உ
ஜாதக பலன அறியும் முறைகள்.
ஒரு ஜாதகத்தை ஆராயும்போது அதன்
இராசி சக்கரம், நவாம்சம் மற்றும் இதர பிரிவுக்கட்டங்களும் அலசப்பட
வேண்டும்.
1. இராசி.- ஜாதகர் பற்றிய பொதுவான நிலை.
2. ஹோரை- செல்வநிலை,
3. திரேகாணம் – முயற்சி மற்றும் இளைய சகோதரம்,
4. சதுர்தாம்சம்(அ) துரியாம்சம் – முழுமையான சொத்துக்கள்.
5. சஷ்டாம்சம்.- ஆரோக்கியம் மற்றும் நோய் வகைகள்.
6. சப்தாம்சம் – புத்திர பாக்கியம். அஷ்டாம்சம் – ஆயுள்.
7. நவாம்சம் – பொதுவான அதிர்ஷ்டம். மகிழ்ச்சியான வாழ்க்கை, மத சம்பந்தமான நாட்டங்கள்.
8. தசாம்சம் – தொழில், புகழ் மற்றும் ஒப்பந்தங்கள்.
9. துவாதசாம்சம் – பெற்றோர் பற்றிய நிலை
.
10. சதுர்விம்சாம்சம்.- கல்விநிலை அறிய.
பாவத்தை ஆராய்தல் ; ஒவ்வோரு பாவத்தின்படியும் ஜாதகம் அலசப்பட வேண்டும். அதற்கான
நடைமுறை –
1. வீடு
அல்லது பாவம்.
2. பாவாதிபதி.
3. பாவாதிபதிக்கு
இடம் கொடுத்தவன்.
4. பாவகாரகர்.
பாவம்
|
காரகர்
|
பாவம்
|
காரகர்
|
பாவம்
|
காரகர்
|
1.ஆம்
பாவம்
|
சூரியன்
|
5.ஆம்
பாவம்
|
குரு
|
9.ஆம்
பாவம்
|
குரு.சூரி
|
2.ஆம்
பாவம்
|
குரு
|
6.ஆம்
பாவம்
|
செவ்வாய்
சனி
|
10.ஆம்
பாவம்.
|
சூரி,புதன்
குரு, சனி.
|
3.
ஆம் பாவம்
|
செவ்வாய்
|
7.ஆம்
பாவம்.
|
சுக்கிரன்.
|
11.ஆம்
பாவம்.
|
குரு.
|
4.
ஆம் பாவம்
|
குரு,
சுக்கிரன்.
|
8.ஆம்
பாவம்.
|
சனி
|
12.ஆம்
பாவம்
|
சனி
|
5. பாவத்தில்
உள்ள மற்றும் பார்க்கும் கிரகங்கள்.
6. பாவதிபதியின்
நட்சத்திராதிபதி/பாவகாரகர்
7. ‘காரஹோ நாஸ்யந்தி பாவா’ – பாவகாரகர் தனது காரக பாவத்தில்
இருக்க, அந்த பாவத்திற்கு உரிய மனித உறவுக்கு மட்டுமே பாதிப்பைத்
தருமேயன்றி மற்ற காரகங்களுக்கு அல்ல என்பதை நாம் நினைவில் கோள்ள வேண்டும். உதாரணமாக – 5 ஆம் பாவத்துக்குக் காரகரான குரு
5 இல் அமர குழந்தைப் பிறப்புக்கு பாதிப்புத் தருமேயன்றி மற்ற
5 ஆம் பாவகாரகங்களுக்கு அல்ல.
8. நவாம்சம்
மற்றும் அந்த கிரகத்துக்கான நவாம்ச அதிபதி – வர்கோத்தமம்
மற்றும் நவாம்ச இராசி பார்க்கப்படவேண்டும்.
மூன்றாம்
படி
–
1. இலக்னம், சந்திராலக்னம், நவாம்சம் மற்றும் தொடர்புடைய வர்கக் கட்டங்கள்
மூலமாக அலசப்பட வேண்டும்.
2. கிரக
இருப்பு நிலை – இராசி மற்றும் பாவத்தில்.
(Position, Aspect and Conjunction)
3. பாவ
காரகரின் இயற்கை குணங்கள்/காரகங்கள்.
4. பாவம், பாவாதிபதி மற்றும் காரகர் ஆகியோர் பலத்துடன் உள்ளனரா?
சுப இராசியில் உள்ளதா?
சுப கிரக பார்வை, இணைவு, அதன் அதிபதியுடன்
இணைவு, நட்பு நிலையில் உள்ளதா ?
சுப கர்த்தாரியில் உள்ளதா ?
பாவச் சக்கரத்தில் இலக்னத்துக்கு 4 மற்றும் 8 சுபக்கிரகம் அமர்ந்துள்ளதா?
5 மற்றும் 9 இல் சுபக் கிரகம்
உள்ளதா ?
இலக்னாதிபதியுடன் இணைவு அல்லது பார்வையில் உள்ளதா ?
பாவங்களின் அதிபதிகள் அதற்கு 3,6,8
மற்றும் 12 ஆம் பாவங்களில் இல்லாமல் கேந்திர,
கோணங்களில் உள்ளதா ? என்றும் பார்க்க வேண்டும்.
5. இராசியில்
உள்ள யோகங்கள்.
பாவத்தின் முக்கிய குறிகாட்டிகள் – ஒவ்வொரு பாவமும் தனது சுய பாவத்தின் தன்மைகளோடு மற்ற 12 பாவங்களின் காரக இணைவு பெற்றுள்ளது. உதாரணமாக
– முதல் இலக்ன பாவமானது, இதற்கு அடுத்துள்ள
2 ஆம் பாவத்துக்கு
12 ஆம் பாவம் அதாவது குடும்ப விரயம் உணவு மற்றும் சொத்து இழப்புக்குக்
காரணமாகிறது. அதவே 11 ஆம் பாவத்துக்கு
3 ஆம் பாவம் ஆதலால், இளைய சகோதரம், தைரியம், முயற்சி, பலம் ஆகியவற்றைக்
குறிக்கிறது எனவே, முதல் பாவமானது இக் காரகங்களுக்கு இலாபத்தைத்
தருகிறது. 10 ஆம் வீட்டுக்கு, இலக்னம்
4 ஆம் வீடாகிறது. எனவே, தந்தை,
சொத்து, குடும்ப சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
ஆகையால், இலக்னம் புகழையும், கொரவத்தையும், தாயின் தொழில் வெற்றி என இவ்வாறாக ஒவ்வொரு
பாவமும் மற்ற 11 பாவ காரகங்களுடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்படவேண்டும்.
அதற்கான அட்டவணை கீழே –
1 ஆம் பாவம் – உடல்,
தோற்றம், ஆரோக்கியம், கால்கள்,
பலம், பிறந்த இடம், மகிழ்ச்சி, துன்பம், முந்தைய சம்பவம், பெருந்தன்மை,
கௌரவம், பொது அந்தஸ்து, நீண்ட கூந்தல்/ முடி, பெருமிதம்,
வாழ்வாதாரம், இலாபத்துக்கான
மற்றும் பதுக்கி வைத்த சொத்துக்கான ஆசை, முரட்டுத்தனம், திருப்தியின்மை, மனக்குறை, கடல்
பயணம், ஆரோக்கிய நிலை மற்றும்
பாவம்
|
காரகங்கள்
|
ஒன்றாம்
பாவமானது
|
இலக்ன பாவமானது 2 ஆம்
பாவத்திற்கு 12 ஆம் பாவமாதலால் குடும்பம் மற்றும் உணவு இழப்பும்
|
3 ஆம்
பாவத்திற்கு 11 ஆம் பாவமாதலால் சகோதரர் மற்றும் அண்டை வீட்டாருக்கு
இலாபமும்
|
|
4 ஆம்
பாவத்திற்கு 10 ஆம் பாவமாதலால் தாய் மற்றும் உறவுகளுக்கான மரியாதையையும்
|
|
5 ஆம்
வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால் பயணங்கள் மற்றும் குழந்தைகளின்
அதிர்ஷ்டத்தையும்.
|
|
6 ஆம்
வீட்டுக்கு 8 ஆம் பாவமாதலால் எதிரிகளால் தொல்லை மற்றும் கடன்காரர்களால்
தொல்லையையும்
|
|
7 க்கு
7 ஆம் பாவமாவதால் களத்திரத்தின் உறவுகள் மற்றும் தோற்றம் பற்றியும்
|
|
8 க்கு
6 ஆம் பாவம் ஆதலால் களத்திர உறவுகளுக்கு நோய் மற்றும் கடனையும்
|
|
9 க்கு
5 ஆம் பாவமாதலால் தந்தையின் விவகாரகங்கள் பற்றியும்
|
|
10 க்கு
4 ஆம் பாவமாதலால் வாழ்வாதர முன்னேற்றங்கள் மற்றும் விருப்பங்களையும்
|
|
11 க்கு
3 ஆம் பாவமாவதால் சகோதரர் அல்லது நண்பர்களின் பயணங்களையும் குறிக்கிறது.
|
|
12 க்கு 2 ஆம் பாவமாதலால் எதிரிகள் மற்றும்
சதியாளர்களின் சொத்துக் கிடைத்தல்.
|
2 ஆம் பாவம் – உணவு,
கற்றல், பொறுப்புக்கள், வலது
கண், முகம், ஆசையும் சொத்துக்கள், பேச்சு, குடும்பம்,
பாரம்பாரியம், நகம். நாக்கு,
மூக்கு, பணம்
மற்றும்
பாவம்
|
காரகங்கள்
|
இரண்டாம்
பாவமானது
|
3 ஆம்
பாவத்துக்கு 12 ஆம் பாவமாதலால் இழப்பும் அண்டை அயலார் மற்றும்
சகோதர் சிறை செல்லல், மருத்துவ மனையில் அனுமதி ஆகியவை ஏற்படலாம்.
|
4 க்கு11
ஆம் பாவமாதலால் தாய்க்கு இலாபமும்
|
|
5 க்கு
10 ஆம் பாவமாதலால் தொழில் ஆர்வம், குழந்தைகளின்
கல்விச் சிறப்பும்.
|
|
6 ஆம்
வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால் தாய் வழிச் சொந்தங்களின் பயணங்களையும்.
|
|
7 க்கு
8 ஆம் பாவமாதலால் மனைவியின் சொத்து.
|
|
8 க்கு
7 ஆம் பாவமாவதால் களத்திரத்தின் மரணத்தையும்.
|
|
9 க்கு
6 ஆம் பாவம் ஆதலால் நோய்,
கடன் மற்றும் தந்தையின் எதிரிகளையும்
|
|
10 க்கு
5 ஆம் பாவமாதலால் சேமிப்பு மற்றும் பங்குச் சந்தை விவகாரகங்கள் பற்றியும்
|
|
11 க்கு
4 ஆம் பாவமாதலால் நண்பர்களின் வீட்டையும்
|
|
12 க்கு
3 ஆம் பாவமாவதால் ரகசிய எதிரிகளின் பயணங்களையும் குறிக்கிறது.
|
|
1 க்கு
2 ஆம் பாவமாதலால் பணவரவையும்
|
|
2 க்கு
1 ஆம் வீடாவதால் ஆரோக்கியம், பொதுவான குடும்ப
அமைப்பு பற்றியும் தெளிவுபடுத்துகிறது.
|
மூன்றாம்
பாவம்
– வலது காது, தைரியம், சக்தி,
இளைய சகோதரர், கால்கள், சாலையோர இடங்கள், மனத்தூண்டுதல், போர்களம், இராணுவ
வீரர், அலைதல், சிறுபயணங்கள், தகவல் தொடர்பு,
பத்திரிக்கை, ரேடியோ, டிவி, பாகப்பிரிவினை, வேலைக்காரி,
பக்கத்து வீட்டுக்காரர்,
போக்குவரத்து, ரயில், விமானம்,
கப்பல் மற்றும்
பாவம்
|
காரகங்கள்
|
மூன்றாம்
பாவமானது
|
4 ஆம்
பாவத்திற்கு 12 ஆம் பாவமாதலால் இழப்பு, சிறைச்சாலை,
மாயாஜாலங்கள். மற்றும் தாய் மருத்துவ மனையில் அனுமதி
|
5 ஆம்
பாவத்திற்கு 11 ஆம் பாவமாதலால் குழந்தைகளால் இலாபமும்
|
|
6 ஆம்
பாவத்திற்கு 10 ஆம் பாவமாதலால் எதிரிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுக்கான மரியாதையையும்
|
|
7 ஆம்
வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால் நீண்ட விமானப் பயணங்கள் மனைவியின்
ஆன்மிகம், மத ஆர்வம், மற்றும் அவளின்
தந்தை.
|
|
8 ஆம்
வீட்டுக்கு 8 ஆம் பாவமாதலால் வாழ்க்கை, இளமை உணர்வு பெறுதல் மற்றும் துரதிர்ஷ்டம் முடிவுறுதல் அல்லது பாதிப்புக்கள்
முடிவுக்கு வருதல்.
|
|
9 க்கு
7 ஆம் பாவமாவதால் தந்தையின் வர்த்தகக் கூட்டாளிகள்
|
|
10 க்கு
6 ஆம் பாவம் ஆதலால் தொழில் அல்லது அந்தஸ்து தொடர்பான வழக்குகள்.
|
|
11 க்கு
5 ஆம் பாவமாதலால் குழந்தைகளின் நண்பர்கள் பற்றியும்
|
|
12 க்கு
4 ஆம் பாவமாதலால் ரகசிய எதிரிகளின் வீடுகள்.
|
|
2 க்கு
2 ஆம் பாவமாவதால் குடும்பச் சொத்து
|
|
3 க்கு 1 ஆம் பாவமாதலால் ஆரோக்கியம்,
உடன்பிறப்புக்களின் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களின் பொதுஉடலமைப்பு.
|
நான்காம் பாவம் – வீடு,
நிலம், வாகனம், தாய்,
பசு, சுரங்கம், காணாமல் போன
பொருள், ராஜாங்கம், வாசனைத் திரவியம், ஆபரணங்கள்,
ஆடைகள், ஆறு, குளம், குட்டை,கல்வி, பால், திருட்டுப் போன பொருள் பற்றிய
துப்புக் கிடைத்தல், நீர்ப் பிடிப்புப் பகுதியிலுள்ள
சோளம் அல்லது தானியவகைகள். மற்றும் -
பாவம்
|
காரகங்கள்
|
நான்காம்
பாவமானது
|
5 ஆம்
பாவத்திற்கு 12 ஆம் பங்குச்சந்தை போன்ற யூக வணிகத்தில் இழப்பு,
குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவு.
|
6 ஆம்
பாவத்திற்கு 11 ஆம் பாவமாதலால் தாய்மாமன் மற்றும் எதிரிகளின்
இலாபமும்
|
|
7 ஆம்
பாவத்திற்கு 10 ஆம் பாவமாதலால் மனைவி அல்லது கூட்டாளியின் தொழில் மற்றும் அந்தஸ்து.
|
|
8 ஆம்
வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால் லாட்டரி அல்லது உயில் மூலமான சொத்து
மற்றும் திடீர் அதிர்ஷ்டம்.
|
|
9 ஆம்
வீட்டுக்கு 8 ஆம் பாவமாதலால் தந்தைவழிச் சொத்து.
|
|
10 க்கு
7 ஆம் பாவமாவதால் வியாபாரக் கூட்டாளின் களத்திரங்கள்.
|
|
11 க்கு
6 ஆம் பாவம் ஆதலால் எதிரிகள் அல்லது நண்பர்களின் கடன்.
|
|
12 க்கு
5 ஆம் பாவமாதலால் ரகசிய எதிரிகளின் குழந்தைகள் மற்றும் அவர்களின் யூகவணிக
இலாபம்.
|
|
2 க்கு
3 ஆம் பாவமாதலால் குடும்ப ஆர்வம்.
|
|
3 க்கு
2 ஆம் பாவமாவதால் உடன்பிறப்புக்களின் உணவு மற்றும் செல்வம் அல்லது
நண்பர்களின் உணவு மற்றும் செல்வம்.
|
|
4 க்கு
1 ஆம் பாவமாதலால் தாயின் பொது
உடலமைப்பு மற்றும் ஆரோக்கியம்.
|
ஶ்ரீ அகத்தியர் ஜோதிடப் பயிற்சி மையம். மதுரை.
எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி
( அப்ளைடு அஸ்ட்ராலஜி ) 94888 62923.
No comments:
Post a Comment