Search This Blog

Tuesday, 8 April 2014

அரவிந்த் கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும்.!




ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ

அரவிந்த் கேஜ்ரிவாலும், ‘ஆம் ஆத்மிகட்சியும்

     பாரதத்தின் தலைநகர் டெல்லியின் தற்போதைய கதாநாயகன் அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும் ஆவார். மீடியாக்களின் கவனத்தை முழுவதுமாக கவர்ந்த அவர் மற்றும் அவரின் கட்சியின் ஜாதகங்களை அலசுவது இப்போது பொருத்தமாக இருக்குமல்லவா ?

     திரு. அரவிந்த் கேஜ்ரிவால், திரு. கோவிந்தராம் கேஜ்ரிவால் மற்றும் கீதாதேவி தம்பதியருக்கு மகனாக ஹரியானா மாநிலம், சிவானி எனும் ஊரில் 1968 ஆம் வருடம், ஆகஸ்டு மாதம் 16 ஆம் நாள், இரவு 11-40 மணிக்குப் பிறந்தார். ஹிஸ்ஸாரில் பள்ளிப் படிப்பைமுடித்த பின், மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கரக்பூரிலுள்ள, ஐஐடி யில் மெகானிகல் இன்ஜினியரிங் படித்து, ஐஆர்எஸ் தேர்வில் வெற்றிபெற்று இன்கம்-டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட்டில் ஜாய்ண்ட் கமிஷனராகப் பதவிவகித்து, அதிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, திரு. அன்னாஹஸாரேயின் இயக்கத்தில் இணைந்து, அதன் பின் அரசியலில் குதிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கினார். 28 டிசம்பர் 2013 அன்று டெல்லி மாநில முதலமைச்சரானார்.

இராகு
சனி()
லக்///
சந்


சந்
சூரி,சனி
()

கேது
புதன்

அரவிந்த்கேஜ்ரிவால்
16 ஆகஸ்டு 1968.
23-40
சிவானி, ஹரியானா
செவ்
லக்//


நவாம்சம்


சூரி,புத
சுக்,குரு

சுக்



கேது
இராகு
செவ்

குரு

சூரிய திசா இருப்பு – 1 வருடம் 0 மாதம் 9 நாள்.

    ஸ்திர இலக்னத்தில் மற்றும் நிலதத்துவமான ரிஷபத்தில் பிறந்த இந்த ஜாதகரின் ஜாதகத்தில், 3 ஆம் அதிபதியான, உச்சமான சந்திரன் அமர்ந்துள்ளான். அதன் காரணமாக இந்த ஜாதகர் அனைத்து சவால்களையும் ஏற்கும் தைரியம் மிக்கவராகவும், சுயமுயற்சியால் முன்னேறுபவராகவும், நிலையானவராகவும், பெருமையும், புகழும் மிக்கவராகவும் இருப்பார். செவ்வாயின் நீச பாவமானதால் ஜாதகருக்குச் சில தடைகளைத் தரலாம். 10 ஆம் இடத்து அதிபதி கர்மராரகன் சனி, 12 இல் நீசமாகி அமர்ந்துள்ள நிலை மற்றும் 10 ஆம் இடத்தை, சூரியன், புதன், குரு மற்றும் சுக்கிரன் ஆகியோர்  பார்க்கும்நிலை ஆகியவற்றால், ஜாதகரை திறமை மிக்கவராகவும், சுயமாக முன்னேற்றமடைபவராகவும் ஆக்கியது. ஆயினும் ஜாதகரை சந்தோஷ நிலையில் இருக்கவிடாது.

   பொதுவாக, இந்த ஜாதகர் அமைதியானவர், கடமைதவறாதவர், பொறுமையானவர் மற்றும் தீர்மானமான எண்ணமுடையவர் மற்றும் உடலலளவில் பலமானவர். சில நேரங்களில் கோபம் வந்தால் பூகம்பம் போல் அதிர்பவர். வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அடைவார். அன்பானவர்களுக்காக தியாகம் செய்வார், இவர் தான் வெறுப்பவர்களை எப்போதும் மன்னிப்பதில்லை, இசை மற்றும் அழகை ரசிப்பவர். எதற்கும் அசைந்து கொடுக்காதவர், திட்டங்களை வெற்றிகரமாக முடித்திடும் திறமைமிக்கவர். பணவிஷயங்களைப் பொருத்தவரை கறார் பேர்வழி, சொத்து சேர்ப்பதில் ஆர்வமுள்ளவர். தனது இலக்கை அடைவதையே இலட்சியமாக்க் கொள்வார். பலமான யோசனைக்குப் பிறகே எவரிடமும் நட்புக் கொள்வார், அதன் பின்னர் அவர்களிடம் அர்பணிப்பு உணர்வோடு நடந்துகொள்வார். சமூக வாழ்க்கையில் தன்னை பெரிதாகக் காட்டிக் கொள்வார்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த இந்த ஜாதகர், உருவாக்கும் வேலைகளில் வல்லவர், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்வார். அரசியல் நண்பர்களை உடைத்தாயிருப்பார். அரசால் ஆதாயங்களைப் பெறுவார். அரசியலில் மிக்க உயரத்தை எட்டுவார்.

    இனி கிரக அமர்வின் நிலைப்படி ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.

    நான்காம் இடத்திலுள்ள சூரியன், தாயின் மூலமான சந்தோஷத்தையும், அரசாங்கத்தில் உயர் பதவியையும், முக்கியப் பொறுப்புக்களையும் தருகிறது. புகழையும் தந்து, அனைவராலும் அறியப்பட்டவராகவும் ஆக்கிவிடுகிறது. புறமுதுகு காட்டாமல் எதிர் நின்று போரிடும் திறமையுடையவராகவும் ஆக்குகிறது.

    இலக்னத்தில் இடம்பெற்ற சந்திரன், அமைதியை விரும்புபவராகவும், வீண் சண்டைகளை விரும்பாதவராகவும், நற்குணமுடையவராகவும், பலம்மிக்கவராகவும் மற்றும் சந்தோஷம் மிக்கவராகவும் ஆக்கிவிடுகிறது. சமூக அந்தஸ்து நிலையானதாக இருப்பதோடு, சாஸ்திரங்கள் அறிந்தவராகவும் ஆக்கிவிடுகிறது.
    மூன்றாமிடத்தில் அமர்ந்துள்ள செவ்வாய், ஜாதகரை வீரம் மிக்கவராகவும், புகழ் மிக்கவராகவும், சக்திமிக்கவராகவும், அரசால் கௌரவம் அடைபவராகவும், உலகப் புகழ் அடைபவராகவும் ஆக்கிவிடுகிறது.
    நான்காம் இடத்தில் உள்ள புதன், இவரை ஒரு நல்ல ஆலோசகராகவும், திறமைமிக்கவராகவும், நினைவாற்றல் மிக்கவராகவும், பிரபஞ்ச அறிவு மிக்கவராகவும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுபவராகவும், மக்கள் கூட்டத்திற்குத் தலைவராகவும், மாகாணத்தால் மதிக்கப் படுபவராகவும், அதிகாரம் மிக்கவராகவும், அதிக வாகனங்களையுடையவராகவும் ஆக்கிவிடுகிறது.

    நான்காம் வீட்டிலுள்ள குரு அழகையும், சக்தியையும், அறிவையும், பேச்சுத் திறனையும், தலைமைப் பதவியும், அரசு இல்லமும் தந்து, அனைவரின் பாராட்டுதலையும், உலகப் புகழையும் தருவார். இவரின் வாழ்க்கையின் பிற்பகுதியில் வெற்றிகள் குவியும்.

    நான்காம் வீட்டிலுள்ள சுக்கிரன், கடின உழைப்பையும், பக்தியையும், அரச கௌரவத்தையும், மரியாதையையும், ஒரு கோவிலைவிட அழகான வீட்டையும், அரியணையையும் மற்றும் இராஜகீரிடத்தையும் தரும். ஜாதகர் வெற்றி வரும்போது மமதையும், தோல்வி வரும்போது கவலையும் கொள்ளமாட்டார்.

    சனி பனிரெண்டில் இருக்க ஜாதகர் ஒரு ஞானிபோல் வாழ்வார். தனிமையை விரும்புவார். தலைமைப் பதவியை அலங்கரிப்பார். இரகசியமாக சொத்துக்களைச் சேர்ப்பார்.

    இலாபத்தில் இராகு, நீண்டஆயுளையும், சமூகத்தில் தலைமைப் பொறுப்பையும், தேசத்தில் அவருக்கென ஒரு நற்பெயரையும், புகழையும் தருவார். ஜாதகர் முறையற்றவழியில் செல்வந்தர் ஆவார். அந்நிய நாட்டினரால் ஆதாயமும், புகழும் அடைவார். வெற்றிகரமான இவரின் ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேறும்.
    ஐந்தில் கேது, புனிதப் பயணங்கள், வெளிநாடு செல்லும் ஆசை ஆகியவற்றைத் தரும். ஜாதகர் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் வல்லவர் ஆவார்.
    சர்வாஷ்ட வர்க்கத்தில் 1, 2, 3. 6 மற்றும்11 ஆம் பாவங்களில் முறையே 33, 39, 30, 30 மற்றும் 33 பரல்கள் இருப்பது, ஜாதகரை சக்திமிக்க மனிதராகவும், சவால்களை எதிர்கொள்பவராகவும், முயற்சிகளில் ஆதாயம் அடைபவராகவும், தோல்விகளைக் கண்டு அஞ்சாதவராகவும் மற்றும் செல்வந்தராகவும் ஆக்கிவிடுகிறது.

33
 11
25
12
33
 1
39
 2
28
 10


சர்வாஷ்டகவர்க்கம்
30
 3
29
 9
26
 4
26
 8
20
 7
30
 6
18
 5


    இனி கிரகங்கள் பாவகங்களில் மாறிநிற்கும் பலன்களைப் பார்ப்போம்.

    இலக்னாதிபதி சுக்கிரன் நான்கில் இருந்து, ஜாதகரைப் பெற்றோரிடம் பக்தி உடையவராகவும்,   தந்தை மற்றும் அரசிடமிருந்து ஆதாயத்தை அடைபவராகவும்  ஆக்கிவிடுகிறது.

    இரண்டாம் அதிபதி நான்கில் அமர, ஜாதகர் பெரிய இல்லங்களையும், பண்ணைகள், தோட்டங்கள் மற்றும் வாகனங்களையும் உடையவராக இருப்பார்.

    மூன்றாம் அதிபதி இலக்னத்தில் அமர, ஐாதகர் வீரம்மிக்கவராகவும், கொடுமையானவராகவும் மற்றும் தர்க்கம் செய்பவராகவும் இருப்பார்.
    நான்காம் அதிபதி நான்கில் அமர ஜாதகர் புத்திசாலித்தனம் மிக்கவராகவும், 
நாகரீகமானவராகவும் இருப்பார். அமைச்சராகும் வாய்ப்பும் ஏற்படும்.

    ஐந்தாம் அதிபதி நான்கில் இருப்பதும் மந்திரிபதவியைத் தரும்.

    ஆறாம் அதிபர் நான்கில் இருக்க ஜாதகர் கோபத்தால் சிவக்கும் கண்களை உடையவராய் இருப்பார். தந்தைக்கு ஆரோக்கியக்குறைவு ஏற்படும்.

   ஏழாம் அதிபர் மூன்றில் இருக்க மகனுக்கு ஆரோக்கியக்குறைவு ஏற்படும்.

   எட்டாம் அதிபர் நான்காம் பாவத்தில் இருக்க ஜாதகருக்கு எதிர்பாராத தனவரவு உண்டு. புறம் பேசுபவராக இருப்பார்.

   ஒன்பதாம் அதிபதி பன்னிரண்டில் இருக்க ஜாதகர் வெளிநாட்டுப் பயணங்கள் செல்வார்.

   பத்தாம் அதிபதி பதினொன்றில் இருக்க  ஜாதகருக்கு எதிரிகளால் தொல்லையும், வெற்றிகளில் தடையும் ஏற்படும். வீண்செலவுகள் செய்பவராகவும் இருப்பார்.
   பதினோராம் அதிபதி நான்கில் இருக்க ஜாதகர் புனிதப் பயணங்கள் மேற்கொள்வார். அனைத்து வேலைகளிலும் திறமையுடையவராக இருப்பார். பெரிய கட்டிடங்களையும் கட்டுவார்.

   பன்னிரண்டாம் அதிபதி மூன்றில் இருக்க முறையற்ற வகையில் பெருஞ்செல்வம் சேரும்.

   நடப்பு தசா, புத்தி பலன்கள்நடப்பு  குரு தசா ,சுக்கிர புத்தி- 8 – 3 – 15 வரை.

   குரு தசாவில் தலைமைப்பதவி கிடைக்கும். பெரியோர்கள் மற்றும் ஞானிகளின் நெருக்கமும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும் உயரும். புகழ்பெற்ற மனிதர்களுடன், விலையுயர்ந்த அல்லது இராஜவாகனத்தில் பயணிக்கும் அமைப்பு ஏற்படும் அல்லது அரசராகும் வாய்ப்பு ஏற்படும். அரச மரியாதை கிடைக்கும். அரசு மூலமான அனுகூலங்கள் கிடைக்கும். அபாயமும் வரலாம்.

   2020 வரை நடக்கும் குரு தசா இவரை அரசியல் விளையாட்டில்  ஒரு மிக முக்கிய ஆட்டக்காரராக ஆக்கிவிடுகிறது.

   இந்த வருடபலனைப் பார்க்கும் போது, வருசேஷா சனி ஆவார். அவர் அளிக்கும் பலனானதுசொத்துச்சேர்க்கை, அந்தஸ்து கூடுதல், நல்ஆரோக்கியம் ஏற்படும்.

   முக்கிய புள்ளியான முந்தாவருஷ ஜாதகத்தில் 8 ஆம் இடத்தில் விழுகிறது. அதன் காரணமாக எதிரிகளால் தொல்லையும், பாதுகாப்பற்ற நிலையும், குறிக்கோளற்ற பயணங்களும் அல்லது நீண்ட பயணங்களால் கஷ்டங்களும் மற்றும் விருப்பமில்லா இடத்திற்கு மாற்றமும் ஏற்படும்.

   கும்பத்தில் இருக்கும் முந்தா, நினைத்த காரியங்களில் தடைகளையும், தோல்விகளையும் ஏற்படுத்தும். (இட நெருக்கம் கருதி வருட ஜாதகம் தரப்படவில்லை).

    இதுவரை, கேஜ்ரிவால் அவர்களின் ஜாதகத்தைப் பார்த்தோம். இனி அவர் உருவாக்கிய 
ஏஏபிஎனும் ஆம் ஆத்மிகட்சியின் ஜாதகத்தை அலசுவோம்.


சந்
கேது
குரு()


லக்///

புத()
குரு()

ஆம் ஆத்மி
26-11-2012
15-58-16.பகல்
நியூடெல்லி




நவாம்சம்
இராகு
செவ்
லக்///

சுக்
சனி
கேது
சந்
செவ்
இராகு
சூரி
சுக்,சனி
புத()



சூரி


   சுக்கிர திசை இருப்பு – 8 வருடம் 3 மாதம் 0 நாள். இக் கட்சியானது தங்கள் கட்சியின் அபிலாஷைகளை, நோக்கத்தை மற்றும் கொள்கைகளை நிறைவேற்ற மற்ற கட்சிகளைத் துரத்த அல்லது பின் தொடர முற்படும்.

  எப்போதும், எதிலும் முதலாவதாக, முன்னணியிலிருக்கத் தேவையான 
முழுமுயற்சியை எடுக்கும். இவர்களின் புதிய முறைகளிலான வேலைகள் மற்றும் சேவைகளால் உலகப் புகழ் பெறுவர். மக்களுக்கு சேவைபுரியும் மகத்தான காரணத்தால் அனைவராலும் பாராட்டப்படுவர். ஆனால், பேசுவதற்கு முன் எதைப்பற்றியும் சிந்திக்காமல், நாவையும் அடக்காமல், பேசத் தெரியாமல் பேசி அவமரியாதைக்கு ஆளாவர்.  

   சில நேரங்களில் தத்துவார்த்தமான முறையில் நடந்தாலும், நடைமுறைக்கு ஒத்தவாறும்  அதாவது ப்ராக்டிக்கலாகவும் நடந்து கொள்வர். எப்போதும் கட்சியின் நிலைப்பாட்டுக்கும், சுயமரியாதைக்கும் மற்றும் சமூக அந்தஸ்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பர். கடமையைப் பெரிதாக நினைப்பவர்கள், கடின உழைப்பாளிகள், ஸ்திரமானவர்கள் மற்றும் அர்பணிப்பு குணமுடையவர்கள்.

   சக்திமிக்கவர்கள், சுறுசுறுப்பானவர்கள், சுயமுயற்சியால் முன்னேறக்கூடியவர்கள் மற்றும் எந்தவொரு வேலை தொடங்கினாலும் முடிக்காமல் ஓயமாட்டார்கள். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வதையே விரும்புவார்கள். ஆனால், எதையும் ரிஸ்க் எடுத்துச் செய்வதைத் தவிர்த்து, மிகவும் எச்சரிக்கையுடன், மிகவும் ஜாக்கிரதையாக செய்து முடிப்பார்கள்.
   பழைய பண்பாடு, சரித்திரம் மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். தங்களையே நம்பாத இவர்கள், எண்ணங்களை வெளிக்காட்ட மாட்டார்கள். சில நேரங்களில் எதையும்  அதிகம் நம்புபவர்களாகவும், ஆசாரமான செயல்களைச் செய்பவர்களாகவும், சில நேரங்களில் எதையும் நம்பாதவர்களாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருவனவற்றை மட்டுமே செய்பவர்களாகவும் விளங்குவர். ஆனால் எப்போதுமே நியாயமான செயல்களைச் செய்வதையே விரும்புவர்.

   இவர்களின் முக்கிய குணங்கள் –- சூழ்நிலைக்குத் தக்க தங்களை மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள். சுயவொழுக்கமுடையவர்கள்,  பொறுப்பாய் நடப்பவர்கள், அர்ப்பணிப்பு குணமுடையவர்கள் மற்றும் எளிமையை விரும்புபவர்கள்.

   இவர்களின் முக்கியக் குறைபாடுகள்உணர்ச்சி வயப்படுவர், சுயநலம் பாராட்டுவர், கர்வமுடையவர்கள், படபடப்பு மற்றும் சோம்பல் உடையவர்கள். இக்குணங்களை அகற்ற முற்பட வேண்டும்.

   இக் கட்சி பிறந்தது மேஷராசியாதலால், இவர்கள் எவருடைய உதவியுமின்றி, துணையுமின்றி கடமையுணர்வுடன், தலைமையேற்று  நடப்பர். தலமையேற்கும் தகுதியுடைய இவர்கள் சுய சிந்தனையுடன், சுயமாக முடிவெடுப்பர். ஆனால் பொறுமையற்றவர்கள் மற்றும் அவசரக் குடுக்கைகள்.

   தங்களிடம் தொடர்பு கொள்ளக்கூடிய அனைவரையும், கவர்ந்து, தங்கள் ஆலோசனைகளையும் வழங்கக்கூடியவர்கள். எந்தவொரு அமைப்பையும் நிர்வகிக்கவும்  மற்றும் திட்டமிட்டு செயல்படுத்தவும் கூடிய திறமைமிக்கவர்கள். உண்மையானவர்கள் மற்றும் உண்மையானவர்களை மதிக்கக் கூடியவர்கள். தர்க்கங்களையும் மற்றும் சொற்போரையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். இவர்களின் பேச்சு உணர்ச்சிகளைத் தூண்டக் கூடியதாகவும், மக்களின் மனங்களை ஆக்கிரமிக்கக் கூடியதாகவும் இருக்கும். எதையும், யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
   பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால், வீரம் மிக்கவர்கள், சக்திமிக்கவர்கள், ஏழ்மையானவர்களிடையேயும் இணைந்து பழகக்கூடியவர்கள். பகைவர்களை வெற்றி கொள்ளக் கூடியவர்கள். மதத் தொடர்பான சேவைகளில் ஆர்வமுடையவர்கள். நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக எட்டுகிற திறமைமிக்கவர்கள்.

  இனி இந்த ஜாதகத்தில் பாவங்களில் கிரகங்கள் நின்று தரும் பலன்களைக் காண்போம். 

   சூரியன் இலாப பாவமான 11 ஆம் பாவத்தில் இருப்பதால் பொதுவாகக் குறைவாகப் பேசினாலும், சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்கள். அதிகாரத்திற்கு வரக்கூடியவர்கள் மற்றும் அரசால் ஆதாயம் அடையக்கூடியவர்கள். எடுக்கக் கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறக்கூடியவர்கள். திறமை மிக்கவர்கள் மற்றும் மற்றவர்களின் திறமைகளையும் பாராட்டக்கூடியவர்கள், அரசின் வருமானத்தைப் பெருக்கக் கூடியவர்கள். உதவிகரமான நட்பை உடையவர்கள்.

   சந்திரன் சுகபாவமான 4 ஆம் இடத்தில் இருப்பதால் தர்ம குணமும், அறிவும் மிக்கவர்கள். அரச சிம்மாசனத்தை அலங்கரிக்கக் கூடியவர்கள்.

  செவ்வாய் விரய பாவமான 12 ஆம் இடத்தில் இருப்பதால் கோபம், சண்டையிடுதல், ஆக்ரமிப்பு குணம் ஆகிய குணங்களையுடையவர்கள் மற்றும் வெட்டிச் செலவுகள் செய்பவர்கள்.

   புதன் கர்ம பாவமான 10 ஆம் இடத்தில் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பராமரித்தல், நீதி நேர்மை காத்தல், திறமையன, உண்மையான, தத்துவார்த்தமான மற்றும் மதச் சார்புடைய இனிய பேச்சுக்களையும், தேவையானவற்றை மட்டுமே பேசக்கூடிய தூய்மையான, நற்குணமுடையவர்களாய் இருப்பர். மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதார நிலையும்  உயரும். அரசு அதிகாரம், சட்டம் மற்றும் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்று, சிறப்பாகப் பணியாற்றி உலகப் புகழும், பாராட்டும் பெறுவர். ஏழை மக்களால் எப்போதும் மதிக்கப்படுவர்.

   குரு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் பாவத்தில் இருப்பதால் இரக்க குணமும், மென்மையான மனமும் தெய்வ நம்பிக்கையும் உடையவர். புத்திசாலி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் வல்லவர். பொதுவாக 5 ஆம் இடத்தில் குரு இருப்பது மக்களுக்கு நல்லதல்ல என ஜாதக பாரிஜாதம் குறிப்பிடுகிறது.

   சுக்கிரன் தொழில் பாவமான 10 ஆம் இடத்தில் இருப்பதால் நட்பை மட்டுமே விரும்புவர். வழக்கு விவகாரங்களை வெறுப்பர். தர்ம குணம் மற்றும் மத நம்பிக்கை காரணமாகப் போற்றப்படுவர். வேதங்களைப் போற்றுவர், கலைகள் வளரும், வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலைகள் உயரும். இக் கட்சியின் புகழ் உலகமெங்கும் பரவும்.  மாநில அரசுகளால் மதிக்கப்படுவர். விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் பங்கு பெறுவர். ஆனால், மக்களுக்காக பணம் செலவழிக்கத் தயங்குவர்.

   சனி கர்ம பாவமான 10 ஆம் இடத்தில் இருப்பதால் சட்ட அறிவு, கடின உழைப்பு மற்றும் கர்வம் இருக்கும். ஆட்சி செய்வதற்கான மற்றும் தலைமைக்கான தகுதி இருப்பதால் ஒரு நகரத்திற்கு, மக்களுக்குத் தலைவராயிருப்பர். சமூக சேவையில் ஆர்வமுடையவராதலால், சமூகத்திற்கு சேவை செய்தே புகழடைவர். இவர்களின் வளர்ச்சி மிதமான வளர்ச்சியாகவே இருக்கும். முன்னேற்றமும் மெதுவானதாகவே இருக்கும். மந்தனின் மகிமையால் பதவிகள் மற்றும் அதன் மகிழ்ச்சி உடனடியாகக் கிடைக்காது. விவசாயத்தில் ஆர்வமிருக்கும். நீதியை நிலைநாட்டுவர். குற்றம் மற்றும் தவறு செய்பவர்களுக்குத் தக்க தண்டனை அளிப்பர். அரசால் அங்கீகரிக்கப்படுவர். தங்கள் தொண்டர்கள் மீது பாசமும், நம்பிக்கையையும் வைத்திருப்பர். அதிக நண்பர்களை உடையவர்களாக இருப்பர்அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர். எதிரிகளைக் கண்டு அஞ்சுவர். போரிலும், வழக்குகளிலும் எப்போதும் வெற்றிபெறுவர். சனி எப்போதுமே அதிகார பதவிக்கும், சக்திக்கும் சாதகமானவராகவே இருப்பார்.

   இராகு இலாப பாவமான 11 ஆம் இடத்தில் இருப்பதால் நல்ல பெயரெடுத்து, நாட்டுக்குப் பெருமையையும், புகழையும் சேர்ப்பர். பொது மக்களின் தயவால் புகழையும், சந்தோஷத்தையும் அடைவர். வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்.

   கேது 5 ஆம் இடத்தில் இருப்பதால் தவறான காரியங்களைச் செய்துவிட்டு மன்னிப்புக் கோருவார். உடன் இருப்பவர்கள் மற்றும் நண்பர்கள் அடிக்கடி தொல்லை தருவர்.   

   பாவாதிபதிகள் மாறி நின்ற பலனைப் பார்க்கும் போது ஏறக்குறைய அதே பலன்களே மாறி மாறி வருவதால், திரும்ப எழுதுவதைத் தவிர்த்து, 8 ஆம் பாவாதிபதி 11 ல் இருக்கும் நிலையைமட்டும் பார்ப்போம்.

   இக் கட்சியின் முன்னேற்றம் நிலையானதாக இருக்காது. ஆரம்ப காலத்தில் சந்தோஷமாக இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அன்பளிப்புக்கள் மற்றும் நன்கொடைகள் அதிகமாக வரும். பரிசுகள் மற்றும் கௌரவங்களைப் பெறுவர்.

    10 ஆம் அதிபதி 10 இல் இருப்பதால் உண்மைக்காகப் பாடுபடுவர். மக்களை நேசிப்பர் மற்றும் அவர்களால் பாராட்டப்பட்டு, புகழும் பெறுவர்.

    தசா பலன்கள்நடப்பு சுக்கிர தசாசுக்கிர புத்தி 28 – 6 – 2014 வரை, பின்னர் சூரிய புத்தி 28 – 6 – 2015 வரையாகும். இந்தக் காலத்தில் அனைத்து வசதிகளும் பெருகும். முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும். வர்த்தகம், கல்விநிலை உயரும். புதிய திட்டங்கள் தொடங்கப்படும். விஞ்ஞான முன்னேற்றங்கள் இருக்கும். மிக உயர்ந்த பதவிகள் அடையும் நிலையேற்படும். சில சமயம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் தொல்லைகள் ஏற்படும்.

    மக்களை கட்டுப்பாட்டோடு இருக்கச் செய்வர்.  மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேறும். சூரிய புத்தியில் அரசியல் தடைகள் ஏற்படும். பகைவர்கள் அதிகரிப்பர். பயத்தின் வலி அதிகரிக்கும். இராகு அந்தரத்தில் பதவி பறிபோகலாம். (6 – 9 – 2014 – 31 – 10 – 2014).

    வருட ஜாதகப்படி வருசேஷ் சனியாவதால் புகழ் ஓங்கும். வெற்றிகள் கிடைக்கும். ஏழை எளியோர் பயனடைவர். இரும்பு, நிலக்கரி, கற்கள், மரம் மற்றும் விவசாயம் லாபகரமானதாக அமையும். முந்தா – 8 இல் அமைந்ததால்இடமாற்றம் ஏற்படலாம். கும்பத்தில் முந்தா இருப்பதால்விருப்பங்கள் நிறைவேறுவதில் தடைகள் மற்றும் தோல்விகள் ஏற்படலாம். அவமரியாதையும் ஏற்படும்.

    எனவே, நண்பர்களே ! இரு ஜாதகங்களையும் பார்க்கும் போது கட்சி ஆரம்பித்தவரின் ஜாதகத்தைவிட கட்சியின் ஜாதகம் பலமாக இருப்பதைக் காணலாம். வாழ்க பாரதம் ! வாழிய பாரத மணித்திரு நாடு ! வந்தேமாதரம் !.

ஜோதிட கலாநிதிஎஸ், விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி).

செல் – 94888 62923, 9789101742.                         


No comments:

Post a Comment