Search This Blog

Saturday, 14 March 2015

ஜெய்மினியும், தொழில் நிலையும்.



ஜெய்மினியும், தொழில் நிலையும்.


        ஒரு ஜாதகரின் தொழில் நிலையைக் காண்பது ஒரு ஜோதிடரின் முக்கியப் பணிகளில் ஒன்றாகிறது. ஜனன ஜாதகத்தில் பொதுவாக 10 ஆம் இடம் தொழில் பற்றிய நிலை அறியவேண்டிய பாவம் என்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. பாரம்பரிய ஜோதிடத்தை விட ஜெய்மினி சூத்திரத்தில் எங்ஙனம் தொழில் நிலையைக் காண்பது என இக் கட்டுரையின் மூலமாகக் காண்போம்.

1.   பார்வைகள் : ஜெய்மினி முறையில் ஓர் இராசி அதற்கு நேர் எதிர் இராசியைப் பார்க்கிறது, மற்றும் இடப்புறமும், வலப்புறம் உள்ள கோண இராசியையும் பார்க்கிறது. உதாரணமாக, மேஷராசியானது, தனது எதிர் இராசியான விருச்சிகத்தையும், இடப்புறம் சிம்மராசியையும், வலதுபுறம் கும்பராசியையும் பார்க்கிறது. ( சரம், ஸ்திரத்தைப் பார்க்கும் ). அடுத்து, ரிஷபம், துலாத்தையும், ( ஸ்திரம், சரத்தைப் பார்க்கும் ) கோணங்களில் கடகம் மற்றும் மகரத்தையும் பார்க்கிறது. அதேபோல், மூலையிலுள்ள இராசிகள் ( உபயராசிகள் உபயத்தைப் பார்க்கும் ) மற்ற மூன்று மூலையிலுள்ள இராசிகளைப் பார்க்கின்றன. மீனராசி, கன்னியையும், மிதுனத்தையும் மற்றும் தனுசுவையும் கோணப் பார்வையாகப் பார்க்கின்றன.

2.   ஓர் இராசியானது எதிர்மறை அர்கலா இல்லாத போது, அர்கலாவினாலான நன்மைகளை உடைத்தாயிருக்கும்.

) ஓர் இராசி ஒரு கிரகத்தால் பார்க்கப்படும் போது அந்த கிரகத்திற்கு 2,              4 அல்லது 11 இல் கிரகங்கள் இருந்தால் பார்க்கப்படும் இந்த               இராசியானது  இந்த 2, 4 அல்லது 11 இல் உள்ள கிரகங்களின்             அர்கலாக்களின் முழுப் பலன்களையும் அடைகிறது. இதற்கு 12, 10           அல்லது 3 ஆம் இடங்களில் கிரகங்கள் இருந்தால் அது எதிர்               மறை அர்கலாவாகும்.


) பார்க்கும் கிரகத்துக்கு 3 இல் ஒரு கிரகம் இருந்தாலும் எதிர்மறை           அர்கலா இருக்காது.

) மேற்கண்ட இடங்களில், இராகு, கேதுக்கள் இருந்தால் அர்கலாவை           அளிக்கும்.

) பார்க்கும் கிரகத்திற்கு 5 இல் இருக்கும் கிரகமும் அர்கலாவைத் தரும்
       9 ஆம் இடத்திலுள்ள கிரகம் எதிர்மறை அர்க்காலாவைத் தரும்.
) பார்க்கும் கிரகத்திற்கு 9 இல் இராகு அல்லது கேது இருக்க 5 ஆம்           இடத்திற்கு எதிர்மறை அர்க்கலாவைத் தரும்.

பார்க்கும் கிரகத்திற்கு 6, 7 மற்றும் 8 ஆம் இடத்திலுள்ள கிரகங்கள் அர்க்கலாவைத் தருவதில்லை.

       ஜெய்மினி மகரிஷியின் சூத்திரத்தைப் பொருத்தவரை, மிக அதிக பாகையிலுள்ள கிரகமேஆத்ம காரகர்ஆகிறார். அவரே ஜாதகருக்கு மிக சக்திமிக்க கிரகமாக அமைகிறார்அவரே ஜாதகரைக் கீழ்நிலையில் இருந்து, மிக உயர்ந்த நிலைக்கு, ஒரு கௌரவமான நிலைக்கு உயர்த்துகிறார்நவாம்சத்தில் ஆத்ம காரகன் இருக்கும் நிலையே காரகாம்சம் என அழைக்கப்படுகிறது. நவாம்சத்தில் ஆத்மகாரகன் நிலையே  ஜாதகருக்குப் பொருத்தமான தொழில் எது எனக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மகாபாரதத்தை எழுதிய வேதவியாசரின் சீடரே ஜெய்மினி மகரிஷியாவார். எனவே, அக்காலத்தில் கிரகங்களுக்கு அவர் குறிப்பிட்ட தொழில்கள் தற்காலத்திற்குப் பொருந்துவனவாக இல்லை.

       சூரியன் : கிரக சாம்ராஜ்யத்தின் அரசனென்றும், அவனுக்கு அரசியலையும், அரசாங்க வேலைகளையும் அளித்தார்.

       சந்திரனையும், சுக்கிரனையும் மந்திரிகளாக்கி அறிவு பூர்வமான வேலைகளைக் கொடுத்தார். ( சில ரிஷிகள் சந்திரனை அரசி எனக் குறிப்பிடுகின்றனர் ) சுக்கிரனை அரசுப் பணியாளர்களுக்கு இணையாகக் குறிப்பிடுகிறார்.

       செவ்வாய் : தர்க்க சாஸ்திரத்திற்கு செவ்வாயையும், தத்துவத்திற்குப் புதனையும் குறிப்பிடுகிறார். எனவே, இவர்கள் விஞ்ஞானிகளுக்கும், தத்துவஞானிகளுக்கும் இணையாகிறார்கள். செவ்வாயானவர் படைத்தளபதியாகவும் சித்தரிக்கப்படுகிறார். சீருடைப் பணியாளர்களுக்கும், உலோகங்கள், தீ மற்றும் மின்சாரத்திற்கும் செவ்வாயே பொறுப்பு ஏற்கிறார்.

       புதன் : இளவரசர் ஆவார். இளமையின் வேகங்கொண்ட புதன், வணிகம், நேசவு, சிற்பம், ஓவியம் போன்ற கலைஞர்களை, சட்ட நிபுணர்களைக் குறிக்கிறது. மீமாம்ச தத்துவம் ஜெய்மினி முனிவராலேயே கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, காரகாம்சத்துக்கு 5 மற்றும் 9 இல் எதிர்பில்லா அல்லது அசுப பார்வையற்ற புதனின் நிலை ஜாதகரை ஒரு தத்துவவாதி ஆக்கிவிடுகிறது.

       குரு : தேவர்களின் பெருமைமிகு பேராசிரியர்தேவகுருஆசிரியத் தொழிலுக்கும், மதபோதனைகள் செய்பவராகவும் குறிப்பிடுகிறார். மிகப்பெரிய கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், போதகர்கள் ஆகிய அனைவரும் குருவின் தாக்கத்தைக் கொண்டவர்கள் ஆகிறார்கள். மிகவும் புகழ் மிக்க விஞ்ஞானிகள் குரு, புதன் மற்றும் செவ்வாய் ஆகியோரின் இணைந்த தாக்கத்தைப் பெற்றவர்கள் ஆகிறார்கள்.

       இவர்களுடனான சனியின் இணைவு அவர்களை மிகவும் கொண்டாடப்பட     ( celebrity ) வேண்டியவர்களாக ஆக்கிவிடுகிறது. காரகாம்சத்தில் சனி இருக்க அந்த ஜாதகர் பொதுவான மற்றும் மக்களிடையே மிகவும் பிரபலமான தொழிலைச் செய்தோ அல்லது அந்தத் தொழிலாயே புகழ் பெறுபவராகவோ ஆகி, அதையே தங்கள் ஜீவன உபாயமாகக் கொள்கின்றனர்.

       இராகு : காரகாம்சத்துக்கு 4 இல் உள்ள இராகு பொறியாளர்களையும், தீவிரமான நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர்களையும், இராணுவத்தினர், காவல்காரர், மெயக்காப்பாளர் மற்றும் திருடர்கள் (அசுப தாக்கம் பெற ) ஆகியோரைக் குறிக்கிறது.

       கேது : காரகாம்சத்திலுள்ள கேது ஜாதகரை ஒர் ஆசாரம் மிக்க துறவியாக, ஞானியாக மாற்றிவிடுகிறது. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி ஓட்டுபவர், திருடர்களையும் குறிக்கிறது.

       ஜாதகருக்குத் தகுந்த தொழிலைக் கண்டறிவதில் கீழ்க்கண்ட காரணிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

1.   () காரகாம்சம் அல்லது ஆத்மகாரகன் நவாம்சத்திலுள்ள நிலை.

() நவாம்சத்தில் காரகாம்சத்திற்கு பத்தாமிடத்து நிலை.
   2.      ஜனன ஜாதகத்தில் இலக்னம் அல்லது ஆத்மகாரகனுக்குப் பத்தாமிடம்.
   3.  () ஜனன ஜாதகத்தில் இலக்ன பதா மற்றும் இலக்ன பதாவுக்கு 10 ஆம்                   இடம்.

      () ஜனன ஜாதகத்தில் பத்தாம் பதா.

       முதலில் இந்த இடங்களில் உள்ள கிரகங்களின் நிலைகள் மற்றும் இந்த இராசியைப் பார்க்கும் கிரகங்கள் ஆகியவற்றைப் பார்ப்பது அவசியமாகிறது. அடுத்து அர்க்கலாவைப் பார்க்க வேண்டும். இந்த இடங்களில் ஏதாவது ஓரிடத்தை எதிர்மறையற்ற அர்க்கலாக்களைக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் பார்வையும் அதன் பிறகு, அந்த பார்க்கும் கிரகங்களோடு இணைந்துள்ள கிரகங்கள் மற்றும் அர்க்கலாக்கள் ஆகிய இவையே ஜாதகரின் தொழில் நிலையைக் காணும் காரணியாகிறது.

       உதாரண ஜாதகமாக நமக்கு மிகவும் பரிச்சயமான ஜாதகமான பண்டிட்        “ 

ஜவஹர் லால் நேருவின் ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம்.

       இவரின் ஜாதகத்தில் சந்திரன் ஆத்ம காரகன். காரகாம்சம் தனுசு ஆகும். நவாம்சத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரும் காரகாம்சத்தில் இணைவு. இது அவரின் இலக்கியத் திறன் மற்றும் அரசியல் பிரவேசத்துக்குக் காரணமானது. “ஜெய்மினிதனது சூத்திரத்தில் காரகாம்சத்தில் உள்ள சந்திரன், சுக்கிரன் ஜாதகரின் இலக்கியத் திறனை மேம்படுத்துகிறது எனக் குறிப்பிடுகிறார்.




இராகு

புத
செவ்





இராசி
லக்//,சந்
.கா
லக்///
இராகு


நவாம்சம்
சூரி
சனி

சனி

குரு
கேது
குரு
கேது
சூரி
புத
சுக்
செவ்
சந், .கா.
சுக்




பராசரர்”, காரகாம்சத்திலுள்ள சந்திரன், சுக்கிரனால் பார்க்கப்படும் போது ஜாதகர் செல்வநிலை மிக்க மற்றும் ஆடம்பர நிலையில், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பெடுத்து, இலக்கிய வாதியாகவும், அறிவு ஜீவியாகவும் உருவெடுப்பார் எனக் குறிப்பிடுகிறார். மேலும், சுக்கிரனின் இந்த நிலை நீண்ட ஆயுளையும், அரசியலில் மிக உயரிய பதவியையும் அளித்தது.  .காரகாம்சமானது செவ்வாய், சூரியன் மற்றும் சனியின் அதிக அர்க்கலாக்களால் நன்மையடைகின்ற புதனால் பார்க்கப்படுகிறது. செவ்வாயின் அர்க்கலாவானது இராகுவால் எதிர்க்கப்படுகிறது. ஆனால், சூரியன் மற்றும் சனிக்கு எதிர்மறை அர்க்கலாக்கள் இல்லை. காரகாம்ச இராசியின் மீதான சூரியன் மற்றும் சனியின் எதிர்மறையற்ற அர்க்கலாக்கள் காரணமாக அந்த இராசியில் உள்ள சந்திரன் மற்றும் சுக்கிரனின் நிலையை மேம்படுத்துகிறது.
       காரகாம்சத்திற்கு 10 ஆம் இடமான கன்னி இராசி, புதன், சுக்கிரன், சந்திரனால் பார்க்கப்படுகிறது. சூரியன் மற்றும் சனியின் எதிர்மறையான அர்க்கலா அல்லாத புதனின் பார்வை மற்றும் இராகு, புதனின் எதிர்பில்லாத அர்க்கலாவைக் கொண்ட சந்திரனின், சுக்கிரனின் பார்வை, இவ்வாறான சுக்கிரன், சந்திரன் மற்றும் புதனின் கலவையான தாக்கத்தால் தொழில் அமைந்தது ( விதி-2  ஓர் இராசியானது எதிர்மறை அர்க்கலா இல்லாத போது அர்கலாவினால் ஆன நன்மைகளை உடைத்தாயிருக்கும். ).
       இராசிச் சக்கரத்தில் உள்ள இலக்னம் மற்றும் ஆத்மகாரகனை செவ்வாயின் எதிர்மறையற்ற அர்க்கலாக்களைக் கொண்ட சூரியன் பார்க்கிறார். இலக்னம் மற்றும் ஆத்மகாரகனுக்கு 10 ஆம் இடமான மேஷம், சூரியனால் நேர் பார்வையாகவும், சனியால் கோணப் பார்வையாகவும் பார்க்கப்படுகிறது. சனியின் பார்வையால் நமக்கு புதன், சுக்கிரன், சூரியன், குரு மற்றும் கேது ஆகியோரின் எதிர்மறையற்ற அர்க்கலாக்கள் கிடைக்கின்றன. இவ்வாறான பல கிரகங்களின் நிரபாச அர்கலா அல்லது எதிர்பற்ற அர்க்கலாக்களின் தாக்கம் 10 ஆம் இடத்தின் மீது இருப்பதின் காரணமாக ஜாதகர் வாழ்க்கையில் மிக உயர்ந்த மற்றும் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுகிறார்.
       அடுத்ததாக, நாம் இலக்ன பதாவைப் பார்க்க வேண்டும். இங்கு இலக்னபதாவும் அதுவே. அதனால் அதற்கு பலன்களும் மேற்சொன்னதேயாகும். இவரது ஜாதகத்தில் இவர் மீது சூரியன் தனது அரசியல் தாக்கத்தையும், சந்திரன் உதவியுடன், சுக்கிரன் இவரைப் பிரதம மந்திரி அளவுக்கு உயர்த்தியது. சந்திரன் தனது உணர்ச்சிகரமான பார்வை மூலமாக தியாக குணமுள்ள தேசபக்தராக்கியது.. இவ்வாறாக ஜோதிடத்தின் வாயிலாக நாம் அவரிடம் உள்ள உணர்ச்சிகரமான தியாக குணத்தையும், சுக்கிரனால் பதவிக்கு உயர்ந்ததையும் மற்றும் சூரியனால் அவர் தீவிர அரசியல்வாதி என்பதையும் அறிந்தோமல்லவா ?

     

No comments:

Post a Comment