத்தாலும்  தாய்க்கிங்கு  நாம்பட்ட  கடன்      தீருமா ? “ வாழ்க்கையில் தாய்க்கு ஈடாக எவருளர் ?

    ஜோதிடத்தின்  விஞ்ஞானத்தின்  மூலமாக,   ஒரு  குழந்தையின்   ஜாதகத்தைக்   கொண்டு    அன்னையின் ஆயுளைக்  காணும்  முறை  வேறு  எந்த  விஞ்ஞானத்திலும்  இல்லாத  ஒன்று  என்றே   சொல்ல வேண்டும். இளமையிலேயே ஈன்ற தாயையிழந்து வாடும் பிள்ளைகள் துரதிருஷ்டசாலிகளன்றோ. பூர்வ   ஜென்மத்தில் அக் குழந்தைகள் செய்த பாப வினைகளின் கர்ம பலனின் தொடர்ச்சி தானே இது.

     கீழ்  கண்ட  காரணிகள்   இளமையிலேயே     இறக்கும்   தாயின்  மரண   நிலையையறிய,   குழந்தையின் ஜாதகத்தில் தெளிவாக ஆராய வேண்டிய முக்கிய காரணிகளாகும்.

     அவையாவன ---  ராசி,  நவாம்சம்,  மாத்ரு  காரக  கிரகம்,  அஷ்டவர்க்கம்,  நட்சத்திரம், சந்திரா லக்னம் மற்றும் விம்சோத்திரி தசா காலம் ஆகியவையாகும்.
1.        தாயின்  இழப்பை  அறிய  முதலில்    பார்க்க   வேண்டிய    காரணியானது நடப்பு தசா நாதனுடனான தாய் ஸ்தானத்துடனான 4 ம் வீடு அல்லது மாத்ருகாரகனுடனான தொடர்பு ஆகும்.
2.        சந்திரா   லக்னத்திலிருந்து  2 அல்லது  7 அல்லது 12 ம் வீடுகளின் அதிபதிகளின் தசா காலங்களில்  / புத்தி காலங்களில் இந்த துக்க கரமான நிகழ்வுகள் ஏற்படலாம்.
3.        சந்திரா லக்னத்திலிருந்து மேற் சொன்ன வீடுகளிலுள்ள கிரகங்களின் தசாக் காலங்களிலும் தாயின் மரணம் நிகழலாம்.
4.       
நான்காம் வீட்டுக்கு 2 ம் இடம் அல்லது 7 மிடம்  அல்லது  12 ம்  இடத்திலுள்ள  கிரகங்களின்  தசா / புத்தி காலங்களில் இவ் விழப்பு ஏற்படலாம்.
5.        மேற் சொன்னபடி 4 ம்   வீட்டுக்கு   2   அல்லது  7   அல்லது  12  ம்   வீட்டு  அதிபதிகளின் தசா  /  புத்தி காலங்களில் தாயின் மரணம் ஏற்படலாம்.
6.        4 ம் அதிபதியின் தசா / புத்தி காலங்களிலும் மாதாவின் மரணம் நிகழலாம்.
7.        சந்திரா லக்னத்திலிருந்து 4 ம் வீட்டு அதிபதியின் தசா / புத்தி காலங்களிலும்
8.        சந்திரன் அல்லது 4 ம் அதிபதி நிற்கும் நட்சத்திராதிபதியின் தசா/ புத்தி காலங்களிலும் தாயானவள் இந்த தரணிவிட்டுச் செல்லலாம்.

      இங்ஙனம்  மேற்சொன்ன  காரணிகள்   எங்ஙனம்   கீழ்கண்ட   ஜாதகங்களுக்குப்  பொருந்தி வருகின்றது என்பதை பார்ப்போமா  

ஜாதகம் – 1.
பிறந்த நாள்-15 – 09 – 1967 பிறந்தநேரம்--மாலை – 05 – 02. 2340 – 87கி45. .1 . 

மாத்ருகாரக கிரகம் ---

    ஆறாம் அதிபதியான சந்திரன் 12 ல். சந்திரன் தனது சுயநட்சத்திரமான திருவோணத்திலேயே உள்ளார். அது நல்லதுதான் என்றாலும்,பாதிப்படைந்த சுக்கிரனின் பார்வையும்,சனியின் ராசியான மகரத்தில் சந்திரன் இருப்பதுவும்    மிக   மோசமான  நிலையாகும். மேலும்,நவாம்சத்தில் மாத்ரு காரகனை,புதன், ராகுவுடன் இணைந்து சூரியனும் பார்க்கிறார்.

சனி
ராகு


சுக்
குரு

புதன்
ராகு
சந்
லக்///



    இராசி
சுக்
லக்///



  நவாம்சம்

சந்
சூரியன்
குரு



செவ்
கேது
புதன்
சூரியன்
கேது
சனி
செவ்


2. ராசி ----

    மாத்ரு பாவமான 4 ம் பாவம் ரிஷபமாகும்.அது முதல்தரமான பாவக் கிரகங்களான சனி, செவ்வாயாற் பார்க்கப்படுவதோடு,  4 ம் அதிபதி சுக்கிரன்   6 ல்  இருப்பதும், 6 ம் அதிபதி சந்திரனைப் பார்ப்பது ஓரளவு நல்லது  மற்றும்  ஓரளவு   கேட்டது  எனலாம்  .6 ம்   அதிபதி  சந்திரன் , சுக்கிரனை தன் பார்வையால் பாதிப்படையச்    செய்கிறார்.    மற்றொரு   கோணத்திற்   பார்த்தால்   சுக்கிரன் மற்றும் மாத்ருகாரகன் இணைந்திருப்பதும் நல்லதே.ஏனெனில்,ஒரு காரகக் கிரகமானது அக் காரகாதிபதி அல்லது பாவாதிபதியுடன் இணைந்திருப்பது பலத்தைப் பெருக்குகிறது.

3. நட்சத்திரம் ---

    மாத்ருகாரகன் சந்திரன்,சுய நட்சத்திரமான திருவோனத்திலுள்ளார். 4 ம் அதிபதி சுக்கிரன், 6 , 8 க்குரிய புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் உள்ளார்.இந் நிலைகள் சுமாராக நல்லதே செய்யும்.

4. சந்திரா லக்னம் ---

    சந்திரா லக்னத்திலிருந்து,  4  ம்  வீட்டில்    ராகு   இடம்   பெற்று   ஜாதகரின்  தாயின் ஆயுளுக்கு உலைவைக்கிறார்.   மேலும்  4   ம்  வீடானது  ராகு,  கேது  அச்சுக் கிடையேயான தாக்கத்தில் உள்ளது. சந்சிரனிலிருந்து  4 ம்  வீட்டு  அதிபதி செவ்வாய் தனது சுய வீடான 11 ம் வீட்டில் இருந்தாலும்,அது 4 ம் வீட்டுக்கு 8 ம் வீடாகிவிடுகிறது. செவ்வாய்,  சனியின் சாரத்திலிருப்பது மேலும் மிக மோசமான நிலையை உருவாக்கிவிடுகிறது.

5. நவாம்சம் ---

    கும்பம்   நவாம்ச  லக்னமாகி,  4 ம்  இடம்  முதல்  தர  அசுபர்களான  சனி  மற்றும்  செவ்வாயின் பார்வையைப் பெறுகிறது.  நவாம்சத்திலும்,  ராசியிலும்   4 ம்   அதிபதி  சுக்கிரன்,  நவாம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார்.  இது  நல்லதுதான்  என்றாலும், மாதா காரகன் சந்திரன் தன் பகைவீடான புதனின் வீட்டில், ராகு – கேதுக்களின் அச்சின் தாக்கத்தில் உள்ளது.

6. அஷ்டகவர்க்கம் ---

    சந்திரன் தனது அஷ்டவர்க்கத்தில் 6 பரல்களைக் கொண்டுள்ளது. அது நல்லதே. 4 ம் அதிபதி சுக்கிரன் 5 பரல்களுடன்  இருப்பதுவும்  நல்லதே. மேலும்  சர்வாங்கஅஷ்டகவர்கத்தில்  4 ம்  வீடு  35 பரல்களைக் கொண்டுள்ளது. எனவே, அஷ்டவர்க்கத்தில்  நல்ல  நிலைகளே  காணப்படுகின்றன. இங்கு மட்டுமே நல்ல நிலையுள்ளது.

    இந்த  ஜாதகரின்  தாய் 1988 ல் ராகு தசா,கேது புத்தியில் மரணமடைந்தார். இங்கு தசாதிபதி ராகு 4 ம் வீட்டுக்குப்  12 ம் வீட்டில்  உள்ளார்.  அது சந்திரனிலிருந்தும்  4 ம் வீடான செவ்வாயின் வீடாவதால்,ராகு செவ்வாயின் பொறுப்பையேற்று முடிவைத்தருகிறார். விதி (-4 மற்றும் 5.)

    புத்தியதிபதியான  கேது, சுக்கிரனின்  பலன்களைத் தருகிறார்.சுக்கிரன் சந்திரனிலிருந்து 7 ம் வீட்டிலும் மற்றும் சந்திரா லக்னத்துக்கு 4 ம் வீட்டதிபதியாகவும் உள்ளார். (விதி 2 மற்றும் 7).

ஜாதகம் – 2

பிறந்த தேதி 21 – 03 – 1976.நேரம் – மாலை – 3 – 02. 23வ19,85கி27.
  
சூரியன்
புதன்
குரு,கேது

செவ்வாய்

லக்னம்///
குரு,ராகு

சுக்கிரன்



    இராசி
சனி
சுக்கிரன்



  நவாம்சம்
புதன்

லக்னம்///

சனி

சந்திரன்
ராகு


கேது
சந்,செவ்.

சூரியன்

1.   
மாதா காரகன் –

சிம்ம  லக்னத்திற்கு 4 ம் வீடான  விருச்சிகத்தில், மாதா காரகன் சந்திரன் நீச நிலையிலுள்ளார். 4 வீட்டில்  காரகன்  சந்திரனிருப்பது   நல்லதல்ல. இது  இந்த ஜாதகரின் தாயின் ஆயுளுக்கு பங்கம் விழைவிக்கிறது. பாவார்த்த ரத்னாகராவில் காரஹோ பாவ நாசஹாஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பொருள்,  காரகக் கிரகம்   அந்த   குறிப்பிட்ட   பாவத்திலிருக்கும்போது,அந்த பாவத்தை முழுவதுமாக நசுக்கிவிடுகிறது என்பதேயாகும்.

2.   ராசி ---

    4 ம் வீட்டுக்கு 8 ம் வீடான  மிதுனத்தில் 4 ம்  அதிபதி செவ்வாய் இருக்கிறார். தனக்குப் பகை வீடான மிதுனத்திலிருக்கும் செவ்வாயை ராகு  பார்க்கிறார். எனவே,ராகு சந்திரன் தொடர்பு தாயின் ஆயுளைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது.
3.  
நவாம்சம் ---

    பகைவீடான கடக நவாம்சத்தில், 4 மற்றும் 6 ம் வீட்டதிபதியான புதன் உள்ளார். 4 ம் அதிபதி 8 ல்   ராகு - கேது  அச்சின்  தாக்கத்தில்  உள்ளார்.   நவாம்சத்தில்   சந்திரன்   வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலும், கீடக ராசியான  விருச்சிகத்தில் செவ்வாய்,கேது சந்திரனுடன் இணைந்திருப்பது நல்லதைச்   செய்வதில்லை.   செவ்வாய்   தனது   சுய  நவாம்சத்தில் உள்ளபோதும் கேதுவின் இணைவும், ராகுவின் பார்வையும் கெடுதலைச் செய்கின்றன.
4.   
சந்திரா லக்னம் –

    சந்திரா லக்னத்திலிருந்து  7 மற்றும்  12 க்  குரிய  சுக்கிரன் ,4 ம் வீட்டில் ராகுவின் சாரத்தில் உள்ளார். இதுவும் ஒரு மோசமான நிலையாகும். சந்திரனிலிருந்து 4 ம் வீட்டின் அதிபதியான சனி 4 ம் வீட்டுக்கு 6 ம் வீட்டில்,நீர் ராசியான கடகத்திலுள்ளார்.    சந்திரனிலிருந்து 4 ம் வீடு ராகுவின் பார்வையைப் பெறுகிறது. இவையாவும் பாதகமான நிலைகளன்றோ
5.   
அஷ்டகவர்க்கம் ---

    மாத்ருகாரகன்   தனது   அஷ்டவர்க்கத்தில்  5 பரல்களுடன் இருப்பது நல்லதே. ஆனால், 4 ம் அதிபதி  செவ்வாய்  தனது  அஷ்டவர்க்கத்தில் 2 பரல்களே பெற்றிருப்பது சாதகமான நிலையல்ல. சர்வாஷ்ட  வர்க்கத்தில்  4 ம்  வீட்டில்  29  பரல்கள்   என்பது  நடுத்தரமானதே  யாகும். டாக்டர். பீ,வி. ராமன் அவர்கள் தனது அஷ்டவர்க்க அடிப்படையில் பலன் காணும் முறைகள் என்ற நூலில் செவ்வாய்க்கு,   சந்திரனிலிருந்து   4 ம்  மற்றும்  8 ம்  வீடுகளில்   குறைந்த  அளவே  பரல்கள் பெற்றிருப்பின் குழந்தையை தாய் பிரியும் நிலை ஏற்படும் எனக் குறிப்பிடுகிறார்.

6.      நட்சத்திரம் --- மாதா காரகன் சந்திரன், சனியின் நட்சத்திரத்தில்  உள்ளார்.  6 மற்றும் 7 க்குரிய, அதிபதியும்   சக்திமிக்க  அசுபருமான  சனியின்  நட்சத்திரத்தில்  சந்திரன்  இருப்பது  பாரகமான நிலையாகும். 4 ம்  அதிபதி செவ்வாய் தனது சுய சாரத்தில், மிருகசீருஷ நட்சத்திரத்தில் இருப்பது நல்லதேயாம். எனவே,இந்தத் தாயின் ஆயுள் அற்ப்பஆயுள் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

   இந்தத்   தாய், 1976 ம்  ஆண்டு  அக்டோபர்  மாதத்திற்  தற்கொலை  செய்துகொண்டார். அந்த நேரத்தில்  இந்த    ஜாதகர்  பிறந்து  ஒரு  சில  மாதங்களே  ஆகியிருந்தன.   அப்போது நடந்து கொண்டிருந்து  சனி தசா  குரு   புத்தியாகும்.சந்திரா லக்னத்திலிருந்து சனி 4 ம் வீட்டின் அதிபதி யாவார்.மேலும், சனியின்  நட்சத்திரத்தில்  சந்திரன்  உள்ளார். (விதி 6 மற்றும் 8). சந்திரனுக்கு,4 ம் வீட்டுக்கு 2 ம் வீட்டின் அதிபதி குரு ஆவார். (விதி 3 மற்றும் 5).

   தாயின்  ஆயுளை  மிகத்  துல்லியமாக நிர்ணயிக்க துவாதசாம்சத்தையும்,ஜெய்மினியின் மத்ரி நிராயன சூல தசா முறை மூலமாகவும் ஆராய்ந்தறிய வேண்டும்.

   கீழ்க் கண்ட விதிகளும்,தாயின் மரண காலத்தை அறிய உதவும்.

1.   சூரியனின்  பாகையிலிருந்து  – சந்திரனின்  பாகையைக்   கழித்து  வரும்  பாகையின் மீதோ அல்லது  அதற்கு  திரிகோணத்திலோ  கோசார  குரு  கடக்கும்  காலத்தில்  தாயின்  இறப்பு நிகழ்கிறது.

2.   சந்திரனிலிருந்து   8 ம்   அதிபதி  பாகையினின்று  சூரியனின்  பாகையைக்  கழித்து  வரும் பாகையின்  மீதோ  அல்லது  அதற்குத்  திரிகோணத்திலோ  கோசார  சனி வரும் காலத்தில் தாயின் மரணம் நிகழலாம்.

3.   4 ம் பாவமுனை, சூரியன், சந்திரன்   மற்றும்  குரு ஆகியவற்றின் பாகைகளைக் கூட்டி வரும் புள்ளியை  சனி 3, 7, 10  பார்க்க அல்லது 5 , 9 , 10 ஆகிய இடத்தில் இருக்கவும் அன்னையின் அந்திமகாலம் ஏற்படுகிறது.

எனவே, அன்பர்களே  குழந்தையின்  ஜாதகத்தைக்  கொண்டு தாயின் மரணத்தையறியும் வழி முறைகளை ,விதிகளை அறிந்து கொண்டது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
வாழ்க வளமுடன்.
                                                    --   எஸ்.விஜயநரசிம்மன்.














3 comments: