Search This Blog

Sunday, 1 February 2015

12th bhava and dwelling.



12th bhava and dwelling.
Jodhida praveena. S. Vijayanarasimhan. Madurai
       In the modern world it has become for each and every individual to have a nice dwelling in their life time. But, God decides where we have to live ? Let us consider the parameters to find out what type of dwelling an individual will have according to their horoscope.
       To find out whether the dwelling of an individual is either in the village or in town, is decided by the 12th bava. The 4th house represents dwelling, house, mother education  and the type of place
       If the ascendant lord is a powerful deity planet like Jupiter, then the dwelling will be in a holy place such as, near to the temple. If a strong Venus is in 12th house then the dwelling will be in the City or Town, where people live in a luxurious manner.

             First of all, we must analyze a  chart, weather the chart is full of benefic energy or of malefic energy. In this chart, Saturn and the Sun are in their Own house. The aspect of Saturn and Mars on Lagna make it  more powerful. Jupiter in the Ascendant , Moon is in its exalted position. Venus, the Lord of Ascendant Is a benefic. As Venus and Moon are in mutual displacement, this gives bad effects. As both are with equal strength, the life is full of struggles.



Moon


Rasi
Chart -1
Venus,
Mars,Ketu.
Rahu
Saturn®
Mercury
Sun


Asc, ///
Jupiter






        Moreoverno strong Planet should be in the 8th bava. If it is so the life of the native will be filled with full of struggles and difficulties. As such the strong position of Moon and Jupiter are useless and the native will not have any auspicious results during the Major and sub-period of this two Planets. So, by seeing the positions of planets, without weighing the bhava strength,  the predictions may go wrong.  Careful reading of Birth chart must be done for accurate predictions.

Chart – 2

 In this horoscope Jupiter the lord of viya bhava, is in its own house and as such it is very strong. So, we can assume that the native will have his dwelling in the City. But, native will settle himself in a place other than his birth place.  The other rule is, the 7th  house is the 8th  house to 12th house, and the 7th house should be vacant or of less strength.  If the 12th house is stronger than 7th house, the native will happen to move place to place frequently.
               Now, let us see that the native is really willing to live in the city or not ?  If the Lagna Lord ,  Lagna , the  12th Lord and 12th house  all are  strong , then  we can come to a conclusion that the native lives in the city as per his wish.   If the native has a strong horoscope (lagna, lagna lord )with a weak 12th house then the native will be living in the City,  against his wish.
Jupiter
Asc ///
Sat, ketu


   
Rasi
Chart -2
Su, Me,
Mo
Mars
Ven


Rahu


                                  Lagna lord, Mars is in its exaltation and his depositor Saturn in mutual transfer and in its debilitated sign. At this stage how  a benefic  strength will be obtained by these bhavas ?  But,   as 12th bhava  is strong, the native will live in city, against his wish.

                   
                                                                                                                                                                                                   Lagna in movable sign or in dual sign with Saturn placed in it,  and the 12th bhava is stronger,  then the native will roam around all over the places and finally live in a suburb.


Chart – 3
         
Sun
Saturn
Mo,Jup
Mars

 Me,Ketu
Rasi
Chart- 3

Ven
Asc,
Rahu




                    
               In this Chart, the Lagna Lord Sun is in 8th house and Rahu is in the Lagna, though in an adverse position, both  increases  the bhava strength. Ketu  in sapthama  Kendra , waning Moon  and Jupiter in the  dasama  Kendra  also  enhances  the bhava  strength.   Debilitated Saturn, Sun in 8 (Jupiter’s house) , Mars too,  lost its strength,  because of which the benefic bhava strength is increased. The 12th Lord  exalted Moon with Jupiter makes the native to live in the City. But, the Rahu in the Lagna will make his life miserable.
              Chart -4
                In this chart, Mars is  in 12th  in its own bhava . The  Saturn in 4 and the Jupiter in the 2nd  house. Both exchange their houses mutually. These factors give us the conclusion that the native is so fortunate to live in the City.
               Thus, when you look at the native’s horoscope, you must be able to predict that where the native will live ? will it give him progresses in his life ? or will it bring him down to the earth ?. But Astrologers should keep it in their mind that the planets  combine with the Lagna, will have more strength.

Sat
Sun,Me,
Ven
Ketu


Rasi
Chart- 4

Jup ,Mo

Asc
Rahu,
Mars



Saturn –
             Exalted Saturn in Libra as ascendant , enhances  bhava bala and the native will be a wanderer and  will be inactive.  He will not worry about others. He will blame others and escape himself. He will give more trouble to others. So,  the native who has Libra as ascendant, with Saturn exalted in it, will not be a good man.
Jupiter –
              In the same manner, exalted Jupiter and the Cancer become Lagna , the native will definitely reach the heights.  


Chart – 5.
            Libra lagna – Saturn is exalted. In this chart Saturn,  Mercury, Jupiter are exalted, Sun and Venus are in their own houses. Thus this becomes a super  horoscope . This is only because of The  exalted benefic planets Jupiter and Mercury enhances the benefic strength.  As Lagna Lord Venus is in own sign, we consider that it has no bhava strength. In this chart, he 12th house is strong, we come to the conclusion that the native will live in a City. 
            The 12th bhava all the time do not give bad effects. Sometime it gives benefic  effects too, when the Lord of that house is a benefic and have some  connection to the Lagna. So we should not under estimate the 12th bhava,  thinking that it gives  only loses and destroys everything. When  this bhava has full  benefic  strength , people will not ask you to pay back the loan taken from them, they will give loan without any hesitation. If at times, they manage to pay back the old loans, by getting new loans from some other source. More over the bed comforts will be good, because of nice mattress etc. The native will have an uninterrupted sleep after hard work.



Ketu
Moon
Rasi
Chart- 5
Jup

Sun
Mars,
Rahu

Asc, Sat
Ven
Mer
            
            If there is an exalted planet in the 12th house, the native will live in a decorated high class bun glow. Though 4th house represents  house, 12th house shows the    superiority of   the house.
            If the 12th house fall in a dual sign and an exalted planet is posited there, the native will live in the city, with all bed comforts, nice sleep, etc. But the house will not be a better house. If the 12th house fall in  a  fixed sign the native will definitely live in house, where all comforts and facilities exist.
           Venus, the karaka for 4th house , though represent house, vehicle, all comforts etc, when occupy 8th house  naturally cause accident too. So we should not think that Venus give benefic  results only. At the same time students  should keep in mind that, when Saturn and Mars are in full strength, Jupiter and Venus do not do good to the native.

          In the above chart, Jupiter is exalted in Kendra is a good position indeed. But, Saturn is exalted in Lagna and aspect the Jupiter in the 10th house. This reduces  the benefic bhava bala. If the benefic bhava bala is more,  then the native will be born in a good family,  will be respected by the mass , praised by the public  and will have all super qualities of habits. Now, here we end the discussion of the 12th house, by which we come to know about the place where the native will live ?.

உங்கள் நட்சத்திர பலன்கள். 01 – 02 – 2015 முதல் 07 - 02 – 2015 வரை


இந்த வார நட்சத்திர பலன்கள்.



01 – 02 – 2015 முதல் 07 - 02 – 2015 வரை
(தினபூமியில் வெளியானது)

மேஷம்
 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --
       இந்த வாரம் மாதரால் மனமகிழ்ச்சி ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். விரைந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். இல்லத்தில் இனிய சுபகாரியங்கள் நடைபெறும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். புதிய தொழில் தொடர்புகளால் பொருளாதாரம் மேம்பாடு அடையும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனுகூலமாய் இருக்கும். திடீர் பயணங்களால் நன்மை ஏற்படும். உறவுகள் மற்றும் நண்பர்கள், தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். மேடைப்பேச்சு, பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு முன்னேற்றமான வாரம். அன்னையின் அரவணைப்பால் அகம் மகிழும்.

பரணி  --      
       இந்த வாரம் துவக்கத்தில் துன்பங்கள் வந்து விலகும். குழந்தைகளால் மனக்கவலைகள் ஏற்படலாம். பின்னர், தாராளமான தனச்சேர்க்கையாலும், சுபகாரிய நிகழ்ச்சிகளாலும் மனதில் சந்தோஷம் பெருகும். தெய்வீக வழிபாடுகளால்  நிம்மதி நிலவும். தாயாரின் உணவு உபசரிப்பால் உண்டு மகிழ்வீர்கள். புதிய தொழில் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம், தொழில் மாற்றம் என வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, அதிக இலாபம் பெற முயற்சி செய்வீர்கள். சிலருக்குக் காரியத்தடைகளால், பயம் கலந்த மனக்கலக்கங்கள் ஏற்படலாம்.
கார்த்திகை  1 ஆம் பாதம்.—
       இந்த வாரம் ஆரம்பத்தில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். புதிய தொடர்புகள் மகிழச்சி தரும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். தனவரவு குறையும் காலமாதலால், வீண்செலவுகளைக் குறைப்பது அவசியம். உங்களால் கூறப்படும், ஒரு வார்த்தை, ஒன்பதாக மாறி, பரபப்படும். எனவே, வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. சிலருக்கு ஆரோக்கியக் குறைவு காரணமாக  மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறி மகிழ்வு தரும். பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். பகைகளை வெல்லும் திறன்  ஏற்படும் 
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
       இந்த வாரம் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்பட்டு பொருளாதார நிலை மேம்படும். குழந்தைகளின் பிடிவாத குணத்தால் தொல்லை ஏற்படும்சிலருக்குப் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பது அரிது. வாகனங்களில் பயணிக்கும் போது, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்து, விபத்தினைத் தவிர்க்க முயலுங்கள். நான்கு சுவர்களுக்குள் வீட்டிற்குள் நடக்கும் விஷயங்கள் வெளிவராது காப்பது அவமானங்களைத் தவிர்க்கும். திட்டமிட்டுச் செலவு செய்தால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் குறையும். கடும் பிரயாசைகளுக்குப் பிறகே எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சிலருக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு, வெறு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.
ரோகிணி  –
       இந்த வாரம் குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். வீட்டில் சுகபோகங்கள் அதிகரிக்கும். புதுவீடு கட்டுவதற்கான              வங்கிக் கடன்கள் மிகுந்த பிரயாசைகளுக்குப் பிறகே கிடைக்கும். கட்டுமானப் பணியாளர்களின் அலட்சியத்தால் கட்டிடம் தாமதப்படும். நண்பர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்களைக் குறைக்க, இவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு அதிகாரிகளால் சிலருக்கு இடையூறுகள் ஏற்படலாம்தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்தொலை தூரப்பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.   
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
       இந்த வாரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துங்கள். முழுமுயற்சி எடுத்துச் செயல்பட்டாலே, உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைய முடியும்வாகனங்களில் செல்லும் முன் அதற்குரிய ஆவணங்களைச் சரிபார்த்து எடுத்துச் செல்வது நல்லது. அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவிகள், பொறுப்புக்கள் வந்து சேரும்சிலருக்கு வாக்கால் வருமானமும், குடும்பத்தில் குதூகலமும் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவியால் வாழ்க்கையில் பேருயர்வு ஏற்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். தந்தைவழி உறவுகள் உதவி செய்வார்கள். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –
       இந்த வாரம் தெய்வ தரிசனம், தெய்வீகப் பயணங்கள் தேடிவரும். வீட்டில் திருமணம் போன்ற நற்காரியங்களில், தாமதம் ஏற்பட்டாலும், மிகச்சிறப்பாக நடைபெறும். அரசுப் பணியில் உள்ளவர்கள் அதிகப்படியான வருமானங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குப் புத்தி சாதுர்யமும், அறிவு விருத்தியும் ஏற்படும். தந்தை மகனிடையே இருந்து வந்த மனக்கசப்புக்கள் தீரும். ரேஷன் கார்டுகளில் புதிதாகச் சேர்க்க, புத்திர பாக்கியம் ஏற்படும். பெண்கள் சமூகவிரோதிகளிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்குப் பெண்களால் தேவையற்ற அவமானங்கள் ஏற்படலாம்.  வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்.
திருவாதிரை ---
       இந்த வாரம் பணவரவுகள் அதிகரித்தாலும் தான, தர்மமெனக் கைப்பணம் கரையும்தேவையென்று வரும்போது கையிலிருக்கும் பணம் கூட உதவாமல் போகும். வியாபாரிகள், தொழில் முனைவோருக்கு நல்ல முன்னேற்றமான காலம். காற்றடிக்கும் போதே தூற்றி கொள்வது போல், நல்ல இலாபம் வரும் போதே சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் தம்பதிகளிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். வீட்டு உபயோகப் பொருட்களில் பழுது ஏற்படலாம். அதைக் கூட சரி செய்துவிடலாம். ஆனால் சினத்தை அடக்காவிடில் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. சிலருக்கு இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
       இந்த வாரம் தன்னம்பிக்கை உயரும். பலவழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். சிலருக்குக் கார் போன்ற சொகுசு வாகனங்கள் வாங்கும் உயர்வு நிலை ஏற்படலாம்.  தெய்வ சிந்தனைகளால் மனதில் பூர்ண அமைதி நிலவும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்குப் பணி நிரந்தரத்துக்கான ஆணைகள் கிடைத்து, மனதில் இன்ப வெள்ளம் பாயும். அறிஞர்களுக்கு கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இல்லாவிடில் ஏமாற நேரலாம். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என தந்தை சொல் கேட்டு தனயனும் நடப்பார்.  மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
       இந்த வாரம் மனதிற்கினிய சுபச்செய்திகள் வந்து சேரும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும்சிலருக்குப் பணி நிமித்தமாக, இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள்அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால்  மனமகிழ்ச்சி ஏற்படும். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும்விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள்.
பூசம் -- 
       இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் தங்கள் கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன்பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். எழுத்தாளர்களின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர். சுறுசுறுப்பற்ற நிலையில் காரியத் தடைகள் ஏற்படும். அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அபராதம் கட்ட நேரலாம். சிலருக்குத் தோல் உபாதைகள் ஏற்படலாம்.


ஆயில்யம்
       இந்த வாரம் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் பல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். ஆயினும், உங்கள் உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
. சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
       இந்த வாரம்  குடும்பத்துடன்  சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவதால் செலவுகள் அதிகரிக்கும்சிலருக்குப் பணிகளில் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படும்உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம்.  வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொலைதூர சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
பூரம்
       இந்த வாரம் பணவரவு அதிகரித்தாலும், பழைய கடன்கள் அல்லது நோய்களால் கவலை ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்தும் வகையில் செலவுகள் ஏற்படும். பூர்வ புண்ணியத்தால் குலதெய்வ வழிபாடுகள் சிறக்கும். சிலருக்குத் திருமணம் போன்ற சுபகாரிய விரயங்கள் ஏற்படும். வெய்யில் கேற்ற நிழலுண்டு, வீசும் இன்பக் காற்றுண்டு என்பது போல், துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும். எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும், உங்கள் சாதுர்யத்தாலும், சாமர்த்தியத்தாலும் ஊதித்தள்ளிவிடுவீர்கள். செய்தொழில் சிறப்புற்று இலாபம் பெருகும். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு.
உத்திரம்- 1 பாதம்
      இந்த வாரம் மனைவி, மக்களால் மகிழ்ச்சி நிலவும். புதிய சொத்துக்கள் சேரும். வாகனங்களில் பழுது ஏற்படலாம். பிறர் தயவை நாடவேண்டிய சூழல் உருவாகும். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தாவிடில் தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினம். மது அருந்திமாமிசம் உண்பவர்களுக்கு அஜீரணத் தொல்லைகள் எழலாம். உறவுகள் வருகையால் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.  நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
       இந்த வாரம் கையிலே வாங்கினேன், பையிலே போடலே, காசுபோன இடம் தெரியலே என கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படலாம். எனவே, சக்திக்கு மீறிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எந்தத் தொழிலையும் செய்ய மனம் போகாது. எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசரப்பட்டுச் செய்யாமல் நிதானமாகச் செய்தால் வெற்றிகிட்டும். பயனற்ற அலைச்சல்கள் பணிக்குத் தடையாய் அமையும். ஆரோக்கியத்தில் அலட்சியப் போக்குக் கூடாது. கடின உழைப்புக்குப் பின்னரே அதிக வருமானம் பார்க்கலாம். ஆசிரியர்கள், தங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்.
ஹஸ்தம்
       இந்த வாரம் கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்க, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வாகன யோகம் ஏற்படும். விவசாயம் மூலமாக அதிக வருமனாங்கள் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் திறமையால் நற்பெயர் எடுத்துப் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பர். வெளிவட்டாரத்திலும், வீட்டிலும் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர்.
சித்திரை – 1,2 பாதங்கள்
       இந்த வாரம் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டுஉழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். போட்டியாளர்களைக் காட்டிலும்  அரிய சாதனைகளைப் புரிவீர்கள். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீண் அலைச்சல்களும், வெட்டிச் செலவுகளும் தவிர்க்க முடியாத தாகும்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
       இந்த வாரம் சிலருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள்  ஏற்படும்சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். சிலருக்குக் குழந்தைகளால் தொல்லையும், அவமானங்களும் ஏற்படலாம். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு அருந்த முடியாது.  தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான பண உதவிகள் கிடைக்கும். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம்.
சுவாதி
      இந்த வாரம்  புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
       இந்த வாரம் புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். வியாபாரப் பயணங்கள் மூலமாக வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவீர்கள். உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும்.. தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர்.  தெளிந்த நீரோடையில் கல்லெரியக் கலங்கிவிடும் நீரைப்போல், வீண் வாக்குவாதங்களால்  குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
        இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும் பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.
அனுஷம்
       இந்த வாரம் தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத பொருளாதார முன்னேற்றங்கள், உயர்வுகள் ஏற்படும் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வித் தடைகளைத் தகர்த்தெரிய கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணியில் இருக்கும் பெண்கள் அலட்சியப் போக்கைக் கைவிட்டு அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற ஏற்றங்களை எதிர்பார்க்கலாம். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும்.
.கேட்டை
     இந்த வாரம் மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்சிலருக்கு வார ஆரம்பத்தில் இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லைஆகியவை ஏற்படும். பின்னர், மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
       இந்த வாரம் பெண்களின்  அறிவுத்திறன் கூடும்பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுசினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும்அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். மாணவர்கள்  பாடங்களை அக்கறையுடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.
பூராடம்
       இந்த வாரம் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும்.

உத்திராடம் –1 ஆம் பாதம்
       இந்த வாரம் பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---
       இந்த வாரம் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிலர் நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழ்ந்து, உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தியும் மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும்.
திருவோணம்-
       இந்த வாரம் சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முனேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
       இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.   வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
       இந்த வாரம் நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். அன்னையின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும்.
சதயம்-
       இந்த வாரம் அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும் உற்பத்தித்திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
      இந்த வாரம் உங்கள் குடும்பத்தாருக்கு அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப அமைதியும் ஏற்படும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது.

மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
       இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும்.
உத்திரட்டாதி-
       இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்குத் தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் கிடைக்கும் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள்.
ரேவதி-
       இந்த வாரம் வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
n