Search This Blog
Monday, 24 March 2014
Saturday, 8 March 2014
ஜோதிட மேதை. வி. எஸ். கல்யாணராமன். பெங்களூரு
உ
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ
ஜோதிஷ்
ஏக் ஸங்கேத் ஹை, ஹை பவிஷ்ய அனுமான், யே ப்ராக்யா
கி ஜ்யோதி கா ஹை அத்யாம்திக் ஞான் I
எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வுகளைத்
துல்லியமாக நமக்குத் தெளிவாக எடுத்துரைப்பதே ஜோதிடமாகும். அதுவொரு
உள்ளுணர்வின் ஒளி மற்றும் இறைஞானம் ஆகும். இந்த இறையருளால் ஒரு
நல்ல ஜோதிடன், நெத்தியடியாக பலன்களை உரைக்கமுடிகிறது.
தசா, புத்தி மற்றும் கோசார நிலைகள் ஆகிய,
கர்மவினைகளின் சமன்பாட்டு நிலைகள் ஒத்து வரும் போது மற்றும் நன்றாக வேலை செய்யும் போது,
இது அவனுக்கு சாத்தியமாகிறது, என்றால் மிகையாகாது.
இத்தகைய ஜோதிடர்கள், இகலோக ஜோதிட நிலைகளிலும், (முன்டேன் அஸ்ட்ராலஜி)
தமது இலக்கைக் குறிவைத்துத் தாக்கும் தோட்டாபோல், தங்கள் பலன்களைத் தரத் தவருவதில்லை. இத்தகைய பெருமைமிகு
ஜோதிடர் பெரியவர் ஆனாலும் அகவை எண்பது கடந்த இளைஞர், திரு. வி.எஸ். கல்யாணராமன் அவர்கள், வருடாவருடம், எக்ஸ்பிரஸ் ஸ்டார் டெல்லர் (ஈஎஸ்டி) ஆங்கில ஜோதிட மாத இதழ் வழங்கும், “ஈஎஸ்டி நாஸ்டர்டாம்ஸ் அவார்டு” எனும்
2013 வருடத்திற்ககான கௌரவம் மிக்க பரிசை, வழங்கி
கௌரவப்படுத்தி அதுவும் கௌரவமடைகிறது என்பது நமக்கெல்லாம் பெருமைதானே ? ( நாஸ்டர்டாம் – பிரான்ஸில் பிறந்த, உலகின் மிகப் பெரிய ஜோதிட ஆலோசகர் மற்றும் அருள்வாக்குச் சித்தர் ஆவார்
).
இத்தகைய ஜோதிடமேதை, வானியலாளர் மற்றும் கணித மேதை திரு வி.எஸ். கல்யாணராமன் அவர்கள் ஈ.எஸ்.டி ஆங்கில ஜோதிடப் பத்திரிக்கை
மற்றும் தமிழ், மலையாள ஜோதிடப் பத்திரிக்கைகளில் ஆராய்ச்சிக்
கட்டுரைகள், எழுதிவரும் மிகப் பெரிய, மிகச்
சிறந்த எழுத்தாளராவார். இவர் இந்திய தேசிய அரசுப் பணியில்,
காவல் துறையில் உயரிய பதவியில் சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இளம் வயதிலேயே, பிரசித்திபெற்ற புருஷோத்தமன் நம்பூதிரியிடம் ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்வதில்லை
என்ற வாக்கோடு, பயின்றார். பாஸ்கரதாசன்,
படோத்பலா, விஎஸ்கே, உத்பலா,
மிஹிரா, பரத்வாஜா, அஜாதசத்ரு,
ஜனமேஜயா. ஞானவாக்யா என பல புனைபெயர்களில் எழுதிவரும்,
இந்த ஜோதிட மேதை இப் பெருமைமிகு விருதைப் பெற்றமைக்காக இவருக்கு “
குருவருள்
ஜோதிடம்
” தனது வாசகர்கள் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.
வாழ்க அவர் புகழ்
! வளர்க அவரின் ஜோதிட சேவை !
--- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி.(அப்ளைடு அஸ்ட்ராலஜி
புதன் காட்டும் வழி
உ
புதன்
காட்டும் வழி
சனி திசையென்றால் வரையறை மற்றும் தடைகள் என விளக்கி, விளையாட்டுத்தனமான மற்றும் வினோதமான சக்தி கொண்ட புதன் தசைக்கு வழிகொடுக்கிறது.
புதன் அனைத்தையும் கற்றுக் கொள்வதற்கும், ஆய்வுகளில்
ஈடுபடுவதற்கும், வெற்றி பெற ஆவலும், மனத்தூண்டுதலும்,
சிரத்தையோடு வேலை செய்வதற்கும் வழிகாட்டுகிறார். ஆனால், சில நேரங்களில் அதீத தூண்டுதலும், நம் செயல்கள்
வெளியில் தெரியாமல் புதன் ஆக்கிவிடுகிறார். நடுநிலை வகிக்கும்
புதனின் குணம் எப்போதும் பிரச்சனையைக் கொடுக்கிறது.
வெற்றிக்கு வேண்டிய விரிவான தகவல்களைக் கொடுத்து நம் வாழ்க்கையை
நல்லமுறையில் அமைத்துத் தருகிறார்.
சரியான முடிவு,
சரியான பேச்சு, சரியான பழக்கம் ஆகியவற்றால் எதிலும் வெற்றி பெற வழிகாட்டுகிறார்.
பொருளைத் தேடி நாம் எங்ஙனம் செல்கிறோம் மற்றும் அவை உலகத்தில் எவ்வாறு
மாறுபடுகிறது என்பதைக் காட்டுகிறார் நாம் திட்டமிட்டுச் செய்யும் காரியங்களால்,
சிகரத்தைந் தொடவைக்கிறார். வாழ்க்கையில் முன்னேற்றத்தைத்
தருகிறார். வேகமான மனதின் தன்மைக்கு ஒளியூட்டக்கூடியவர்.
அவர் தரும் மனவுறுதிப்பாட்டுக்கு இந்த வேகம் தேவைப்படுகிறது.
உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு உணர்த்துகிறார்.
எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், எப்படித்
துல்லியமாக அனுமானித்து எங்ஙனம் முடிவெடுத்து அக் காரியத்தை நிறைவேற்ற வேண்டிய திறனையும்
தருகிறார். இங்ஙனம் எதையும் பகுத்துணரும் நல்லறிவையும் தந்து,
மற்ற கிரகங்களைவிட உணர்ச்சிகளிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.
மாமனைக் குறிக்கிறார். அன்பான தாய்,
புதிய நண்பர்கள், அறிவு, நற்கல்வி, உயர்கல்வி, பாண்டித்யம்,
ஆராய்ச்சி, மேதை, பகுத்தறிவு,
கணித்தத் திறன், கணித வழிச் செயல்பாடு,
எழுத்து, திருத்துதல், உள்ளுணர்வு,
வாயாடுதல், சொற்பொழிவாளர், மேஜிக், வானியல், பொறியியல்,
ஓவியம், ஜோதிடம், படிக்கும்
பழக்கம், கற்பனாசக்தி, அதிக ஞாபகசக்தி,
சிறு பயணங்கள், தர்க்கம், அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய, அனைத்திலும் சீரான
வளர்ச்சி தரும், பொதுவான வெற்றி, திறந்த
மனதுடைய, நீதி, நியாயம், நேர்மை, சரியான தீர்ப்பு, வியாபாரம்,
வணிகம், வர்த்தகம், தரகு,
ஆசிரியத் தொழில், கற்பித்தல், விளம்பரம், அச்சுக்
கூடம்., புத்தகம் மற்றும் எழுது பொருட்கள், பூமிலாபம், சுரங்கம், எஸ்டேட்,
நூலகம், பதிவுத் துறை, தானிய
சேமிப்பு, சொத்துச் சேர்ப்பு, மகிழ்ச்சி,
குழந்தைப் பருவம், புத்திசாலிக் குழந்தை,
அறிவுள்ள தாய், அறிவுள்ள மனைவி, பல வாகனங்கள், ஆண்மை, மூளை அல்லது
மன வளர்ச்சி, தைரியம், கலை ஆர்வம்,
பூரிப்பான, தூயவுணர்வுள்ள, புத்திசாலித்தனம், கைத்திறன், சங்கோஜம்,
முன்ஜாக்கிரதை குணம், நீதித்துறை, அதிர்ஷ்ட நிலை, மறைபொருள் விஞ்ஞானம், பன்முகத்திறமை, தந்திரம், துடுக்குத்தனம்.
நீண்ட பயணங்களில் வெற்றி, வெளிநாட்டு வாழ்க்கை,
உயர்பதவி. மக்களால் மதிக்கப்படுதல், தந்தைக்கு அதிர்ஷ்டம், இசை கற்றல், வியாபார வெற்றி, பதவிவுயர்வு, நாவல்
எழுதுபவர், பத்திரிக்கையாளர், எலக்ட்ரிஷியன்-
ரயல்வே, அழக்ய வீடு, பலருடன்
பழக்கம், ஆயின் நண்பர்கள் சிலரே.
இகலோக ஜோதிடம்.
இலக்கிய உலகம், அறிவியல் கழகங்கள்,
அனைத்துவகைத் தொலைத் தொடர்பு மற்றும் போக்குவரத்து, பொதுவணிகம் மற்றும் வியாபாரம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் ஆட்சி செய்யும்,
ஆறாவது இராசியின் கடவுளாக – ஆயுதப்படை,
இராணுவம், படை சாராத அரசு ஊழியம். புத்தக வெளியீடூ, நாடுகளுக்கிடையேயான நேச உடன் படிக்கைகள்,
ஒப்பந்தங்கள், தொழில்துறை மற்றும் கணினி சார்ந்த
செயல்பாடுகள்.
பொதுத் தொடர்பு, மக்கள் தொடர்பு,
வாங்குதல், விற்றல், முதலாளிகள்,
மொத்த வியாபாரி, ஏற்றுமதி, இறக்குமதி, பேரம் பேசுதல், உணவுப்
பொருள் மொத்த வியாபாரி, துணி ஆலைப் பணியாள், தகவல் தொடர்பு, செய்தித்தாள் தொடர்பு, வதந்திகள், தொலைக்காட்சி, வார, மாத இதழ்கள்,
அறிவிப்பாளர், வானிலை முன்னறிவிப்புக்கள்,
கப்பல், ரயில் பயணங்கள், மாநாடுகள், வரலாறு, அரசியல் கலந்தாய்வுகள்,
விவாதங்கள் அனைத்துக்கும்
காரகராகிறார்.
புதிய பாரதம் - 2014
உ
புத்தாண்டில்
உருவாகும் புதிய பாரதம்… !
1 – 1 – 2014 அன்று நமது தலைநகர் புதுடெல்லியில்,
புதுவருடத்தில் கன்னி இலக்னமாக எழுகிறது. அந்த
உதயமானது புதிய ஆட்சியாளர்களைத் தரலாம். அதிகாரம் எனும் நாற்காலியைப்
பிடிக்கும் சரியான போட்டியாக அமையலாம். நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும்,
அரசியலுக்கும் இடையேயான போராகவும் அமையலாம். இளைய
தலைமுறை அரசியல்வாதிகள், கலைஞர்கள், நடிகர்கள்
மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் உருவாகலாம். நாட்டில் புதிய,
நிலையான மாற்றங்களும், மறக்கமுடியாத பல புதுப்புது
நிகழ்வுகளும் ஏற்படலாம். கீழேயுள்ள புதுவருட ஜாதகத்தை அலசுவோமா
?
|
கேது
|
|
குரு(வ)
|
|
|
லக்//
குரு(வ)
|
சந்
சனி
|
செவ்
|
|
புது வருடம்
01 – 01 – 2014
நியூடெல்லி
நள்ளிரவு- 00—00
இராசி
|
|
|
நவாம்சம்
|
கேது
|
|||
சுக்(வ)
|
|
இராகு
சுக்(வ)
|
சூரி
|
|||||
புத,சூரி
சந்
|
|
இராகு
சனி
|
லக்//
செவ்
|
|
|
|
புதன்
|
இலக்னத்தில் மார்ச் இறுதி வாரம்
முதல், ஜூலை 2 ஆம் வாரம் வரை, தற்காலிக அசுபரான செவ்வாயின் நீண்டகால அமர்வு, நாட்டில்
அரசியல் குழப்பங்கள், போர் மற்றும் பெரும் விபத்துக்கள் ஆகியவற்றைத்
தோற்றுவிக்கலாம். மேலும், எல்லைப் பிரச்சனைகள்,
கொலைகள், கொள்ளைகள் அதிகரிக்கும். மக்கள் முக்கியமாகக் கூடுமிடங்களில் தீ விபத்துக்கள் ஏற்படலாம், வெடிகுண்டுகள் வெடிக்கலாம். மிக முக்கிய தலைவர்கள் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்படலாம் அல்லது மரணமடையலாம்.
இலக்னாதிபதி, 4 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளதால், தானியங்கள், பூமி, தாதுக்கள், சுரங்கங்கள் ஆகியவற்றைப்
பற்றிய பேச்சுக்கள் மக்கள் மத்தியிலும், பாராளுமன்றத்திலும் முக்கியப்
பேச்சாக அமையலாம். இயற்கைச் சீற்றங்களும், நில அதிர்வுகளும் ஏற்படலாம். ஆயினும், புதன் இலக்னாதிபதியாதலால், மக்களுக்கு மகிழ்ச்சியும்,
பல நன்மைகளும் ஏற்படும்.
தன பாவத்தில் இராகு மற்றும் சனியின்
அமர்வு பொருளாதார சீர்கேட்டையும், தேசிய இடர்பாடுகளையும்,
ஏற்றுமதியில் மந்தநிலையையும் ஏற்படுத்தும். பந்த்
மற்றும் தர்ணாக்களும் ஏற்படும். சனி அனைத்து நிலைகளிலும் முன்னேற்றத்தைத்
தரும். சனி, இராகு இணைவு மத்தியில் ஆட்சி
மாற்றத்தைக் கொண்டுவரலாம். குரு பார்வை மேற்சொன்ன நிலைகளில் நல்ல
மாற்றங்களைத் தரும். பொருளாதார நிலைகளில் சிறிது முன்னேற்றம்
ஏற்படும்.
தனாதிபதியின் புத்திர ஸ்தானாதிபதியுடனான
பரிவர்த்தனையால் குழந்தைகள் சம்பந்தமான விஷயங்கள், மகிழ்ச்சி
தரும் பொழுதுபோக்குகள், அவர்களின் கல்விநிலை, பங்குச் சந்தை நிலவரங்கள் ஆகியவற்றில் நாடு முன்னேற்றங் காணும்.
செவ்வாயானவர், துலாத்தில் நுழையும் காலத்தில், நாட்டில் போர் மேகம்
சூழலாம். தொழிலாளர் பிரச்சனைகள், கதவடைப்புக்கள்,
இராணுவத்தில் பிரச்சனைகள், பொதுசுகாதாரப் பிரச்சனைகள்
ஆகியவை ஏற்படலாம்.
மூன்றாம் அதிபதி இலக்னத்தில் இருப்பது,
மீடியாக்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் வியத்தகு முன்னேற்றங்களைத்
தரும். அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்கள், எல்லைப் பிரச்சனைகள், நீர்ப் பிரச்சனைகள் பொருளார ஒப்பந்தங்கள்
ஏற்படலாம். மக்களின் கடின உழைப்பால் நாடு முன்னேறும்.
நாட்டின் முப்படைகளின் தைரியமும், செயல்பாடுகளும்
அதிகரிக்கும். தொழில் நிலைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மக்களின் மதவுணர்வுகளும், சுதந்திர உணர்வுகளும்
கூடும்.
இலக்னாதிபதி புதன், சுகபாவத்தில் அமர்ந்ததால், நாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தால்
வெற்றிகரமான புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாகும். நாடு கல்வித்துறையில்,
மற்றும் சுரங்கத்துறையில் முன்னேற்றம் காணும். சனி மற்றும் செவ்வாயின் பார்வை பாதிப்பால் போக்குவரத்து மற்றும் விவசாயத்துறைகளில்
பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், 4 ஆம் வீட்டின்
பாதிப்பு, வெள்ளம், மண்சரிவு, நிலநடுக்கம், சுரங்க ஊழல்கள், தேசிய
இடர்பாடுகள், பல கட்சிகளுக்கிடையேயான குழப்பங்கள், அரசுக்குப் பின்னடைவுகள் ஆகிய அனைத்தும் தரும். என்றாலும்,
குருவின் பார்வை இப் பாதிப்புக்களைக் குறைக்கும். 4 ஆம் அதிபதி புதன் மற்றும் 10 ஆம் அதிபதி குருவின் பரிவர்த்தனை,
புதியதோர் நல் ஆட்சி அமையப்போவதைக் குறிகாட்டுகிறது.
11 ஆம் அதிபதி சந்திரன் மற்றும்
12 ஆம் அதிபதி சூரியன் ஆகியோரின் 4 ஆம் இட இணைவு,
பொருளாதார சீர்கேட்டையும், நாட்டிற்கு வருவாய்
இழப்பையும் முக்கியமாக விவசாயம், ரியல் எஸ்டேட் துறை,
வாகன விற்பனை ஆகிய துறைகளின் வருவாயை பாதிக்கும்.
5 ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்தது,
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறுகளைத் தரலாம்.
சந்தோஷத்திற்கு இடமானதால், சினிமாத் தொழிலிலும்
சரிவுகள் ஏற்படலாம். கல்விக் கூடங்களில் ஒழுங்கற்ற தன்மைகள்,
ஊழல்கள் ஏற்படலாம். பிப்ரவரி மாதக் கடைசியில் நிலைமைகள்
சீர்படலாம்.
5 மற்றும் 2 ஆம் அதிபதியின் பரிவர்த்தனை யோகம், பங்குச்சந்தை நிலவரங்களில்
முன்னேற்றம் மற்றும் ஏற்ற இறக்கமற்ற நிலையான சூழலைத்தரும். மக்களின்
அறிவுத் தாகம் கூடும். அறிவாளிகளின் எண்ணிக்கை கூடும்.
நாட்டின் புகழும் கூடும்.
ஆறாம் அதிபதி இரண்டாம் இடத்தில்
இருப்பது, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்
சுமுகமற்ற நிலைகள் உருவாகும். நோய்கள், தர்ணாக்கள் ஆகியவற்றால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அரசியல்வாதிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரிக்கும். தைரியம் பெருகும். தலைவர்கள் எதையும் ஆணித்தரமாகப் பேசுவர்.
ஏழு மற்றும் பத்தாம் அதிபதியின்
பரிவர்த்தனை எதிர்க் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் என்பதைக் குறிகாட்டுகிறது.
ஜூலை மாதத்தில் பாராளுமன்றத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
எட்டாம் வீட்டில் உள்ள கேது,
சனியின் பார்வையால் பாதிப்படைவதால், ஆயுள் காப்பீட்டுத்
துறைகளில் சிக்கல்களை உருவாக்கும். பலரின் கூட்டு மரணங்களும்
ஏற்படும். தற்போதைய ஆளும் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும்.
ஒன்பதாம் அதிபதி 5 இல் இருப்பதால் குழந்தைகள் நன்மையடைவர். அவர்களின் கல்வி
நிலை உயரும். சினிமாத்துறை, பங்குச்சந்தை
ஆகியவை நன்நிலை அடையும். நீதிபதிகள், மதத்
தொடர்பான தர்மஸ்தாபனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் ஊழல்களில் பலர் சிக்க நேரிடலாம்.
மேல்சபையில், வெளியுறவுக் கொள்கைகள், கப்பல் துறை மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆகியவற்றிற்கான புதிய சட்டவிதிமுறைகள்
உருவாக்கப்படலாம்.
பத்தாம் வீட்டில் குருவின் அமர்வு
தங்கம். வெள்ளி விலையை மேலும் உயர்த்தும். உணவுப் பொருட்களின் விலையும் உயரும். மார்ச் மாதத்திற்குப்
பிறகு மோசமான அரசியல் சூழ்நிலைகள் மாறி, விலைவாசிகளும் குறையும்.
வடமாநிலங்களில் நல்ல மழை பொழியும். முக்கிய அரசியல்
தலைவர் மரணம் எய்தலாம். வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம்.
நாட்டின் ஒற்றுமை உணர்வு குறையும். தேர்தலுக்கு
முன் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயான விரிசல்கள்
அதிகரிக்கும்.
பதினோராம் அதிபதி 4 இல் இருப்பதால் பொருளாதாரநிலை சீரடையும். கல்வி,
உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு நல்ல முடிவுகள் ஏற்படலாம், விவசாயம், சுரங்கம் பூமி, வாகனங்கள்
மூலமான இலாபங்கள் அதிகரிக்கும்.
டிசம்பர் 2014 இல் குரு வக்ரநிலை அடையும் போது அதீத மழையின் காரணமாக அழிவுகள் ஏற்படும்.
சூரிய கிரகண காலத்தில் ( ஜூலை-17 ) நிலநடுக்கம் மற்றும் புயற்காற்று போன்றவற்றால் அழிவு வரலாம்.
நான்காம் அதிபதி 12 இல் இருப்பது வெளிநாட்டு மூலதனங்கள் அதிகரிக்கச் செய்யும். மருத்துவ மனைகள் நவீனமயமாக்கப்படும், சிறைச்சாலைகள் சீரமைக்கப்படும்.
ஆளும் கட்சியினர் இடையேயான கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வரும்.
எனவே, நண்பர்களே!
புது வருடத்தில், புதிய பாரதம் உருவாகும் என்று
நம்புவோமாக. ஏற்றமிகு எதிர்கால இந்தியாவை நிர்மாணிப்பது இளைஞர்கள்
கையில்தான் உள்ளது. சாந்தி நிலவ வேண்டும், ஆத்ம சக்தி ஓங்க வேண்டும். வாழ்க பாரதம் ! வாழிய பாரதமணித் திருநாடு ! வந்தேமாதரம்
!
--- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம்.எஸ்ஸி (அப்ளைடு அஸ்ட்ராலஜி)
செல் -- 94888 62923 , 9789101742.
Friday, 7 March 2014
பா.ஜ.க - காங்கிரஸ் ?
உ
பாரதீய
ஜனதாக் கட்சி – காங்கிரஸ் கட்சி --- ஓர் ஒப்பீட்டு ஆய்வு.
தேர்தல் – டென்ஷனில் அரசியல்வாதிகளின் பல்ஸ் எகிருவதைப் போல் போதுமக்களின் பல்ஸ் அதிகரிப்பதையும்
நாம் உணரமுடிகிறது. இத் தருணத்தில் பா.ஜ.க. – மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஜாதகத்தை ஆய்வு செய்து
முடிவறிவதே இக் கட்டுரையின் நோக்கம். முதலில் தசா புத்தி அடிப்படையிலும்,
பின்னர் வருட ஜாதகத்தின் மூலமாக இரு கட்சிகளுக்கான வருட பலனை அறிவதன்
மூலமாகவும் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.
பா.ஜ.க வின் ஜாதகம்.
இக் கட்சி உதயமான நாள்
1980 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள்,
பகல் 11 – 30 மணியாகும். தாமரை அன்றுதான் தலைநகர் டெல்லியில் மலர்ந்தது.
சூரி
|
|
சுக்
|
லக்//
|
|
லக்//
சுக்
|
செவ்,
இராகு
|
புத
|
குரு
|
||||
புத, கேது
|
பாஜக -- ஜாதகம்
|
|
சந்
|
நவாம்சம்
|
|
|||||||
|
செவ்,குரு
சனி
இராகு
|
சூரி
|
|
|||||||||
|
சந்
|
|
|
சனி
|
|
கேது
|
|
|||||
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான,
நமது நாட்டின் பாராளுமன்றத் தேர்தல், இந்த வருடம்
ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் முதல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக் காலத்தில் பாஜக கட்சிக்கு நடக்கும் திசையானது சூரிய திசை,
இராகுபுத்தி மற்றும் சந்திரன் அந்தர காலமாகும்( 10-4-2014 முதல் 8-5-2014).
தசாநாதன் சூரியன் மூன்றாமிடத்துக்கு
உரியவனாகி 10 ஆம் இடத்தில் உள்ளான். 10 ஆம் இடமானது, நிர்வாகத் தலைமையைக் குறிக்கும்.
பிரதமர், ஆட்சிப் பதவிகள், அதிகாரங்கள், அதிகாரத்துக்கு வரும் கட்சி, அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும் உலக அரங்கில் தேசத்தின் பெருமை, கெளரவம், புகழ் ஆகியவற்றைக் குறிக்கும்.
சூரியனின் காரகங்கள் ஆவன
– அரசர், ஜனாதிபதி, பிரதம
மந்திரி, நாட்டின் தலைமை, ஆட்சியாளர்,
மத்திய மந்திரி சபை, அதிகாரப் பதவி, செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் ஆகியவையாகும். சூரியன்,
புதனின் நட்சத்திரத்தில் உள்ளார். 3 ஆம் இடம் அண்டை
நாடுகள், அவற்றின் திருப்தி மற்றும் திருப்தியற்ற நிலைகள், பொது
அறிவிப்புக்கள், மேடைப்பேச்சு ஆகியவற்றைக் குறிக்கும்,
தசாதிபதி சூரியன் புதனின் சாரத்தில்
10 ஆம் இடத்தில் பலம் பெற்று, புதன் 9 ஆம் இடத்தில் உள்ளார். அவர் 10 ஆம் அதிபதி குருவால் பார்க்கப்படுகிறார். இலக்னாதிபதியான
புதன் 9 இல் பலம் மிக்கவராக உள்ளார். புதன்,
குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால் மேலும் பலம் பெறுகிறார்.
சந்திரன் அந்தரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், 2 ஆம் அதிபதியான அவர் புதனின் சாரம் பெற்று, வெற்றி பாவமான
6 இல் உள்ளார். 9 இல் உள்ள புதன் செவ்வாயால் பார்க்கப்படுகிறார்.
இக் காரணங்களினால் தசா புத்தி அந்தர காலத்தில் கிரக நிலைகள் பாஜக வுக்கு
சாதகமாக இருந்தாலும். குரு, செவ்வாய்,
சனி மற்றும் இராகுவின் மூன்றாமிட அமர்வு தங்களின் சுயபலத்தில் ஆட்சி
அமைக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
இனி கோசார நிலைகளைப் பார்ப்போம்,
16 – 4 – 2014 அன்றைய கோசார நிலை ;
புத
|
சூரி.கேது
லக்//
|
|
குரு
|
|
சுக்
குரு
|
சூரி
லக்//
|
கேது
|
சனி
|
சுக்
|
16 – 4 2014
டெல்லி
|
|
|
நவாம்சம்
|
செவ்
|
|||
|
|
சந்
புத
|
|
|||||
|
|
சந், சனி
இராகு
|
செவ்
|
|
இராகு
|
|
|
சந்திராலக்னத்துக்கு 7 இல் ,11 ஆம் அதிபதி சூரியன் உள்ளார். 7 ஆம் இடம் கூட்டாளியைக் குறிக்கிறது. எனவே, கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும். அவர்களால் பாஜகவுக்கு ஆதாயம் / இலாபம் ஏற்படும்.
சந்திராலக்னத்திலுள்ள உச்ச சனி ஜனனஜாதக 10 ஆம்
அதிபதி குருவின் சாரம் பெற்றும், குரு, புதன் பரிவர்த்தனையாகி, குருவால் சந்திராலக்னம் பார்க்கப்படுதலாலும்
பாஜகவுக்கு சாதகமான நிலை ஏற்படுகிறது. கோசாரத்தில் சூரியன் வர்க்கோத்தமமாகி,
இலக்னத்தில் கேதுவுடன் இணைந்து, கேதுவின் சாரத்தில்
உள்ளார். கேது – கிரீடம், செங்கோல், வெற்றிச்சின்னம் மற்றும் வெற்றிக் கோப்பையையும்
குறிக்கிறது. எனவே பாஜக ஆட்சியைப் பிடிப்பது திண்ணம்.
பொதுவான சூரிய தசா (9-
5 2018 வரை) பலன் –
அரசு மற்றும் அரசியல் ஆதாயங்கள்
கிட்டும். யந்திர, மந்திர மற்றும் ஆன்மிக
உணர்வுகள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களின் நட்பு மற்றும்
ஆதரவு கிடைக்கும். அதனால் அனைத்துப்பணிகளையும் சிறப்பாகச் செய்யமுடியும்.
இக்காலத்தில் மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உருவாகும். கூட்டாளிகளுக்குள் ஒற்றுமையின்மை, பிரிவு மற்றும் எதிர்ப்புகள்
நிலவும். கால்நடைகள் மற்றும் அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை
குறையும். அனைத்துப் பணிகளையும் அரசு வெற்றிகரமாக முடிக்கும்.
இராகு – அரசின்
சதிகள், கிளர்ச்சிகள், கலகங்கள்,
ஆள்மாறாட்டம் ஆகியவற்றைக் குறிப்பதால் இராகு புத்தியில் வன்முறைகள்,
கலகங்கள் ஏற்படலாம். இராகு புத்தியில்தான் ஹிட்லர்
ஜெர்மனியின் வேந்தனானான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நற்பலன்கள்
ஏற்படும்.
இனி
காங்கிரஸின் ஜாதக, தசா, புத்தி,
அந்தரநிலைகளை அலசுவோமா ?
1969 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள்
22 ஆம் நாள் முன்னாள் பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்களால் காலை
10 மணிக்கு தலைநகர் டெல்லியில் உருவாக்கப்பட்டது. அதன் ஜனன ஜாதகப்படி காங்கிரஸின் எதிர்காலம் எங்ஙனம் உள்ளது என்பதை ஆராய்வோமா
?
|
சனி(வ)
சந்
|
|
|
|
|
சுக்
|
இராகு
|
செவ்
|
இராகு
|
தேசிய காங்கிரஸ்
|
|
|
நவாம்சம்
|
சனி(வ)
|
|||
செவ்
|
கேது
|
|
சந்
சூரி
|
|||||
லக்//
|
சூரி, புத
|
குரு, சுக்
|
|
|
கேது
|
குரு
|
லக்//
புத
|
நடப்பு
திசா
– இராகு/ குரு புத்தி, மற்றும் சுக்கிர அந்தர காலமாகும்.
தசாநாதன் இராகு நீச சனியின் ஆட்சி
வீட்டில் பலமற்ற குருவின் சாரம் பெற்றுள்ளார். அந்தர நாதன் சுக்கிரன்
தற்காலிக அசுபராவார். 6 மற்றும் 11 க்கு
உரியவர். குருவின் சாரம் பெற்றுள்ளார். 1 மற்றும் 4 க்கு உரிய குரு 11 இல்
சுக்கிரனுடன் இணைவு பெற்றுள்ளார். ஆட்சி மற்றும் அரசியலைக் குறிக்கும்
சூரியன், பாதகாதிபதியான புதனுடன் இணைந்து விரயபாவமான
12 இல் உள்ளார். பகை வீடான சுக்கிரன் வீட்டில்,
குரு, செவ்வாயின் சாரம் பெற்று பலமிழக்கிறார்.
பலமற்ற குருவின் சாரம் பெற்ற சுக்கிரன் அந்தரத்தை நடத்துகிறார்.
இந்நிலைகள் காங்கிரஸுக்கு சாதகமான நிலைகளல்ல.
பொதுவாக, இராகு திசை சந்தோஷமின்மையையும், கஷ்டமான சூழலையும்,
மனக் குழப்பங்களையும் தரும். சக்திமிக்க எதிரிகளைக்
கண்டு அஞ்சுவர். தலைகுனிவு மற்றும் அவமானங்களைத் தரும்.
கூடாநட்பு கேடாய் முடியும். பதவி இழப்புகளும் தவிர்க்க
முடியாததாகும். குரு புத்தி தடைகளையும், பண இழப்புகளையும் தரும்.
அடுத்து, இரண்டு கட்சிகளின் வருஷ ஜாதகத்தின்படி பலன்களைக் காண்போமா ?
சந்,சூரி
முந்தா
புத,குரு
|
கேது
|
|
குரு
(வ) |
|
முந்தா
சூரி.சுக்
செவ்
|
கேது
|
குரு
|
|
|
காங்கிரஸ்
22 – 11 – 2013 ---
நவம்பர் - 2014
|
லக்//
சந்
|
சந்
புத
|
சுக் பாஜக
6 – 4
- 2013 முதல்
ஏப்ரல் – 2014 மற்றும் ஏப்ரல்
2015.
வரை
|
|
|||
|
முந்தா.
செவ்
|
|
|
|||||
சுக்
|
சூரி
|
இராகு,
சனி
புத
|
|
|
லக்//
|
சனி
(வ)
இராகு
|
|
செவ்
பாஜக – வெளியிலுள்ளவை 2014 – 15 க்கான வருஷ ஜாதக கிரக நிலைகள்.
காங்கிரஸின் வருஷாதிபதி சந்திரன்
பலம் மிக்கவராக உள்ளார். அதன் காரணமாக கூட்டாளிகளால் நன்மை ஏற்படும்.
புதிய கூட்டணிகள் உருவாகும். அரசில் முக்கியத்துவமும்,
ஆதாயங்களும் ஏற்படும். அரசு உயர் அதிகாரிகளின்
உதவிகள் கிடைக்கும். புகழும் மரியாதையும் குறையாது. சமூகப் பணிகளில் ஆர்வம்
அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.
முந்தா என்றால் -- பிறக்கும் போது இலக்னத்தில் இடம்பெறும்
முந்தா, ஒவ்வொரு ஆண்டும் ஒரு இராசிக் கட்டம் நகரும், முக்கியப் புள்ளியாகும்,
முந்தாவின் நிலை ; இரண்டாம் பாவத்தில் முந்தா, செவ்வாயுடன் இணைவு.
முயற்சியால் ஆதாயம் மற்றும் கூட்டாளிகளிடம் மரியாதையும் உயரும்.
இரண்டாமிடம் கௌரவத்தையும், அரசு அனுகூலங்களையும்,
கூடுதல் பலத்தையும் தரும். அனுகூலமற்ற நிலைகள்
அனுகூலமாகும். கேளிக்கைகளிலும், சுகானுபவங்களிலும்
ஆர்வம் கூடும்.
சிம்மராசியில் முந்தேஷின் நிலைக்கான
பலன் ; அரசாங்க ஆதரவு உண்டு. அரசு அதிகாரிகளின்
நட்பு ஆதாயம் தரும். தேர்தல்களில் வெற்றி கிட்டும். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
5 ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ள
முந்தேஷ் – சூரியன் தரும் பலன்கள் ; மக்களால்
சந்தோஷம் ஏற்படும். அரசு மரியாதை கிடைக்கும்.
இனி
பாஜகவின் வருஷஜாதக பலனைக் காண்போம் ;
வருஷாதிபன் – செவ்வாய் ஆவார். அவர் தரும் பலன்.
புகழ், எதிரிகள்
சிதறி ஓடுதல், அதிகாரபதவி கிடைத்தல், புதிய
கூட்டாளிகள் மற்றும் நண்பர்களின் நல்லுறவு ஆகியவற்றைத் தரும். காவற்துறையின் உதவிகள் கிடைக்கும். கௌரவமும்,
மரியாதையும் அதிகரிக்கும். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் பொறுப்புள்ள
பதவிகள் மற்றம் அதிகாரம் மிக்க பதவிகள் தேடிவரும்.
முந்தா தரும் பலன் ; தற்போது 5 ஆம்
பாவத்தில் இருக்கும் முந்தா, பலத்தைக் கூட்டி, மகிழ்ச்சியைப் பெருக்கும். புதிய கூட்டாளிகளின் தொடர்பு,
கடவுள், அந்தணர்கள் மற்றும் அரசு எனப்படும் மக்களின் ஆதரவு பெருகும். வெற்றிகள் குவியும், வெற்றி விழாக்கள், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஏற்படும். உலகமெங்கும் புகழ்
பரவும். மத ஆர்வங்கள் மற்றும் புனிதப் பயணங்கள் பலன் தரும்.
மீனராசியில் இருந்து முந்தா தரும்
பலன் ; அனுகூலமான பலன்கள் தொடரும். புண்ணிய
புருஷர்களின் அருகாமை கிட்டும். வெற்றி மேல் வெற்றி கிட்டும்.
எதிர் பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். அரசியலில்
ஏற்றமிகு காலமாக இருக்கும்.
முந்தேஷ் ஆன குரு 7 ஆம் பாவத்தில் இருப்பதால், கூட்டணிக் கட்சிகளால் ஏற்படும்
தொல்லைகள் அதிகரிக்கும். அதனால் கவலைகள் ஏற்பட்டு பணிகளில் தொய்வும், தாமதங்களும்
ஏற்படும்.
மேற்சொன்ன பலன்கள்
2014 ஏப்ரல் வரையாகும். இனி 2015 ஏப்ரல் வரையான பலன்களைப் பார்ப்போம்.
இவ்வருடத்திற்கான வருசேஷ் சுக்கிரன்
ஆவார். அவர் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களைப் தருவார், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கருத்து
மோதல்களில் வெற்றியைப் தரும். அரசுக்கு ஆதாயங்கள் பெருகும்.
நவீன பொழுதுபோக்கு சாதனங்கள், நவநாகரீகப் பொருள்கள்
ஆகியவற்றின் வர்த்தகம் பெருகும். மக்களுக்கும் இதன் பலன்கள் சென்றடையும்.
பொருளாதார உயர்வு ஏற்படும்.
முந்தா புள்ளி 6 ஆம் பாவத்தில் விழுவதால், வெற்றிகள் குவியும்.
ஆயினும், மக்களின் ஆரோக்கியம் குறையும்.
பணிகளில் முடக்கம் ஏற்படும். விபத்துக்கள் அதிகரிக்கும்,
மனஅமைதி குறையும். பெண்களுக்குத் தீங்கு ஏற்படுவதின்
மூலமாக அவமானங்கள் ஏற்படும். கடன்களும் அதிகரிக்கும்.
முந்தேஷ் – செவ்வாயின் இராசியான, மேஷத்தில் இடம் பெற்றுள்ளதால்,
அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும், ஆயுதங்களால் ஆபத்துக்கள்
ஏற்படும், போர், கலகம், வழக்கு விவகாரங்கள் மற்றும் செலவினங்களும் கூடும்.
முந்தேஷ் – இலாப பாவத்தில் இடம்பெற்றுள்ளதால் பொருளாதார முன்னேற்றங்கள், தொழில் துறை மற்றும் வணிக முன்னேற்றங்கள் ஏற்படும். தாய்த்
திருநாட்டின் புகழ் தரணியெங்கும் பரவும். மக்களுக்கும் சுகமான
நல்வாழ்வு அமைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
எனவே நண்பர்களே ! இரு கட்சிகளின் தசா பலன்கள் மற்றும் வருஷ ஜாதக பலன்களை ஆராயுங்கால்,
பாரதீய ஜனதா கட்சிக்கே அதிக அனுகூலமான பலன்கள் தென்படுவதைக் காணலாம்.
காலம் சொல்லும் பதில் என்ன ? – என்பதைப் பொருத்திருந்து
பார்ப்போம். என் தந்தை எழுதியபடி ‘ சாந்தி
நிலவ வேண்டும், ஆத்ம சக்தி ஓங்க வேண்டும் – உலகிலே சாந்தி நிலவ வேண்டும்’
வாழ்க பாரதம் ! வாழிய பாரதமணித் திருநாடு ! வந்தேமாதரம் !
-- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன்.
எம். எஸ்ஸி ( அப்ளைடு அஸ்ட்ராலஜி
).
Subscribe to:
Posts (Atom)