உ
நற்பலன்களை அள்ளி வழங்கும் இராகு
இராகுவின் பெயரைக் கேட்டாலே
அஞ்சி நடுங்கும் திருவாளர் பொதுஜனம், அவரின் அசுபத்தன்மைகளை மறுக்க
முடியாவிட்டாலும் அவரது சுபத்துவத்தை ஒதுக்கிவிட முடியாது. பண்டைய
முனிவர்களாலும், ஞானிகளாலும் கூறப்பட்ட சில சிறப்பு விதிகளின்படி,
இராகு மிக அதிகமாக அனுகூலம் தரும் நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது மற்றும்
தனது தசா / புத்திக் காலங்களில் மிகமிக நற்பலன்களை அள்ளி வழங்கக்
கூடியதாகும்.
இராகுவைப் பற்றிய அறிஞர்களின்
கருத்துக்கள் கீழே ---
1.
ரிஷபம், மிதுனம், கன்னி, அல்லது கும்பம் ஆகிய இராசிகளில் இராகு இருக்க, தனது தசா
/ புத்தி காலங்களில் ஜாதகர் நண்பர்கள் மற்றும் அரசை ஆள்பவர்களின் உதவியுடன்
வீடுகட்டுவார், புதிய வாகனங்கள் வாங்குவார், புத்திர பாக்கியம் ஏற்படும், வெளிநாட்டில் இருந்து பதவி
பட்டங்கள் பெற்று கௌரவிக்கப்படுவார். என பிரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா
அத் -47 – ஸ்லோ – 35 & 36 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2.
இராகு, தான் இருக்கும் இடத்தின் பலன்களையும், அதன் அதிபதியின் பலன்களையும் அளிக்கவல்லவர் – என லகுபராசரி
– பகுதி – 1 , ஸ்லோ – 13 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இராகு தசா நடக்கும் போது,
இலக்னத்தில் உள்ள இராகு செல்வத்தையும், பொறுப்பு
மிக்க பதவியையும் தருகிறது – என பண்டிட் ஜிவ்நாத் ஜா
– தனது பாவ பிரகாஷ் எனும் நூலில் குறிப்பிடுகிறார். மேலும் மகரிஷிகள் கூறுவதென்ன
?
கர்க மகரிஷி – இலக்னத்திலுள்ள இராகு ( மேஷம்,
கடகம், சிம்மம் ) ஜாதகரை
மிகப் பெரிய செல்வந்தர் ஆக்குகிறார்.
மகரிஷி வசிஷ்டர் – மூன்றாம் வீட்டில் உள்ள இராகு – அரச கௌரவத்தையும், வெகுமதியையும் அளிக்கிறது.
வைத்தியநாத் – மூன்றாம் வீட்டில் அமர்ந்த இராகு ஜாதகரை மிகப் பெரிய
பணக்காரர் ஆக்கிவிடுகிறது.
பண்டிட் கோபேஷ் குமார் ஓஜா – கேந்திரத்தில் உள்ள இராகு ( மேஷம், மிதுனம், கன்னி,
கடகம், விருச்சிகம் அல்லது மகரம் ) ஜாதகர்க்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கிறது.
பண்டிட் ராம் யத்தன் ஓஜா – திரிகோண வீடுகளாகிய 5 மற்றும்
9 ஆம் வீட்டில் அமர்ந்த இராகு, தனது புத்தியில்
மற்றும் யோக காரகரின் தசையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கிறது,
கர்க மகரிஷி – இலாப ஸ்தானமான 11 இல் உள்ள இராகு
அனைத்துவகை சொத்துக்களையும் அள்ளித்தருகிறார்.
மகேஷ் – 11 இல் உள்ள இராகு அனைத்துவித சொத்துக்கள் மற்றும்
அரசு, அரசு ஆள்பவர்களிடமிருந்து கௌரவம் மற்றும் அதிக மகிழ்ச்சியையும்
அளிக்கிறது. ஜாதகரின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கிறது.
இராமானுஜ ஆச்சார்யா தனது பாவார்த்த ரத்னாகரா எனும் நூலில் – மகர இலக்ன
ஜாதகருக்கு இராகு யோக காரகராகிறார். அவர் 12 ஆம் இடத்தில் இடம்பெற்று, குரு இணைந்திருக்க,
இராகு திசை மிக அதிக நற்பலன்களை அளிக்கிறார். ஆனால்
குரு தசா மோசமான பலன்களைத் தருகிறது.
ஜாதகரின் 2 அல்லது 3 மகன்களின் தசாகாலம்,
இராகு தசாகாலமாக இருந்தால், இந்தக் காலத்தில் ஜாதகர்
மிகவும் சாதாரண நிலையில் இருப்பார் மற்றும் மரணம் எய்துவார் – என பகுதி 9 – ஸ்லோ – 18 இல் கூறப்பட்டுள்ளது.
இராகு கேந்திர திரிகோணங்களில் இருந்து திசை நடத்தினால், இராஜ யோகத்தையும்,
புகழையும் தருவார்.
மேலும் பண்டைய முனிவர்களும்,
அறிஞர்களும் மேற்கண்ட விதிகளைக் குறித்த தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
அவற்றை நாம் சிறிது மாறுபாடுகளுக்கு உட்படுத்திப் பயன்படுத்த வேண்டும்.
ஜனன ஜாதகத்தில் இலக்னம் அல்லது
சந்திரனுக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் இராகு இருக்க அவர் யோக
காரகர் ஆகச் செயல்படுகிறார்.
இராகு – கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ஆகிய இராசிகள் கேந்திரமும்
ஆகி, அதில் இருக்க, இடம் கொடுத்த கிரகத்திற்கு,
மிக அனுகூலமான பலன்களை இராகு தன் தசா / புத்தி
காலங்களில் தருவார்.
இராகு இலக்ன நட்சத்திராதிபதியாகி,
கேந்திர, திரிக்கோணங்களில் தனது சுய சாரத்தில்
இருக்கவும், அது ஒரு யோக காரகராகத் தரும் பலனைக் காட்டிலும் அதிக
நற்பலன்களை அள்ளி வழங்குகிறது.
திதி சூன்ய இராசிகளில் இராகு இடம் பெற்றால், தனது தசா
/ புத்தி காலங்களில் அனுகூலமான பலன்களைத் தருகிறது.
எம். ஸி.
ஜெயின் – இராகு / கேதுவுக்கு
இடம் கொடுத்த கிரகத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இடம் கொடுத்த
கிரகம் இவர்களில் ஒருவருடன் இணையும் போது, அவை கர்மாக்களைக் கட்டுப்படுத்தும்
கிரகங்களாகி மிக்க அனுகூலமான பலன்களைத் தருகின்றன என்கிறார்.
உதாரண ஜாதகம் –
பிறந்த தேதி – 18 – 6 – 1975, பிறந்த நேரம் – 10 – 10 காலை, பிறந்த ஊர் – ஜலந்தர்.
சிம்ம இலக்னம் – செவ்வாய் திசை இருப்பு 6 வருடம் 6 மாதம் 0 நாள். இத்துடன் இராகு திசா
வருடம் 18 ஐக் கூட்ட 25 வயது வரை இத்திசையில்
ஜாதகருக்கு யோக பலன்கள் ஏற்பட்டது.
செவ்
குரு
|
|
புத
கேது
|
சூரி
சனி
|
|
இராசி
|
சுக்
|
|
|
லக்///
|
||
|
இராகு
|
|
சந்
|
இலக்னத்துக்கு 4 ஆம் இடத்திலும், சந்திரனுக்கு 3 ஆம் இடத்திலும் தசாநாதன் இராகு அமர்ந்துள்ளார்.
எனவே, மேற்சொன்ன விதிப்படி இராகு யோக காரகராகிறார்.
எனவே, இராகு தசாக் காலம் சிறப்பாக அமைந்தது.
ஜாதகர் தனது பள்ளிக் கல்வியை
1991 வரை மிகச் சிறப்பாகச் செய்து, 1993 ஆம் வருடம்
சி.இ.டி தேர்வுக்கு எந்தவொரு பயிற்சி மையத்திலும்
பயிற்சி எடுக்காமல், சிறப்பாக எழுதினார். மேலும், பல இன்ஜினியரிங் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றார்.
இந்த நுழைவுத் தேர்வுகளை எழுதிய 6000 மாணவர்களில்
35 வதாக வந்து பஞ்சாப்பில் பிரபலமான சண்டகாரிலுள்ள பஞ்சாப் இன்ஜினியரிங்
கல்லூரியல் பயின்று 1997 இல் தனது பி. டெக்
கல்வியில் வெற்றிபெற்று, டி.சி.
எஸ். கம்பெனியில் தனது திறமையால் வெளிநாடு சென்று
அதிக சம்பளம் பெற்று சிறப்பாக வாழ்கிறார் என்றால் தசாநாதன் யோக காரகன் ஆனதினால் தானே
?
மேலும், விருச்சிகத்தில் உள்ள இராகு, தனக்கு இடம் கொடுத்த செவ்வாய்க்குத்
திரிகோணத்தில் உள்ளார். எனவே, அவரால் தனது
தசாக் காலத்தில் ஜாதகருக்கு, நற்பலன்களை, இராஜயோகங்களைத் தர முடிந்தது. இதன் மூலமாக இராகு சுபத்துவமும்
தரவல்லவர் என்பதை அறிந்தோமல்லவா ?
வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே!