Search This Blog

Sunday, 15 March 2015

நாடி அம்சம் -34 .-- கரிகராம்சம்

நாடி அம்சம் -34 .-- கரிகராம்சம்

       சர இராசியில் 6°36’ முதல் 6°48‘ வரையும், ஸ்திர இராசியில் 21° 36’ முதல் 21° 48’ வரையும் மற்றும் உபய இராசியில் 23° 12’ முதல் 23° 24’ வரை உள்ளதே கரிகராம்சம் ஆகும். துருவ நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;-   இந்த அம்சத்தின் முதல் பகுதியில் பிறந்த ஜாதகர், சூத்திரர். தடித்த உருவமுடையவர். புது நிறம் உடையவர். மிகப் பெரிய மாகாணத்தை ஆட்சி புரிபவர். எட்டுத் திக்கும் இவரின் புகழ் பரவும். இனிய பேச்சு உடையவர். மெதுவாக நடப்பவர். அனைத்தையும் கற்ற அறிவாளி. பல மொழிகளை அறிந்தவர். நடுவராக இருக்கும் அளவுக்குக் கலைகளில் தேர்ந்தவர். சட்டத்தைப் பாதுகாப்பவர், ஒழுக்கத்தை பேணுபவர். நியாயவான். அனேக வேலையாட்களை உடையவர். உண்மையானவர். இரு மனைவிகளை உடையவர். இவரது தந்தை நல்ல குணவான். இளமையிலேயே இவருக்கு பட்டாபிஷேகம் நடக்கும். நீதி தவறாது, நேர்மையான நல்ஆட்சி புரிபவர். மிலேச்சர்களால் ஆளப்படும் நாடுகளில் இவரின் புகழ் பரவும். மிக்க சந்தோஷமான வாழ்க்கை வாழ்வார். இவருக்கு 25 வயதாகும் போது, மிலேச ஆட்சியாளர் இறப்பார். இவருக்கு அந்த மிலேசர் ஆட்சி செய்த நாடும் கிடைக்கும். இவர் விலைமாதருடன் நெருக்கம் கொள்வார். இவருடைய 25 வது வயதில் ஆண் வாரிசு உருவாகும். வாழ்க்கை ழுழுவதும் நல்ல அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார். 35 வது வயதில், புனித பயணமாக இராமேஸ்வரம் செல்வார். 37 வது வயதில் மற்றுமொரு ஆண் மகவுக்குத் தந்தை ஆவார். 40 வது வயதில் இவரின் மகளுக்குத் திருமணமாகும். தாய் நோய்வாய்படுவார். இவரின் 42 வது வயதில் இவரது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும். 45 வது வயதில் மனைவி மரணமடைவாள். மற்றவள் நீண்ட ஆயுளுடன் வாழ்வாள். தனது 68 வது வயதில் ஜாதகர் புற்று நோயால் ஜாதகர் மரணமடைவார்.

       கரிகராம்சத்தின் இரண்டாவது பகுதியில் பிறந்த ஜாதகர், சமுத்திரக் கரையோரம் உள்ள, சுமாரான வீட்டில், மிலேசரான தந்தைக்கு மகனாகப் பிறப்பார். புது நிறமாக இருப்பார். மிலேசர்களின் பாஷையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார். தந்தை மிகப் பெரிய பணக்காரராக இருப்பார். கப்பல் கட்டும் வணிகத்தில் ஈடுபடுவார். ஜாதகர் மதுவுக்கு அடிமையாவதோடு மட்டுமல்லாமல், மாமிசத்திற்கும், பல பெண்களுக்கும் அடிமையாவார். உணர்சிமிக்கவர் ஆனாலும், நல்ல குணம் உடையவர். தினமும் பறவைகளைக் கொன்று, தின்று சுவைத்து மகிழ்வார். அநேக மக்களைப் பாதுகாப்பார். வணிகம் மூலமாக 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார். தொலை தூர இடங்களுக்கும் வணிகம் செய்யச் செல்வார். மூன்று வாகனங்களை உடைத்தாயிருப்பார். 18 வயதில் மணம் முடித்து, 23 வது வயதில் முதல் ஆண் குழந்தை பிறக்கும். மூன்று மகன்களும், நான்கு மகள்களும், நீண்ட ஆயுளுடன் வாழ்வர். இவர் குழந்தையாக இருக்கும்போதே, தாயை இழப்பார். 25 வது வயதில் தந்தையையும் இழப்பார். 35 வயதுக்குப் பிறகு, இவரது பெரும்பாலான முன்னோர்களின் சொத்துக்கள் அழியும். 20,000 நிஷ்‌காஸ் வரையான பணத்தை இழப்பார்.  40 வது வயதில் மறுபடியும் அதிக பணம் சம்பாதித்து, அனேக சொத்துக்களைச் சேர்ப்பார். 71 வது வயதில் நோயுற்று மரணத்தைத் தழுவுவார். மறுபிறவியில் பெரியதோர் நகரில் வைசியராகப்  பிறந்து அளவற்ற செல்வத்தைச் சேர்ப்பார்.

No comments:

Post a Comment