Search This Blog

Saturday, 18 April 2015

நவாம்ச லக்னமும், குணங்களும்


நவாம்ச லக்னமும், குணங்களும்


    நவாம்சம்- இந்துக்களின் ஆர்வம் மிக்க வர்க்கச் சக்கரம் ஆகும்விதியின் சக்கரம் என அழைக்கப்படுகிறதுஇது ஒருவரின்கடந்த காலம்நிகழ்காலம் மற்றும் வருங்கால வாழ்க்கைகளை   இணைக்கக் கூடிய கட்டமாகும்.
   கீழே கொடுக்கப்பட்டுள்ளவை பல்வேறு நவாம்சங்களில் பிறந்தவர்களின் குணதிசயங்களின் மூலமாக  நவாம்ச பலன் காணப் பேருதவியாக இருக்கும். வராகிமிகிரரின் புதல்வரான பிருத்துயஸாஸ் தனது நூலான ஹோராசாராவில்விளக்கியுள்ளார்.
     
     மேஷ நவாம்சத்தில் பிறந்த ஜாதகர் சேட்டைக்காரர், திருட்டுத்தனம் செய்பவர், ஒளி குறைந்த கண்களை உடையவர். பரபரப்பானவர், காமதாகம் உடையவர்.12,25,50,65 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிப்பார். நோய்வாய்ப் படுவார்.
     ரிஷப நவாம்சத்தில் பிறந்தவர் புத்திசாலி,சந்தோஷமான வாழ்க்கை உடையவர். அகன்ற தொப்பை உடையவர். பலம்மிக்க நீண்ட முகமும்,உருளும் விழிகளும் உடையவர். அதிக பெண்குழந்தைகளை உடையவர். 10,22,32,72 ஆகிய வயதுகளில் கஷ்டப்படுவார். நோய்வாய்ப் படுவார்.
  மிதுன நவாம்சத்தில் பிறந்தவர்கள் அழகுக்கு இலக்கணமானவர்களாக இருப்பார்கள். மாறுகின்ற மனநிலை உடையவர்கள். சொற்பொழிவுத்திறன் மிக்கவர்கள், பல்வேறு விஞ்ஞானத்தை நன்றாக அறிந்தவர்கள். சந்தோஷமானவர்கள். நற்குணங்கள் உடையவர்கள். பெண்களைப் பொறுத்தவரை நிலையான நட்பை, உறவை உடையவர்கள். 16,24,34,40,63 ஆகிய வயதுகளில் வாழ்க்கையின் கஷ்டமான பகுதிகளைக் கடப்பவர்கள்.
  கடக நவாம்சத்தில் பிறந்தவர்களை சுலபமாகக் கோபமூட்ட முடியும். உருக்குலைந்த அல்லது சீரற்ற தேகமும், வன்மமும், தீய எண்ணங்களும், செல்வந்தரும், பல வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆர்வமும், உறவுகளுக்கு உதவும் எண்ணமும், உறவுகளால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார். 8, 18, 21, 22, 72, 80 ஆகிய வருடங்களில் ஜாதகருக்கு அபாயகரமான வருடங்களாகக் கருதப்படுகின்றன.
   சிம்ம  நவாம்சத்தில் பிறந்தவர்கள் தனிமையில் வாழ்வதை விரும்புவார்கள். கர்வம், பெருமை மிக்கவர்கள், மெலிதான இடுப்பு உடையவர்கள், பலமிழந்த பற்களை உடையர்கள், மன அமைதியற்றவர்கள். 10, 20, 30, 60, 82 ஆகிய வயதுகளில் அபாயகரமான காலமாக வாழ்க்கை அமையும்.
   கன்னி நவாம்சத்தில் பிறந்தவர்கள் இளமையில் இன்ப மயமாக வாழ்பவர்கள். சகலகலாவல்லவராக இருப்பார். வீரம் மிக்கவர், குறைவான மகன்களை உடையவர். இரக்க சுபாவம் உடையவர். மற்றவர்களுக்கு உதவிகரமாய் விளங்கக்கூடியவர். வெளிநாட்டில் தனது காலத்தைக் கழிப்பவர். 20 அல்லது 60 இல் இவர் வாழ்வாரா ? என்ற சந்தேகம் எழும். ஆயினும், செல்வநிலை கூடிக்கொண்டே இருக்க இவர் 108 வயதுவரை வாழ்வார்.
   துலா நவாம்சத்தில் பிறந்த ஜாதகர், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறிக்கொண்டே இருப்பதை விரும்புவார். மெலிந்த உடல் உடையவர். குறைவான மகன்கள் இருப்பர். , உறவுகளை வெறுப்பவராக இருப்பார். அஜீரணக் கோளாறு ஏற்படும்.3, 23, 38, 54, அல்லது 76 ஆகிய வருடங்களில் அனுகூலமற்ற வாழ்க்கை அமையும். நோயால் அவதிப்படுவார்.
  விருச்சிக நவாம்சத்தில் பிறந்த ஜாதகர் அறிவாளி ஆனால் பொல்லாத சேட்டைக்காரர். தந்தை அல்லது பெரியோர்களின் இறப்பினால் கஷ்டங்களை அனுபவிக்க நேரும். கண்பார்வைக் குறைபாடுகள் இருக்கும். கொடுமையானவர், இரகசியமான முறையில் பாவச் செயல்களில் ஈடுபடுபவர். பானை போன்ற வயிறு உடையவர். இவருக்கு அபாயகரமான வாழ்க்கை அமையக்கூடிய வயதுகள் – 18, 23, 28, 55 அல்லது 70 ஆகும்.
   தனுசு நவாம்சத்தில் பிறந்த ஜாதகர் செல்வந்தராய் இருப்பார். நற்குணங்கள் உடையவர். நீண்ட கழுத்து உடைய இவர் வடிகட்டிய சோம்பேறியாய் இருப்பார். எதிலும் சுலபமாக திருப்தி அடைவார். நீண்ட மூக்கு உடைய இவர் அதிகம் பேசக்கூடியவர். செல்வங்களைப் பதுக்கி வைக்கக்கூடியவர். 4, 9, 16, 36 44, அல்லது 72 வயதுகளில் இழப்புக்கள் ஏற்படும், நோய்வாய்ப்படுவார்.
   மகர நவாம்சத்தில் பிறந்தவர்கள் குட்டையான கால்களை உடையவர், நிலையற்ற மனம் உடையவர்கொடியவர். வேகமாக நடப்பவர், காமவிளையாட்டுக்களில் ஈடுபாடு உடையவர். இவரது மனைவி ஒரு முசுடாக இருப்பார். இவருக்கு வாழ்க்கையில் நோய் வரும் வயதுகள் -19, 27, 34, 49, 54, 68 ஆகியவை ஆகும்.
   கும்ப நவாம்சத்தில் பிறந்தவர்கள் இரக்கமற்றவர்கள். மற்றவர்களை அவதூறாகப் பேசக் கூடியவர்கள். சூது நிறைந்தவர்ஏமாற்றுக்காரர், பலமற்றவர், நீண்ட கால்களை உடைய, குழப்பமான மனோநிலை உடையவர். அலைந்து திரிபவர், அதிக செலவாளி, மனதளவில் கஷ்டத்தை அனுபவிக்கக்கூடியவர். இவர் வாழ்க்கையில் சந்தேகத்திற்கு உரிய, அபாயம் தரக்கூடிய வருடங்கள் 7 வது வயது மத்தியில், 14, 20, 28, அல்லது 61 ஆகிய வயதுகள் ஆகும்.
  மீன நவாம்சத்தில் பிறந்தவர்கள் பிற பெண்டிர்பால் ஆவல் உள்ளவர்களாக இருப்பர். மெலிந்த உடல், நீர் சம்பந்தப்பட்ட தயாரிப்புப் பொருட்களின் மூலமான இலாபம் ஆகியவற்றை உடையவராய் இருப்பர். கற்றறிந்தவர்கள், மற்றவர்களின் வீட்டில் வாழ்வார்கள். செல்வந்தராகவும், பல மனைவிகளை உடையவராகவும் இருப்பர். வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான வயதுகள் ஆவன – 12, 21, 26, 52, மற்றும் 61 ஆகியவை ஆகும்.






No comments:

Post a Comment