உ
ஓம்
ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.
மன்மத
வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
மேஷம் முதல் கன்னி வரை
2015 – 2016
மன்மத வருடத்தில் 12 இராசி அன்பர்களுக்கும் நல்லதே
நடக்க, ‘ஜோதிடவாசலின்’ இனிய
மன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் பல.
மன்மத வருடத்தில் மும்மாரி
பொழிந்து, நாடு செழித்து
மக்கள் நலம் பெறுவர். நாட்டின், மக்களின்
பொருளாதார நிலை உயரும். மக்களுக்குத் தேவையான
அனைத்துப் பொருட்களும் குறைவின்றிக் கிடைக்கும். நாட்டின் வடகிழக்குப் பகுதியில் போர் மேகங்கள் சூழலாம். தென் பகுதிகளில்
மிகுந்த காற்று வீசி அழிவுகள் வரலாம். மக்களின் ஆரோக்கியம்
மேம்பாடு அடையும். அரசியல்வாதிகளுக்கு ஒருவித பயவுணர்வும், பெண்களுக்குத் தீமைகளும் ஏற்படும். வெள்ளி விலை
குறையும். அரசியல் குழப்பங்கள்
நிலவும்.
வெப்ப
சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். மக்களிடம் பக்தி மார்க்க ஈடுபாடு அதிகரிக்கும். நாட்டில் லஞ்ச லாவண்யம் பெருகும்.
கலைஞர்களுக்கு
முன்னேற்றமான வருடம் ஆகும்.
கிரக சஞ்சார நிலைகள்.
கேது
|
லக்///சூரி,
செவ்
புதன்
|
சுக்
|
|
|
14-04-2015
சித்திரை – 01
செவ்வாய்.
ப.மணி.12-33.
கும்ப-சந்
|
குரு(வ)
|
|
|
|
||
|
சனி
|
|
இராகு
|
முக்கிய
கிரக மாற்றங்கள்.
05
/ 07 / 2015 –
சிம்ம
இராசிக்கு குருப் பெயர்ச்சி ஆகிறார்.
08 / 01 / 2016 – இராகு சிம்ம இராசிக்கும், கேது கும்பத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
தைரிய
காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு
மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் – ஆனி மாதத்தில் தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விழங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் உருண்டோடிடும்
பணம் காசு எனும் உருவமான பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன்
போல் பலவிதத்திலும், உலகமெங்கும் உங்கள் புகழ்
ஒளி பரவும். புரட்டாசி மாதத்தில்
வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில்
துறை மூலமாக எளிதாகக் கிடைக்கும். இதுநாள் வரை இருந்து வந்த நோய்கள் நீங்கி, இருந்த இடம்
தெரியாமல் போகும். கடன்களும் கட்டுக்குள்
இருக்கும். அரசுத் துறையால்
ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக
அரசில் புதிய வேலை கிடைக்கும். தை மாதத்தில் தந்தையுடனான உறவில் விரிசல்கள் விழலாம். மாசி மாதத்தில்
தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத இலாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து அரசின் கௌரவம் பெறுவீர்கள்.
செவ்வாய்
- ஆனி மாதத்தில் அனைத்துக்
காரியங்களிலும் வெற்றி கிட்டும். புதிய
ஆடைகள் மற்றும் ஆபரண சேர்க்கையும் ஏற்படும். உடன்பிறப்புக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். வீடு,
மனை போன்ற புதிய சொத்துக்கள் வாங்கலாம். அதற்குப் பின்
வரும் காலங்களில் வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும். மகிழ்ச்சியும், கோலாகலமும்
பல்கிப் பெருகும். தனலாபம் அதிகரிக்கும்.
புதன் – புரட்டாசி மாதத்தில்
பலவகையிலும் தனவரவுகள்
அதிகரிக்கும். மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கார்த்திகை, மாசி, பங்குனி மாதங்களில்
வீட்டில் சுப காரியங்கள் நடந்து மகிழ்ச்சியும், செலவும் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் கௌரவம், புகழ் கூடும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி
ஆகியவைகளும் ஏற்படும்.
சுக்கிரன் – புரட்டாசி, ஐப்பசி,
மாசி ஆகிய மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில்
தாய், காதலி, மனைவி, சகோதரி போன்ற நெருங்கிய பெண் உறவுகளால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான
ஆடம்பர சாதனங்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். சுற்றுலா, புனித யாத்திரைகள்
போன்ற வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமையும்.
நெருங்கிய
உறவினர் வகையில் சுபகாரியங்கள் நடக்கும். தர்ம காரியங்கள்
தாராளமாகச் செய்வீர்கள். வியாபாரம் மற்றும் செய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும்.
குரு – ஆனி 20 இல்
5 ஆம் இடத்திற்கு மாறும் குரு, சனியின் பார்வை
பெறுவதால் சுபகாரியங்களில் தடை ஏற்பட்டு பின் சரியாகும். திருமணம்
ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புதிய தொடர்புகள்
மகிழ்ச்சி தரும். அரசு வேலை
கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு,
மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம்.
சனி – மன்மத வருடத்தில் தங்கள் இராசிக்கு 3, 6 மற்றும் 11 ஆம் இடங்களிலிருந்து சனி பகவான் நன்மை தரவில்லை.
அட்டமச்
சனியாக உலாவருவதால் காரியத்தடைகளும், தாமதங்களும் இருக்குமாதலால் கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை
வணங்கி, சனிக்கிழமை தோறும்
சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும். திருநள்ளாறு சென்றுவரவும்
தீமைகள் குறையும்.
ஆனி மாதம் 20 ஆம் தேதியன்று இராசிக்கு ஏற்படும்.
குருவின்
பார்வையால் படிப்படியாகத் துன்பங்கள் குறையும். அதற்கு முன் தொழில் துறையில் இருப்பவர்களுக்குச் சிக்கல்கள் எழலாம். மொத்தத்தில் இவ்வருடம் 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2
பாதங்கள் )
களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு
மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன்
-- ஆடி மாதத்தில் பணம் காசு சேர்ந்து செல்வ நிலை உயரும். நினைத்த காரியங்கள்
நினைத்தபடி தடையின்றி நிறைவேறும். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. புத்திர பாக்கியம்
ஏற்படும். விழாக்களுக்கு மற்றும்
விருந்துகளுக்கு சென்று மகிழும் நிலை ஏற்படும். ஐப்பசி மாதத்தில்
ஆரோக்கியம் பெருகும். நோயற்ற வாழ்வு
மலரும். ஞானம் மேலிடும். மாசி மாதத்தில் தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும், அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுகள் ஏற்படும். புதிய உயர்ரக
வாகன சுகங்கள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் அரசியல் பிரபலங்களின் ஆதரவுகிட்டும். பொது ஜன சேவைகளால் மதிப்பு
மரியாதை கூடும். புகழும் ஓங்கும்.
செவ்வாய்
;
அரசுத் துறையால் இலாபம் ஏற்படும். வீட்டில் பயிர், மனை, பால்
மாடுகள் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் பெருகும். நவீன வீட்டு
உபயோக சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதாவது ஒரு
வகையில் ஆண்டு முழுவதும் பணம்
சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். நவநாகரிக ஆடை அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை எழமால் இருக்க கோபத்தைக் குறைக்கவும்.
புதன் --
ஐப்பசி, மார்கழி, பங்குனி,
சித்திரை ஆகிய மாதங்களில் தன தான்ய விருத்தியும், உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில்
அதிகம் முன்னேற்றம் ஏற்படும். மற்ற மாதங்கள்
சுமாரானதாகவே அமையும். அதற்குப் பிறகு நிம்மதியும்
சுகமும் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி
அடைவர். பயணங்களால் இலாபம்
ஏற்படும். வங்கி, கணக்கு
போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். மனைவியின் பேச்சைக்
கேட்டு நடந்தால் சீரான முன்னேற்றம்
இருக்கும் சேமிப்புக்களும் கூடும்..
சுக்கிரன் – ஐப்பசி, கார்த்திகை,
பங்குனி மாதங்களைத் தவிர மற்ற மாதங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
ஆண்டு முழுவதும் பொன்பொருள்
சேரும். ஆடை,
அலங்காரப்பொருட்கள் மற்றும் சுகந்த பரிமள வாசனாதி திரவியங்கள் ஆகிய எல்லாமே ஒரு சேரக் கிடைக்கும். கோவில்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு இறையருளால்
வசதி வாய்ப்புக்கள் பெருகும். பணி மாற்றம் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய வேண்டியது வரும்.
படிப்பில்
தேர்ச்சியும் வெற்றியும் ஏற்படும்.
குரு – ஆனி 20 க்கு முன்
சகோதரபாவத்திலும், பின்னர் சுகபாவத்திலும் சஞ்சரிக்கும்
குரு,
முற்பகுதி
வரையிலான காலத்தில் ஆரோக்கியக் குறைவைத் தந்தாலும்
அதற்குப் பிறகு தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்களைத் தரலாம். எந்தவொரு புதிய
முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். எனவே, அடக்கி வாசிப்பது நல்லது. வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவி கிடைக்கும். நல்ல சந்ததிகள் உருவாகும்,
சனி -- கண்டச் சனி காலத்தில் அந்தஸ்து, பதவி,
கௌரவம் ஆகியவைக்கு பங்கம் ஏற்படலாம். வேலையற்றவர்கள் நல்ல வேலை தேடி அலைய
வேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் மற்றும் இன்ப துன்பம் என மாறித்தானே வரும். சிலருக்கு வெளி
நாட்டு வாசமும், குறிக்கோளற்ற அலைச்சல்கள்
ஏற்படும். பயணங்களின் போது
எச்சரிக்கை தேவை. கண்டச் சனியாக
இருப்பதால் கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை
வணங்கி, சனிக்கிழமை தோறும்
சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும். திருநள்ளாறு சென்று வரவும்
தீமைகள் குறையும். மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
மிதுனம்
(மிருகசிரீடம்-
3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
கல்விக்காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு
மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் – ஆவணி மாதத்தில் தானதருமங்கள் செய்யும் அளவுக்குச் செல்வநிலை உயரும். வெற்றி மீது
வெற்றி வந்து என்னைச் சேரும் என பாடும் நிலைக்கு உயர்வீர்கள். எனவே, எந்த முயற்சியிலும் துணிந்து இறங்கி முன்னேற்றம் காணலாம். பிறருக்காக வாதாடி வெற்றி பெறும் நிலையும் ஏற்படும். கார்த்திகை மாதத்தில்
மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசுத் துறையால் இலாபம் அல்லது
அரசில் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படலாம். பங்குனி மாதத்தில்
பணம் காசு சேரும். எவரும் சாதிக்க
முடியாத சாதனைகளைப் புரிவார். நண்பர்களின் உதவிகள்
கிடைக்கும். சித்திரை மாதத்தில் சிறந்த வாகனயோகம் ஏற்படும். வீட்டில்
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.
செவ்வாய் – ஆவணி, கார்த்திகை, மாதங்களில்
சுப பலன்களை எதிர்பார்க்கலாம். சகோதரரால்
நன்மைகள் ஏற்படும். எதையும் செய்து
முடிக்கும் துணிச்சல் உண்டாகும். சிலருக்கு வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் சிறு விபத்துக்கள் ஏற்படலாம். சின்ன விஷயங்களுக்காக
அதிகக் கோபம் கொண்டால் டென்ஷனால்
ஆரோக்கியக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பின்னர் பொன்பொருள் சேரும். பொருளாதார நிலை
உயரும். பூமி,
பயிர் விளைச்சல் இவற்றால் இலாபம் அதிகரிக்கும்.
புதன் – கார்த்திகை, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் சுப பலன்களைத் தருகிறார். இம்மாதங்களில்
பலவகையான யோகங்கள் ஏற்பட்டு ஜாதகர் அரசனுக்கு நிகராக வாழ்வார். சேவை செய்ய பணியாட்கள், பணிப்பெண்கள் அமைவர்.
சந்ததி விருத்தி ஏற்படும். பூமி, மனை, வீடுகள் ஆகியவற்றால் இலாபம் ஏற்படும். பங்குச் சந்தையில் அதிக இலாபங்களை எதிர் பார்க்கலாம். அரசு
வேலை கிடைக்கலாம். வாகன வசதிகள் அதிகரிக்கும். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். பணம் பல
வழிகளிலும் வந்து குவியும். நல்ல மனைவி
வாய்ப்பாள்.
சுக்கிரன்
-- மார்கழி, தை,
பங்குனி ஆகிய மூன்று மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சுப பலன்களைக் கொடுக்க வல்லவர் சுக்கிரன்.
ஆரம்பத்தில் உயர்ந்த செல்வந்தர்களின் நட்புக் கிடைக்கும். புதிதான பெண் உறவு கிடைக்கும். தன தான்ய வகைகள் குவியும். முகத்தில் அறிவுச்
சுடரொளி வீசும்.
தனக்கென
அழகிய தனிவீடு அமையும். நல்ல குழந்தை
பிறக்கும். மனைவிக்கு வயதானாலும்
எழில் நிறைந்தவளாய்
இருப்பாள். திருமணமாகாதவர்களுக்குப் பெரிய இடத்துப் பெண்ணுடன் திருமணம் நடக்கும். நல்ல குரு
அமைவார். அவரால் வாழ்வில்
ஒளியும் முன்னேற்றமும் பெருகும்.
குரு – ஆனி 20 க்கு சிம்மத்திற்கு
மாறும் தேவகுரு வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார்.
இன்னல்களை
நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும்
ஏற்படும். பெயரும் புகழும்
ஓங்கும். வேலை இல்லாது
இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு ஆண் சந்ததி ஏற்படலாம். பதவி,
அந்தஸ்து உயரும்.
சனி
-- இந்த வருடம் முழுவதும் மாற்றமின்றி அமர்ந்து சுப பலனைத் தருகிறார். புதுவீடு கட்டுதல்
போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும்.
பதவி
உயர்வு, வேலையற்றவர்களுக்கு வேலை கிடைத்தல், சுவை மிக்க இராஜ உணவு கிடைத்தல்.
என இராஜபோக வாழ்க்கை அமையும். இதுநாள் வரை
இருந்துவந்த இக்கட்டான நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய் பொன்னும் பொருளும் சேரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்புக் கிட்டும். உயர்பதவி, அந்தஸ்து எல்லாமே தேடிவரும். மொத்தத்தில் இவ்வருடம் 75 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
தாய்காரகனான
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு
மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் – புரட்டாசி மாதத்தில் விருப்பமான மனைவி அல்லது பெண்ணின் உறவு ஏற்படும். தமக்குப் பிடித்தமான
இடத்துக்கு வேலைமாற்றம் ஏற்படும். சுய சம்பாத்தியத்தால்
பணவசதி பெருகும். விரும்பிய இடத்திற்கு
வேலை மாற்றம் கிடைக்கும். மார்கழி மாதத்தில் அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் வெற்றி, அரசுத் துறையில்
இலாபம் ஏற்படும். சித்திரை மாதத்தில்
மிக்க சுகம் உண்டாகும். வாழ்க்கையில் அதிர்ஷ்டமயமான நல்ல திருப்பங்கள் ஏற்படும். மக்களிடையே
பிரபலமடைவார். வைகாசியில்
பிறர் மேல் இரக்கம் கொள்வார். வாகன யோகம்
உண்டாகும். சுபகாரியங்கள் எண்ணியது
எண்ணியபடி நடக்கும்.
செவ்வாய்
-- புரட்டாசி, வைகாசி
ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். வேதம் கல்வி
இவற்றில் தேர்ச்சி ஏற்படும். சிலருக்கு சில மாதங்களில் உறவினர்பகையும், வீட்டில் குழப்பமும் உண்டாகலாம். புதிய ஆடை சேர்க்கை, தானியவிருத்தி, கடன்களும் நோய்களும் குறைந்து ஆனந்தமும் பெருகும். பின்னர் வரும்
காலத்தில் கீழான மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். உடலில் ஒளியும், அழகும், பொலிவும் கூடும். சிலருக்குத் தவறான நடவடிக்கைகளால் அவமானம் ஏற்படலாம். சொல் வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும். மனைவி மூலம்
பூர்ண சுகம் கிடைக்கும்.
புதன் – சித்திரை, வைகாசி,
மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் சுப பலனைத் தருவார்.
இம்மாதங்களில் வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும்.
கடன்கள் அனைத்தும் நீங்குவதோடு நோயும் நீங்கி ஆரோக்கியம் பெருகும்.
வழக்குகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். எழுத்துத்
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பல
வழிகளிலும் பணம் வந்து சேரும். கணக்காளர் தொழில்
செய்பவர்களுக்கு தனலாபம் பெருகும். கல்வியில் தேர்ச்சி
ஏற்படும். சந்ததி விருத்தி
ஏற்படும்.
சிலர்
பிறருக்குப் பிணையாக நிற்கப் போய் அவர்கள் கடனுக்குப் பொறுப்பேற்க நேரலாம். எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
சுக்கிரன்
–
தை, மாசி ஆகிய
மாதங்களில் மட்டும் சுக்கிரனின் அசுப பலன்களை உணர்வீர்கள். வயிற்று
உபாதைகள் ஏற்படலாம். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பின்னர், எல்லா
வசதிகளும் இன்பமும் உண்டாகும். உயர்ந்த செல்வநிலையும்
அடைவர்.
அன்னதானம்
செய்வர். சிலருக்கு மனக்
கஷ்டங்களும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். பின் வரும்
மாதங்களில் மனைவியிடம்
அன்புடையவராக இருப்பர். மந்திரி போன்ற
உயர் பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சியும், கணிதத்தில் திறமையும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு
பதவி உயர்வுகள் கிடைக்கும். வருடக் கடைசியில் கூட்டு வியாபாரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு மோசடி காரணமாக நஷ்டங்கள் ஏற்படலாம்.
குரு – ஆனி 20 ஆம் தேதியன்று
தன பவமான சிம்மத்திற்கு மாறும் குரு மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண
மேடையில் உலாவரச் செய்வார். புதிய வீடு, வாகனம் வந்து சேரும். குடும்பத்தில் நிலவிவந்த
சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக
அமையும். தொழில் வளர்ச்சி
எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும். சிலர்
இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர்.
சனி – பூர்வ புண்ணிய
ஸ்தானத்திற்கு மாறும் சனியால், முன்னோர் சொத்துக்களில்
இருந்து வந்த பிரச்சனைகள் மத்தியஸ்தம் மூலமாக சுமுகமாக முடியும். குழந்தைகளுக்கு நோய் காரணமாக
மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகள் தாங்கமுடியாத கெடுபிடிகள் செய்வர். படுத்தால் கவலைகளால் தூக்கம் வராது. அதன் பின் புத்திரர்களால்
தொல்லை, தொழில் மற்றும்
வியாபாரத்தில் தடைகள் ஏற்படும். குருவின் பார்வை
இருப்பதால் அஞ்ச வேண்டாம். சனி பகவானின்
சன்னதிக்குச் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடுதலும், ஒருமுறை திருநள்ளாறு சென்று வருதலும் நலம் பயக்கும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
தந்தை
காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு
மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் – ஐப்பசி மாதம் வரையிலான காலத்தில் முதலில் மனைவியுடன் ஏற்படும் பிணக்குகளினால் தற்காலிகப் பிரிவு ஏற்படலாம். பின்னர்
இருவரும் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். தேவைக்கு
அதிகமான அளவு, பணம் காசு சேரும். தை மாதம்
முடிய உள்ள காலத்தில் கெட்ட கனவுகள் தோன்றலாம். உதவி கேட்டுப்
போகும் போது யார் உண்மையான நண்பர்கள்? என்பது தெரியவரும். வியாபாரத் தொடர்பான, நெடுந் தூரப் பயணங்களால் இலாபம்
ஏற்படும். வைகாசி மாதம்
வரையுள்ள காலத்தில் புதிய விரிவாக்கத் திட்டங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தரும சிந்தனையால், கோவில் மற்றும் குளங்களுக்குத் திருப்பணி செய்வர்.
செவ்வாய் – வைகாசி, ஆனி,
மாசி ஆகிய மாதங்களில் சுப பலனைத் தருவார் செய்யும்
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு
எதிர்பார்த்த பதவி உயர்வுகள், தங்கள் திறமைக்கு
ஏற்ப கிடைக்கும். புதிய வியாபார நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதிக இலாபங்காண முற்படுவீர்கள். கல்வியில் தடைகள் ஏற்படலாம். சகோதரரால் நன்மை
ஏற்படும். எதையும் செய்து
முடிக்கும் துணிச்சல் ஏற்படும். வெற்றியும், சந்தோஷமும்
உண்டாகும். பின் வரும்
காலத்தில் கடன்களும், நீங்கும். பணவரவு
அதிகரித்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலை நிமித்தம்
வெளிநாடு செல்ல வேண்டியதிருக்கும்.
புதன் – அதிகாரிகளிடம்
நல்ல பெயர் எடுத்துப் பரிசாகப் புதிய உயர் பதவிகள் கிடைக்கும். உங்களால் உதவி அடைந்தவர்கள் சமயம் பார்த்து உங்களுக்கே குழிபறிப்பர். பகைவர்களை வென்று வெற்றிக் கொடி நாட்டுவர்.
வாக்கு
சாதுர்யத்தால் நல்ல தனவரவு உண்டாகும். புகழ் மரியாதைகள்
கூடும். வாகனாதிகள் வந்து
சேரும். எல்லாவிதமான முன்னேற்றங்களும்
உண்டாகும், அதற்குப் பிறகு மனைவிக்கு
ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.
சுக்கிரன்
–
குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் புத்தி கூர்மையினால் கல்வியில் நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டு அதிக மதிப்பெண் பெறுவார்கள். வாழ்வில் தங்கள் முன்னேற்றத்தைக் கண்டு, நண்பர்கள், உறவுகளின்
மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். நவீன
பொழுதுபோக்கு உபகரணங்கள் யாவும் கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். சிலருக்கு தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். வீரம், பிரதாபம்
மற்றும் பூர்ண சயன சுகம் ஏற்படும், பின்னர் மனைவியின்
பணிவிடைகள் மகிழ்ச்சியைத் தரும். சொற்பொழிவுத் திறன்
கூடும். அதனாலும் பணவரவு
கூடும். தனக்கென அழகிய
தனி வீடு கட்டுவார்.
குரு – ஆனி மாதத்திற்கு முன்புவரை விரயபாவத்தில் இருந்து வந்த குரு
குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தினார். இதுநாள் வரை வீட்டில் சுபவிரயச் செலவுகள் ஏற்படும். தொழில்
வளர்ச்சிக்காகச் செய்த முதலீடுகளும் பயன் தராது போகும். பணியில்
உள்ளவர்களுக்குப் பதவி உயர்வில் தடை, தாமதங்கள் ஏற்படும்.
பின்னர் ஜென்மத்தில் வரும் குரு தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம்.
பதவி
உயர்வு, விரும்பிய இடத்திற்கு
இடமாற்றம் ஆகியவை கிடைப்பதில் உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். தேவையென்று வரும்போது கையிலிருக்கும் பணம் கூட உதவாமல் போகும். தான தர்மமென
கைப் பணம் கரையும்.
சனி – அர்த்தாஷ்டமச் சனியாக இருந்தாலும் அவர் தாமிர மூர்த்தியாகத் திகழ்வதால் எதிர்மறையான
பலன்கள் குறையும். அளவற்ற செல்வங்கள்
சேரும். மனைவி மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் முனைவருக்கு இது ஏற்றமான முன்னேற்றமான காலம் ஆகும். சுற்றியுள்ள சுற்றமும், நட்பும் பகை பாராட்டலாம். சிலருக்குப் பெண்ணால் அவமானங்கள் ஏற்படலாம். சிலருக்கு மனம்
எப்போதும் நல்லதையே நினைக்காது. மானம், மரியாதை மற்றும்
கௌரவம் அனைத்தும் பறிபோகும். சனி தரும்
சிரமங்கள் குறைய விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மனதார வேண்டினால் இன்னல்கள் மறையும். மொத்தத்தில் சிம்ம்ம
இராசி அன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
புத்தி
காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு
மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் – ஆனி மாதத்தில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தனித் திறமையால்
வாழ்வில் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். எவருமே இதுவரை
செய்யாத சாதனைகளைப்
புரிவார். ஆடியில் உயர்
பதவிகள் கிடைத்து அந்தஸ்து, மரியாதையும் கூடும். கார்த்திகையில் தனக்கு மிகவும் விருப்பமானவர்களின் அன்பு அதிகமாகும். புத்திரபாக்கியம் ஏற்படும். மாசி மாதத்தில்
உங்களுக்கு இதுவரை வராது இருந்த நிலுவைகள், கடன்கள், விரைவில், சுலபமாக
வசூலாகும். நீண்ட தூரப்
பயணங்கள் இலாபம் தரும்.
செவ்வாய்
– தொழில்களில் நல்ல
வருமானம் ஏற்படும்.
புதிய
தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். சிலருக்குக் கண்நோய்
ஏற்படலாம். கல்வியில் தடை
ஏற்படலாம். விவாகம் நடக்கும். சந்ததி விருத்தியாகும். ஆடை, ஆபரணங்கள்
சேரும். பின் வரும்
மாதங்களில் பற்றாக்குறைகள் அதிகமாகும். ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படலாம்.
புதன்
– எதிரிகளை எளிதில் வென்று ஏற்றம் பெறுவீர்கள். வீடு, நிலம் போன்ற
அசையாச் சொத்துக்களை எவ்விதத் தடைகளும் இன்றி பத்திரப் பதிவு ச்ய்வீர்கள். ஆழம் தெரியாமல் காலைவிடாது, எதையும்
ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. உயர்பதவிகள்
கிடைக்கத் தங்கள் செயல் திறனைக் கூட்டுவது இன்றியாமையாயததாகும். புண்ணியத் தல யாத்திரைகளும், வெளிநாட்டுப் பயணங்களும் ஆதாயம் தரும்.
தவிர்க்க
முடியாத சுப, அசுப விரயங்கள் ஏற்படும். சகோதரர் இடையே
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி
குறையும். ஒற்றுமை மற்றும்
ஆக்கபூர்வமான யோசனைகளால் நிம்மதியும் சுகமும் பெருகும். வருடக் கடைசியில்
சிலருக்கு அரசு வேலை கிடைக்கலாம். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சுக்கிரன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வீடு புதிய சொத்துக்கள் வாங்குவர். நல்ல உறவுகள், உதவும் நண்பர்கள் அமைவர். வார்த்தை தவறாது, கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவர்.. கல்வியும் புகழும் ஓங்கும். சிலருக்கு இசையால்
சம்பாத்தியம் பெருகும். கார் போன்ற
உயர்ரக வாகனங்கள் வாங்குவர். ஐம்புலனுக்குரிய அனைத்து இன்பங்களும்
கிடைக்கும். வித்தையில் தேர்ச்சியும், அறிவுத் திறனும் கூடும். போஜன சுகம்
பூர்ணமாகக் கிடைக்கும். உயர்மட்ட அரசு அதிகாரிகளின் நட்பும் ஆதரவும் கிட்டும்.
குரு – கன்னிராசிக்கு குரு ஆனிமாதம் வரை நற்பலன்களைத் தருகிறார். அதற்குப் பிறகு வியபாவத்தில் அமர்வதால் கீழ்த்தரமான கல்விப் பசிற்சிகளில்
ஈடுபட நேரும் சிலருக்குப் பதவி அல்லது இடமாற்றங்கள் ஏற்படலாம். சுபகாரியச் செலவுகள்
ஏற்படும். உயர்குல வேற்றுப்
பெண்ணால் அவப்பெயர் ஏற்படலாம். பகைவர் சூழ்ச்சியால்
தொழில் முன்னேற்றங்கள் பாதிப்பு அடையும். எவ்வளவு பெரிய
செல்வந்தராக இருந்தாலும் கைப் பணம் கஷ்ட காலத்தில் உதவாது. அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும்புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றமடைவர்.
சனி – இனி இன்னல்கள்
மறைந்து இன்பம் பொங்கப்போகும் காலம். இனி எல்லாமே
வெற்றிதான். அஷ்டலக்ஷ்மி கடாக்ஷமும், இராஜயோகமும் ஏற்படும். குழந்தைகள் மூலமாகப்
பல நன்மைகள் ஏற்படும். வரவுக்கும், வரம்புக்கும்
உட்பட்டு செலவுகள் அமையும். திருமணம், புத்திரப்
பெறு ஆகியவை நல்லபடி நடக்கும். உழைப்புக்கு ஏற்ப
வருமானம் கிடைக்கும். கொடூரமான
வெய்யிலில் இருந்து குளிர் நிலவுக்கு வந்த்துபோல் ஓர் உணர்வு ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
No comments:
Post a Comment