யோக நிலை
ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது மிகச் சிறப்பான விளைவுகளை, அது நல்ல யோகமோ அல்லது அவயோகமோ எதுவாயினும் ஏற்படுத்தக்கூடியது, அதன் ஏற்படும் நிலையைப்பொறுத்து அது அனுகூலமானதா ? அல்லது அனுகூலமற்றதா ? - என முடிவு செய்யப்படுகிறது. அனுகூலமானதாக அமைந்தால் யோகமானது.
ஜாதகருக்கு அதிக சக்தியையும், கௌரவத்தையும், உயர்நிலையையும், நல்ஆரோக்கியத்தையும், நல்வாழ்க்கையையும் அளிக்கிறது. அனுகூலமற்ற யோகங்கள் ஏழ்மையையும், மரியாதை இழப்பையும், வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கஷ்டங்களையும் அளிக்கிறது. இவற்றை மகா பாக்ய யோகம் மற்றும் துர்பாக்ய யோகம் என அழைக்கிறோம். இதையே பராசரர் இராஜயோகம் மற்றும் விபரீத ராஜயோகம் என அழைக்கிறார்.
இராஜயோகம் என்பது கேந்திரம் மற்றும் கோணங்களுக்கு முக்கியமாக அதன் அதிபதிகளின் தொடர்பின் அடிப்படையில் ஏற்படுவதாகும். விபரீதராஜயோகம் என்பது மூன்று திருக் வீடுகள் எனப்படும் 6, 8, 12 ஆம் வீடுகளுடன் அதன் அதிபதிகளின் தொடர்புநிலை அடிப்படையில் நிகழ்வதாகும். ஒரு யோகத்திற்குத் தேவையான நிலைகள் முழுமையடையும் போது, எந்த ஒரு இணைவும் யோகமாக மாறிவிடுகிறது.
பண்டைய ஜோதிட இலக்கியங்களில் யோகத்தைப்பற்றிய ஒவ்வொரு நிலைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இயற்கை சுபர்கள் இலக்னத்துக்கு அல்லது சந்திராலக்னத்துக்கு 6, 7 மற்றும் 8 ஆம் வீடுகளில் இருக்கும் நிலை அதியோகத்தை ஏற்படுத்துகிறது. இங்கு இலக்னத்தைப் பற்றியோ அல்லது ஆதிபத்தியத்தைப் பொருத்தோ எதுவும் சொல்லப்படவில்லை. இந்த சிறப்பான கிரகநிலைகள் ஒரு ஜாதகத்தில் ஏற்பட்டதென்றால் அந்த ஜாதகர் பொருளாதாரநிலையில் அதிர்ஷ்டம் மிக்கவராக இருப்பார்.
யோகங்கள் ஒருவரையறைக்கு உட்பட்டது. அவற்றை நம் இஷ்டத்திற்கு வளைக்க முடியாது. உதாரணமாக ஹம்சயோகம், மாளவியயோகம், ருசகயோகம், சசயோகம் மற்றும் பத்ர யோகங்கள் முறையே குரு, சுக்கிரன், செவ்வாய், சனி மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் தங்கள் உச்ச அல்லது ஆட்சி வீட்டில் அமர்ந்து, அதுவே கேந்திரமாகவும் இருக்க ஏற்படுகிறது. இதில் ஒரு நிலைமாறினாலும் யோகம் ஏற்படாது. மேலும் வேறு கிரக பாதிப்புக்களும் இருக்கக்கூடாது. உடாரணமாக, கடகத்தில் குரு உச்சமாகி, அஸ்தமனமாகியிருக்கக்கூடாது அல்லது மிதுனம் 10 பாகையில் இருக்கக்கூடாது. இந்த இரண்டு நிலைகளிலுமக ஹம்சயோகம் உயர்வைத்தராது. ஏனெனில், முதல் நிலையில் குரு அஸ்தமனமானதாலும், இரண்டாவதில் மிதுனம் குருவின் ஆட்சி அல்லது உச்ச வீடல்ல என்பதேயாம்.
No comments:
Post a Comment