உ
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.
அன்பு நண்பர்களே ! அது என் 200 வது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் அனைவரும் படிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், பின்னூட்டம் தானே ஒரு படைப்பாளிக்கு தெம்பு அளிக்கும் ஊக்க மருந்து. என் இடைவிடாத உழைப்பின் பயனை நான் அறிந்து கொள்ள, அதையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள்
(தோஷங்கள்)
கிரகங்கள்
|
நன்மை
தரும் பாவங்கள்
|
தீமை
செய்யும் பாவங்கள்
|
சூரியன்
|
3, 6,
10, 11
|
1, 2,
4, 5, 7, 8, 9, 12
|
சந்திரன்
|
1, 3,
6, 7, 10, 11
|
2, 4,
5, 8, 9,12
|
செவ்வாய்
|
3, 6,
11,
|
1, 2,
4, 5, 7, 8, 9, 10, 12
|
புதன்
|
2, 4,
5, 6, 8, 10, 11
|
1, 3,
6, 7, 9, 12
|
குரு
|
2, 5,
7, 9, 11
|
1,
3., 4, 6, 8, 10, 12
|
சுக்கிரன்
|
1, 2,
3, 4, 5, 8, 9, 11, 12
|
6, 7,
10
|
சனி
|
3, 6,
11
|
1, 2,
4, 5, 7, 8, 9, 10, 12
|
சூரியன் – இலக்னத்தில் சூரியன் + செவ்வாய் இருக்க ஏழ்மை நிலவும்.
பிதுர் காரனாகிய சூரியன் 9 ஆம் பாவத்தில் இருந்தால்
தந்தைக்குக் கெடுதல். 5 இல் இராகு அல்லது கேதுவுடன் சூரியன் கூடியிருந்தால் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.
5 இல் பலமிழந்த சூரியன் இருக்கத் தந்தைக்குத் தோஷம். 7 ஆம் வீட்டில் சூரியன் இருக்கக் களத்திர
தோஷம் மற்றும் தாமதத் திருமணம் ஏற்படும். மனைவிக்கு நோயும்,
பிற மாதர் தொடர்பும் ஏற்படும்.. சூரியனுடன் பகை கிரக இணைவு அல்லது
பார்வை பெற கணவன் மனைவி பிரிவு ஏற்படும்.. கும்பத்தில் சூரியன்
இருக்க இருதயக் கோளாறு ஏற்படும். 12 இல் சூரியன் இருக்க வாழ்க்கைப்
போராட்டமாக இருக்கும், வழக்குக்குகளைஞ் சந்தித்து, தண்டனையும் பெற நேரும்.. தந்தைப் பாசம் இராது.
நவக்கிரஹ அஷ்டோத்ர சத நாமாவளி
ஓம் பானவே நமஹ I ஓம் ஹம்சாய நமஹ I ஓம் பாஸ்கராய நமஹ I ஓம் சூர்யாய நமஹ I ஓம் சூராய நமஹ I ஓம் தாமோதராய நமஹ I ஓம் ரதிநே நமஹ I ஓம் விஶ்வப்ருதே நமஹ I ஓம் அவ்யாப்த்ரே நமஹ I ஓம் ஹரயே நமஹ I
ஓம் வேதமயாய
நமஹ I ஓம் விபவே நமஹ I
ஓம் ஶுத்தாம்ஶவே நமஹ I
ஓம் ஶுப்ராம்ஶவே நமஹ I
சந்திரன் –
6, 8 மற்றும் 12 இல் தீயபலன்கள் தரும்.
(கடகம், தனுசு, மீனம் தவிர)
சந்திரனும், ராகுவும் இணைந்திருந்தால் மனோவியாதியைத்
தரும். 5 இல் பலமிழந்த சந்திரன் இருக்க தாய்க்குத் தோஷம். 7 இல் சந்திரன், சனி இணைவு இரண்டாவது திருமணம் தரும்.
ஓம் சந்த்ராய நமஹ, I
ஓம் அத்ரி நேத்ர ஸமுத்பவாய நமஹ I ஓம் தாராதிபாய நமஹ I ஓம் ரோஹிணீஶாய நமஹ I ஓம் ஶம்புமூர்த்தி க்ருதாலயாய
நமஹ
I ஓம் ஓஷதீட்யாய
நமஹ
I ஓம் ஓஷதிபதயே
நமஹ I ஓம் ஈஶ்வரதராய நமஹ I ஓம் ஸுதாநிதயே நமஹ I ஓம் ஸகலாஹ்லாத நகராய நமஹ I
செவ்வாய் – 7
மற்றும் 8 இல் இருக்கத் தீயபலன் தருவார்.
சனியுடன் சேர்ந்தாலும், பார்த்தாலும் கண்டாதி தோஷங்கள்
வரும். 4 ஆம் வீட்டில் செவ்வாய் இருக்க மனக்கவலையும்,
இன்பமற்ற வாழ்க்கையும் ஏற்படும். 5 இல் செவ்வாய்
இருக்க வாழ்க்கையில் துன்பம், புத்திர பாக்கியத் தடை மற்றும்
மாமனுக்குத் தோஷம் ஆகியவை ஏற்படும். 7 இல் செவ்வாய் இருக்க மகிழ்ச்சியற்ற
மணவாழ்க்கையும், செவ்வாய், சனி,
கேது இணைவு களத்திர தோஷத்தையும் தரும். 12 இல்
செவ்வாய் இருக்க இன்ப வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும். பலமற்ற
செவ்வாயால் சரீர பலம் குறையும். ஆற்றல் குறையும். காயம் மற்றும் ஊனம் ஏற்படும். வீண்வழக்குகளையும் சந்திக்க
நேரிடும்.
ஓம் பௌமாய நமஹ, I
ஓம் பூமிஸுதாய நமஹ I
ஓம் பூதமாநய்யாய நமஹ I ஓம்
ஸமுத்பவாய நமஹ I ஓம்
ஆர்யாய நமஹ I ஓம்
அக்நி க்ருதே நமஹ I ஓம் ரோஹிதாங்காய
நமஹ I ஓம் ரக்த வஸ்த்ராய நமஹ I ஓம் ஶுசயே நமஹ I ஓம் மங்களாய நமஹ I ஓம் அங்காரகாய நமஹ I ஓம் ரக்த மாலிநே நமஹ I ஓம் மாயா விஶாரதாய நமஹ I
புதன் –
3, 6 மற்றும் 12 இல் நற்பலன் தரமாட்டார்.
.கடகம், சிம்மம், விருச்சிகம்,
மகரம், கும்பம் வீடுகளில் சுக பங்கம் தருவார்.
துக்கமும் ஏற்படும். 5 இல் புதன் பலமிழந்து இருக்கத்
தாய்வர்க்கத்துக்குத் தோஷம் ஏற்படும். புதன் + சனி = கல்வி தடைப்படும்.
ஓம் புதாய நமஹ, I
ஓம் தாராஸுதாய நமஹ I
ஓம் ஸௌம்யாய நமஹ I
ஓம் ரௌஹிணீகர்ப்பஸம் நமஹ I
ஓம் சந்த்ராத்மஜாய நமஹ I
ஓம் ஸோமவம்ஶகராய நமஹ I
ஓம் ஶ்ருதி விஶாரதாய நமஹ I
ஓம் சத்யசந்தாய நமஹ I
ஓம் விதுஸுதாய நமஹ I
ஓம் விபுதாய நமஹ I ஓம் விபவே
நமஹ I
குரு – மகர, கும்பத்தில் இருக்க நற்பலன் தரமாட்டார்.
3 இல் இருக்க இன்பம் குறையும். 4 இல் இருக்க குழந்தைப்
பிறப்பில் தாமதம் ஏற்படும். 5 இல் குருவானவர் பலமிழந்து இருக்கத்
தந்தை வர்க்கத்துக்குத் தோஷம் ஏற்படும். 5 இல் குரு, இராகுவுடன் அல்லது கேதுவுடன் கூடியிருக்க நாகதோஷத்தால் குழந்தை இழப்பு ஏற்படும்.
ஓம் வாக்ப்ருதே நமஹ, I ஓம் ப்ராஹ்மணாய நமஹ I
ஓம் ப்ராஹ்மணே நமஹ I
ஓம் தீக்ஷ்ணாய நமஹ I
ஓம் ஶுபவேஷதராய நமஹ I
ஓம் கீஷ்பதயே நமஹ I
ஓம் குரவே நமஹ I
ஓம் இந்ந்ர புரோஹிதாய நமஹ I
ஓம் ஜீவய நமஹ I
ஓம் நிர்ஜர பூஜிதாய நமஹ I
ஓம் பீதாம்பராலங்க்ருதாய நமஹ I
சுக்கிரன் – கடகத்தில் நற்பலன் தரார். 6 மற்றும் 10 ஆம் வீட்டிலும் தீயபலனே தருவார். பெண் ஜாதகத்தில்
3 இல் சுக்கிரன் இருக்கத் துயரமும், வறுமையும்
ஏற்படும். 6 இல் சுக்கிரன் இருக்க மனஅமைதி இராது, பெண்கள் விரோதம் ஏற்படும். பெண்ணாயிருந்தால் கொடியவளாயிருப்பாள்.
அவளைக் கணவனும், குழந்தைகளும் வெறுப்பார்.
ஓம் ப்ருகவே நமஹ, I
ஓம் பார்கவ ஸம்பூதாய நமஹ I
ஓம் நிஶாசர குரவே நமஹ I
ஓம் கவயே நமஹ
I ஓம் த்ருப்ய
கேதஹராய நமஹ I ஓம்
ப்ருகு ஸுதாய நமஹ I ஓம்
வர்ஷ க்ருதே நமஹ I ஓம் தீநராஜ்யதாய
நமஹ I ஓம் ஶுக்ராய நமஹ I ஓம் ஶுக்ர ஸ்வரூபாய நமஹ I ஓம் ராஜ்ய ராய நமஹ I ஓம் லயக்ருதாய நமஹ I
சனி – 6,
8, 12 க்கு உடையவரானால்
ஏழரைச் சனி காலத்தில் சோதனைகள் வரும். 2 ஆம் வீட்டில் சனி இருக்க வருமானத் தடை, சொத்து தொடர்பான
வழக்கு ஏற்படும். செவ்வாய் இருக்க இன்ப வாழ்வுக்குத் தடை.
2 இல் (ஆணுக்கு) இராகு இருக்க
முன்னேற்றத் தடை, சச்சரவு. பிரிவு உண்டு.
7 ஆம் வீடு மகரமாக அதில் குரு இருந்து செவ்வாய் பார்க்க பலதாரம் ஏற்படும்.
8 இல் சனி இருக்கத் தொழிலில் சிக்கல்கள் ஏற்படும். சுகமற்ற இல்லறமும், மக்கட்பேறுக்குத் தடையும் ஏற்படும்.
12 இல் சனி இருக்கப் பொருளாதாரச் சீர்கேடும், எதிரிகளால்
தொல்லையும் மற்றும் இழப்பும் ஏற்படும்.
ஓம் கோணாய நமஹ, I
ஓம் ஶநைஶ்சராய நமஹ I
ஓம் மாந்யாய நமஹ I
ஓம் சாயா ஹ்ருதய நந்தநாய நமஹ I
ஓம் மார்த்தாண்டஜாய நமஹ I
ஓம் பங்கவே நமஹ I
ஓம் பாநுதநூபவாய நமஹ I
ஓம் யமாநுஜாய நமஹ I
ஓம் அதிபயக்ருதே நமஹ I
ஓம் நீலாய நமஹ I ஓம் ஸூர்யவம்ஶஜாய
நமஹ I ஓம் நிர்மாம்ஸதேஹாய நமஹ I
இராகு –
4, 7, 8 மற்றும் 12 இல் மோசமான பலன்களைத் தருவார்.
4 இல் இராகு இருக்கப் படிப்பில் தடை ஏற்படும். தாய் நலம் கெடும். தாய் உறவுக்குப் பங்கம் ஏற்படும்.
5 இல் இராகு இருக்கக் குழந்தைகளால்
தொல்லையும், பெண்ணாய் இருந்தால் குறைப்பிரசவம் ஏற்படும்.
காதல் தோல்வியடையலாம். 7 இல் இராகு இருக்கத் தாமதத்
திருமணம் ஏற்படும். 8 இல் இராகு இருக்க மகிழ்ச்சியற்ற வாழ்க்கையும்,
பிரிவும் ஏற்படும். 12 ஆம் வீட்டில் இராகு இருக்கத்
தீய செயல்களில் ஈடுபாடு, விரயச் செலவுகள், சிறைப்படல் ஆகியவை ஏற்படும்..
ஓம் ராஹவே நமஹ, I ஓம் ஸ்வர்பாநவே நமஹ I
ஓம் ஆதித்ய சந்த்ர த்வேஷிணே நமஹ I ஓம் புஜங்கமாய நமஹ I ஓம் ஸிம்ஹிகேஶாய நமஹ I ஓம் குணவதே நமஹ I ஓம் ராத்ரிபதி பீடிதாய நமஹ I ஓம் அஹிராஜே நமஹ I ஓம் ஶிரோஹீநாய நமஹ I ஓம் விஷதராய நமஹ I ஓம் மஹாகாயாய நமஹ I ஓம் மஹாபூதாய நமஹ I ஓம் ப்ராஹ்மணாய நமஹ I ஓம் ப்ரஹ்மசம்பூதாய நமஹ I ஓம் ரவிக்ருதே நமஹ I ஓம் ராஹூரூபத்ருதே நமஹ I
கேது – இலக்னத்தில் இருந்தால் நற்பலன்கள் இராது. அமைதியற்ற வாழ்க்கை அமையும்.
4 இல் இருக்க படிப்பில் தடை ஏற்படும். தாய்க்குக் கேடும், இளம் வயதில் பெற்றோர் பிரிவும் ஏற்படும். கேது இலக்னம்
5 மற்றும் 9 இல் இருக்க சர்ப்ப தோஷம் ஏற்படும்.
5 இல் கேது புத்திரதோஷம் தரும். காதல் தோல்வி ஏற்படும்.
7 இல் கேது இருக்க நோயுள்ள களத்திரம் அமையும். 8 இல் கேது இருக்க ஆரோக்கியக் குறைவு ஏற்படும். குடும்ப
சுகம் இராது. 12 இல் கேது இருக்க வீண்செலவுகள் மற்றும் கடன் தொல்லைகள் ஏற்படும்.
ஓம் கேதவே நமஹ, I
ஓம் கேதுஸ்வரூபாய நமஹ I
ஓம் கேசராய நமஹ I ஓம் நமஹ I ஓம் கச்ருதாலயாய நமஹ I ஓம் ப்ரஹ்மவிதே நமஹ I ஓம் ப்ரஹ்ம புத்ராய நமஹ I ஓம் குமாரகாய நமஹ I ஓம் ப்ராஹ்மண ப்ரீதாய நமஹ I
பாவாதிபதிகள் தரும் தோஷங்கள்
இலக்னாதிபதி 4 இல் இருக்கத் தண்ணீரில் கண்டம் ஏற்படும். இலக்னாதிபதி
6, 8, 12 இல் தீய கிரகங்கள்
இணைவுடன் இருக்க வாழ்க்கையில் அடிக்கடி நோய் மற்றும் தொல்லைகள்
வரும். இலக்னாதிபதி
8 இல் பாபக் கிரக இணைவு பெற மகிழ்ச்சியற்ற வாழ்வைத் தரும். இலக்னாதிபதி 12 இல் இருக்க முன்னேற்றத் தடை, அமைதியற்ற நிலை, ஆரோக்கியக் குறைவு ஆகியவை ஏற்படும்.
இலக்னாதிபதி – சூரியன் + 6 ஆம் அதிபதி இணைவு = காய்ச்சலால் கண்டம் ஏற்படும்.
இலக்னாதிபதி – சந்திரன் + 6 ஆம் அதிபதி இணைவு = நீரில் கண்டம் ஏற்படும். இலக்னாதிபதி – செவ்வாய் + 6 ஆம்
அதிபதி இணைவு = ஆயுத ரணத்தால் கண்டம் ஏற்படும். இலக்னாதிபதி – சுக்கிரன் + 6 ஆம்
அதிபதி இணைவு = பெண்களாலும், திருடர்களாலும்
கண்டங்கள் ஏற்படும். இலக்னாதிபதி – சனி
+ 6 ஆம் அதிபதி இணைவு = நீசர்களால் கண்டம் ஏற்படும்.
இலக்னாதிபதி – இராகு,கேது
+ 6 ஆம் அதிபதி இணைவு = விஷஜந்துக்களால் கண்டம்
ஏற்படும்.
இரண்டாம் வீட்டோன் 3,
6, 8, 11 ஆம் அதிபதிகள் தொடர்புற தீயபலன்கள் ஏற்படும். இரண்டாம் வீட்டோன்- 6, 8, 12 இல் ஒன்றில் இருக்க புதனும்
இணைய பேச்சற்ற நிலையில் ஊமையாக இருப்பார்.
மூன்றாம் வீட்டோன் பலமிழந்து பாபக் கிரக சேர்க்கை
பெற தொழிலில் முன்னேற்றத்தடை இருக்கும். தந்தையின் ஆரோக்கியம்கெடும்.
6, 8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருக்க சகோரபாக்கியம் இல்லாமல்போகலாம்..
நான்காம் வீட்டோன் 12 இல் வெளிநாட்டுவாசம் ஏற்படும். நான்காம் வீட்டோன்
6, 8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருக்க சந்திரன் + பாபக் கிரகத் தொடர்பு ஏற்படத் தாய்க்கு
ஆயுள் பங்கம் ஏற்படும். நான்காம் வீட்டோன் இலக்னாதிபதியுடன் கூடி
4 இல் இருந்து 10 ஆம் அதிபதியால் பார்க்கப்படத்
தண்ணீரில் கண்டம் ஏற்படும். ஜலராசியில் 4 ஆம் அதிபதி அல்லது வேறு ஜலராசி அதிபருடன்
கூடியிருந்தாலும் ஜலகண்டம் ஏற்படும்.
ஐந்தாம் வீட்டோன் நீசமாகி 5 இல் கேதுவும் இருக்கப் புத்திர தோஷம் உண்டு. ஐந்தாம்
வீட்டோன் இலக்னத்திற்கு/ இராசிக்கு / 5 ஆம் வீட்டுக்கு 6, 8, 12 இல் இருக்கப் புத்திர தோஷம்
உண்டு.
ஆறாம் வீட்டோன் 5 இல் = மக்கள் நலம் கெடும்.
ஏழாம் வீட்டோன் 12 இல் = கணவன் மனைவி பிரிவு, கருத்துவேற்றுமை,
மனைவிக்கு ஆயுள் பங்கம் ஆகியவை ஏற்படும். ஏழாம்
வீட்டோன் பகை, நீசம் பெற்று அசுபரால் பார்க்கப்பட இல்லறத்தில்
துன்பம் ஏற்படும்.
எட்டாம் வீட்டோன் இலக்னத்தில்
இருக்க
– விபத்தால் ஆபத்து, வழக்கு வியாஜ்ஜியம்,
சிக்கல்கள் ஆகியவை ஏற்படும். எட்டாம் வீட்டோன்
4 இல் இருக்கக் கல்வியில் மற்றும்
செல்வத்தில் தடை ஏற்படும். 5 இல் 8 ஆர்
அதிபதி இருக்க மன நிம்மதியற்ற நிலையும், ஒழுக்கக் குறைபாடுகளும்
ஏற்படும். 7 இல் 8 ஆம் அதிபதி இருக்க இல்லறத்தில்
இடர்பாடுகளும், விவாகரத்தும் ஏற்படும். 9 இல் இருக்க தந்தையுடன் நல்லுறவு இருக்காது, அரச தண்டனையால்
சொத்துக்கள் பறிமுதலாகும். 10 ஆம் வீட்டில் இருக்க வேலை மற்றும்
உத்தியோகத்தில் பிரச்சனை. 8 ஆம் அதிபதி 11 இல் இருக்க உற்றார் உறவினருடன் நல்லுறவின்மை ஏற்படும்.
ஒன்பதாம் வீட்டோன் 6,
8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்து, பாபக்கிரக
தொடர்புற தந்தைக்கு ஆயுள் பங்கம் ஏற்படும். ஒன்பதாம் வீட்டோனும்
குருவும், நீசமாகவோ, அஸ்தங்கமாகவோ இருந்து
6, 8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருக்க எல்லாவிதத்திலும் இழப்பு ஏற்படும்.
ஒன்பதாம் வீட்டோன் + சனி + சூரியன் இணைவு தந்தைக்கு அற்ப ஆயுளைத் தரும்.
பத்தாம் வீட்டோன் 6 இல் அமர வாழ்க்கை மற்றும் தொழிலில் ஏற்ற இறக்கம் இருக்கும். 10ஆம் அதிபதி 8 இல் இருக்க தொழில் மாற்றங்கள் ஏற்படும்.
12 இல் இருந்தால் செல்வமும்
, வசதிகளும் குறையும்.
பதினோறாம் வீட்டோன் 6 ஆம் வீட்டில் இருக்க பகைவர்கள் தொல்லை, உற்றார்,
உறவினர் பகை ஆகியவற்றால் சங்கடம் ஏற்படும். 11 ஆம் அதிபதி 8 இல் இருக்க எண்ணியதை அடைய முடியாது மற்றும்
மூத்த சகோதரரின் முன்னேற்றத்தில் தடையிருக்கும். 11 ஆம் அதிபதி,
12 இல் இருக்க ஆசைகள் நிராசையாகும். கடன் தொல்லைகள் சூழும்.
மூத்த சகோதரருக்கு ஆயுள் பங்கம் ஏற்படும்.
12 ஆம் வீட்டோன் இலக்னத்தில்
இருக்க ஆயுள் குறையும், மகிழ்ச்சியற்ற வாழ்வுதரும். 12 ஆம் வீட்டோன்
2 இல் இருக்க – செல்வம் இழப்பு, வறுமை, மகிழ்ச்சியற்ற இல்வாழ்க்கை அமையும். 3
இல் இருக்க ஆசைகள் நிராசையாகும். சகோதரர் நலம்
கெடும். 4 ஆம் வீட்டில் இருக்கத் தாயின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படும்.
தாயின் மூலம் துன்பமும் வரும். 12 ஆம் அதிபதி,
5 இல் இருக்கப் புத்திர பாக்கியத்தில் குறைவு ஏற்படும். 7 இல் இருக்க மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, விவாகரத்து ஏற்படலாம்.
12 ஆம் அதிபதி 9 இல் இருக்க அதிர்ஷடம் குறையும்.
தந்தைக்கு சுகக்குறைவு ஏற்படும். 10 இல் இருக்க
உத்தியோகத்தில் அடிக்கடி பிரச்சனைகள் உருவாகும் மற்றும் அதிக மாற்றங்களும் ஏற்படும். 12 ஆம் அதிபதி 11 இல் இருக்க ஆதாயமிருக்காது, ஆசைகள் நிராசையாகும்.
12 ஆம் வீட்டோன் 2
இல் இருந்தும் மற்றும் 11 ஆம் வீட்டோன்
12 இல் இருந்தும் 2 ஆம் வீட்டோன் பலமும் இழந்தால்,
செல்வம் யாவும் இழக்க நேரிடும்.
இவ்வாறு ஒவ்வொரு கிரகமும் பாவதிபதிகளாயும்,
பாவங்களில் நின்றும் மனிதனை
எங்ஙனம் ஆட்டிப்படைக்கின்றன ? - என்பதைக்
கண்டோம். இதன் காரணமாக என்னென்ன தோஷங்கள் ஏற்படும். இத்தகைய இன்னல்களிலிருந்து,
தோஷங்களிலிருந்து விடுபட எங்கே ? எப்படி
? என்ன ? - பரிகாரங்கள் செய்து அவற்றிலிருந்து
ஓரளவு நிவாரணம் பெறமுடியும் என்பதைப்பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்வோம்
புத்திர தோஷம் – மானுடவாழ்வில் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கும் குழந்தைப் பாக்கியமானது நாம் செய்த கர்மவினைகளின்
பலனாக நமக்கு ஏற்படும் பேரின்பமாகும். இப் பேரின்பமே துன்பமாகும்
போது தோஷமாகிறது. புத்திர தோஷமென்பது குழந்தைப் பேற்றை மட்டுமின்றி,
கர்பம் தரித்தவுடன் ஏற்படும் கருச்சிதைவு, கருக்கலைத்தல்,
குழந்தை பிறந்தவுடன் மரித்தல், பிறக்கும் போதே
ஊனமாய்ப் பிறத்தல், குறைமாதப் பிரசவம் ஏற்படல், பிறந்தவுடன் தாய் அல்லது தந்தைக்கு மரணம் ஏற்படல் என இவை அனைத்துமே புத்திர
தோஷமாகும்.
ஐந்தாம் வீடு, 9 ஆம் வீடு, அதன் அதிபதிகள், புத்திர
காரகன் குரு, இவர்கள் சென்று அமரும் இடம் இவை பாதிப்படையும் போது
புத்திர தோஷம் ஏற்படுகிறது. 5 ஆம் அதிபதி 3 இல் அமர்ந்தாலும், 6, 8, மற்றும் 12 இல் அமர்ந்தாலும், 5 ஆம் அதிபதி மிதுனம், கன்னி இராசிகளில் தனியாக அமர்ந்தாலும், பாவக்கிரகங்களோடு
இணைவு பெற்றாலும், 5 மற்றும் 7 ஆம் அதிபதிகள்
பரிவர்தனை ஆனாலும், புத்திர பாவத்தில் தீய கிரகங்களான சூரியன்,
செவ்வாய், சனி, இராகு மற்றும்
கேது அமர்ந்தாலும், காரகன் குரு அமர்ந்தாலும், சந்திரனுக்கு 7 இல் சூரியன் இருந்தாலும், சனிக்கு 7 இல் புதன் இருந்தாலும், சூரியன் இரட்டை இராசியில் இருக்கவும் அவரை செவ்வாய் பார்த்தாலும், சுபர் பார்வையின்றி 5 மற்றும் 8 ஆம் பாவாதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், 5 ஆம் வீட்டின்
மீது அசுப்பார்வை விழவும், 7 ஆம் வீட்டுக்குக் கேந்திரத்தில் குரு அமர்ந்து, உச்சம்
பெற்ற 6 ஆம் அதிபதி இணைவு பெறவும் ஒருவருக்குக் குழந்தைப் பாக்கியம்
ஏற்படாது.
புத்திர பாக்கியத்துக்குத் தடை
ஏற்படுத்தும் அமைப்புகள் – பாவிகள் மத்தியில் குரு அல்லது
5 ஆம் அதிபதி அமரவும், 5 ஆம் பாவமும் பாவகர்த்தாரியில் இருக்கவும்,
குடும்ப ஸ்தானத்தில் தீயகிரகங்கள் இடம்பெறவும், குருவுடன் இராகு அல்லது சனி இணைய அல்லது பார்க்க குழந்தை பாக்கியத்துக்குத்
தடை ஏற்படுத்தும்.
இவை தவிர சர்பசாபம் ( 5
ஆம் அதிபதி இராகு இணைவு, இலக்னத்தில் இராகு,
கேது, 9 இல் இராகு, கேது.
) ஏற்படுவதாலும் குழந்தைகள் பிறப்பது அரிது. முன்னோர்
சாபம், தாயின் சாபம்
ஆகியவற்றாலும் குழந்தையின்மை ஏற்படும்.
பரிகாரங்கள் –
தம்பதிகள் இராமேஸ்வரம் சென்று அக்னி
தீர்த்தத்தில் கை கோர்த்தபடி குளித்துப் பின்னர் கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்களிலும்
நீராடி மனமுருகி ஸ்வாமி தரிசனம் செய்துவந்தால் தோஷ நிவர்த்தியாகும்.
நாக தோஷம் உடையவர்கள் திருப்புலாணி
சென்று நாகப்பிரதிஷ்டை செய்துவர தோஷம் நிவர்த்தியாகும். காளகஸ்தி,
திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்றும் வழிபட்டுவரலாம்.
பாம்புப் புத்துக்குப் பால் வார்த்துவர சாப நிவர்த்தியாகும்.
‘மூலதோ ப்ரஹ்ம ரூபாய – மத்யதோ விஷ்ணு ரூபிணே –
அக்ரதோ சிவஸ் ரூபாய – வ்ருஷ
ராஜாய தே நமஹ’ – என்ற
ஸ்லோகத்தைச் சொல்லி அரசமரத்தைச் சுற்றி வந்து வணங்குவதும் நல்லது.
கால சர்ப தோஷம் – இராகு கேதுக்களுக்கிடையே அனைத்து கிரகங்களும் அமர ஏற்படுவதாகும். இந்த தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் 35 வயதுக்குப்
பிறகே முன்னேற்றங்கள் ஏற்படும். திருமணமும் தாமதப்படும்.
இத் தோஷத்திற்கு மிக சக்தி வாய்ந்த
, பிரசித்தி பெற்ற பரிகாரத்தலம் திருக் காளத்தி எனப்படும் காளஹஸ்தி திருத்தலமாகும்.
இராகு கேதுக்களின் வெள்ளி பிரதமைகளுடன், பூஜா சாமான்களோடு,
புரோகிதரை வைத்து பரிகாரம் சிரத்தையுடன் செய்து இராகு-கேது ப்ரதமைகளை மூன்றுமுறை தலையைச் சுற்றி உண்டியலில் இட்டு, ஸ்வாமியை மனமுருகி வேண்டி வர தோஷநிவர்த்தியாகும்.
செவ்வாய் தோஷம் – செவ்வாய் இலக்னம்/ சந்திரன் / சுக்கிரனிலிருந்து
1, 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் அமர செவ்வாய்
தோஷம் ஏற்படுகிறது. இதற்குப் பல விதிவிலக்குகளும் உண்டு.
இது திருமண தாமதத்தைத் தருகிறது. திருமண வாழ்க்கையில்
மகிழ்வின்மை, பிரிவினை ஆகியவற்றையும் தருகிறது.
செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பது,
கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வணங்குவது நல்லது.
செவ்வாய், வெள்ளியன்று துர்க்கை வழிபாடும் பயனளிக்கும்.
சீர்காழி அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவில் மிகச் சிறந்த பரிகாரத் தலமாகும்.
இங்குள்ள சித்தாமிர்தக் குளத்தில் நீராட தோஷம் நீங்கும். பழநி முருகனையும் வழிபடலாம்.
களத்திர தோஷம் -- களத்திர காரகன் குரு/ சுக்கிரன்
மற்றும் ஒவ்வொரு இலக்னத்துக்கும் ஆன களத்திர ஸ்தானாதிபதி பாதிப்படைய களத்திர தோஷம்
ஏற்படுகிறது. காரகன் களத்திர ஸ்தானத்திலேயே இருக்கவும்,
7 ஆம் அதிபதி 7 இல் இருக்கவும், 7 ஆம் அதிபதி உச்சம் பெற்று
7 இல் இருந்தாலும், இலக்னத்தில் சனியும்,
7 இல் செவ்வாயும் இருக்க, 7 இல் இருவரும் சேர்ந்து
இருக்கவும், 7 ஆம் அதிபதி 6 இல்,
8 இல் அல்லது 12 இல் இருக்கவும், 2 ஆம் பாவத்தில் சனி, செவ்வாய், இராகு
மற்றும் கேது இருக்கவும், இவர்கள் 4, 7, 8 இல் இருக்கவும், 2 ஆம் அதிபதி 3 இல் இருக்கவும் மற்றும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் இருக்கவும் களத்திர தோஷம் ஏற்படுகிறது.
திருமண தாமதம், தடைகள் தரும். கலப்புத் திருமணம், இருதாரமணம், களத்திர மரணம் இவையாவுமே களத்திர தோஷமே.
பரிகாரம் – குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு, கிரக ரீதியான அதிதேவதைகளின் வழிபாடு ஆகியவற்றைச் செய்வது நல்லது. இராமாயணத்தில் சுந்தர காண்டத்தைப் படிப்பதும், மார்கழி
மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை படித்தலும் தோஷபரிகாரமாகும்.
தாமதமின்றித் திருமணம் நடக்கப் பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகம் –
ஶ்ரீ சுயம்வரா பார்வதி ஸ்லோகம்.
ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முகஹ்ருதயம் மமவசமாகர்ஷய ஆகர்ஷய
ஸ்வாஹா.
மாங்கல்ய தோஷம்
-- ஜாதகத்தில் 8 ஆம் இடத்தில் தீய கிரகங்கள் இடம்பெற, தொடர்புற ஏற்படும் தோஷம் ஆகும். இதன் காரணமாகத் துணை மரணம், பிரிவு, விவாகரத்து, தாமதத் திருமணம், மறுமணம்,
கண்டங்கள் ஏற்படல் என இவை அனைத்துமே மாங்கல்ய தோஷத்தின் விளைவுகளாகும். எட்டாம் வீட்டுக்கு உரிய கிரக வழிபாடு,
அம்பிகை வழிப்பாடு, குலதெய்வ, இஷ்டதெய்வ வழிபாடுகள் நல்ல பலன் தரும்.
சில நட்சத்திரங்களும் பரிகாரங்களும் –
திருமணத் தடை ஏற்படுமானால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ---
அசுவதி – மகம் – மூலம் – விநாயகர் கவசம் படித்தல்,
கணபதி ஹோமம் செய்து மோதகம் படைத்து பூஜிக்க திருமணம் விரைவில் நடக்கும்.
பரணி – பூரம் – பூராடம் -- இந்திராட்சி
ஸ்தோத்திரம் படிப்பதும், லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை,
அபிஷேகம் செய்வதும், ருக்மணி கல்யாணம் ப்ரவசனம்
கேட்பதும், கிருஷ்ணருக்கு பாலில் குங்குமப்பூ போட்டுக் காய்ச்சி
நெய்வேத்தியம் செய்வதும் பலனளிக்கும்.
திருவாதிரை – சுவாதி
– சதயம் – ஜாதகத்தில், இலக்னத்திலிருந்து 1, 3, 5, 7, 9 மற்றும் 11 இல் ராகு இருக்க ஏற்படும் திருமணத் தடை சரியாகி, மணவாழ்வு
மகிழ்ச்சிகரமாக இருக்கவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் –
1. ராஜராஜேஸ்வரி
அல்லது புவனேஸ்வரிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யவும்.
2. சிவப்புப்
புடவை அணிவிப்பதும், பிச்சிப்பூவை சந்தனத்தில் தோய்த்து
பூஜிக்கவும். செவ்வாய் மற்றும் வியாழனன்று விரதம் அனுஷ்டிப்பதும்,
கன்னிப்பெண்களுக்குக் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்தும், உளுந்தமாவினால் கோலமிட்டு, அம்பாளுக்கு கற்பூர ஆரத்தி
செய்து பிரார்த்திக்க நற்பலன் ஏற்படும். பிற இடங்களில் ராகு இருக்கச்
செய்யவேண்டிய பரிகாரங்கள்.
1. துர்க்கைக்கு
எலுமிச்சம் பழமாலை அணிவிக்கவும்.
2. விநாயகருக்கு, வெள்ளெருக்குப் பூ மாலை ஞாயிறன்று அணிவிக்கவும்.
3. சிவனுக்கு
தாரை அபிஷேகம் செய்யவும்.
4. முறைப்படி
விளக்கு பூஜை மற்றும் பகவதி சேவை செய்யவும்.
5. இராமாயணத்தில், அயோத்தியா காண்டம் மற்றும் சுந்தர காண்டம் ஆகியவற்றை பாராயணம் செய்ய கைமேல்
பலன் கிடைக்கும்.
சிறப்பான தோஷ பரிகாரகங்கள்
சூரியன் – ஆண் ஜாதகத்தில் 4, 7 மற்றும் 12 ஆம் இடங்களில் இருக்குமானால் அல்லது சனியுடனோ, மாந்தியுடனோ
ஓரே இராசியில் 5 பாகைக்குள் இருக்குமானால் அது கலீப (
ஆண்மைக்குறைவு ) தோஷத்தையும், மத்திய வயதில் இருதய நோயையும், வயது முதிர்ந்த காலத்தில்
பக்கவாத நோயும் உண்டாகும். இதற்குப் பரிகாரம் – புருஷ சூக்தம், சூரிய சாவித்திரி மந்திர ஜபம் செய்வித்து,
உதக சாந்தியும் செய்யவேண்டும்.
பெண்களின் ஜாதகத்தில் சூரியன்
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்குமானால் அதனால் ஜாதகிக்கு உடல்
வலிமையின்மை, சோகை ஏற்படுவதுடன், கர்ப்பச்சிதைவும்,
கணவன் மனைவியிடையே பிரச்சனையும் ஏற்படும். இதற்குப்
பரிகாரம் –
1. சத்யநாராயண
பூஜை செய்தல்.
2. நுனி
வாழை இலைபோட்டு சர்க்கரைப் பொங்கலிட்டு, பழத்துடன் பசு
மாட்டுக்குப் படைக்கவும்.
3. அன்னதானம்
செய்தல்.
4. மாணவர்களுக்கு
ஆடை,
புத்தகங்கள் மற்றும் உதவிபுரிதல் தோஷநிவர்த்தியாகும்.
எனவே அன்பர்களே! கிரகங்கள் எந்த இடங்களில் இருந்தால் என்ன தோஷம் ? பரிகார ஸ்தலம் எது ? பரிகாரங்கள் செய்யும் முறைகள் என்ன
? – என்ற அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
-- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம்,
எஸ்ஸி (அப்ளைடு அஸ்ட்ராலஜி).
THANX
ReplyDeleteDEAR SIR DOSHA PARIGARANGAL EXCELLENT
ReplyDeleteஅருமை வாழ்க வளமுடன்
ReplyDelete