Search This Blog

Friday, 26 September 2014

காலச்சக்கிர திசை - 2



காலச்சக்கிர திசை



       ஒவ்வொரு நட்சத்திர பாதத்திற்கும் அதிகபட்ச ஆயுள் வருடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஜாதகருக்கு உரிய ஆயுள், நட்சத்திர பாதத்தின் இருப்பை வைத்துக் கணக்கிடப்படுகிறது.

      உதாரணமாக, ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் மகரத்தில் 19° 44´ 47”  திருவோணம் - 3 ஆம் பாதத்தில் உள்ளார். இருப்பு 0° 15´ 13”  ஆகும். 3 ஆம் பாதத்திற்குக் கொடுக்கப்பட்ட ஆயுள் வருடம் 85 ஆகும். 913 நிமிடத்திற்கு 6 வருடம் 5 மாதம், 18 நாள் வருகிறது. இந்த ஜாதகர் பிறந்த தேதி 22 – 1 -1920, எனவே 10 - 7 – 1926 இல் வட்டம் முடிவடைகிறது.
  
      இராசிகளின் வரிசைப்படி தசாகள் அமைகின்றன. இந்த வரிசை முடிந்தபின், 3 ஆம் பாதத்திற்கு ஒதுக்கப்பட்ட இராசியிலிருந்து தொடங்கப்பட வேண்டும். திருவோணம் மூன்றாம் பாதத்திற்கு, இந்த வரிசையானது கன்னியில் தொடங்கி மேஷம் வரை பின்புறமாகக் கணக்கிட்டு 67 வருடங்களை குறிகாட்டும். இங்கு மேஷதசா 10-7-1993 முடிவடைகிறது. பிறகு, அந்த வரிசை தனுசுவில் இருந்து கடிகாரச் சுற்றாக வரும். இந்த ஜாதகருக்கு தனுசு தசா  10 – 7 – 2003 வரை உள்ளது

      தசாவின் வரிசை ராசியின் வரிசைப்படி அமைகிறது. இந்த வரிசை முடிந்ததும், மூன்றாம் பாதத்திற்கு ஒதுக்கப்பட்ட இராசியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். திருவோண நட்சத்திர 3 ஆம் பாதத்திற்கு உரிய வரிசை கன்னி முதல் மேஷம் வரை பின்புறமாக வந்து 67 ஆண்டுகளைக் குறிக்கும். மேஷதசாவின் காலம் 10-7-1973 இல் முடிவடைகிறது. அடுத்து, இவ் வரிசை தனுசுவில் இருந்து கடிகாரச் சுற்றாகத் தொடங்குகிறது. தனுசு தசா 10-7-2003 வரை ஆகும்.

      தசாவரிசையை ஒட்டியே அந்தர தசாவும் அமைகிறது. ஆயுளானது 85 வருடம் என இருக்கும் போது , தனுசு தசா 10 ஆண்டுகளை உடையது. 10 10 ஆல் பெருக்கி 85 ஆல் வகுக்க – 1 வருடம் 2 மாதம் 3 நாள் - அந்தர தசா வரும். இவ்வாறாக ஜாதகருக்கு தனுசு இராசியில் கடக மகாதசா 15-4-1997 முதல் 15 – 10 - 1997  வரை உள்ளது.

      மற்றும் ஒரு வழிமுறையில் பார்க்கும் போதுதிருவோணத்தின்  - 3 ஆம் பாதம் அம்சத்தில் கன்னியாகும். கன்னிக்கு 9 வருடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்தில் இருப்பு 913 நிமிடங்கள் ஆகும். மீதமுள்ள காலம் 11087 நிமிடங்கள் ஆகும். 12,000 நிமிடத்திற்கு 9 வருடம் ஆகிறது. எனவே 913 நிமிடத்திற்கு = 913 × 9 ÷ 12000 = 8 மாதம் மற்றும் 65 நாட்கள் ஆகும். அதைத் தொடர்ந்து வரும் தசா வரிசையானது சிம்மம் – 5, கடகம் – 21, மிதுனம் – 9, ரிஷபம் – 14, மேஷம் – 7, தனுசு – 10, மகரம்  மற்றும் கும்பம் என வரும். 29-9-1978 அன்று வரை தனுசு மகாதசை ஆகும். அம்ச இராசி வீட்டை சுய வீடாகக் கொண்ட இராசியே முதல் தசாவாக உள்ளது
   
      மற்றுமொரு உதாரணத்தைப் பார்ப்போம். சந்திரன் மகர இராசி 14° 29” 30´ இல் உள்ளான். இது திருவோணம் 2 ஆம் பாதமாகும். இது அபசவ்ய நட்சத்திரமாகும். இதற்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஆயுள் வருடம் 83 வருடமாகும்.  கடந்தபோன பகுதி 69.65 நிமிடங்களாகும். இவ்வாறாக 69.85 × 83 ÷ 200 = 28.9 வருடங்கள்.

       இதன் வரிசை கன்னி 9, துலாம் – 16, விருச்சிகம் – 7, மீனம் – 10, கும்பம் – 4 மற்றும் தொடர்ச்சியாக வரும். இந்த உதாரணத்தில் பிறந்த நேரத்தில் இருந்து விருச்சிகம் வரை 3.9 வருடங்கள் முடிந்து உள்ளன. மற்றுமொரு பார்வையில் துலாத்துக்கு 16 வருடங்கள் உள்ளன.

       பிறகு, 69.65 × 16 ÷ 200 = 5.57 வருடங்கள்.

       துலாத்துக்கு முதல் தசை 10.43 வருடங்கள் ஆகும். 2 ஆம் பாதத்தின் முடிவாக துலாம் அம்சம் வருவாதல், இந்த  வரிசையானது கன்னி, சிம்மம், கடகம், மிதுனம், ரிஷபம், மேஷம், தனுசு, மகரம் மற்றும் கும்பம்  என அமைக்க வேண்டும்.

       முதலில் குறிப்பிடப்பட்ட உதாரணத்தில் தசாக்களின் வரிசை அம்சம் முதலாக வருகிறது. இரண்டு விதமாகவும் (22,10,11) மந்தரேஸ்வரர் குறிப்பிடுகிறார்.

       தேகா மற்றும் ஜீவனின் முக்கியத்துவத்தை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். சவ்யச் சக்கிரத்தில் முதல் பிரிவு தேகாவாகவும், கடைசிப் பிரிவு ஜீவனாகவும் உள்ளன. அபசவ்யச் சக்கரத்தில் அது மாறுபட்டு இருக்கும்.

        சூரியன், செவ்வாய், இராகு, அல்லது கேது ஆகியோர் தேகம் மற்றும் ஜீவனில்  இருந்தால் அது இறப்பு நிலை ஆகும். அவை தேகாவில் மட்டும் இருந்தால் அது நோயைத்தரும், என பராசரர் குறிப்பிடுகிறார். இந்த நிலைகள் அந்த இராசிகளின் தசாக் காலங்களில் ஏற்படும்.

        புதன், குரு அல்லது சுக்கிரன் ஆகியோர் தேகம் மற்றும் ஜீவனில் இருக்க அந்த தசைகள் செல்வத்தையும், சந்தோஷத்தையும் அளிக்கும். அதுவே சுப மற்றும் அசுபக் கிரகங்கள் இணைந்து இருக்குமானால் பலன் இரண்டும் கலந்த ஒன்றாக இருக்கும். கவலைகள் மற்றும் நோய்களும் மறைந்துவிடும். பராசரர் முழு நிலவையும் இந்தப் பட்டியலில் சேர்க்கிறார். தேகாவில் இடம் பெறும் சுபக் கிரகங்கள் ஆபரணங்கள் போன்றவற்றை அளிக்கின்றன. ஜீவனில் இடம் பெறும் சுபர்கள் திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் போன்றவற்றை அளிக்கின்றன.

        சூரியன். செவ்வாய், சனி மற்றும் இராகு ஆகியோர் தேகாவில் இடம்பெற மரணத்தை அளிக்கிறது. அங்கு இடம்பெறும் அசுபர் தீராத நோய்களைத் தரும். அதுவே ஜீவனில் இடம்பெற மிகுந்த பயத்தை அளிக்கிறது. எனவே, தேகம் மற்றும் ஜீவனில் அசுபக்கிரகங்கள் இருக்கக்கூடாது மற்றும் இந்த இராசிகள் அசுபக்கிரகங்களால் பாதிப்பு அடையவும் கூடாது. இந்த இராசிகளின் தசாக்காலங்களில் அந்தந்த பலன்கள் நடைபெறும். தேகம் மற்றும் ஜீவ இராசிகள் இரண்டுமே பாதிக்கப்பட்டால், அந்த இராசிகளின் தசாக்காலங்கள் துன்பங்களின் உச்ச காலங்களாக அமைந்துவிடும்.

       தேகம் மற்றும் ஜீவனில் இரு அசுபர் இருக்க நோய் அதிகரிக்கும். அதுவே மூன்று சுபக் கிரகங்கள் இடம்பெற, அந்த இராசியின் தசா காலத்தில் கண்டிப்பாக மரணம் நிகழும். 4 அசுபக்கிரகம் எனில் கண்டிப்பாக தப்பிப்பதற்கு வழி இல்லை எனலாம்.

       தேகம் மற்றும் ஜீவன் இராசிகள் ஒவ்வொன்றிலும் ஒரு அசுபக் கிரகம் இடம்பெற, அரசாள்பவர், கொள்ளையர் மற்றும் அவர்களைப் போன்றவர்களிடம்  இருந்து துன்பம் வரும். இரண்டிலும் இரு அசுபர் இருக்கக் கேட்கவே வேண்டாம், உயிருக்குக் கூட பாதிப்பு ஏற்படலாம். இராசிகளில் கிரகங்களின் இருப்பு நிலையைப் பொருத்து பலன்கள் மாறுபடும். அவற்றைக் கீழே காணலாம்.

       சூரியன் இருக்கநெருப்பால் பாதிப்பு, சந்திரன்தீ விபத்து, செவ்வாய்ஆயுத்தால் பாதிப்பு, புதன் வாயுத்தொல்லை, குருவயிற்றில் பிரச்சனை, சுக்கிரன்தீயால் பிரச்சனை, சனி வயிற்றுவலி, இராகுவிஷகடி.

       தற்போது நாம் தேகம் அல்லது ஜீவ இராசியில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம். இதில் கிரகங்களின் ஆதிபத்தியம், இருப்பு நிலை மற்றும் பார்வை ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதற்கான பலன்கள் இராசியின் தசாக் காலங்களில் நடைபெறும்.

       சூரியன் துன்பம், செல்வம் இழப்பு, நோய், காய்ச்சல், பகைவர்களால் பயம், இடமாற்றம், வயிற்றுப்போக்கு, எலும்புருக்கி நோய், காதுக் கோளாறு, சகோதர இழப்பு, சொந்தத்தில் இழப்பு.

       சந்திரன்உதவிகரமான மனைவி, ஆரோக்கியம், ஆபரணங்கள், நல்லாடைகள், நிலம், அன்பளிப்புகள், மத சம்பந்தமான நடவடிக்கைகள். புனிதப் பயணங்கள் மற்றும் சந்தோஷம்.

       செவ்வாய்மோசமான நிலை, ஆரோக்கியமின்மை, அழற்சி, எரிச்சல், திருட்டு பயம், தீ பயம், உறவுகளுடன் சண்டை, நெருங்கிய உறவில் மரணம், பணம் மற்றும் சொத்துக்கள் இழப்பு, மதிப்பு இழப்பு, அவமானம், மூலநோய், ஊர்வன மற்றும் பகைவர்களால் பயம், சின்னம்மை, கட்டி, வீக்கம், ஆயுதத்தால் ஆபத்து.

       புதன்அனுகூலமான நிலை, செய்முறைப் பயிற்சி, சிற்பக்கலைதத்துவம் மற்றும் விஞ்ஞானத்தில் ஆழ்ந்த அறிவு, திருமணம், புத்திர பாக்கியம், ஆபரணங்கள், கால்நடைகள், செல்வம், அறிவுத்திறன் மற்றும் புகழ்.

       குரு – பெருஞ்செல்வம், உயர்பதவி, உறுப்பினர்களால் மதிக்கப்படுபவர், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, ஆபரணங்கள், ஆரோக்கியம், செல்வம், புகழ் மற்றும் வெற்றி.

       சுக்கிரன் – நல்ல பெண்களின் கூட்டு, நுண்கலைகளின் மூலமான சந்தோஷம், நல்லாடைகள், வாகனங்கள், இரத்தினங்கள், இசை மற்றும் நடனம், புகழ், தயாளகுணம் மற்றும் நல்வொழுக்கம் மிக்கவர்.

       சனி – சண்டைகள், உடல்வலி, ஆரோக்கியமற்ற, உறவுகளால் தொல்லை, நெருப்பு, பேய், விஷஜந்து மற்றும் எதிரிகளால் பயம், அவமானம், சொத்து இழப்பு, குழந்தைகள் மற்றும் விவசாய இழப்பு.

       இராகு – எதிரிகளால் மற்றும் உறவுகளால் தொல்லை, அலைந்து திரிதல், முடக்குவாதம், அரசாங்கத்தால் பயம்.

       கேது – திருட்டு பயம், இரத்தப்போக்கு, உறவுகள் இழப்பு மற்றும் பண இழப்பு.
   

    வல்லமை தாராயோ பராசக்தி- இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.                             

No comments:

Post a Comment