எவர் ஜோதிடர் ?
எவர் ஜோதிடர் ?
வாதிப்பிரதிவாதங்களுடன் கூடியதும், சிக்கலாகக் கருதப்பட்டதுமான, ஜோதிடருக்கான இணைவுகளைப் பற்றி ஆராய சமூகக் கண்ணோட்டத்தோடு, இத்தலைப்பில் அலசப்பட்டு உள்ளது. இக் கருத்தைப்பற்றி, நமது முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது, என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
“பிருகத்பராசர ஹோரா” ’ –- இலக்னத்திலோ, ஐந்திலோ, ஒன்பதிலோ அல்லது கார காம்சத்திலோ, கேது இருக்க, ஜாதகர் மிகச் சிறந்த கணித வல்லுநராகவும், ஜோதிடராகவும் திகழ்வார் எனக் குறிப்பிடுகிறது.
“சர்வார்த்த சிந்தாமணி” – வேங்கடஷர்மா, தனது சர்வார்த்த சிந்தாமணியில், கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். பலமிக்க புதன் மற்றும் இரண்டாம் அதிபதி கேந்திரங்களில் இருந்தாலும் அல்லது சுக்கிரன், சுபரோடு கூடி இரண்டாமிடத்தில் அல்லது மூன்றில் இருந்தாலும் அல்லது உச்ச சுக்கிரன் இரண்டில் இருந்தாலும், ஜாதகர் மிகப்பெரிய ஜோதிடர் ஆவார்.
“பாவார்த்த ரத்னாகரா” – தனது ஆங்கில மொழி பெயர்ப்பில், B. V. இராமன், கல்வி பற்றிய அத்யாயத்தில், குறிப்பிடுவதாவது, நான்கில் புதன் இருந்தாலும் ஜாதகர், திறமை மிக்க ஜோதிடராவார் என்றும், சூரியன், புதன் மற்றும் இராகு ஐந்தில் இருக்க, ஜாதகர் அனைத்தும் கற்றுத் தேர்ந்த ஜோதிடராக உருவாகிறார்.
சூரியன், புதன் இரண்டில் இருந்து, சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர், மிகச் சிறந்த கணித வல்லமையுடன், ஜோதிடத்திலும் தேர்ச்சி பெறுகிறார்.
3 / 6 / 8 / 12 எனும் மறைவு ஸ்தானங்கள், இதில் எட்டு மற்றும் பன்னிரெண்டாம் இடங்கள், கூடுதல் புத்திசாலித் தனத்தையும், அசாத்திய தனித்திறமைகளையும் அளிக்கக் கூடிய இடங்களாகும். ஆகையால், ஜோதிடம், யோகா, தந்திரம் -- ஆகியவற்றிற்கு தேவையான உள்ளுணர்வு நிலைகளைத் தருகின்றன.
காரகர்களைப் பொருத்தவரை, ஸ்பெகுலேஷனுக்குக் காரகனானஇராகு ஜோதிடர்களின் ஜாதகத்தில், மிக முக்கிய பாத்திர மேற்று நடிக்கிறார்.
சூரியனின் தாக்கம் மிக்க ஜோதிடர், அரசியல் தலைவர்களின் ஜாதகங்களை அலசுவதிலும், பலம் மிக்க புதனின் தாக்கம் ஜோதிடர் ஜாதக கணிதங்களில் வல்லுனராக இருப்பதோடு, பொட்டில் அடித்தாற்போல் பலன் கூறுவதில் வல்லுனராகவும் இருப்பார்கள்.
சுக்கிரனின் தாக்கம் பெற்ற ஜோதிடர் பெண்கள் ஜாதகத்தை அலசுவதில் திறமை மிக்கவராகவும், ஜாதகரின் திருமண சம்பந்தமான விஷயங்களை எடுத்துரைப்பதிலும் வல்லவராகவும் இருப்பார்.
எனினும், ஜோதிடரின், ஜாதகத்தில் புதன் மற்றும் 2 ஆம் இடம், பலம் மிக்கதாக அமைய வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இனி, பிரபலமான சில ஜோதிடர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்வோமா?
சந்
|
லக்///
குரு
| ||
சனி
[வ]
|
இராகு
| ||
கேது
|
இராசி
|
செவ்
| |
சுக்
|
சூரி
புத
|
ஜாதகம் –1
N. C. லஹிரி
வானியலாளர்
இவரது ஜாதகத்தில், பலம் மிக்க இலக்னாதிபதி புதன், 4 இல், தனது சுய, மூலதிரி கோண மற்றும் உச்ச வீட்டில் உள்ளார். 2 ஆம் அதிபதி சந்திரன் வர்கோத்தம்மாகி 11 இல் நல்ல நிலையிலுள்ளார். புதன் மற்றும் 2 ஆம் அதிபதி பலம் பெற்றுள்ளதால், இந்திய தேசிய பஞ்சாங்கத்தை வடிவமைத்த புகழ் பெற்ற கணித வல்லுனரானார்.
இலக்னம், ஒரு ஜாதகத்தின் அச்சாணியாகும். ஜாதகரின், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் எப்படி அமைகின்றன ?
1. இலக்னாதிபதி இருக்கின்ற இடத்தைப் பொருத்தும்.
2. இலக்னாதிபதியின் பலத்தைப் பொருத்தும்.
3. இலக்னத்தில் உள்ள கிரகங்கள் அல்லது அவற்றைப் பார்க்கும் கிரகங்களைப் பொருத்தும் அமையும்.
4. இலக்னத்தைத் தவிர, மனதைக் குறிக்கும் 5 ஆம் இடமும், தொழிலைக் குறிக்கும் 10 ஆம் இடமும் தொழிலைக் காண, சம முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, 5 ஆம் அதிபதி 12 இல் [ 5 க்கு 8] அல்லது 10 ஆம் அதிபதி 5 இல் [ 10 க்கு 8 ] இங்கு 8 ஆம் வீட்டின் தாக்கம் கூடுதலாகக் கிடைக்கிறது. இலக்னம், சந்திரா இலக்னம், சூரியலக்னம் ஆகிய மூன்றில் இருந்தும், பலன்கள் பார்க்கப்பட வேண்டும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.
முதலில், 8 ஆம் வீட்டின் தாக்கத்தை வைத்து, வரும் இணைவுகளைக் காண்போம்.
4. 4 ஆம் அதிபதி 5 இல் இருக்க அல்லது பார்க்க அல்லது 5 ஆம் அதிபதியுடன் தொடர்பு கொள்ளவும்.
5. 10 ஆம் அதிபதி 9 இல் [ 10 க்கு 12 ] இருக்கவும்.
6. 9 ஆம் அதிபதி 10 இல் இருக்க அல்லது பார்க்க அல்லது 10 ஆம் அதிபதியுடன் தொடர்பு கொள்ளவும்.
உத்தியோகம் அல்லது தொழிலைக் காட்டும் அளவு முள்ளாக நவாம்சத்தைக் கருத வேண்டும். மேற்சொன்ன ஒன்று அல்லது இரு இணைவுகளேனும் நவாம்சத்திலும், இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், ஜாதகர், ஜோதிட சாஸ்திரத்தைக் கட்டாயம் கற்கும் நிலை ஏற்படும். எனினும், அவருக்கு, அதையே வாழ்வு ஆதாரத்திற்கான, தொழிலாக ஏற்க வேண்டிய நிலை ஏற்படாது.
இந்த நிலைகளை, பிரபலமான ஜோதிடர்களின் ஜாதகங்களைக் கொண்டு ஆய்வு செய்வோமா?
ஜாதகம் --- 2
1. இலக்னாதிபதி 8 இல் இருக்கவும்.
2. 8 ஆம் அதிபதி இலக்னத்தில் இருக்க அல்லது இலக்னத்தைப் பார்க்கவும் அல்லது இலக்ன அதிபதியுடன் தொடர் கொள்ளவும்.
3. 5 ஆம் அதிபதி 12 இல் இருக்கவும் [ 5 க்கு 8 ].
4. 12 ஆம் அதிபதி 5 இல் இருக்கவும் அல்லது 5 ஆம் இடத்தைப் பார்க்கவும் அல்லது 6 ஆம் அதிபதியோடு தொடர் ஏற்படவும்.
5. 10 ஆம் அதிபதி 5 இல் [ 10 க்கு 8 ] இருக்கவும்.
6. 5 ஆம் அதிபதி 10 இல் இருக்க அல்லது பார்க்கவும்.
இதேபோல் 12 ஆம் இடத்தின் தாக்கம் கூடுவது எப்போது ? --என்பதைக் காண்போம்.
1. இலக்னாதிபதி 12 இல் இருக்கவும்.
2. 12 ஆம் அதிபதி இலக்னத்தில் அல்லது இலக்னத்தைப் பார்க்கவும் அல்லது இலக்னாதிபதியுடன் 12 ஆம் அதிபதி தொடர்பு கொள்ளவும்.
3. 5 ஆம் அதிபதி 4 இல் இருக்கவும்.[ 5 க்கு 12 ].
இராகு
சந்
|
ல///
|
சனி
[வ]
| |
குரு
புத,சூரி
| |||
இராசி
| |||
சுக்
|
கேது
|
செவ்
|
B.சூரியநாராயண ராவ்.
பிறந்த தேதி ---
12 – 2 – 1856.
பிறந்த நேரம் – 14 –30
பிறந்த இடம் -- சிக்ககுலெ
1. இலக்னாதிபதி சுக்கிரன் 8 இல் உள்ளார். [விதி – 1]
2. பலம் மிக்க 5 ஆம் அதிபதி புதன் 10 இல் [விதி – 6] உள்ளார்.
3. சந்திரா லக்னம் – 8 ஆம் அதிபதி செவ்வாய், சந்திரன் – இலக்னத்தைப் பார்க்கிறார். [விதி – 2]
4. சூரியலக்னம் – 8 ஆம் அதிபதி புதன், சூரியலக்னத்தில் உள்ளார். [விதி – 2)
ஜாதகம் --- 3
இராகு
|
சனி
சந்
|
சுக்
சனி
| ||||||
லக்///
|
இராசி
|
சூரி
|
நவாம்சம்
|
கேது
| ||||
புத,
சுக்
செவ்
|
சூரி
இராகு
|
சந்
புத
| ||||||
குரு
|
கேது
|
லக்///
|
செவ்
குரு
|
செவ்வாய் திசை இருப்பு – 6 வ 9 மா 25 நாள்
B.V. இராமன் -- பிறந்த தேதி --- 08–08–1912.
பிறந்த நேரம்-19 –35 - பிறந்த இடம் – பெங்களூரு.
1. எட்டாமதிபதி புதன் மற்றும் 12 ஆம் அதிபதி சனி, இலக்னத்தின் மீதான தனது சக்தி மிக்க பார்வையை செலுத்துகிறார்கள். [ விதி – 2 & 8 ]
2. சந்திராலக்னம் –- 8 ஆம் அதிபதி குரு, சந்திராலக்னத்தைப் பார்க்கிறார்.[விதி – 2 ]
3. சூரியலக்னம் – இராகுவின், சூரியன் மீதான சக்தி மிக்க பார்வை மற்றும் 10 ஆம் இடத்தின் மீதான பார்வை.
B.சூரியநாராயண ராவ் மற்றும் B. V. இராமன் ஆகியோரின் ஜாதகங்கள் மேற்படி விதிகளுக்குப் பொருந்தி வருவதைக் கண்டோம். இனி, ஜோதிடர் ஒருவரின் ஜாகத்தைப் பார்ப்போம்.
ஜாதகம் --- 4
பிறந்த தேதி --- 13–08–1946.
பிறந்த நேரம் – 05–56 AM
பிறந்த இடம் – எட்டயபுரம்
இராகு
செவ்
சுக்
சனி
இராசி
லக்/சூரி,புத
சனி
கேது
சூரி
நவாம்சம்
சந்
லக்//
இராகு
கேது
குரு,செவ்
சுக்
புத
சந்,சனி
குரு
இராகு
|
செவ்
|
சுக்
சனி
| ||||||
இராசி
|
லக்/சூரி,புத
சனி
|
கேது
சூரி
|
நவாம்சம்
| |||||
சந்
|
லக்//
|
இராகு
| ||||||
கேது
|
குரு,செவ்
சுக்
|
புத
| சந்,சனி குரு |
No comments:
Post a Comment