Search This Blog

Wednesday, 1 October 2014

2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்

          


2014-அக்டோபர் மாத இராசி பலன்

ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்




மேஷம்

( அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1 பாதம்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, , லெ, லு, லே, லோ, )

    தங்கள் இராசிநாதன் செவ்வாய் அனுகூலமற்ற நிலையில் உள்ளார். ஆரோக்கியக் குறைவு, வெளிநாட்டு வாசம் ஏற்படலாம். ஆயினும் சூரியன், புதன், இராகு  அனுகூலமான நிலையில் உள்ளதால்,  தங்களுக்குப் பலவகை இலாபங்களையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும், தனலாபத்தையும், அனைத்து  நன்மைகளையும் தரும்பக்தியில் நாட்டம் தரும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. உயர்ரக ஆடை ஆபரண வகைகள்மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும், வாகன சுகம் ஏற்படும்.  புகழ் ஓங்கும். அனைவராலும் போற்றப்படுவர். மொத்தத்தில் மேஷராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் : குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். இருவரின் பக்தி மீதான நம்பிக்கையால் வாழ்க்கையில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப ஆரோக்கியம் பெருகும்நண்பர்களின் உதவி கிடைக்கும்.

    தொழில் மற்றும் வியாபாரம் : வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்.  சிலருக்கு  வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். வாழ்வில் ஒளியும் முன்னேற்றமும் ஏற்படும். மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு ஆதாயம் பெருகும்விவசாய விளைபொருட்களால் நல்ல ஆதாயம் கிட்டும்.

    பெண்கள் : கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்பணிபுரியும் பெண்கள்  கடமை தவறாது செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும். சுயவுதவிக் குழுப் பெண்களுக்குச் சுலபமாக வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

    மாணவர்கள்: மாணவ, மாணவிகளுக்கு அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். ஹைக்ரீவரை வணங்க நினைவாற்றல் அதிகரிக்கும்.  மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப்  படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர். வண்டி வாகனங்களில் மிதவேகத்தில் சென்றால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

    சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 25 – 10 – 2014 இரவு 12 – 19 மணி முதல், 28 – 10 – 2014 அதிகாலை 5 – 42 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 1 மற்றும் 9 ஆகும். கவரும் எண்கள் 4 மற்றும் 8 ஆகும். சாதகமான எண்கள் 2, 3, 5 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 6 மற்றும் 7 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- சிகப்பு, மஞ்சள், செம்பு மற்றும் தங்க நிறமாகும் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் கருப்பு ஆகும்.


    அதிர்ஷ்டக் கற்கள்;- செம்பவழம் செம்பில் அல்லது வெள்ளியில் பதித்து வியாழக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.


    ஆகாதஇராசிவிருச்சிகம், மாதம்கார்த்திகை, கிழமைஞாயிறு, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள்பிரதமை, சஷ்டி மற்றும் ஏகாதசி ஆகும். யோகம் -- விஷ்கம்பம், கரணம் -- பவம்  ஆகும். இந்தக் காலங்களில் நல்லசெயல்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                     

No comments:

Post a Comment