Search This Blog

Wednesday, 1 October 2014

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது) கன்னி

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள்

(ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)

கன்னி

கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியடோ, , பி, பூ, , , , பே, போ )

    தங்கள் இராசிநாதன் அனுகூல நிலையில் இல்லை. ஆயினும் குரு இலாபத்தில் சஞ்சாரிப்பதால் செல்வம் சேரும்.. திருமணம் நடக்கும். சந்ததி விருத்தியேற்படும். நிம்மதியும், சுகமும் அதிகரிக்கும். புண்ணியத்தல யாத்திரைகள், ஆன்மிகப் பயணங்கள் ஆகிவை ஏற்படும். பிறரைக் கவரும் அழகும், பொலிவும் ஏற்படும். அரசாங்க உத்தயோகம், அரசாங்க ஆதரவு போன்றவை ஏற்படும். மனதிற்குப் பிடித்தவிதத்தில் மனை, வண்டி வாகனம் ஆகியவற்றை அடைவர். கோபத்தால் பங்காளிகள் பயனடைவர். இடையூறுகள் ஏற்பட்டு முயற்சிகள் வீணடையும். கடின உழைப்பால் களைப்பு ஏற்படும். சிலருக்குப் பயிர் மனை இவற்றால் இலாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் கன்னிராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம்சிலருக்குச் சுகம், தனலாபம், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். துன்பத்தில் கைகொடுக்கும் துணையின் உதவியால் மனதில் அமைதி நிலவும். குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

    தொழில் மற்றும் வியாபாரம் : சீரான பொருளாதார நிலைக்கு அனுகூலமான மாதமாகும்கோதுமை, கொள்ளு, பீன்ஸ் ஆகியவை ஆதாயம் தரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவிமாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில், சந்தை நிலவரங்களை முன்கூட்டியே அனுமானித்தால் நன்மை அடையலாம்.

    பெண்கள் ;-  பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். அதன் காரணமாக, வேறு பணிக்கு மாறும் எண்ணம் தலைதூக்கலாம்சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.  புதிய சொத்துக்கள் வாங்கும்போது, ஆவணங்களைச்  சரிபார்த்துப் பத்திரப் பதிவு செய்தல் அவசியம்.

    மாணவர்கள் ;- நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும். நன்கு கவனமாக, மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்
.  தங்களின் கடின உழைப்பால், சில மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் இதுவரை எட்டியிராத உயரத்தினை எட்டுவர்.                                                                                                                                                  
     ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 09 – 10 - 2014 காலை 9 – 21  மணிமுதல் 11 – 10 - 2014 பகல் 2 – 22   மணிவரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்டக் எண்கள்;- 2, 3, 5, 6 மற்றும் 7 ஆகும். சாதகமான எண்கள் 4 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1 மற்றும் 8 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், வெள்ளை மற்றும்
பச்சை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகம், முத்து, பச்சை, வைரம், மரகதம் இவற்றிலொன்றை தங்கத்தில்  பதித்த மோதிரத்தைத் புதன் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிசிம்மம், மாதம்புரட்டாசி, கிழமைசனி, நட்சத்திரம் -- திருவோணம், திதிகள்பஞ்சமி, தசமி மற்றும் பௌர்ணமி அல்லது அமாவாசை ஆகும். யோகம் --  சுக்கிலம், கரணம் -- கௌலவம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ மஹாலட்சுமியை  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், பச்சை வண்ண ஆடையணியவும்,  மலர்களால் அர்ச்சித்தலும், ஸ்வர்ணதானம் அல்லது துவரைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.

No comments:

Post a Comment