உ
காலச்சக்கிர
தசை
காலச் சக்ர திசையை, இப்போதும் பலர் சரியான முறையிலோ
அல்லது தவறான முறையிலோ உபயோகிக்கிறார்கள். அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் ? பராசரர் சிறப்பான
முறையில் விம்சோத்ரி
தசா முறையையே பயன்படுத்தினார் என்றாலும் முடிவில் அவர் காலச் சக்ர தசை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ண பட்சத்தில், சூரிய ஹோரையிலும், சுக்கில பட்சத்தில் சந்திர ஹோரையிலும்
பிறந்த பிறப்புக்களுக்கே விம்சோத்திரி திசை முறையை உபயோகப் படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
அப்படியென்றால் மற்ற திசைகளை எப்போது பயன்படுத்த வேண்டும் ?
இதுவே மாறியிருந்தால்,
அதாவது கிருஷ்ண பட்சத்தில் சந்திர ஹோரையிலும் அல்லது சுக்கில பட்சத்தில்
சூரிய ஹோரையிலுமாகப் பிறந்திருந்தால் சோடஷோத்ரி திசை அல்லது 116 வருட முறையைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். இந்த இரு
முறைகளுக்குள்ளேயே அனைத்துப் பிறப்புக்களுமே அடங்கி விடும். வேறு
எந்த திசையையும் முதன்மையானதாகக் கருத முடியாது.
பராசரர் பற்பல தசாமுறைகளைப்பற்றி
குறிப்பிட்டுள்ளார். ஏன் ? ஆயுளைக் கணக்கிடுவதற்கே
ஆகும். ஆனால், அவர், ஒரு ஜாதகத்தில், ஒரு குறிப்பிட்ட தசாமுறையை எந்த நிலையில்
பிரயோகிக்கவேண்டும் என்பதற்கான நிபந்தனையையும்
விதிக்கிறார். முதலில் இலக்னம் , ஒளிக்கிரகங்கள்
மற்றும் 5 கிரகங்களின் ஷட்பலத்தையும் கண்டுபிடிக்க வேண்டும்.
அவற்றில் அதிக ஷட்பலத்துடன் எது இருக்கிறது என்பதை அறிந்தால்,
அந்த பலம் மிக்க கிரகமே ஜாதகரின் ஆயுளை தீர்மானிக்கும்.
“ உத்தர காண்டா “ அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 மற்றும்
5 இல் எந்த தசாமுறையை பாவிக்க வேண்டும் என்பதை விவரமாக முனிவர் குறிப்பிடுகிறார்.
இலக்னம் பலம் மிக்கதானால் அம்ச ஆயுர்தாயம்.
சூரியன் பலம்மிக்கவரானால் – பிண்ட ஆயுர்தாயம்.
சந்திரன் பலம் மிக்கவரானால் – நைசர்கிக
ஆயுர்தாயம்.
செவ்வாய் பலம் மிக்கவரானால் – சடஸ்வராம்ச
ஆயுர்தாயம்.
புதன் பலம் மிக்கவரானால் – நட்சத்திர ஆயுர்தாயம்.
குரு பலம் மிக்கவரானால் – நவாம்ச ஆயுர்தாயம்.
சுக்கிரன் பலம் மிக்கவரானால் ஸ்வராம்ச ஆயுர்தாயம்.
சனி பலம் மிக்கவரானால் – கரதாய ஆயுர்தாயம்.
ஆகும்.
அடுத்த இரு ஸ்லோகங்களில் அவர் மேலும் விளக்கிக் கூறுவதாவது.
பலம் மிக்க கிரகம் உச்சமானால் – பிண்டம். நீசமானால் – நைசர்கிகம்,
நட்பு வீடானால் – சடஸ்வராம்சம். பகை வீடானால் – நட்சத்திர ஆயுர்தாயம். அதி நீசமானால் – சமுதாய அஷ்டவர்க்கம், பலம்மிக்க கிரகம் – அதிகப்பகையான இராசியில் இருக்க
– பின்னாஷ்ட வர்க்கம்.
பராசரரைத் தொடர்த்து , வைத்தியநாத தீட்சிதர்
தனது “ஜாதக பாரிஜாத” த்தில் குறிப்பிடுவதாவது,
ஷட்பலத்தில் சூரியன் அதிக பலம்
மிக்கவரானால் – பிண்ட ஆயுர்தாயம்.
சந்திரன் – நைசர்கிக, புதன் – ராஸ்மிஜ ஆயுர்தாயம்,
செவ்வாய் எனில் – பின்னாஷட்டவர்க்க, சுக்கிரன் எனில் – காலச்சக்கிர, குரு எனில் – நட்சத்ராஜ ஆயுர்தாயம், சனி எனில் – சமுதாய அஷ்டவர்க்க ஆயுர்தாயம். இலக்னம் பலம் மிக்கது எனில் – அம்சக ஆயுர்தாயம் ஆகும்.
காலச்சக்கிர தசா முறை, சுக்கிரன் ஷட்பலத்தில்
அதிக பலத்துடன் இருக்கும் போது மட்டுமே உபயோகப்படுத்தப் படவேண்டும். மற்றவற்றில் அல்ல. சுக்கிரனின் ஷட்பலம் அதிகம் இல்லாத
பட்சத்தில், அதைப்பற்றிக் கவலைப்படாமல் காலச்சக்கிர தசையை உபயோகிப்பது
தவறான முறையாகும்
.
மந்தரேஸ்வரர்
தனது பலதீபிகையில், இலக்னம் பலம் மிக்கதாக
இருந்தால் அம்ச ஆயுர்தாயத்தை அனுசரிக்கச் சொல்கிறார். அதேபோல்
சூரியன் பலம் மிக்கவராக இருப்பின் பிண்டாயுர்தாயத்தையும், சந்திரன்
எனில் நையர்க்கிக ஆயுர்தாயத்தையும், இவை அனைத்தும் பலமிழந்து
காணப்பட்டால், ”ஜீவஷர்மா ஆயு“ வின்படி தொடரச்
சொல்கிறார்.
ஸ்லோகம் 22.30 இன் படி- பலம்மிக்க சந்திரன் இடம்பெற்ற நவாம்ச இலக்னமானால் காலச்சக்கிர தசா முறையை அனுசரிக்கவும்,
ஆனால் இருப்பதிலேயே மிகச்சிறந்த முறை விம்ஸோத்ரி தசா முறையே என்றும்
குறிப்பிடுகிறார். காலச்
சக்கிர தசா உபயோகப்படுத்த வேண்டும் என்றால் ஷட்பலத்தில் சுக்கிரனும், நவாம்ச இலக்கினத்தில் சந்திரனும் பலம்பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறாக ஒவ்வோரு ஜாதகமும் விம்சோத்ரி (120) அல்லது சோடசோத்ரி (116) தசாவுக்கு உட்படும். இந்த அடிப்படையில், பராசரர் கூறியபடி வேறு தசாமுறைகளை
பயன்படுத்த வேண்டுமென்றால், மேற்சொன்னபடி காலச்சக்கிர தசா முறையை
உபயோகப்படுத்த, சுக்கிரனுக்கும், நவாம்ச
இலக்னத்தில் உள்ள சந்திரன் ஆகியோருக்கு அதிக ஷட்பலம் இருக்க வேண்டும்.
எனவே, பராசர முறையைப் பின்பற்றுபவர்கள்
காலச்சக்கிர திசா முறையானது இந்த 120 மற்றும் 116 தசா முறைக்குள் அடங்குவதாக இருந்தாலும், காலச்சக்கிர
தசா முறையைப் பின்பற்ற முடியாது.
இனி, காலச்சக்கிர தசாபற்றி பார்ப்போம்,
இங்கு நட்சத்திரங்கள் வலவோட்டு மற்றும் இடவோட்டு எனப் பிரிக்கப் பட்டுள்ளன.
ஒவ்வொரு நட்சத்திர பாதங்களும் அசுவனியில் இருந்து வரிசைக் கிரமாகவும்,
அதன் சொந்த தேகம், ஜீவன் மற்றும் அதன் நவாம்ச கணக்குப்படியும்,
வலவோட்டாக மூன்று பிரிவுகளாக அல்லது குழுக்களாக உள்ளன. 1, 7,
13, 19 மற்றும் 25 ஆகிய நட்சத்திரங்கள் முதல் குழுவாகவும்.
2, 8, 14, 20 மற்றும் 26 ஆகியவை இரண்டாவது குழுவாகவும்,
3, 9, 15, 21 மற்றும் 17 ஆகியவை மூன்றாவது குழுவாகவும்
உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள இந்த நட்சத்திரங்களில் உள்ள நான்கு
பாதங்களும் முறையே 100, 85, 83 மற்றும் 86 என அதிக அளவு ஆயுளைத் தருகின்றன.
இந்த கிரகங்கள் இடம் பெற்றுள்ள இராசிகள், கீழ்க்கண்ட வருடங்களை ஆயுளாகத் தருகின்றன. சூரியன்
– 5, சந்திரன் – 21, செவ்வாய் – 7, புதன் – 9, குர் – 10, சுக்கிரன்
– 16 மற்றும் சனி – 4 வருடம் ஆகும். இதில் முதல் குழுவும் , மூன்றாவது குழுவும் ஒரே வரிசையைக்
கொண்டுள்ளன. மேஷத்தில் இருந்து கணக்கிடும் போது கீழ்க்கண்டபடி
அமைகிறது.
3, 9, 15, 21, 27 ஆகிய நட்சத்திரங்கள்
|
தேக அதிபதி
|
இராசி வரிசை
|
மொத்த வருடங்கள்
|
ஜீவாதிபதி
|
அம்சம்
|
பாதம் -1
|
செவ்வாய்
|
1 முதல் 9 வரை
|
100
|
குரு
|
மேஷம்
|
2
|
சனி
|
10 முதல் 12 மற்றும் இறங்குமுகமாக
8 முதல்
3 வரை.
|
86
|
புதன்
|
ரிஷபம்
|
3
|
சுக்கிரன்
|
இறங்கு முகமாக 9 – 2. பிறகு 1 முதல்
3 வரை.
|
83
|
புதன்
|
மிதுனம்
|
4
|
சந்திரன்
|
4 முதல் 12 வரை
|
86
|
குரு
|
கடகம்
|
மூன்றாவது குழுவில், அம்சங்களாவது தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகும்.
இரண்டாவது குழுவில் உள்ள வலவோட்டு நட்சத்திரங்கள் 2,
8, 14, 20 மற்றும் 26 ஆகும்.
அது கீழ்க்கண்டபடி அமையும்.
பாதம்
|
தேக
அதிபதி
|
இராசி வரிசை
|
மொத்த வருடங்கள்
|
ஜீவாதிபதி
|
அம்சம்
|
பாதம் -1
|
செவ்வாய்
|
8,7,6,4,5,3,12,1,12
|
100
|
குரு
|
சிம்மம்
|
2
|
சனி
|
11,10,9,1 முதல் 6
|
86
|
புதன்
|
கன்னி
|
3
|
சுக்கிரன்
|
7 முதல்
12,8,7,6.
|
83
|
புதன்
|
துலாம்,
|
4
|
சந்திரன்
|
4,5,3,2,1,12,11,10,9.
|
86
|
குரு
|
விருச்சிகம்.
|
இப்போது, வலவோட்டு நட்சத்திரங்களின் வரிசையைக் காண்போம், இங்கு
12 நட்சத்திரங்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை – அ) 4,10,16,22 ஆ)
5,11,17,23. இ) 6,12,18,24 ஆகும். இரண்டு மற்றும் மூன்றாம் குழுக்களின் வரிசை நிலை ஒரே மாதிரி இருக்கும்.
பாதம்
|
நட்சத்தி
ரங்கள்
|
ஜீவ
அதிபதி
|
வரிசை
|
மொத்த வருடம்
|
தேகாதிபதி
|
அம்சம்
|
|
பாதம் -1
|
4,10,16,22
|
குரு
|
இறங்கு வரிசையில் 9
முதல் 3 வரை
தொடர்ந்து 5, 4
|
86
|
சந்திரன்
|
விருச்சிகம்
|
2
|
4,10,16,22
|
புதன்
|
6,7,8,12,11,10,9,8,7
|
83
|
சுக்கிரன்
|
துலாம்
|
3
|
4,10,16,22
|
புதன்
|
6 முதல் 1 இறங்கு
வரிசையில் தொடர்ந்து9,10,11.
|
85
|
சனி
|
கன்னி
|
4
|
4,10,16,22
|
குரு
|
12 முதல்
3,5,4,6,7,8
|
100
|
செவ்வாய்
|
சிம்மம்
|
2 மற்றும் 3 ஆம் குழுக்கள் ஒரே வரிசை நிலைகளைக் கொண்டவை.
அம்சங்கள் மட்டும் சிறிது மாறுபடும்.
பாதம்
|
நட்சத்
திரங்கள்
|
ஜீவ
அதிபதி
|
வரிசை
|
மொத்த
வருடம்
|
தேகாதிபதி
|
அம்சம்
|
|
|
|
|
பாதம் -1
|
5,11,17,23
6,12,18,24
|
குரு
|
12 முதல்
4 இறங்குவரிசை
|
86
|
சந்திரன்
|
கடகம்
|
|
|
|
2
|
5,11,17,23
6,12,18,24
|
புதன்
|
3,2,1, 9 முதல் 2 வரை
|
83
|
சுக்கிரன்
|
மிதுனம்
|
|
|
|
3
|
5,11,17,23
6,12,18,24
|
புதன்
|
3,5,4,6,7,8,12,11,10.
|
85
|
சனி
|
ரிஷபம்
|
|
|
|
4
|
5,11,17,23
6,12,18,24
|
குரு
|
9,8,7,6,5,4,3,2,1
|
100
|
செவ்வாய்
|
மேஷம்.
|
|
|
|
சவ்யச்
சக்கரத்தில் முதல் பிரிவு தேகராசி மற்றும் கடைசிக்கு முந்தைய பிரிவிலுள்ள அதிபதி ஜீவாதிபதி
ஆவார்.
இதுவே, அபசவ்யச் சக்கிரத்தில் முதலில் ஜீவாதிபதியும்,
பின் வருவது தேகாதிபதியும் ஆவார்.
எப்போதும் தசா வரிசை முறையானது
கடிகாரச்சுற்றில் வருவதல்ல. (அ) மண்டூக
காம்னா எனும் தவளைப் பாய்ச்சல். (ஆ) பிரிஷ்டாதோ
காமனா எனும் பின்புறமான அசைவு மற்றும் (இ) சிம்ஹ வலோக்னா எனும் சிம்மப் பார்வை ஆகியவை ஆகும். பிரிஷ்டாதோ
காமனா எனும் சிம்மப் பார்வை என்பது கடகம் மற்றும் சிம்மத்தைப் பொறுத்தது. சிம்ஹ வலோக்னா எனும் சிம்மப் பார்வை மீனம், விருச்சிகத்துக்கு இடையேயும் மற்றும்
தனுசு- மேஷத்திற்கும் இடையேயான பாதை ஆகும். தவளைப்பாய்சல் எனும் மண்டூக காம்னா என்பது கன்னி, கடகத்துக்கு
இடையேயான மற்றும் சிம்மம், மிதுனம் ஆகியவற்றுக்கு இடையேயான தவளைப்
பாய்ச்சலாகும்.
இங்கு ஒன்பது இராசிகளையும்,
அதன் ஆதிபத்திய கிரகங்களையும் மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களையும்
தலைமையாகக் கொண்ட 9 மஹாதசைகள் இருப்பதாகக் கருதப்படுகின்றன.
சவ்யச் சக்ரா எனப்படும், வலவோட்டுச் சக்கரம்,
மேஷத்தில் இருந்து வலப்புறமாக தசாக்கள் நகர்ந்து, விருச்சிகத்தை அடைந்து, பிறகு பின்புறமாக நகர்ந்து தனுசு
இராசியை அடைகிறது. பிறகு திரும்ப மேஷத்தை சரியான வழியில்(வலது) மீனத்தை அடைகிறது.
ஜாதகர் பிறந்த நட்சத்திரம் மற்றும்
பாதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதகர் பிறந்தது திருவோணம் நட்சத்திரம்
3 ஆம் பாதம் ஆகும். சந்திரன் இருப்பது
289° 44´ 47” (பாகை/கலை/விகலை)
ஆகும். 3 வது அட்டவணையின்படி 22 வது நட்சத்திரமான திருவோணம்
3 ஆம் பாதத்துக்கு ஜீவாதிபதி புதனும், தேகாதிபதி
சனியும் ஆவர். அதற்கு உண்டான அதிகபட்ச ஆயுள் 85 ஆகும். இருப்பு 3° 35´ 13” ஆகும். 200 நிமிடங்களுக்கு 85 வயது. எனில்,
இருப்புக்குக் கணக்கிடும் போது 12913 × 85 ÷ 12,000 = 5 வருடம்
5 மாதம் 12 நாள் வருகிறது. மகரத்தில் பிறந்ததால் ஜாதகருக்கு சனி தசாவும், தேகாதிபதி
சனியாகவும், புதன் ஜீவாதிபதியாகவும் அமைந்தது.
ஜாதகர் பிறந்த நட்சத்திரத்தை
பூச நட்சத்திரத்தில் இருந்து கணக்கிட வேண்டும். அதை 8
ஆல் வகுக்க வேண்டும்.
பூசத்தில் இருந்து திருவோணம் 15 வது நட்சத்திரம்
ஆகும். இதை 8 ஆல் வகுக்க மீதி 7
ஆகும். மகாதசா வரிசையைப் பார்க்கும் போது சூரியன்
- 11, செவ்வாய்
– 12, குரு – 13, சனி – 14, கேது – 15, சந்திரன் – 16, புதன்
– 17, மற்றும் சுக்கிரன் – 18 வருடங்களாகும்.
நமது உதாரணத்தில் - பிறக்கும் போது 7 வது திசையாக வருவது, 17 வருட புதன் தசை ஆகும். சந்திரனின் நட்சத்திர பாகையில்
மீதியை எடுத்துக் கொண்டு, பிறப்பில் இருந்து உள்ள தசா இருப்பைக்
கணக்கிட வேண்டும். சந்திரன் மகரத்தில் 289° 44´ 47“ (பாகை/கலை/விகலை) யில் உள்ளார். சந்திரன் இன்னும் கடக்க வேண்டியது
3° 35´ 13“ ஆகும். இதற்குண்டான வருடங்கள்
4 வருடம்- 6 மாதம், 26 நாட்கள்
ஆகும். இதுவே புதன் தசா இருப்பு. இதற்கு
அடுத்து சுக்கிரன் தசா 18, சூரியன் – 11, செவ்வாய் 12, குரு
13 என 22/1/1920 ஆம் ஆண்டு பிறந்த ஜாதகருக்கு
18/8/1978 வரை குரு தசா நடக்கும். அதற்குப்
பிறகு சனி தசா - + 14 = 18/8/1992 வரை ஆகும். பின்னர் வருவது கேது திசை – 15 வருடம் ஆகும். இராகுவுக்கு இந்த முறையில் இடம் இல்லை. வேறு எந்த தசா முறையும், இந்த தசா முறை எல்லைக்குள் கட்டுப்பட்டே வரும்.
காலச்சக்கிர தசை, சந்திரன் இருக்கும் நட்சத்திர பாதத்தைப் பொறுத்தே அமைகிறது. அ) 1,7,13,19 மற்றும் 25. ஆ).
2,8,14,20 மற்றும் 26 இ) 3,9,15,21 மற்றும் 27 ஆகிய இந்த மூன்று வரிசையும் சவ்ய சக்கரத்திற்கு
உட்பட்டவை ஆகும். இந்த அ,ஆ,இ மூன்றிலும் உள்ள நட்சத்திர பாதங்களுக்கு தேகாதிபதி – மேஷம் – செவ்வாய், மகரம்
– சனி, ரிஷபம் – சுக்கிரன்
மற்றும் கடகத்துக்கு – சந்திரன் ஆகியோர் ஆகும்.
ஜீவாதிபதிகள் – தனுசுக்கு – குரு, மிதுனம்
– புதன், மிதுனம் – புதன்
மற்றும் மீனம் குரு ஆகும்.
எனவே, காலச்சக்கிர தசாவைப் பயன்படுத்தும் போது விம்சோத்ரி
அல்லது சோடோத்ரி தசா முறைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
2,8,14,20,26 ஆகிய நட்சத்திரங்களின்,
நான்கு பாதத்திற்கான தேகாதிபதிகள் விருச்சிகத்திற்கு – செவ்வாய், கும்பத்திற்கு – சனி,
துலாத்திற்கு – சுக்கிரன் மற்றும் கடகத்திற்கு
சந்திரன் ஆவர். அவற்றிற்கான ஜீவாதிபதிகள் – மீனம் – குரு, கன்னி – புதன், கன்னி – புதன் மற்றும்
– தனுசு – குரு ஆவர். காலச்சக்கிர
தசாவில் அம்சம் மிக முக்கியப்
பங்கு வகிக்கிறது. மேஷத்திலிருந்து கணக்கிடும் போது, அ. பிரிவுக்கு ஒவ்வொரு பாதத்திற்கும் உரிய அம்சங்கள்
1,2,3,4, ஆ. வுக்கு 5,6,7,8 மற்றும் இ – க்கு 9,10,11,12, ஆகும்.
அ) 4,10,16,22 ஆ). 5,11,17.23 மற்றும் இ) 6,13,18.26 ஆகிய நட்சத்திரங்கள் இடவோட்டுப் பிரிவுக்கு உரியதாகும். ஆ மற்றும் இ பிரிவுக்கான ஜீவாதிபதிகள் மீனம் – குரு,
மிதுனம் – புதன், மிதுனம்
– புதன் மற்றும் தனுசு – குரு ஆகும், இந்த இரு பிரிவுக்கான தேகாதிபதி கடகச் சந்திரன், ரிஷபச்
சுக்கிரன், மகரச் சனி மற்றும் மேஷச் செவ்வாய் ஆகும்.
அ) வுக்கு
(4,10,16,22) ஜீவாஅதிபதி தனுசு – குரு,
கன்னி – புதன், கன்னி
– புதன் மற்றும் மீனம் – குரு ஆகும். தேகாதிபதி கடகம் – சந்திரன், துலாம்
– சுக்கிரன், கும்பம் – சனி
மற்றும் விருச்சிகம் – செவ்வாய் ஆகும். ஒவ்வொரு பாதத்திற்குமான ஆயுள் முறையே 86, 83, 85 மற்றும்
100 வருடங்கள் ஆகும். இந்த நட்சத்திர பாதங்களின்
அம்சங்கள் மேஷத்திலிருந்து கணக்கிடும் போது 8,7,6,5,3,2,1, 12,4,10 மற்றும் 9 ஆகும்.
எல்லா நிலைகளிலும் சவ்ய அல்லது
வலவோட்டு தசா வரிசை முறையானது கடிகாரச்சுற்றின் படி வராது. அ
மற்றும் இ வரிசையில் உள்ள பாதங்கள் மீனத்திலிருந்து, விருச்சிகத்திற்கு
ஒரு தாவு தாவும். பிறகு மறுபடியும் கன்னியில் இருந்து இவ் வரிசை
– மேஷம் முதல் எண்ணும் போது 4,5 மற்றும்
3 என வரும். இந்த இரண்டு குழுக்களில் உள்ள
3 ஆம் பாதங்கள், 9 ஆம் இராசியில் இருந்து
1 க்குத் தாவும். இதை ஒவ்வொரு இராசி தருகின்ற ஆயுளை
ஒரு அட்டவணையாகத் தயாரிப்பது நல்லது.
முதல் பாதம் – 1-7,
2-16, 3-9, 4-21, 5-5, 6-9 7-16, 8-7, மற்றும் 9-10.
இரண்டாம் பாதம் –
10-4, 11-4, 12-10, 8-7, 7-16, 6-9, 4-21, 5-5 மற்றும்9-9.
மூன்றாம் பாதம் –
2-16, 1-7, 12-10, 11-4, 10-4, 9-10, 1-7, 2-16 மற்றும் 3-9.
நான்காம் பாதம் –
4-21, 5-5, 6-9, 7-16, 8-7, 7-16. 8-7, 9-10, 10-4, 11-4 மற்றும்
12-10 ஆகும்.
2,8,14,20 மற்றும் 26 வது சவ்ய நட்சத்திரச் சக்ர வரிசை மாறுபட்டு வரும்.
முதல் பாதம் – 8-7,
7-16, 6-9, 4-21, 5-5, 3-9, 2-16, 1-7, மற்றும்12-10 ஆகும்.
இரண்டாம் பாதம் – 11-4,
10-4, 9-10, 1-7, 2-16, 3-9, 4-21, 5-5 மற்றும் 6-9 ஆகும்.
மூன்றாம் பாதம்.—7-16,
8-7 , 9-10, 10-4, 11-4, 12-10, 7-7, 6-16 மற்றும் 5-9 ஆகும்.
நான்காம் பாதம் –
4-21, 5-5, 3-9, 2-16, 1-7, 12-10, 11-4, 10-4 மற்றும் 9-10 ஆகும்.
அபசவ்ய சக்கரத்தில் மூன்று நட்சத்திர குழுக்களாக உள்ளன.
அ) 4,10,16 மற்றும் 22 ஆகிய
நட்சத்திரங்கள் கீழ்க்கண்ட வரிசையில் வரும்.
முதல் பாதம் -
9-10,10-4,11-4, 12-10, 1-7, 2-16, 3-9, 5-5, மற்றும் 4-21 ஆகும்.
இரண்டாம் பாதம் –
6-9, 7-16, 8-7, 12-10, 11-4, 10-4, 9-10, 8-7 மற்றும் 7-16 ஆகும்.
மூன்றாம் பாதம்.— 6-9, 5-5, 4-21, 3-9, 2-16, 1-7, 9-10, 10-4, மற்றும் 11-4 ஆகும்.
நான்காம் பாதம் –
12-10, 1-7, 2-16, 3-9, 5-5, 4-21, 6-9, 7-16, மற்றும் 8-7 ஆகும்.
அடுத்த
இரு குழுக்களுக்கான ஆ) 5, 11, 17, மற்றும் 23 இ)
6, 12, 18, மற்றும் 24 ஆகியவற்றுக்கான இராசிகள்
மற்றும் வருடங்கள் கீழ்வருமாறு –
முதல் பாதம் – 12-10,
11-4, 10-4, 9-10, 8-7, 7-16, 6-9, 5-5 மற்றும் 4-21. ஆகும்.
இரண்டாம் பாதம் – 3-9,
2-16, 1-7, 9-10, 8-7, 11-4, 12-10, 1-7 மற்றும் 2-16 ஆகும்.
மூன்றாம் பாதம் – 3-9,
5-5, 4-21, 6-9, 7-16, 8-7, 12-10, 11-4 மற்றும் 10-4 ஆகும்.
நான்காம் பாதம் –
9-10, 8-7, 7-16, 6-9, 5-5, 4-21, 3-9, 2-16 மற்றும் 1-7 ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திர பாதமும்
9 இராசிகளுக்குள்ளும் அடைபடுகின்றன. ஒவ்வொரு நட்சத்திரமும் 36 மகாதசாக்களைக் கொண்டுள்ளன. ஒரு ஜாதகர் எந்த நட்சத்திர
பாதத்தில் பிறந்தாலும் பூர்ண ஆயுளின் காலம் ஒன்றாகவே உள்ளது.
மூன்று வித (பாய்ச்சல்கள்) அசைவுகள் உள்ளன பிரிஷ்டோக்கமனா
(பின்புறமாகச் செல்லுதல்) கடகம் மற்றும் சிம்மம்
முதலாக ஏற்படுகிறது. மீனம் முதல் விருச்சிகம் மற்றும் தனுசு முதல்
மேஷம் வரை சிம்ஹவலோக்னா (சிங்கப்பார்வை) ஆகும். கன்னி முதல் கடகம் வரையும் மற்றும் சிம்மம்,
மிதுனத்துக்கு இடையே ஏற்படுவது மண்டூக காட்டி எனப்படும் தவளைப்பாய்ச்சல்
ஆகும்.
சவ்யச் சக்ரா எனும் வலவோட்டுச்
சக்கரத்தில் கன்னி முதல், கடகம் வரை மற்றும் சிம்மம் முதல் மிதுனம்
வரையும் ஏற்படுவது மண்டூக காட்டி, மார்கட காட்டி ஆகும்.
அபசவ்யச் சக்கரத்தில், கடகம் முதல் கன்னி வரை மற்றும்
மிதுனம் முதல் சிம்மம் வரை ஏற்படுவதாகும்.
சவ்யச் சக்கரத்தில் தேகத்தில்
இருந்து கணக்கிடப்பட வேண்டும். அபசவ்யச் சக்கிரத்தில் ஜீவனில்
இருந்து கணக்கிடப்பட வேண்டும்.
ஆராய்ச்சி என்ற பெயரில் வேத ஜோதிடத்தின்
உயரிய பெருமையை சீர்குலைக்கும் வண்ணம் நடந்துகொண்டு அறிஞர்களை வருத்தமுறச் செய்வதே
தற்கால ஜோதிடர்களுக்கு நவநாகரீகம் ஆகிவிட்டது. சம்கிதாக்களும்,
பிரமாணங்கள் மற்றும் ஆரண்யங்களும் ஒவ்வொரு வேதத்தையும் உருவாக்கின.
எந்த வேதத்திலும் பலன் காணும் முறைகள் அல்லது விதிகள் உருவாக்கப்படவோ
அல்லது கொடுக்கப்படவோ இல்லை. மூகூர்த்தம் குறிப்பதற்கான பஞ்சாங்க
நூல்கள் மட்டுமே இருந்தன. வேத நூல்களில் பலன்காணும் விதிகள் எங்கும்
காணப்படவில்லை.
“பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா”
எழுதிய பராசரர், வேதவியாசரின் தந்தை எனச் சொல்லப்படுபவரல்ல.
வேதமானது மிகப் புனிதமானது மற்றும் புனிதத் தன்மை மாறாது இருக்க வேண்டிய
ஒன்று. எனவே, வேத ஜோதிடம் என்று சொல்லப்படுவது
அபத்தமானது. இந்திய ஜோதிடம் அல்லது இந்து ஜோதிடம் மட்டுமே உள்ளது.
“ஜெய்மினி சூத்திரம்” எழுதிய
ஜெய்மினியும், “பூர்வ மீமாம்ச சூத்திரம்” எழுதிய ஜெய்மினியும்
ஒருவரல்ல. இங்ஙனம் பெயர்க் குழப்பங்களே வரக்கூடாது. மடங்களின் பீடாதிபதிகள் அனைவரும் சங்கராச்சாரியார் எனக் குறிப்பிடப்பட்டாலும்
அவர்களெல்லாம் “ஆதிசங்கரர்”
ஆகிவிடமாட்டார்கள். பராசரர் நூல்களிலும் ஜெய்மினி சூத்திரங்கள்
உள்ளடங்கி உள்ளது. இவர்களெல்லாம் மகரிஷிகள் மற்றும் வேதத்தின்
மீது நம்பிக்கை உடையவர்கள். ஆனால், அவர்கள்
வேதங்களில் இருந்து எந்தவொரு ஜோதிட விதிகளையும் வெளிக்கொணரவில்லை. எனவே, வேதங்கள் புனித மானவைகளாகவே இருக்க விட்டுவிடுங்கள்.
உள்ளுணர்வு மிக்கவர்களாக விளங்கிய
நமது மகரிஷிகள், அவர்களின் உள்ளுணர்வு மூலமாக நம்மை ஆசீர்வதித்தார்கள்.
மகாபாரதத்தில் கூட கிரகணங்கள் பற்றிய குறிப்புக்கள் மட்டுமே உள்ளன.
மனுவானவர் பிரகடனப்படுத்தியபடி, வேதங்கள் நமது
தர்மத்திற்கான வழிமுறைகள் மட்டுமே ஆகும். எனவே, முன்னர் குறிப்பிட்டபடி, இந்திய அல்லது இந்து ஜோதிடம்
மட்டும் உள்ளதேயன்றி, வேதஜோதிடம் என ஒன்று இல்லை என்பதை நாம்
உணர வேண்டும். தாஜிக் முறையும் தஜகிஸ்தான் நாட்டில் இருந்து வந்தது
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
--தொடரும்
வல்லமை தாராயோ -பராசக்தி, இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.......