Search This Blog

Sunday, 15 March 2015

நாடி அம்சம் -34 .-- கரிகராம்சம்

நாடி அம்சம் -34 .-- கரிகராம்சம்

       சர இராசியில் 6°36’ முதல் 6°48‘ வரையும், ஸ்திர இராசியில் 21° 36’ முதல் 21° 48’ வரையும் மற்றும் உபய இராசியில் 23° 12’ முதல் 23° 24’ வரை உள்ளதே கரிகராம்சம் ஆகும். துருவ நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;-   இந்த அம்சத்தின் முதல் பகுதியில் பிறந்த ஜாதகர், சூத்திரர். தடித்த உருவமுடையவர். புது நிறம் உடையவர். மிகப் பெரிய மாகாணத்தை ஆட்சி புரிபவர். எட்டுத் திக்கும் இவரின் புகழ் பரவும். இனிய பேச்சு உடையவர். மெதுவாக நடப்பவர். அனைத்தையும் கற்ற அறிவாளி. பல மொழிகளை அறிந்தவர். நடுவராக இருக்கும் அளவுக்குக் கலைகளில் தேர்ந்தவர். சட்டத்தைப் பாதுகாப்பவர், ஒழுக்கத்தை பேணுபவர். நியாயவான். அனேக வேலையாட்களை உடையவர். உண்மையானவர். இரு மனைவிகளை உடையவர். இவரது தந்தை நல்ல குணவான். இளமையிலேயே இவருக்கு பட்டாபிஷேகம் நடக்கும். நீதி தவறாது, நேர்மையான நல்ஆட்சி புரிபவர். மிலேச்சர்களால் ஆளப்படும் நாடுகளில் இவரின் புகழ் பரவும். மிக்க சந்தோஷமான வாழ்க்கை வாழ்வார். இவருக்கு 25 வயதாகும் போது, மிலேச ஆட்சியாளர் இறப்பார். இவருக்கு அந்த மிலேசர் ஆட்சி செய்த நாடும் கிடைக்கும். இவர் விலைமாதருடன் நெருக்கம் கொள்வார். இவருடைய 25 வது வயதில் ஆண் வாரிசு உருவாகும். வாழ்க்கை ழுழுவதும் நல்ல அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார். 35 வது வயதில், புனித பயணமாக இராமேஸ்வரம் செல்வார். 37 வது வயதில் மற்றுமொரு ஆண் மகவுக்குத் தந்தை ஆவார். 40 வது வயதில் இவரின் மகளுக்குத் திருமணமாகும். தாய் நோய்வாய்படுவார். இவரின் 42 வது வயதில் இவரது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும். 45 வது வயதில் மனைவி மரணமடைவாள். மற்றவள் நீண்ட ஆயுளுடன் வாழ்வாள். தனது 68 வது வயதில் ஜாதகர் புற்று நோயால் ஜாதகர் மரணமடைவார்.

       கரிகராம்சத்தின் இரண்டாவது பகுதியில் பிறந்த ஜாதகர், சமுத்திரக் கரையோரம் உள்ள, சுமாரான வீட்டில், மிலேசரான தந்தைக்கு மகனாகப் பிறப்பார். புது நிறமாக இருப்பார். மிலேசர்களின் பாஷையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார். தந்தை மிகப் பெரிய பணக்காரராக இருப்பார். கப்பல் கட்டும் வணிகத்தில் ஈடுபடுவார். ஜாதகர் மதுவுக்கு அடிமையாவதோடு மட்டுமல்லாமல், மாமிசத்திற்கும், பல பெண்களுக்கும் அடிமையாவார். உணர்சிமிக்கவர் ஆனாலும், நல்ல குணம் உடையவர். தினமும் பறவைகளைக் கொன்று, தின்று சுவைத்து மகிழ்வார். அநேக மக்களைப் பாதுகாப்பார். வணிகம் மூலமாக 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார். தொலை தூர இடங்களுக்கும் வணிகம் செய்யச் செல்வார். மூன்று வாகனங்களை உடைத்தாயிருப்பார். 18 வயதில் மணம் முடித்து, 23 வது வயதில் முதல் ஆண் குழந்தை பிறக்கும். மூன்று மகன்களும், நான்கு மகள்களும், நீண்ட ஆயுளுடன் வாழ்வர். இவர் குழந்தையாக இருக்கும்போதே, தாயை இழப்பார். 25 வது வயதில் தந்தையையும் இழப்பார். 35 வயதுக்குப் பிறகு, இவரது பெரும்பாலான முன்னோர்களின் சொத்துக்கள் அழியும். 20,000 நிஷ்‌காஸ் வரையான பணத்தை இழப்பார்.  40 வது வயதில் மறுபடியும் அதிக பணம் சம்பாதித்து, அனேக சொத்துக்களைச் சேர்ப்பார். 71 வது வயதில் நோயுற்று மரணத்தைத் தழுவுவார். மறுபிறவியில் பெரியதோர் நகரில் வைசியராகப்  பிறந்து அளவற்ற செல்வத்தைச் சேர்ப்பார்.

Saturday, 14 March 2015

ஜெய்மினியும், தொழில் நிலையும்.



ஜெய்மினியும், தொழில் நிலையும்.


        ஒரு ஜாதகரின் தொழில் நிலையைக் காண்பது ஒரு ஜோதிடரின் முக்கியப் பணிகளில் ஒன்றாகிறது. ஜனன ஜாதகத்தில் பொதுவாக 10 ஆம் இடம் தொழில் பற்றிய நிலை அறியவேண்டிய பாவம் என்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. பாரம்பரிய ஜோதிடத்தை விட ஜெய்மினி சூத்திரத்தில் எங்ஙனம் தொழில் நிலையைக் காண்பது என இக் கட்டுரையின் மூலமாகக் காண்போம்.

1.   பார்வைகள் : ஜெய்மினி முறையில் ஓர் இராசி அதற்கு நேர் எதிர் இராசியைப் பார்க்கிறது, மற்றும் இடப்புறமும், வலப்புறம் உள்ள கோண இராசியையும் பார்க்கிறது. உதாரணமாக, மேஷராசியானது, தனது எதிர் இராசியான விருச்சிகத்தையும், இடப்புறம் சிம்மராசியையும், வலதுபுறம் கும்பராசியையும் பார்க்கிறது. ( சரம், ஸ்திரத்தைப் பார்க்கும் ). அடுத்து, ரிஷபம், துலாத்தையும், ( ஸ்திரம், சரத்தைப் பார்க்கும் ) கோணங்களில் கடகம் மற்றும் மகரத்தையும் பார்க்கிறது. அதேபோல், மூலையிலுள்ள இராசிகள் ( உபயராசிகள் உபயத்தைப் பார்க்கும் ) மற்ற மூன்று மூலையிலுள்ள இராசிகளைப் பார்க்கின்றன. மீனராசி, கன்னியையும், மிதுனத்தையும் மற்றும் தனுசுவையும் கோணப் பார்வையாகப் பார்க்கின்றன.

2.   ஓர் இராசியானது எதிர்மறை அர்கலா இல்லாத போது, அர்கலாவினாலான நன்மைகளை உடைத்தாயிருக்கும்.

) ஓர் இராசி ஒரு கிரகத்தால் பார்க்கப்படும் போது அந்த கிரகத்திற்கு 2,              4 அல்லது 11 இல் கிரகங்கள் இருந்தால் பார்க்கப்படும் இந்த               இராசியானது  இந்த 2, 4 அல்லது 11 இல் உள்ள கிரகங்களின்             அர்கலாக்களின் முழுப் பலன்களையும் அடைகிறது. இதற்கு 12, 10           அல்லது 3 ஆம் இடங்களில் கிரகங்கள் இருந்தால் அது எதிர்               மறை அர்கலாவாகும்.


) பார்க்கும் கிரகத்துக்கு 3 இல் ஒரு கிரகம் இருந்தாலும் எதிர்மறை           அர்கலா இருக்காது.

) மேற்கண்ட இடங்களில், இராகு, கேதுக்கள் இருந்தால் அர்கலாவை           அளிக்கும்.

) பார்க்கும் கிரகத்திற்கு 5 இல் இருக்கும் கிரகமும் அர்கலாவைத் தரும்
       9 ஆம் இடத்திலுள்ள கிரகம் எதிர்மறை அர்க்காலாவைத் தரும்.
) பார்க்கும் கிரகத்திற்கு 9 இல் இராகு அல்லது கேது இருக்க 5 ஆம்           இடத்திற்கு எதிர்மறை அர்க்கலாவைத் தரும்.

பார்க்கும் கிரகத்திற்கு 6, 7 மற்றும் 8 ஆம் இடத்திலுள்ள கிரகங்கள் அர்க்கலாவைத் தருவதில்லை.

       ஜெய்மினி மகரிஷியின் சூத்திரத்தைப் பொருத்தவரை, மிக அதிக பாகையிலுள்ள கிரகமேஆத்ம காரகர்ஆகிறார். அவரே ஜாதகருக்கு மிக சக்திமிக்க கிரகமாக அமைகிறார்அவரே ஜாதகரைக் கீழ்நிலையில் இருந்து, மிக உயர்ந்த நிலைக்கு, ஒரு கௌரவமான நிலைக்கு உயர்த்துகிறார்நவாம்சத்தில் ஆத்ம காரகன் இருக்கும் நிலையே காரகாம்சம் என அழைக்கப்படுகிறது. நவாம்சத்தில் ஆத்மகாரகன் நிலையே  ஜாதகருக்குப் பொருத்தமான தொழில் எது எனக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மகாபாரதத்தை எழுதிய வேதவியாசரின் சீடரே ஜெய்மினி மகரிஷியாவார். எனவே, அக்காலத்தில் கிரகங்களுக்கு அவர் குறிப்பிட்ட தொழில்கள் தற்காலத்திற்குப் பொருந்துவனவாக இல்லை.

       சூரியன் : கிரக சாம்ராஜ்யத்தின் அரசனென்றும், அவனுக்கு அரசியலையும், அரசாங்க வேலைகளையும் அளித்தார்.

       சந்திரனையும், சுக்கிரனையும் மந்திரிகளாக்கி அறிவு பூர்வமான வேலைகளைக் கொடுத்தார். ( சில ரிஷிகள் சந்திரனை அரசி எனக் குறிப்பிடுகின்றனர் ) சுக்கிரனை அரசுப் பணியாளர்களுக்கு இணையாகக் குறிப்பிடுகிறார்.

       செவ்வாய் : தர்க்க சாஸ்திரத்திற்கு செவ்வாயையும், தத்துவத்திற்குப் புதனையும் குறிப்பிடுகிறார். எனவே, இவர்கள் விஞ்ஞானிகளுக்கும், தத்துவஞானிகளுக்கும் இணையாகிறார்கள். செவ்வாயானவர் படைத்தளபதியாகவும் சித்தரிக்கப்படுகிறார். சீருடைப் பணியாளர்களுக்கும், உலோகங்கள், தீ மற்றும் மின்சாரத்திற்கும் செவ்வாயே பொறுப்பு ஏற்கிறார்.

       புதன் : இளவரசர் ஆவார். இளமையின் வேகங்கொண்ட புதன், வணிகம், நேசவு, சிற்பம், ஓவியம் போன்ற கலைஞர்களை, சட்ட நிபுணர்களைக் குறிக்கிறது. மீமாம்ச தத்துவம் ஜெய்மினி முனிவராலேயே கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, காரகாம்சத்துக்கு 5 மற்றும் 9 இல் எதிர்பில்லா அல்லது அசுப பார்வையற்ற புதனின் நிலை ஜாதகரை ஒரு தத்துவவாதி ஆக்கிவிடுகிறது.

       குரு : தேவர்களின் பெருமைமிகு பேராசிரியர்தேவகுருஆசிரியத் தொழிலுக்கும், மதபோதனைகள் செய்பவராகவும் குறிப்பிடுகிறார். மிகப்பெரிய கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், போதகர்கள் ஆகிய அனைவரும் குருவின் தாக்கத்தைக் கொண்டவர்கள் ஆகிறார்கள். மிகவும் புகழ் மிக்க விஞ்ஞானிகள் குரு, புதன் மற்றும் செவ்வாய் ஆகியோரின் இணைந்த தாக்கத்தைப் பெற்றவர்கள் ஆகிறார்கள்.

       இவர்களுடனான சனியின் இணைவு அவர்களை மிகவும் கொண்டாடப்பட     ( celebrity ) வேண்டியவர்களாக ஆக்கிவிடுகிறது. காரகாம்சத்தில் சனி இருக்க அந்த ஜாதகர் பொதுவான மற்றும் மக்களிடையே மிகவும் பிரபலமான தொழிலைச் செய்தோ அல்லது அந்தத் தொழிலாயே புகழ் பெறுபவராகவோ ஆகி, அதையே தங்கள் ஜீவன உபாயமாகக் கொள்கின்றனர்.

       இராகு : காரகாம்சத்துக்கு 4 இல் உள்ள இராகு பொறியாளர்களையும், தீவிரமான நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர்களையும், இராணுவத்தினர், காவல்காரர், மெயக்காப்பாளர் மற்றும் திருடர்கள் (அசுப தாக்கம் பெற ) ஆகியோரைக் குறிக்கிறது.

       கேது : காரகாம்சத்திலுள்ள கேது ஜாதகரை ஒர் ஆசாரம் மிக்க துறவியாக, ஞானியாக மாற்றிவிடுகிறது. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி ஓட்டுபவர், திருடர்களையும் குறிக்கிறது.

       ஜாதகருக்குத் தகுந்த தொழிலைக் கண்டறிவதில் கீழ்க்கண்ட காரணிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

1.   () காரகாம்சம் அல்லது ஆத்மகாரகன் நவாம்சத்திலுள்ள நிலை.

() நவாம்சத்தில் காரகாம்சத்திற்கு பத்தாமிடத்து நிலை.
   2.      ஜனன ஜாதகத்தில் இலக்னம் அல்லது ஆத்மகாரகனுக்குப் பத்தாமிடம்.
   3.  () ஜனன ஜாதகத்தில் இலக்ன பதா மற்றும் இலக்ன பதாவுக்கு 10 ஆம்                   இடம்.

      () ஜனன ஜாதகத்தில் பத்தாம் பதா.

       முதலில் இந்த இடங்களில் உள்ள கிரகங்களின் நிலைகள் மற்றும் இந்த இராசியைப் பார்க்கும் கிரகங்கள் ஆகியவற்றைப் பார்ப்பது அவசியமாகிறது. அடுத்து அர்க்கலாவைப் பார்க்க வேண்டும். இந்த இடங்களில் ஏதாவது ஓரிடத்தை எதிர்மறையற்ற அர்க்கலாக்களைக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் பார்வையும் அதன் பிறகு, அந்த பார்க்கும் கிரகங்களோடு இணைந்துள்ள கிரகங்கள் மற்றும் அர்க்கலாக்கள் ஆகிய இவையே ஜாதகரின் தொழில் நிலையைக் காணும் காரணியாகிறது.

       உதாரண ஜாதகமாக நமக்கு மிகவும் பரிச்சயமான ஜாதகமான பண்டிட்        “ 

ஜவஹர் லால் நேருவின் ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம்.

       இவரின் ஜாதகத்தில் சந்திரன் ஆத்ம காரகன். காரகாம்சம் தனுசு ஆகும். நவாம்சத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரும் காரகாம்சத்தில் இணைவு. இது அவரின் இலக்கியத் திறன் மற்றும் அரசியல் பிரவேசத்துக்குக் காரணமானது. “ஜெய்மினிதனது சூத்திரத்தில் காரகாம்சத்தில் உள்ள சந்திரன், சுக்கிரன் ஜாதகரின் இலக்கியத் திறனை மேம்படுத்துகிறது எனக் குறிப்பிடுகிறார்.




இராகு

புத
செவ்





இராசி
லக்//,சந்
.கா
லக்///
இராகு


நவாம்சம்
சூரி
சனி

சனி

குரு
கேது
குரு
கேது
சூரி
புத
சுக்
செவ்
சந், .கா.
சுக்




பராசரர்”, காரகாம்சத்திலுள்ள சந்திரன், சுக்கிரனால் பார்க்கப்படும் போது ஜாதகர் செல்வநிலை மிக்க மற்றும் ஆடம்பர நிலையில், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பெடுத்து, இலக்கிய வாதியாகவும், அறிவு ஜீவியாகவும் உருவெடுப்பார் எனக் குறிப்பிடுகிறார். மேலும், சுக்கிரனின் இந்த நிலை நீண்ட ஆயுளையும், அரசியலில் மிக உயரிய பதவியையும் அளித்தது.  .காரகாம்சமானது செவ்வாய், சூரியன் மற்றும் சனியின் அதிக அர்க்கலாக்களால் நன்மையடைகின்ற புதனால் பார்க்கப்படுகிறது. செவ்வாயின் அர்க்கலாவானது இராகுவால் எதிர்க்கப்படுகிறது. ஆனால், சூரியன் மற்றும் சனிக்கு எதிர்மறை அர்க்கலாக்கள் இல்லை. காரகாம்ச இராசியின் மீதான சூரியன் மற்றும் சனியின் எதிர்மறையற்ற அர்க்கலாக்கள் காரணமாக அந்த இராசியில் உள்ள சந்திரன் மற்றும் சுக்கிரனின் நிலையை மேம்படுத்துகிறது.
       காரகாம்சத்திற்கு 10 ஆம் இடமான கன்னி இராசி, புதன், சுக்கிரன், சந்திரனால் பார்க்கப்படுகிறது. சூரியன் மற்றும் சனியின் எதிர்மறையான அர்க்கலா அல்லாத புதனின் பார்வை மற்றும் இராகு, புதனின் எதிர்பில்லாத அர்க்கலாவைக் கொண்ட சந்திரனின், சுக்கிரனின் பார்வை, இவ்வாறான சுக்கிரன், சந்திரன் மற்றும் புதனின் கலவையான தாக்கத்தால் தொழில் அமைந்தது ( விதி-2  ஓர் இராசியானது எதிர்மறை அர்க்கலா இல்லாத போது அர்கலாவினால் ஆன நன்மைகளை உடைத்தாயிருக்கும். ).
       இராசிச் சக்கரத்தில் உள்ள இலக்னம் மற்றும் ஆத்மகாரகனை செவ்வாயின் எதிர்மறையற்ற அர்க்கலாக்களைக் கொண்ட சூரியன் பார்க்கிறார். இலக்னம் மற்றும் ஆத்மகாரகனுக்கு 10 ஆம் இடமான மேஷம், சூரியனால் நேர் பார்வையாகவும், சனியால் கோணப் பார்வையாகவும் பார்க்கப்படுகிறது. சனியின் பார்வையால் நமக்கு புதன், சுக்கிரன், சூரியன், குரு மற்றும் கேது ஆகியோரின் எதிர்மறையற்ற அர்க்கலாக்கள் கிடைக்கின்றன. இவ்வாறான பல கிரகங்களின் நிரபாச அர்கலா அல்லது எதிர்பற்ற அர்க்கலாக்களின் தாக்கம் 10 ஆம் இடத்தின் மீது இருப்பதின் காரணமாக ஜாதகர் வாழ்க்கையில் மிக உயர்ந்த மற்றும் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுகிறார்.
       அடுத்ததாக, நாம் இலக்ன பதாவைப் பார்க்க வேண்டும். இங்கு இலக்னபதாவும் அதுவே. அதனால் அதற்கு பலன்களும் மேற்சொன்னதேயாகும். இவரது ஜாதகத்தில் இவர் மீது சூரியன் தனது அரசியல் தாக்கத்தையும், சந்திரன் உதவியுடன், சுக்கிரன் இவரைப் பிரதம மந்திரி அளவுக்கு உயர்த்தியது. சந்திரன் தனது உணர்ச்சிகரமான பார்வை மூலமாக தியாக குணமுள்ள தேசபக்தராக்கியது.. இவ்வாறாக ஜோதிடத்தின் வாயிலாக நாம் அவரிடம் உள்ள உணர்ச்சிகரமான தியாக குணத்தையும், சுக்கிரனால் பதவிக்கு உயர்ந்ததையும் மற்றும் சூரியனால் அவர் தீவிர அரசியல்வாதி என்பதையும் அறிந்தோமல்லவா ?

     

Friday, 13 March 2015

"கல்வி தரும் கலைமகள்-"



"கல்வி தரும் கலைமகள்-"






"கல்வி தரும் கலைமகள்-"--
"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறும்  பாவலன் உள்ளத் திருப்பாள் " ---- மகாகவி பாரதியார்

அன்பார்ந்த வலைதள பார்வையாளர்களே ! கல்வியாளர்களே அனைவருக்கும் கல்வி,கலைகளுக்கு அதிபதியான கலைமகள் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் ஸ்ரீ பாத கமலம் பணிந்து ,' கல்வியை பற்றி ஆய்வது தானே சிறப்பு எனவே கல்வி நிலையை பற்றி ஆய்வோமா ?


மேதைகளையும் , கணித வல்லுனர்களையும் , தர்க்கவாதிகளையும் ,பேச்சாளர்களையும் , மருத்துவர்களையும் , பொறியாளர்களையும் ,ஜோதிடர்களையும் , நடனம், நாடகம், நாட்டிய கலைஞர்களையும் உருவாக்கிடும் மூலகர்த்தா வித்யா காரகன் புதனே ஆவார்


"பாவங்களில் , கிரகங்களும் , ஜாதகரின் நிலையும் :"-

லக்னத்தில் - சந்திரன் இருக்க ஜாதகர் பக்தி , ஞானம் , ஆசாரமுடையவராகவும்
- புதன் இருக்க இனியவாக்கும் , சாத்திர மறிந்தவராகவும்,
- குரு இருக்க புத்தி கூர்மை , அறிஞன் , பண்டிதனாகவும்
- சனி இருக்க நினைவாற்றல் அற்றவராகவும் இருப்பர் .

இரண்டாமிடத்தில் சந்திரன் இருக்க நல்ல படிப்பும் ,

- புதன் இருக்க நல்வாக்கு கல்வியுடையவனாகவும் ,
- குரு இருக்க அறிவு கூர்மை யுடையவனாகவும் இருப்பர்.

மூன்றாமிடத்தில் புதன் இருக்க சிறந்த அறிவு உள்ளவனாகவும்

- குரு இருக்க கூர்மதி உடையவனாகவும்
- சனி இருக்க கல்வியிற் தடை , படிப்பில் மந்தகதி உடையவனாகவும் , சனிபலம் பெற - ஞானம் உண்டு .
- கேது இருக்க ஞானம் , வித்தை உடையவனாகவும் இருப்பர் .

ஐந்தில் சந்திரனிருக்க நற்புத்தியும் கல்வித்திறனும் உடையவனாகவும்,

- புதனிருக்க ஞானவிருத்தி , நற்கல்வியாளனாகவும் .

-குரு  இருக்க நற்புத்தி ,சாஸ்திர ஞானமுடையவனாகவும் இருப்பான் .


ஒன்பதில் புதனிருக்க பண்டிதனாகவும் அறிஞனாகவும் ,

- குருவிருக்க நல்லறி உடையோனாகவும் இருப்பான் .

பத்தில் புதனிருக்க ஞானியாகவும் ,

- கேது இருக்க விவேகமிக்கவனாகவும் இருப்பான் .

பனிரெண்டில் குரு இருக்க புத்திசாலியாகவும்

- கேது இருக்க ஞான முடையவனாகவும் இருப்பான் .

பாவகாதிபதிகள் மாறிநின்ற பலன்கள் :-

-- இலக்னாதிபதி பலம்பெற்று 2 இல் இருக்க வாக்குவன்மை கல்வி கேள்விகளின்      தேர்ச்சி பெற்றவராக ஜாதகர் திகழ்வார்.
இலக்னாதிபதி 4 இல் பலம் பெற்றிருக்க கல்வியில் உயர்ந்த நிலை அடைவார் .
இரண்டாமிடத்து அதிபதி இலக்னத்தில் இருக்க அறிவாளியாகவும். பட்டம் பெற்று உயர் பதவி அடைபவனாகவும் இருப்பார் .
இரண்டாம் அதிபதி மூன்றில் பல மற்று இருக்க கல்வி ஞானம் இல்லாதவனாகவும் . கல்வி கற்க சந்தர்பம் அடையாதவனாகவும் இருப்பான் .
இரண்டாம் அதிபதி பத்தில் பலமுடன் இருக்க கல்வியில் சிறந்தவனாகவும் ,சாஸ்திர ஆராய்ச்சி , வாதத்திறன் ,ஆசிரியர் ,ஆச்சாரியாராவும் திகழ்வான்.
மூன்றாம் அதிபதி இலக்னத்தில் பலம் பெற்று இருக்க சினிமா, நாடகம் , நாட்டியம், சங்கீதம் , என சகலகலா வல்லவனாக இருப்பான் .
 நான்காம் அதிபதி இலக்னத்திலிருக்க (பலமுடன்) கல்வி திறன் மிக்கவன் . ஐந்தாம் அதிபதி இலக்னத்தில் பலமுடன் இருக்க புத்தி , வித்தை , கல்வியிற் சிறந்தவனாகவும் இருப்பான் .
ஐந்தாம் அதிபதி 4 இல் இருக்க படித்தவர்களின் நட்பு கிடைக்கும்.
 ஐந்தாம் அதிபதி 5 இல் இருக்க ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் . ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க புத்தி அற்றவனாகவும் நினைவாற்றல் இல்லாதவனாகவும் இருப்பான் . ஐந்தாம் அதிபதி 9 இல் சிறந்த கல்வி , ஒளிமயமான எதிர்காலம் உண்டு .
பத்தாம் அதிபதி இலக்னத்தில் பலம் பெற்றிருக்க ஞானமிக்கவனாக இருப்பான் .
பத்தாம் அதிபதி 2 இல் (பலம்) வாக்குவன்மை , பேசும் திறன் இருக்கும் .
பத்தாம் அதிபதி 5 இல் (பலமுடன்) சாத்திரம் அறிந்த பண்டிதன் ஆவான் .
பன்னிரெண்டாம் அதிபதி 2 இல் இருக்க கல்வியில் ஆர்வமும் ஊக்கமும் இருக்காது .

கிரக இணைவு பலன்கள் :

கல்வி பற்றி அறிய 2,4,5,11 ஆம் பாவநிலைகள் ஆராயப்பட வேண்டும் . இத்துடன் 8 , 12 சம்பந்தம் பெற கல்வி சிறக்காது / இருக்காது . 2 ஆம் பாவம்-ஆரம்பக்கல்வி
4 ,9 ,11 தேர்வுகளில் வெற்றி நான்காம் அதிபதி 4 ,9 ,11ஆ ம் பாவத் தொடர்பு = உயர்கல்வி தொழிற்கல்வி அமையும் . சந்திரன் + செவ்வாய் அல்லது சூரியன் + செவ்வாய் - இராகு கேது தொடர்பு .
4 ,9 ,11 மற்றும் சூரியன் தொடர்பு (கன்னி , சிம்மம் , விருச்சிகம் , மீனம் இலக்னம் ) - மருத்துவ கல்வி   குரு இணைய = பொது மருத்துவர்
புதன் இணைய = நரம்பியல் நிபுணர்
செவ்வாய் இணைய = அறுவை சிகிச்சை நிபுணர்
சனி இணைய = எலும்பு முறிவு / பல் நிபுணர்
சுக்கிரன் இணைய = கண் மருத்துவர் சிறுநீரகம்
சுக்கிரன் + சந்திரன் = ENT நிபுணர்
சுக்கிரன் + இராகு = எக்ஸ்ரே ஸ்கேன் நிபுணர்
குரு + செவ்வாய் + சூரியன் = ஆயுர் வேத மருத்துவர்
குரு + சூரியன் + சனி = ஹோமியோ மருத்துவர்
சூரியன் + குரு = சித்த வைத்தியர்
சூரியன் + புதன் + குரு = தத்துவ ஞானி
சூரியன் + புதன் = விஞ்ஞானி , நிபுணத்துவம்
10 ஆம் இடத்துடன் புதன் தொடர்பு = எழுத்தாளர் ஆவார்
10 ஆம் இடத்துடன் சுக்கிரன் தொடர்பு = கவிஞர் ஆவார்
10 ஆம் இடத்துடன் குரு தொடர்பு = தத்துவ ஞானி ஆவார் .
6,8,12 இல் இராகு இருந்து இராகு திசையில் படிப்பே வராது .
சந்திரன் + இராகு = நல்ல படிப்பு வரும் .
புதன் + செவ்வாய் = படிப்பில் தடை ஏற்படும் .
2,5,11 சம்பந்தம் - முதுநிலை பட்டம் .
2 மிடம் - பள்ளிபருவம்
4 மிடம் - இளங்கலை , பட்டயப்படிப்பை குறிக்கும் .
2,9,11 - பி , எச் , டி
2,11 - ஆராய்ச்சிப் படிப்பை குறிக்கும்

எந்த நிலைக்கு , என்ன படிப்பு ஏற்படும் ?

1 . மேஷம் , விருச்சிகம் , செவ்வாய் , சந்திரன் ஆகியோர் பலம் பெற்றிருக்க மின்னியலிலும்
2 . மிதுனமும் , செவ்வாயும் பலம் பெற இலக்கியம் மற்றும் தகவல் தொடர்பு துறையிலும்
3 . புதன் , குரு , மிதுனம் , விருச்சிகம் பலம் பெற வானொலி கம்பி இல்லா தகவல் தொடர்பும்
4 . காற்று ராசிகளான மிதுனம் , துலாம் , கும்பம் , சூரியன் , குரு , புதன் , ஏரோ நாட்டிக்கல் , ஏவியேஷன் துறை
5 . மீனம் , தனுசு குரு + சந்திரன் - சுக்கிரன் தொடர்பு = கடல் வழிக்கான துறை வாகனக்கல்வி
மீனம் + தனுசு + குரு + சந்திரன் - செவ்வாய் தொடர்பு = கடற்படை
மீனம் + தனுசு + குரு + சந்திரன் - புதன் தொடர்பு = வணிகம் மற்றும் பொறியியல்
6 . புதன் + குரு - பத்திரிகைத் துறை ( ஜர்னலிசம் )
7 . மேஷம் , செவ்வாய் குரு + சுக்கிரன் = ஆட்டோ மொபைல்
8 . சுக்கிரன் + சூரியன் - குரு தொடர்பு = சினிமாத்துறை
9 . பலம் மிக்க சுக்கிரன் + புதன் + சந்திரன் - சனி தொடர்பு = பொறியியற்கல்வி
10 . சூரியன் + புதன் + குரு தொடர்பு = பட்டயப் படிப்பு , ஆசிரியர் கல்வி
11 . சூரியன் + சனி + புதன் + செவ்வாய் அல்லது ராகு தொடர்பு - சட்டப்படிப்பு
13 . சூரியன் + புதன் + சுக்கிரன் = வணிக நிர்வாகம் (MBA) , கணினியியல் (PGDCA)
- புதன் வலுவுடன் இருந்தாலன்றி பட்டப் படிப்பு சாத்தியமாகாது .
- புதன் வலுவுடன் இருந்தாலும் , 2 இல் தீய கிரகம் இடம் பெற படிப்பில் தடை ஏற்படும் .
- புதன் பலத்துடன் இருந்தாலும் , இலக்னாதிபதி பலமற்று 11 இல் இருக்க பட்டப் படிப்பு கேள்வி குறியாகும் . ஆயினும் தொழிற் கல்வி கை கொடுக்கும்
- ரிஷபம் , துலாம் , மகரத்திற்கு புதன் நலந்தரும் கிரகமாகும் .
- மிதுனம் , கன்னிக்கு - நன்மை , தீமை கலந்து தரும் கிரகமாகும் .
- கடகம் , மீனம் , தனுசு, விருச்சிகம் , சிம்மம் , மேஷம் ஆகிய ராசிகளில் தீங்கு செய்தாலும் , 2 ஆம் அதிபதி பலம் பெற நற்கல்வி அமையும் .

"கைரேகை சாஸ்திரம்" :-

புதன் மேடு வனமாக இருக்க , கல்வியில் சிறந்தவராக இருப்பார் . புதன் மேட்டில் கீழ்க்கண்ட குறிகள் இருக்க ( முக்கோணக் குறி ) - மேடைப் பேச்சாளராகவும் , சூரிய மேட்டில் ( சதுரக் குறி ) இருக்க கலைத்துறையில் புகழ் பெறுவார் . சந்திர மேட்டில் ( வட்டக் குறி ) இருக்க இலக்கியவாதியாவார் .
கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து , புதன் மேடு நோக்கி சிறு சிறு ரேகைகள் இருக்க ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபாடு ஏற்படும் . வாஸ்து :
அறிவை அபரிமிதமாக அளித்து ஞானத்தை பெருக்குபவன் ' ஈசானன் ' ஆவான் .

"நாடி ஜோதிடம்" :-

மேஷத்தில் புதன் :-
(புதன் + செவ்வாய்) , விவசாயம் , கல்வியில் தடை , தொழிற் கல்வி , மருத்துவ அறுவை சிகிச்சை
ரிஷப புதன் :-
(புதன் + சுக்கிரன் ) வணிகவியல் , கணிதம் , சட்டம் , பொருளாதாரம் , ஆகிய கல்விகளும் , கலைத்துறை , ஈடுபாடும் ஏற்படும் .
மிதுன புதன் :-
கணிப்பொறி , கணக்கியல் , வணிகவியல் படிப்புகளும் , எழுத்தாற்றல் , பேச்சாற்றல் , பத்திரிக்கைத்துறை , தகவல் தொடர்பு மற்றும் சிறந்த கல்வியும் உண்டு .
கடக புதன் :-
கலை , இலக்கியம் , மொழிக்கல்வி அமையும் (புதன் + சந்திரன் )
சிம்ம புதன் :-
அறுவை சிகிச்சை ( புதன் + சூரியன் ) பொறியியல் , சித்தா , சமூகவியல் , அரசியல் , தத்துவம் , சம்பந்தப்பட்ட கல்வி சிறக்கும் .
கன்னி புதன் :-
கணக்கியல் , வணிகவியல் , அனைத்து துறைகளிலும் கல்வி சிறக்கும் .
துலா புதன் :-
வணிகவியல் , அழகுக்கலை , சட்டம் , சங்கீதம் , கணக்கியல் , கலைக்கல்வி (சுக்கிரன் + புதன்) .
விருச்சிக புதன் :-
(செவ்வாய் + புதன் ) இயந்திர மற்றும் உலோக சம்பந்தமான கல்வி விவகாரம் , அறுவை மருத்துவக் கல்வி ஏற்படும் .
தனுசு புதன் :-
(குரு + புதன்) தத்துவம் , பொருளாதாரம் , சட்டம் , கணக்கியல்
மகர புதன் :-
(சனி + புதன் ) சுரங்கவியல் , கனிமங்கள் , சம்பந்தமான கல்வி .
கும்ப புதன் :-
(சனி + புதன் ) மனவியல் , தத்துவம் , பொறியியல் , மருத்துவக் கல்வி சிறக்கும் .
மீன புதன் :-
(குரு + புதன் ) சாஸ்திரம் , வணிகவியல் , பொருளாதாரக் கல்வி தேர்ச்சி தரும் .

                                               

                                             புத்த பகவான் ஸ்தோத்திரம்


-" ப்ரயங்கி கலிகா ஸ்யாமம் ரூபேணா பிரதிமம் புதம் ! சௌம்ய சௌம்ய குணோ பேதம்  தம்புதம் ப்ரணமாம் யஹம் !! ( கல்வி ஞானம் பெருகும் )"


                                                                புத காயத்ரி


"ஓம் கஜத் வஜாய வித் மஹே சுக ஹஸ்தாய தீமஹி ! தன்னோ புத பிரச் சோதயாத் !!"

கல்வி சிறக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் :-
                                                  

                                                 ஹய்கீரிவர் ஸதோத்திரம்     

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் !]
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே !!


எனவே , அன்பர்களே ! கல்விக்கான பலநிலைகளை , கலைமகள் அருளால் ஆய்வு செய்தோம் . பயனுள்ளதாக அமைந்திருக்கும் என எண்ணி நிறைவு செய்கிறேன்