Search This Blog

Thursday, 27 November 2014

28/11/2014 இந்த நாள் இனிய நாள்.

இந்த நாள் இனிய நாள்.


28/11/2014

இன்றைய இராசி பலன்

மேஷம் இன்று, அரசு ஆதரவு, முக்கியஸ்தர்களின் உதவி, புதிய வேலைவாய்ப்பு சாத்திரங்களிலும், மந்திர, தந்திரங்களிலும் தேர்ச்சி ஆகிய நற்பலன்கள் உண்டாகும்.புகழ் ஓங்கும்.

ரிஷபம் தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சுகம், சந்தோஷம், இனிய சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்பாடு அடையும், தனலாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மிதுனம் கோபத்தைத் தவிருங்கள், குழப்பங்கள் குறையும். நேர்மைக்கு மாறாக நடந்தால் நிம்மதி குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.

கடகம் -- இன்று, பலவகைகளிலும் பணவருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

சிம்மம்இன்று, விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்தொழில் விரிவாக்கத்தால் வருமான உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

கன்னி -- இன்று, சோகம் என்றால் என்ன என அறிந்து கொள்வீர்கள். பண இழப்புகளைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். தேவையற்ற அவமானங்கள் ஏற்படும்.

துலாம்இன்று சுமாரான நாள். தாயின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஒருவித பய உணர்வும், தூக்கம் இன்மையும் ஏற்படும். பொருள்களைக் காப்பது அவசியம்.

விருச்சிகம் உற்சாகம் மிகுந்த உன்னத நாள். குழந்தைகளின் வசதிகள், கல்வி ஆகியவை பற்றிய அக்கறை எடுத்துப் பாசத்தைப் பொழிவீர்கள். தன்னம்பிக்கையால் வெற்றி கிட்டும்.

தனுசு எங்கே தேடுவேன் ? எனப் பணத்தைத் தேடுவீர்கள். எங்கே நிம்மதி ? என பாடக்கூடிய நிலை ஏற்படலாம்வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்தால் வளம் பெருகும்.

மகரம் --  இன்று பௌர்ணமி நிலவு போல் உங்கள் முகம் பிரகாசிக்கும். புத்தி சாதுர்யமும், வாக்குவன்மையும் மேலிடும். வியாபாரிகள் மற்றவர்களைக் கவரும் வண்ணம் பேசி ஆதாயம் பெறுவர்.

கும்பம் கடின உழைப்பின் காரணமாக காலத்திற்கு  உணவருந்த முடியாத நிலை ஏற்படும். பிறர் மேல் வெறுப்பு, பொறாமை ஆகியவற்றை அகற்றிக் கொள்வது நல்லது. முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும்வியாபாரம், தொழிலில் வரவு அதிகமாக மனத்தெம்பும், மகிழ்ச்சியும் நிலவும். 

வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.

No comments:

Post a Comment