Search This Blog

Sunday, 8 November 2015

கேது,சுக்கிர மகாதசா பொதுப்பலன்கள்







கேது மகாதசா பொதுப்பலன்கள்.தசாக் கலாம் - 7 வருடங்கள்.
கேது புக்தி – 4 மாதம் – 27 நாட்கள்.
எதிரிகளோடு சண்டையிடுவார், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு, உறவகளைப் பிரிதல், மனக்கலக்கம், சொத்து இழப்பு, சந்தோஷக் குறைவு, பாசத்தை மறந்து பேதப்படுதல், அடக்குதல் அல்லது சிறைப்படுதல். மனைவி, மக்கள், சகோதரர் இவர்களின் மீது வெறுப்பு உண்டாகுதல், புரட்டாசி மாதத்தில் விலங்கு பூண நேரல், ஆயுர்பாவ விஷயத்தில் முடிவு செய்யப்பட்ட மாதம் புரட்டாசி மாதமானால் பீடை உண்டாகும்.
சுக்கிர புக்தி – 1 வருடம் 2 மாதங்கள்.
மனைவியும், மக்கட்பேறும், கன்று, காலியுண்டாகுதலும், நினைத்த காரியமெல்லாம் கைகூடுதலும், புக்தியின் முடிவில் பீடை உண்டாகும். மனைவிக்குப் பீடை உண்டாகும். சொத்துச் சேருதல், நம்பிக்கைகளும், விருப்பங்களும் வெற்றிபெறுதல், புக்தி முடிவில் ஆரோக்கியக் குறைபாடு, மனைவி மற்றும் மத சம்பந்தமான நபர்களிடம் சண்டைகள், பிறரால் அவமானம் அடைதல், மற்றவர்கள் மீது வெறுப்படைதல் ஆகியவை ஏற்படும்.
சூரிய புக்தி – 4 மாதம் – 6 நாட்கள்.
நெடுந்தூரப் பயணங்கள், திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணை / பெண்ணைப் பற்றிய ஆவல் அதிகரித்தல், வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக ஆதாயம் அடைதல், ஏமாற்றங்கள், தடைகள், குடும்பத்தினருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படுதல், உறவுகளுடனான, கூட்டாளிகளுடனான, மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் ஆகியவை ஏற்படும். இருக்கும் இடத்தைவிட்டு வெளிநாடு சென்று திரும்பி வருதல், காய்ச்சல், தலைவலி, மனக்கிலேசம் ஆகியவையும் ஏற்படும்.
சந்திர புக்தி – 7 மாதங்கள்.
பெண்கள் மூலமாக வழக்குகள், சண்டைகள், குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படுதல், கன்று காலி உண்டாகுதல், பொன் ஆபரணங்கள் சேருதல், தீமைகள் வந்து விலகுதல் ஆகியவை ஏற்படும். பலம் மிக்க சந்திரன் எனில், இலாபங்கள் மற்றும் பொருளாதார வெற்றிகள் ஏற்படும், அமைதியான மனம், பணியாளர்களை அமர்த்துதல், பெண் குழந்தை பிறத்தால், தாயின் மூலமான இலாபங்கள் ஆகியவை ஏற்படும்.
பாதிக்கப்பட்ட சந்திரனனால், சொத்து இழப்புக்கள் ஏற்படலாம், மனஅமைதி குறைதல், வழக்குகள், மகன் மற்றும் உறவுகளைப் பிரிய நேரல். பெண்கள் தொடர்பான வழக்குகளைச் சந்தித்தல், குழந்தைகள் மூலமான இழப்புக்கள் ஆகியவை ஏற்படும்.
செவ்வாய் புக்தி – 4 மாதம் 27 நாட்கள்.
குடும்பத்தாருடன் சண்டைகள், இளைய சகோதரர்களுடன் சண்டை, சொத்து இழப்பு, பெண்கள் மூலமாக அழிவு, அக்னியால், திருடர்களால், எதிரிகளால் ஆபத்து, வழக்கு மற்றும் சிறைப்படுதல், முன்னேற்றப் பாதைகளில் பல தடைகள், தடங்கல்கள் ஏற்படுதல். பயம் ஏற்படுதல், கவலைகள் ஏற்படுதல், அறுவை சிகிச்சை போன்ற துன்பங்கள் ஆகியவையும் ஏற்படும். இவை அனைத்தும் பொதுப் பலன்களே. ஜாதகரின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

இராகு புக்தி – 1 – 18 நாட்கள்.
செல்வம் இழப்பு, மரியாதை மற்றும் சொத்துக்களைப் பற்றிய பயம் ஏற்படுதல். அதிகாரிகள் மற்றும் கொள்ளையர்களால் இழப்பு ஏற்படுதல், சோகங்கள், எதிரிகள் மூலமாக சண்டைகள் ஏற்படுதல், கொடூரமான மனிதர்களால் இழிவாகப் பேசப்படுதல், இழிவான பெண்களோடு முறையற்ற தொடர்பு கொள்ளுதல் ஆகியவை ஏற்படும். விஷ பயம் உண்டாகுதல், அரசனுக்குக் கேடு, பெண்களுக்குப் பீடை, இகபோக, தன நாசம் ஏற்படுதல், புகழ் மறைந்து களங்கம் ஏற்படுதல்  ஆகியவை ஏற்படும். இவை அனைத்தும் பொதுப் பலன்களே. ஜாதகரின் ஜாதகத்தில் இராகுவின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
குரு புக்தி – 11 மாதம் 6 நாட்கள்.
தனலாபம், அரசரின் நட்பு ஏற்படுதல் (விஐபி), விஷபயம் உண்டாகி விலகுதல், இலட்சுமி கடாக்ஷ்ம் பொருந்திய மனைவி அமைதல், அதிகமான செல்வம் சேருதல் ஆகியவை ஏற்படும். கடவுள் பக்தியும், மத சம்பந்தமான நல்ல காரியங்களில் ஈடுபாடும் அதிகரித்தல், ஆண்மகவு பிறத்தல், மனைவியுடன், மற்றும் எதிர் பாலினத்தோடு ஏற்படும் தொடர்பால் மகிழ்ச்சி அடைதல். உயர் அதிகாரிகளின் மூலமான அனுகூல நிலையால் இலாபம் அடைதல்,  சொத்துச் சேர்க்கை, புகழ் மற்றும் மரியாதை கூடுதல், இலாபகரமான செயல்பாடுகள், திருமணம் ஆகவில்லையெனில், காதல் விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும்.
சனி புக்தி -  1 – 1 மாதம் – 9 நாட்கள்.
 உறவுகளால் தொல்லை மற்றும் வெறுப்படைதல், பகைவர்களுடன் சண்டை இடுதல், பணம் மற்றும் பதவி இழத்தல், கால்களில் காயம் ஏற்படுதல், குடியிருப்பு மாற்றம்,  பலவழிகளிலும் இழப்புக்கள் ஏற்படுதல், மனக்கவலைகள், குழப்பங்கள் ஏற்படுதல், சனி பலம் பெற்று இருக்க இந்த பலன்கள் மாறுபட்டதாக இருக்கும்.
புதன் புக்தி – 11 – 27 நாட்கள்.
ஆண்மகவு பிறத்தல், சொத்து சேர்க்கை, மற்றவர்களிடம் இருந்து பல உதவிகள் கிடைத்தல், பூமி மூலமான இலாபங்கள் ஏற்படுதல், புத்திசாலித்தனமும், அறிவும் அதிகரித்தல், பாதிக்கப்பட்ட, பலம் இழந்த புதன் ஆனால்இழப்பு, குழந்தைகளால் கவலைகள் ஏற்படுதல், புதிய திட்டங்களில் தோல்வி காணுதல், பொறாமை கொள்ளுதல், தவறான வழிகளில் செல்லுதல், வஞ்சித்தல், மோசடி செய்தல், எதிரிகளால் தொல்லை ஆகியவை ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறாது, புத்திர சோகம் ஏற்படலாம். சுற்றத்தாரால் பயம் உண்டாகுதலும், நிலை மாற்றங்களும் ஏற்படும்.

சுக்கிர மகாதசா பொதுப்பலன்கள் 20 வருடம்.
சுக்கிர புக்தி – 3 வருடம் – 4 மாதங்கள்.
வாகன யோகம், ஆபரணங்கள், முத்துக் குடை, குதிரை, யானை, நறுமணப் பொருட்கள் மற்றும் அனைத்து சுகங்கள், வசதி வாய்ப்புக்கள் ஆகிய அனைத்தும் கிடைக்கும். நல்ல பணியாட்கள், ஒளிமிகுந்த உடல் மற்றும் சொத்துக்கள். உயர் அதிகாரிகளின் மூலமாக ஆதாயங்கள், எதிரிகள் விலகி ஓடுதல், புகழ் கூடுதல், , புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படும். பொருளாதார வெற்றி ஏற்படும். துன்பம் நீங்கி இன்பம் வரும் நாளில் பொருட்களின் சேர்க்கையும், எளிமை அல்லது பரிதாப நிலையும் ஏற்படும். கோசார சுக்கிரன் துலாத்தைக் கடக்கும் போது அக் காலம் சோகத்துக்கான காரணமாக அமையும்.  
சூரிய புக்தி – 1 வருடம்.
பலம் மிக்க சூரியனனால், அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான உதவிகள் கிடைக்கும். வம்ச அபிவிருத்தி அடையும், பணம் சேருதல், மதிப்பு, மரியாதை கூடுதல். பூமி இலாபம், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை ஆகியவையும், பலமற்ற, பாதிப்படைந்த சூரியனனால், உயர்அதிகரிகளால் நஷ்டம் அடைதல், மனைவி, கூட்டாளிகளால் பிரச்சனைகள் ஏற்படுதல், குழந்தைகள் மற்றும் பிறரால் தொல்லைகள் ஏற்படும். குடும்பப் பிரச்சனை, வாழ்க்கையே போராட்டம் ஆகுதல், வயிறு, கன்னங்கள், கண்கள் பாதிப்பு அடைதல் ஆகியவை ஏற்படும். துன்பம், தனவரவு குறைதல், மனைவி, மக்கள் ஓடிவிடுதல், பலருடன் வழக்கு உண்டாகுதல், தெய்வக் குற்றம் உண்டாகுதல், உற்றார் பகை ஆகியவை ஏற்படும்.
சந்திர புக்தி – 1 – 8 மாதங்கள்.
சந்திரன் பலம் மிக்கவன் ஆனால், நினைத்த காரியங்கள் கைகூடும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும், பெண்கள் மூலமாக ஆதாயம் அடைதல், கல்வி, அறிவு, பணம், குழந்தைகள், வண்டி வாகனங்கள் ஆகியவை கிடைக்கும். கடவுளை பிரார்த்தனை செய்தல், இன்பம் தரும் மாதர்களுடன் சேர்க்கை ஆகியவையும், பாதிப்பு அடைந்த சந்திரன் எனில், மனைவி மூலமாக கஷ்டம் அடைதல், கண்நோய், தலைவலி, பல்வலி, சொத்தை இழத்தல், மணவாழ்க்கையில் தற்காலிகமான இணக்கமின்மை,  வலி, நரம்புத் தளர்ச்சி மற்றும் மனையால் பகை ஆகியவை ஏற்படும்.
செவ்வாய் புக்தி – 1 – 2 மாதங்கள்.
சொத்துக்கள் அதிகரித்தல், எதிர் பாலினத்தாரின் தாக்கம், கடமை தவறுதல், பொருள் பற்று, சந்தோஷ பார்வைகள், எண்ணங்கள், அசாத்திய உழைப்பு மற்றும் அதிக பணமழை பொழிதல், திருமணம், பூமிலாபம், வெளிநாட்டுப் பயணம், கண்ணில் பாதிப்பு, புண்கள் மற்றும் காயங்கள் ஆகியவை ஏற்படும். பெண்களால் கரும நாசமும், இஷ்ட தேவதையை பூஜித்தலும், இருவர் மூலமாகப் பகை உண்டாகுதலும், உடலில் குஷ்ட  நோய் உண்டாகி விலகுதல் ஆகியவையும் ஏற்படும்.
இராகு புக்தி – 3 வருடங்கள்.
தியானம், தனித்திருத்தல், முனிவரைப் போன்று தவமிருத்தல், புதையல், வம்ச விருத்தி, புத்திரனால் கலகம் ஏற்படுதல், நற்செய்திகள், உறவுகளின் மூலமான கௌரவம், மதிப்பு, மரியாதை, பகை வெல்லல், தீ மற்றும் திருடர்களால் காயம் ஏற்படுதல், மருந்து உண்டு,  அதனால் விஷம் தலைக்கு ஏறி, அங்கு இங்கும் அலைதல் ஆகியவையும், எல்லாவற்றிலும் ஒரு சூழ்நிலை மாற்றம் ஏற்படுவதையும் எதிர்பார்க்கலாம்.
குரு புக்தி – 2 – 8 மாதம்.
பதவியால் இலாபங்களும், ஆதாயங்களும் அடைதல், மதத் திருவிழாக்கள், மகிழ்ச்சி மிக்க குடும்ப வாழ்க்கை, மேலதிகாரிகள், முதலாளி அல்லது குருவின் காரகம் பெறும் நபர்களிடமிருந்து நன்மைகள் அடைதல், புகழ் மற்றும் மரியாதை பெறுதல், ஆரோக்கியம், சந்தோஷம், அறிவு, சொத்துக்கள், திருமணம், காம இன்பம், நல்ல காரியங்கள் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் அடைதல், தானியம், பிராமணர்கள், ஆகியவற்றாலும் இலாபம் அடைதல், தசா முடிவில் மனவி, மக்கள் நோயால் வாடுவதைப் பார்த்து கவலை அடைதல் ஆகியவை ஏற்படும். ரேவதி, உத்திர நட்சத்திர காலங்களில் வருத்தம் உண்டாகுதலும் ஏற்படும்.
சனி புக்தி – 3 – 2 மாதங்கள்.
அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின், பெரியோர்களின் இராணுவத்தின், காவல் துறையின், அல்லது அரசாங்கத்தின் அனுகூலமான உதவிகளும், இலாபங்களும், மதிப்பு, மரியாதைகளும்  கிடைக்கும். அழகு மிக்க கன்னிப் பெண்ணை அடைவார், சொத்துக்கள் சேரும், வசதி வாய்ப்புகளும் சந்தோஷமும்  பெருகும்,
பாதிக்கப்பட்ட, பலமிழந்த சனியெனில், ஆரோக்கியம் பாதிக்கப்படும்,  கை, கால்களில் வலி ஏற்படும், கை, கால் முடங்கி சரியாகும், துன்பமும், உடலில் நோய் ஏற்படுதலும், சாப்பிடும் உணவின் மீதும் விஷம்போல் வெறுப்பு ஏற்படுதலும், கண் பார்வையில் பாதிப்பு ஆகியவையும் ஏற்படும். அரசாலும், அதிகாரிகளாலும் மரியாதைக் குறைவும், இழப்பும் ஏற்படும். அலைந்து திரிதல், சூதாட்டம், குடித்துக் கெடுதல் ஆகியவை ஏற்படும்.
புதன் புக்தி – 2 – 10 – மாதங்கள்.
மனைவி மக்கள் சிறப்படைதலும், அவர்களால் சந்தோஷம் உண்டாகுதலும், சொத்து, பொருள் சேருதலும்,  கல்வி, கலை, விஞ்ஞான அறிவு அதிகரித்தலும், ஞானம், இசை பாடுதல், நல்ல சிவந்த நிறமுடையவர்களால் பலவித நன்மைகள் உண்டாகுதலும் ஏற்படும். எதிலும் வெற்றி கிடைக்கும், திருமணத்திற்குப் பிறகு மகனுக்கு அனைத்துவித வசதி வாய்ப்புக்கள், அதிகாரம் மற்றும் புகழ் ஏற்படுதலும், எதிரிகளை வெல்லும் பலம் பெறுதலும் உண்டாகும். ஆனாலும், வாயு, பித்தத்தால் ஏற்படும் நோய்களால் கஷ்டப்படுவார். வழக்குகளில் வெற்றி, இசையைக் கற்பதில் ஆர்வம் ஆகியவையும் ஏற்படும். அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமும், இராஜாங்க உதவிகளும், இலாபங்களும்   கிடைக்கும்.
கேது புக்தி – 1 வருடம் 2 மாதங்கள்.
தீயால், நாற்கால் விலங்குகளால் ஆபத்து, காதல் விவகாரங்களால் அல்லது மனைவியால் தொல்லைகள், துணைவருக்கு நோய் ஏற்படுதல், விஷந்தீண்டி மீளுதலும், மனமகிழ்ச்சியின்மையும், பணயிழப்பும், தீய பெண்களுடன் தொடர்பும், வாசஸ்தலத்தில் தனித்திருத்தல் ஆகியவையும் ஏற்படும்.

Sunday, 25 October 2015

சனி மகா திசைக்கான, புதன் மகா திசைக்கான போதுப் பலன்கள்




சனி மகாதிசைக்கான போதுப் பலன்கள் தசா காலம் 19 வருடங்கள்.

சனி புக்தி – 3 – – 3 நாட்கள்.
        சனி புக்தியில் ஜாதகருக்கு தனலாபம் அதிகரிக்கும், பணியாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பாவ காரியங்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களுடன் தொடர்பு ஏற்படும் என பலதீபிகாவில் மந்தரேஸ்வரர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் மற்ற நூல்களில் பண இழப்பு, குழந்தைகள் இழப்பு, உறவுகளுடன் வழக்கு விவகாரங்கள் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கஷடங்கள், கடும் வேதனை, சித்ரவதை, அதிகப்படியான மனக் குழப்பங்கள், சொத்து இழப்பு, குடும்பத்தாருக்கு அதிக இன்னல்கள், வாய்வு அல்லது கபம், சளித் தொல்லைகள், வழக்கு விவகாரங்கள், உறவுகள் தரும் இன்னல்கள், குடும்பத்தாரிடையே சண்டைகள் ஆகியவை ஏற்படும்.
புதன் புக்தி – 2 – – 8 மா – 9 நாட்கள்.
       ஜாதகருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம், பெண்களின் நட்பு, அரசாள்பவரால் மற்றும் உயர்அதிகாரிகளால் கொடுக்கப்படும் மரியாதை, கௌரவம். வெற்றி மற்றும் நண்பர்களின் சங்கமம் ஆகியவையும், ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது திசையில் அறிவு தெளிவுபெறும். பகுத்தறிவு மற்றும் மேதாவித்தனம், தர்ம காரியங்கள், குழந்தைப் பிறப்பு, குழந்தைகளின் முன்னேற்றம், உறவுகளுக்கு வெற்றி, சந்தோஷம், சொத்து மற்றும் புகழ் சேர்க்கை, மத விழாக்கள், வணிகம் மற்றும் விவசாயத்தின் மூலமான இலாபம் ஆகியவை ஏற்படும்.   

கேது புக்தி -  1 – – 1 மாதம் . 9 நாட்கள்.

       பணம் இழப்பு, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சண்டை, எதிரிகளால் தொல்லை, வாயு மற்றும் உடலில் ஏற்படும் விஷத் தன்மையால் ஆரோக்கியம் பாதிப்புகொடூரமான, இழிவான, அற்பமான, துஷட்டத்தனம் மிக்கவர்களுடன் தொடர்பு, மூட்டுவலி, நோய் அல்லது பாம்பினால் அபாயம் ஆகியவை ஏற்படும்.
சுக்கிர புக்தி – 3 – – 2 மாதங்கள்.

       ஜாதகர் குழந்தைகள், மனைவி மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார். சொத்து இலாபம், பரந்த நிலப்பரப்பில் கீர்த்தியுடன் திகழ்வார். கடற்பயணம், மற்றவர்களின் அனுகூலம் உண்டு. திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பு, எதிரிகளை வெல்லுதல், தடைகளைத் தகர்த்து எறிதல் ஆகியவை ஏற்படும்.

சூரிய புக்தி – 11 – மா – 12 நாட்கள்.

       அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படுதல், காய்ச்சல் மற்றும் பிற வியாதிகள், உயர் அதிகாரிகளின் ஆதரவின்மை, கண் உபாதைகள் மற்றும் சூரியன் காரகம் பெறும் உபாதைகள், உடல்வலி ஆகியவை ஏற்படும். சொத்து இழப்பு, மனைவியின் உடல் நிலை பாதிப்பு, அதிகாரிகளின் தொல்லைகள் ஆகியவை ஏற்படும்.

சந்திர புக்தி – 1 – 7 மாதம்

       ஒரு குறிப்பிட்ட திசையில் (பிரிவில்) அறிவுவாற்றல் அதிகரித்தல், புதிய திட்டங்களைத் துவங்குதல், செலவுகள் அதிகரித்தல், நண்பர்களுக்கு கஷ்டம் கொடுத்தல். சோகங்கள், உறவுகளை வெறுத்தல், நீரினால் பயம், கண்டம், பணிழப்பு, சொத்துக்களை அடகுவைத்தல், அது மூழ்கிய பின்னரே திரும்பப் பெறப்பட நேரும். கலகம், பீடை, வீட்டில் சண்டை, வழக்கு ஆகியவை ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 1 – 1 மா – 9 நாட்கள்.

கொஞ்சம் கௌரவக் குறைவு ஏற்படுதல், அக்னியால் ஆபத்து, இடம் அல்லது வீடு மாற்றம், நிலையில்லாத காலம், குலத்தில் ஈனம், கொடிய பகை, பழி, ஊர் ஊராய் அலைந்து திரிதல், அனைவரையும் பகைத்துக் கொள்ளுதல், பொன்னாபரணங்கள் திருட்டுப் போகுதல், சகோதர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்னல்கள் ஏற்படுதல். பிறரால் பணவிஷயமாக ஏமாற்றப்படுதல், இழத்தல் ஆகியவை ஏற்படும்.

 இராகு புக்தி – 2 10 மா – 6 நாட்கள்

       சொத்து இழப்பு, பணம் இழப்பு, காய்ச்சல் மற்றும் இதர நோய்கள், வெளிநாட்டு சுற்றுப் பயணம், விபத்து அபாயம், எதிரிகளால் தொல்லை, புண்கள், கல்லீரல் வீக்கம், உடலில் கஷ்டங்கள் பொன் ஆபரண நாசம், பாம்பு கடித்தல் ஆகியவை ஏற்படும்.

குரு புக்தி – 2 – 6 மா – 12 நாட்கள்.

       கடவுள் பக்தி அதிகரித்து, புனிதர்களின் தொடர்பு ஏற்படுதல். உயர் அதிகாரிகளின் அனுகூலமான நடவடிக்கைகள், வசதி வாயப்புக்கள் பெருகுதல்மணவாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கிய மேன்மை, உயர்பதவிகள் அடைதல், அனைத்து விருப்பங்களும் நிறைவேறுதல், குடும்பப் பெருக்கம், உடல் தொடர்பான வசதிகள் கூடுதல், ஆடை ஆபரண சேர்க்கை, அரசர்களால் நன்மை, உறவுகள் சேர்க்கை ஆகியவை ஏற்படும்.

புதன் மகா திசைக்கான போதுப் பலன்கள் தசா காலம் 17 வருடங்கள்.

புதன் புக்தி – 2 – 4 – மா 27 – நாள் ;

       அழகிய வீடும், வியாபாரத்தின் மூலம் அதிக சொத்துக்களும் சேரும். தொழில் மூலமாகவும், மதத் தொடர்புள்ள நபர்கள் மூலமான வருமானங்களும் வரும். அதிகப் புகழும், நல்ல கல்வியும், மேதாவித்தனமும், கற்றலில் ஆர்வமும் ஏற்படும். சந்தோஷம், குழந்தைப் பிறப்பும் ஏற்படும். வெற்றி, குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்தல், தர்மகாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுதல், உறவுகள் மூலமான ஆதாயங்கள் ஆகியவை ஏற்படும். அதிக பாக்கியம், நன்மை பயக்கும் ஞானம், வித்தை, எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதமாக முடிவடைதல் ஆகியவையும் ஏற்படும்.

கேது புக்தி – 11 மாதம் 27 நாட்கள்.

       பெரிய இடம்விட்டு மாறுதல், வியாதியால் கஷ்டங்கள், பொருட்சேதம், உறவுக்குக் கேடு, மருந்திடும் குணத்தால் துன்பம், அதிகமான மனக்கிலேசம் உண்டாகுதல். ஆரோக்கியக் குறைவு, இன்னல்கள், கவலைகள், சண்டைகள், பூமி, வாகனம் ஆகியவை இழப்பு, மதத்துக்கு எதிரான எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகள், மனக் குழப்பங்கள், உறவுகளால் தொல்லைகள், சுகம் இழப்பு, இடமாற்றம், உறவுகளுக்கு அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஏற்படும்.

சுக்ர புக்தி – 2 – 10 மாதங்கள்.

       மதத் திருவிழாக்கள் மற்றும் குரு, ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்தல், ஆகியவை ஏற்படும். தனலாபம், புத்தாடைகள், அணிகலன்கள் ஆகியவை கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு, உறவுகளுக்கு நல்ல முன்னேற்றம், இலாபம், சுக்கிரனின் காரகம் பெறும் வர்த்தகத்தில் ஆதாயம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படும். நீண்ட பயணங்கள், எதிர்பாலருடன் உறவு ஆகியவையும் ஏற்படுவதோடு, திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். அருமை தங்கிய மக்கட்பேறும், ஸ்த்ரீயுடன் போகமும், உறவுகள் சினேகமும், வித்தையும், வேறு நாட்டுக்குச் சென்றவர் திரும்ப வந்து சேருதல் ஆகியவையும் ஏற்படும்.

சூரியன் புக்தி – 10 மா – 6 நாட்கள். –

       பொன், பொருள் சேர்க்கை, நல்ல உணவு மற்றும் பானம், அரசு மற்றும் உயர்அதிகாரிகளிடம் இருந்து கௌரவம், மதிப்பு, மரியாதை கிடைக்கும். ஆனால், சூரியன் பாதிப்பு அடைந்து இருந்தால் கவலைகள், மக்களின் எதிர்ப்பைப் பெறுதல், உயர் அதிகாரிகளின் அனுகூலமற்ற தன்மை, அக்னியால் ஆபத்து, மனைவிக்கு நோய், தடைகள் ஆகியவை ஏற்பட்டாலும், சொத்துச் சேர்க்கை ஏற்படும். அரசரால் துன்பம், இடையூறுகள் ஆகியவை ஏற்படும்

சந்திர புக்தி – 1 – 5 மாதங்கள்.

       பெண்கள் மூலமான பண ஆதாயம், விவசாயம், வணிகம் மூலமான இலாபங்கள், வெற்றிகள், சந்தோஷம் மற்றும் வசதி வாய்ப்புக்கள் ஆகியவை ஏற்படும்.. சந்திரன் பாதிக்கப்பட்டிருக்க, ஜாதகர் வீக்கம், கால்களில் அடிபடுதல், தலைவலி, கண் நோய், படை, கழுத்துவலி போன்ற நோய்களால் கஷ்டப்படுவார். பெண்களுடன் சண்டைகள், தவறுகளால் கஷ்டங்கள் ஆகியவை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது. அனைவரிடத்தும் பகை உண்டாகுதலும் ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 11 மாதம் 27 நாட்கள்.

       அக்னி மூலமான, ஆயுதம் மூலமான அபாயங்கள், கண் பிரச்சனை, திருட்டு பயம், அனைத்து அபாயங்களும் விலகுதல் அல்லது மறைதல், எதிரிகள் தொல்லை ஆகியவை ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபடுவதின் காரணமாகப் புகழ் அதிகரித்தல், உயர் அதிகாரிகள் மூலமாக நன்மைகளும், அனுகூலங்களும் அடைதல் ஆகியவை ஏற்படும். காற்றால் பரவும் நோய்கள், பக்கத்து வீட்டு நபர்களின் மூலமான தொல்லைகள் ஆகியாவையும் ஏற்படும். பயணங்கள், புண்கள், குடித்தல், சண்டையிடுதல் மற்றும் தலைவலி ஆகியவையும் ஏற்படும்.

இராகு புக்தி – 2 – 6 மாதம் – 18 நாட்கள்.

       இராகு நல்லநிலையில் இருக்க அல்லது சுபர் பார்வை பெற, உறவுகள், நண்பர்கள் மூலமாக சொத்துச் சேருதல், பதவி உயர்வுகள் மற்றும் உயர் நிலையால் இலாபம் அடைதல், மகிழ்ச்சிப் பெருக்கம், புதிய வருமானங்கள், புதிய வீடு வாங்குதல் அல்லது வீடு மாற்றம் ஏற்படும். அந்நிய தேசத்தவரால் இலாபம் அடைவர். இதுவே, இராகு அசுப பாதிப்படைய பதவி இழத்தல், மரியாதை, கௌரவம் இழத்தல், கொடுமையான, கீழான பெண்களுடன் தொடர்பு, ஏற்படுதல், தீயால், விஷத்தால் அல்லது நீரால் கண்டம். கண், வயிறு ஆகியவற்றல் உபாதைகள், வெளி நாட்டவரால் பயம், ஆபத்து ஆகியவையும் ஏற்படும்.  கெட்ட கனவுகள், தலைவலி ஆகியவை ஏற்படும்.

குரு புக்தி – 2 – 3 மாதம்

       சந்தோஷம் மிக்க காலம், எதிரிகள் அழிதல், வியாதிகளில் இருந்து விடுதலை பெறல், வெற்றிகள், பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு, அரசு மூலம் மரியாதை, கௌரவம் அடைதல், உயர் அரசு அதிகாரிகளின் மூலமான ஆதாயங்கள் ஆகியவை ஏற்படும். சொத்துக்கள் சேருதல், வாகன யோகம், புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படுதல், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடத்தல், புதிய உறவுகள் சேர்க்கை என அனைத்துமே நல்லனவையாகவே நடக்கும் யோக காலமாகும்.

சனி புக்தி – 2 – 8 மாதம் – 9 நாட்கள்.

       பலம் மிக்க சனியானால் ஜாதகர் இலாபங்களை அடைவார், சொத்துக்கள் சேரும், வசதி வாய்ப்புக்கள் பெருகும், சனி காரகம் பெறும் பொருள்களை வணிகம் செய்வதால் இலாபம் பெருகும். விவசாயம், பயணங்கள் மூலமாக ஆதாயம் பெருகும். தர்ம காரிய ஈடுபாடு அதிகரிக்கும், அதனால் ஆதாயமும் ஏற்படும். முறையற்ற வழிகளிலும் சம்பாத்யம் பெருகும்.

       பலமற்ற சனி எனில் கஷ்டங்கள் அதிகரிக்கும், மகிழ்ச்சிகள் மறையும், கவலைகள் அதிகரிக்கும், நிலைமாற்றம், தாழ்வு நிலை அடைதல், சொத்துக்களை இழத்தல், வியாபாரத்தில் தோல்வி அடைதல், வாயு, கபம், சளி, கோழை ஆகிய தொல்லைகள் ஏற்படுதல். சோகம் மிக்க மனம், தாழ்வு நிலையில் உள்ளவர்கள் எதிரியாகுதல் ஆகியவையும் ஏற்படும். உத்திராட நட்சத்திரத்தில் கேடு உண்டாகுதலும், உற்றாருக்கும் கேடு உண்டாகுதலும், ஒவ்வொரு நாளும் நன்மை இல்லாது போகுதலும் ஆகிய கெடு பலன்கள் உண்டாகும்.